காட்டில் வாழ்ந்த காலத்திலே --- பல
கரடிகள் புலிகள் கொன்றன நம்மை
நாட்டில் வாழும் நாளுற்றதும் --- நலம்
நல்கிடும் உந்துகள் கொல்வன உண்மை !
வேறு சந்தம்
ஏழை இன்பொருள் மேல்பெற்றவன்---- ஞாலம்
ஏத்திடும் போற்றிடும் நூல்கற்றவன்
மோழை மூடன் யாரென்கிலும்--- உந்து
மோதிக் கொல்படை! கூராயுதம்.
மரணம் வருவது காத்தோமா நாம்? - பல
மரணப் படைக்கலன் சேர்த்துவைத்தோம்!
கரணம் தப்பினால் மாண்டுவிடும் --- அந்தக்
காரியம் மாறுமோ? யாண்டுமில்லை!
விபத்தில் இறந்தார் யாவருக்கும் --- நெஞ்சு
விம்மிய துயருடன் விடைபகர்வோம்!
சிவத்தில் இணைந்தார் இன்னவர்கள்!--- நம்மின்
சீர்பெறு உலகில் முன்னவர்கள்!.
http://www.nst.com.my/latest/font-color-red-karpal-singh-s-death-font-a-picture-of-grief-at-the-hospital-1.570504
http://www.thehindu.com/news/international/world/eminent-malaysian-lawyer-karpal-singh-dies/article5921311.ece
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக