திங்கள், 30 மே, 2022

நனைவொச்சித்திரம்

 ஒரு தாளில் சில துளிகள் தண்ணீர் பட்டுவிட்டால்,  பட்டவிடம் சற்று இருளுடையதுபோல் தோன்றும்.  இவ்வாறு வண்ணம் வேறுபட்டதுபோல் தோன்றும் சித்திரத்தை " நனைவொச்சித்திரம்"  என்னலாம். கீழிருக்கும் படத்தில் இத்தகு சித்திரம் ஒன்றுள்ளது.

நனைவு  - நனைந்துவிட்ட இடம்போலும் நிலை.

ஒ  -  ஒத்த.

சித்திரம் -ஓவியம்.

=  நனைவொச்சித்திரம்.


மென்கரை ஓவியம்  எனில் மனநிறைவு தருமா?


படத்தில் பாருங்கள்:





ஒ + சித்திரம் >  ஒச்சித்திரம் என்று வந்தது,  நனைவு ஒச்சித்திரம் என்பதில்.
இதுபோல் புணர்த்தப்பட்ட இன்னொரு சொல்:  ஒ+தாழிசை >  ஒத்தாழிசை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

ஒரு தட்டச்சுப்பிறழ்வு திருத்தம்: 30.5.2022

சனி, 28 மே, 2022

அலைபேசியுடன் நீங்காத உறவு (த் -ல் போலி)

ஆசிரியப்பா 

அலைபே    சியுடன்  அலைந்தனை கடல்போல்!

 அலைந்தே  அகத்தினுள்  அடங்கினை உறக்கம்

கலந்தாய்  ஆங்கது களைந்தே,

ஒலுங்குதல் இயலாய் நிலங்கெழு  மாந்தனே.


கடல் அலை ஓயாமை போல மனிதனும் ஓயாமல் அலைபேசி என்னும் கைப்பேசியுடன் நீங்காது அலைகின்றான். படுக்கைக்குப் போகும்போது  அதை அப்பால் வைத்துவிட்டு ஒதுங்கி ( ஒலுங்குதல்) இருக்க, நிலத்தை வெற்றிகொண்ட மனிதனால் இயலவில்லை.


இதை விளக்கும் படம்:



இரண்டு அலைபேசிகள் உள்ளன.

உங்கள் அலைபேசியை நீங்கவேண்டுமென்பதில்லை.  அது இணைபிரியாத நண்பனாகிவிட்டது.  நீங்கமுடியாது என்பதுதான். செய்தித்தொடர்பு,  உறவினர் தொடர்பு முன்மை பெற்றுவிட்டன என்பதுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

உங்கள் ஆய்வுக்கு:

சில உலக மொழிகளில் த் வருவதற்கு மாற்றாகச் சொல்லில் ல்  வரும்.  அத்தகைய மொழிகளில் ல் - த போலி.  தமிழில் அப்படி வருமா என்று நீங்கள் கேட்கலாம். ஒலுங்கு > ஒதுங்கு என்பதில் வருகிறது. இந்த மொழிகளிலிருந்து சில சொற்களை எடுத்து ஒப்பாய்வு செய்து ஒலுங்கு> ஒதுங்கு என்பதுபோல எடுத்துக்காட்டுக.





வெள்ளி, 27 மே, 2022

தென்றல் வந்த இனிமை.

 கீழைத் தென் கடல் வெம்மையில் வானேறி

ஆழ நீர்ப்பரப்பு  அத்தனையும் மேல்தாண்டி

சூழும்  பச்சையில்  தானடைந்த தண்மையில்

தாழத் தென்றலாய்த்  தந்தனைநீ இன்னருளே.


சிங்கைத் தீவிற்கு தென்றல்  வந்தது.  இது தென்சீனக் கடலில் உருவாகி  (கீழைத் தென் கடல்)    இடையில் இந்தோனேசியாவின் தீவுகளுக்கிடையில் உள்ள நீர்ப்பாரப்புகளையும் மேலாகக் கடந்து   ஊர்ந்து   பச்சைக் காடுகளைத் தாண்டுகையில் தண்மை பெற்றுக் கீழிறங்கித் தென்றலாகி,   நமக்கு அருள் புரிகிறது. 

இது எம் கற்பனை.  நிலநூல் கற்ற நம் வருகையாளர் ஒப்புரையோ எதிருரையோ கருத்தாக எழுதுங்கள்.  You may comment if it pleases you. Thank you.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


புதன், 25 மே, 2022

காட்டம் - சொல்லின் வினை எது?

அவர் காட்டமாகப் பேசினதால் சுற்றி  இருந்தவர்கள்  ஆடிப்போய்விட்டார்கள்  என்று பேச்சுவழக்கில் வருவது காண்கிறோம்.  சுற்றியிருந்தவர்கள் ஆடிப்போனதால் பேசியவர் மந்திரிபோன்றவராக இருந்திருக்க வேண்டும்.  இதைப் பற்றிக்  கவலைப்படாதீர்கள். காட்டம் என்ற சொல்லைத்தான் நாம் எடுத்துக்கொண்டுள்ளோம்.

நீங்கள் நினைப்பதென்ன?  காட்டம் என்பது  காட்டுவிலங்கு என்பதில் உள்ள காடு என்ற சொல்லோடு தொடர்புடையது என்பதா?  அதை உங்களுடன் யாமும் இணைந்து இப்போது ஆய்வு செய்ய  முனைவோமாக. 

கடுமை என்ற சொல்லே காட்டம் என்பதனுடன் உறவுகூறப் பொருத்தமான சொல். கடுத்தல் என்ற வினையும் இச்சொல்லுக்குப்  பொருட்பகிர்வு உடையதேயாகும். 

கஷ்டம் என்ற சொல்  அன்றாட வழக்கிலுள்ள தென்றாலும்,  காஷ்டம் என்பதை அண்மையில் கேள்விப்பட்டு ஆனந்திக்க இயலவில்லை.

காட்டம் என்பதற்குரிய பொருளாவன:

விறகு;

நாவிற்கு அல்லது மோந்துபார்க்க ( முகர்தல்) ,  கடுமையானதாய் இருத்தல்

வெண்கலப் பொருள்

கோபம். மிகுதி.

இவையே அறியப்பட்டுள்ளன.


விறகு என்பது கடிய பொருள்.  வெண்கலமும் கடியது.   கோபம் ஒன்றே மனவுணர்ச்சியைக் குறிப்பது  இந்தப் பொருளில் இது வழக்குவிரிவான சொல்.

காஷ்டம் என்ற சொல்லும் விறகுகட்டையைக் குறிக்க உதவும்.


கடு அடிச்சொல்.

கடு+ அம் - காட்டம் ( முதனிலை நீண்டு திரிபுறுதல் ).


இதுபோல் திரிந்த இன்னொரு சொல் தோட்டம் என்பது.

தொடு(தல்) வினைச்சொல்.

தொடுதல்:  பொருள்  தோண்டுதல்.  ( தொட்டனைத் தூறும் மணற்கேணி , குறள்.  தோண்டியவுடன் நீர் ஊறும்.....)

தொடு + அம் >  தோட்டம்.   ஒருவன் தோண்டி நட்ட செடிகொடிகள் மரம் உள்ள நிலம்).

ஆகவே ஒப்பாய்வில் புரிந்துகொள்ளுங்கள்.

காட்டம் என்பதற்குரிய வினைச்சொல் என்ன என்பது இப்போது நேரடியாகச் சொல்லாமலே புரிந்திருக்கும்.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்.


--------

இவற்றை ஆய்வில் ஈடுபடுத்துங்கள்:

ஆனந்தித்தல்.

தொடர்புடையவை:  பிரம்மானந்தம்:  https://sivamaalaa.blogspot.com/2015/05/blog-post_10.html

ஆனந்தம்:  https://sivamaalaa.blogspot.com/2019/05/blog-post_10.html

விகாரம் https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_25.html

திங்கள், 23 மே, 2022

மாதா கெஞ்சுசொல், கொஞ்சுசொல்.

 மாதா  என்ற சொல்லை முன்பு விளக்கியுள்ளோம்.

அதில் ஒன்றை ஈண்டுக் காண்க. 

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_14.html

அம்மா என்பதில்  மா என்பதும்  தாய் என்பதன் தலையெழுத்தும் இணங்கி அம்மாவுக்கு இன்னொரு சொல் அமைந்திருப்பது முற்றிலும் பொருத்தமே.

நாம் உலக அம்மாவாகிய அம்மனிடம் அல்லது நம் பெற்றதாயிடமே இவ்வாறு சொல்லடுக்குகள் செய்து, வருணனை மேற்கொண்டு கெஞ்சுவோம். இல்லாவிட்டால் ஒருவகையில் அதைக் கூறியதுகூறலான சொல் என்று தாழ்த்திவிடலாம். 

அம்மா!+  தாயே!  கடைக்கண் பாரம்மா,  எனது இன்னல் தவிர எனை ஆட்கொள்வாய்  என்று பாடி வேண்டுவது  அம்மனிடம்தான்.

கடவுள் என்பது பால்பாகுபாடு அற்று இயல்வதொன்று.  எனினும் உலகைப் பிறப்பித்தமையினாலும்,  பிறப்பித்தலென்பது  அம்மாவின் அன்பு என்பதனாலும்,  உலகை உண்டாக்கியது இவ்வன்பு போன்றது என்பதனாலும் ஒப்புமையால் உவமைத்தன்மையால் உலகப்   படைப்பருளுடையது இவ்வாறு குறிக்கப்பெறுகிறது.

இவ்வாறு கெஞ்சுதன்மையால் உண்டான சொல்  மாதா என்பது.

சங்கதம் கடவுட்புகழுரை மொழியாதலின்,  சொல் மொழிக்கு ஒத்துவருகிறது.

கெஞ்சுமொழியிலும் கொஞ்சுமொழியிலும் கூறியதுகூறல் இயல்பு.

இதை "மீமிசைப் பகவொட்டு"  என்பர்.  A repetitive portmanteau.

தமிழருள் சொல் விளையாட்டில் ஈடுபட்ட மொழியறிஞர்,  இதுபோல் சொற்களைப் படைத்துப் பேசிக்கொண்டு மகிழ்வாயிருந்தனர் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். ஒருவர் மொழியறிஞரா அல்லரா என்பதற்கு  விளம்பரம் ஒரு காரணமாகாது என்பதையும் உணர்க.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு.

பவானி என்ற பெயர். மற்றும் தொடர்புடைய சொற்கள்.

 பவனி என்பது ஓர் அழகிய சொல்.  தமிழில் இச்சொல்லும் வழங்குகிறது.  ஊர்கோலம் என்ற சொல்லும் வழங்குகிறது.  இது ஊர்வலம் என்றும் வழங்கும். ஊரைக் கோலி வருவது ஊர்கோலம்.  கோலிவருதல் என்பது இப்போது அவ்வளவாக வழக்கில் இல்லை. பாட்டிமார் காலத்தில் பெரிதும் அறியப்பட்ட சொல் அது. இன்று முதியவர்களாகிவிட்ட சிலர்,  அவர்கள் பாட்டிகாலத்துச் சொல் என்று இதைக் குறிக்கிறார்கள்.

முதலில் பவனி என்பதை இங்கு அறிந்துகொள்ளுங்கள்:

பவனி ஒரு தாக்கத்தை .....இடுகைத் தலைப்பு



ஊர்வலம் என்பது ஊரை  வலமாகச் சுற்றிவருவது என்போர் ஊர்கோலம் என்பதை ஊர்வலம் என்பதன் திரிபு என்றும் கருதுகிறார்கள்.

இச்சொற்கள் பல ஆண்டுகட்கு முன்னரே வழக்குடையன ஆகிவிட்டபடியால், ஆய்வின் மூலமே இதை முடிவுசெய்தல் வேண்டும். இது நிற்க:

பவானி என்பதும் அழகிய சொல்லே.

பவானிக்கும் பவனிக்கும் பரவுதற் கருத்தே ஒரு பொதுமையைத் தருகிறது.  அந்தப் பொதுமை .வேறன்று.

பவானி அம்மனுக்கு இன்னொரு பெயர்.  பாவானி எங்குமுள்ளதாகிய தெய்வத்தின் பெயர்.

பரவலாகச் சுற்றிவருவது  பரவு அணி,  இதில்  ரகரம் இடைக்குறையாகி, பவ அணியாகி,  பவ அனியாகி, பவஅனி > பவனி   ஆனது. 

அணி என்பது அண்மி ( அடுத்தடுத்து)  நிற்றல்.

அண்> அணி.   

நாம் அன்புகொள்ளும்போது, அடுத்துச்செல்கிறோம்.

அண்<> அன்    

அடுத்தலில் உடலால் அடுத்தல், மனத்தால் அடுத்தல் என்று இரண்டும் அடங்கும்.

அன்> அனை> அனைவர் என்று மக்களைக் கூட்டிச் சொல்கையிலும் அனைத்து என்று பொருளைக் கூட்டிச் சொல்வதிலும் இந்தக் கருத்து மறைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்க.   

பவ + அன் + இ >  பவ ஆன் இ >  பவானி.

எங்கும் பரவி இருப்பவளும் அம்மை; நம்மை அடுத்திருப்பவளும் நம் அம்மை.

இதனோடு கடவுள் என்பதை ஒப்பிடுக:

யாவையும் கடந்து நிற்பதும் கடவுள். யாவினும் உள்ளிருப்பதும் கடவுள்.

அன் >  அன்பு.   அன்>  அனி   என்றாலும் அடுத்தல் கருத்து வரும்.

ஒரு நூலாகவும் எழுதலாம்.  இடுகைகள் சுருக்கமாக இருத்தலே நன்று.

இன்னொருகால் இங்குச் சொல்லாமல் விட்டவற்றைச் சற்று விரிப்போம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.




ஞாயிறு, 22 மே, 2022

மின் குளிர் காற்றிருக்க, வேண்டுமோ தென்றல்?

அடுக்குமாடி வீட்டு அம்மா பாடுவது:

மின்பனிக் காற்று ஏற்றலும்

தென்றலை மறுத்தலும். 


அறுசீர் விருத்தம்


வானிலே உலவி  வந்து

தரையொடு தடவிக் கொண்டு

கானிலே கொடியும்  ஆடக்

கடுமரம்  தழுவி ஓடி

மேனிலை அடுக்கு வீட்டுக்

கதவிடை மிதந்து மோதி,

யானுளேன் அவண்ம றந்தாய்

என்னகம் வழுவி   னாய்நீ


மின்பனிக் காற்றின் இன்பம்

மேனியை முத்தம் செய்ய,

அன்பனில்  லாத  வேளை

நண்புபோல்  வந்த தென்றல், 

என்பொடு தசையும் தொட்டாய்

என்னவோர் தீரம் கொண்டாய்,

உன்படை கொள்ளேன் நானே

என் கடை அடைத்து மீண்டேன்.

உரை:

யானுளேன் - நான் உள்ளேன்.

வழுவினாய் -  பிழை செய்தாய்

கானிலே கொடியும்  ஆட -  காட்டில் கொடிகள் ஆட

கடுமரம்  தழுவி ஓடி -  கடுமையான மரங்களையும் தழுவி

மேனிலை அடுக்கு வீட்டு  - அடுக்கு மாடி வீட்டில்

கதவிடை மிதந்து மோதி,-  கதவில் வந்து மோதி

யானுளேன் அவண்ம றந்தாய்  நானிருந்த இடத்தின் தன்மை மறந்து,

என்னகம் வழுவி   னாய்நீ  -  என்வீட்டுக்குள் தவறிவிட்டாய்



மின்பனிக் காற்றின் இன்பம் -  " ஏ.சி.க்காற்று சுகம்"

மேனியை முத்தம் செய்ய,--  என் மேனியில் சுகம் தர

மேனியை முத்தம் செய்ய,-- ( வருணனை)

அன்பனில்  லாத  வேளை  --

நண்புபோல்  வந்த தென்றல்,    நண்பு -  தோழமை ,காட்டி வந்த தென்றல்

என்பொடு தசையும் தொட்டாய்---- வந்து என்னைத் தொட்டுவிட்டால்.

என்னவோர் தீரம் கொண்டாய்,----  ( அடாவடிக் தனத்தைக் கூறுகிறது)

உன்படை கொள்ளேன் நானே--   படை-  மேல்படுவதை

என் கடை அடைத்து மீண்டேன்.  கடை -  கதவு என்பதாம்.


படங்கள்









படித்து மகிழ்க.

மீள்பார்வை பின்.

வெள்ளி, 20 மே, 2022

உலகில் அரியது இன்றும் சூரியன் தான். அதனால் அருணன்.

 வரலாற்றில் சூரியன் என்ற வாள்வெளி ஒளியுருண்டை,  ஒரு அரிய பொருள் என்றுதான் இன்றும்கூட நாம் கருதவேண்டும்.  வானநுல் ஏடுகளை வாசித்துவிட்டு,  அண்டமா வெளியில் பல சூரியன்கள்  இருக்கின்றன என்று நாம் முன்னின்று வாதிக்க முனைந்தாலும்.  அவை நம் ஊனக்கண்களால் நாம் கண்டுகொண்டவையல்ல.

பண்டை மனிதற்கு  ( ஒருமை)   கண்டறிந்த ஒளியுருண்டைக்குப் பெயரொன்று அமைக்கத் ததிகிணதோம் தாளம் போட்டுக்கொண்டிருக்கையில்,  தாம் கேள்விப்பட்டுக்கூட இராத பல சூரியன்கள் மனக்கண்முன் தோன்றுதல் எங்ஙனம்?  அவனறிந்தது ஒரு சூரியன் தான்.

தொலைவில் உள்ளது.  அதிலிருந்து ஒளியும் சூடும் நம்மை வந்து எட்டுகின்றன,.  அதைப்பற்றி..........தவிர  மற்றவை தெரியவில்லை.

என்ன அது? அதுதான் உலகைப் படைத்த கடவுளோ?  எங்கோ இருக்கிறது,  வெகுதொலைவில்.

பகல் வேளையில் சூடு கொடுக்கிறது, உணர்கிறோம்.

தேவர்களில் நமக்குச் சூடு கொடுக்கும் தேவன் இவன் தான்.

சூடு இவனால்தான் இயல்கிறது.   இவன் சூடு கொடுத்து இயல்பவன்.  இவன் சூடியன்.   இது திரிந்து சூரியன் ஆயிற்று.  டகரம் ரகரமாகும்.

இத்தேவனைப் போல் இன்னொருவன் இல்லை.  இவனுக்கு பாற்பகுப்பு இல்லையோ.  இருப்பினும் சூடியன் என்றே குறிப்போம்,  

பிறர்:  அவன் தேவன், அவனை வணங்குவோம்.

மூன்று நாட்களாய் இவனை வணங்கிக்கொண்டு இருக்கின்றேன்.  அம்மம்மா. நல்ல உணவு கிடைத்து மகிழ்ச்சியாய் இருக்கிறேனே. கடவுள் என்றால் இவனே கடவுள்.

குளிரையும் போக்கினான் இவன்!

ஆங்கே இருந்துகொண்டே சாப்பாடும் அனுப்புகிறான் இவன். 

இவனைக் காலையில் காலையில் வணங்கவேண்டும்.

[இவ்வாறு சொல்லிக்கொண்டே இருக்கலாம்.]

ஓர் அறிவு வாதி சொல்கிறான்: இது தேவனுமில்லை,  கடவுளும் இல்லை. இது வானத்து ஒளிப் பிழம்புருண்டை.

எதை எப்படிப் பார்த்தாலும் இறுதியில் எல்லாரும் இல்லாமல் ஒழிந்துதான் போகிறார்கள்.

சூரியன் அழியாததுபோல் இருக்கிறதே.......

உலகில் அரியது இது. இதுபோல் இன்னொன்றில்லை. எல்லாம் இவனிலிருந்து வருவதுதான்.

அரியதை உள்ளடக்கிய தேவன் இவன்.

அரு + உள் + நன்.

கடவுளில் உள் இருப்பதுபோல் இதில்  (இச்சொல்லில்) உள் இருக்கின்றது.

(உள்  என்பது ஒரு விகுதி)

அருணன்.

இவனுக்கு இன்னொரு செல்லப்பெயர்.அருள்நன் > அருணன் என்பாருமுண்டு.

இவனுக்கு ஒவ்வொரு மொழியிலும் பெயர்   (உண்டு).  இவன் செல்லப்பிள்ளை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்

சில திருத்தங்கள்:  21052022 2250


ஞாயிறு, 15 மே, 2022

மாளிகை மகளிர் தொடர்பு மற்றும் பாஞ்சாலி



நெடிலாயிருக்கும் ஒரு சொல்லின் முதலெழுத்து, பெயராய் அமைகையில் குறிலாய் மாறிவிடுதலைப் பல சொற்களில் கண்டு நாம் பல இடுகைகளில் விளக்கியிருக்கிறோம். இதை ஒரு பெருநிகழ்வாகக் காட்டிய வேறு நூல்களை யாம் காணவில்லை; இருப்பின் அவற்றின் பெயர்களைப் பின்னுட்டமிடுங்கள்.

நெடில் அடிச்சொல்லினெழுத்து குறிலானதை முன் இடுகைகளில், மேற்குறித்தபடி காண்க.  இவ்வாறே  குறிலும் நெடிலாகும்.


"மகன் மகள் உடையவனையே அல்லது உடையவளையே மன்பதை மதித்தது. மன்பதை எனில் சமுதாயம், குமுகாயம். மகன் உடையவன் பெரியவன். அவனால்தான் நாலைந்து மகன்களையும் வயலுக்கு அனுப்பிப் பாடுபடச் செய்ய முடியும். எண்ணிக்கை இருந்தால்தானே படைவலிமை. ஆளிருந்தால்தானே உழைக்கமுடியும். உழுதல் முடியும். இதனால் மக என்ற சொல் திரிந்து மா என்றாகும். அப்போது மா என்பது பெரிது என்றும் பொருள்தரும். மக என்பது மகா, மஹா என்றும் திரியும்."

மேற்கண்டபடி அவ்விடுகையில் வரைந்திருந்ததை அறிவீர்.

தமிழர் வாழ்ந்த நீண்ட நெடுங்காலத்தில் ஒரு பகுதியில்  ஆணாதிக்கமாகவும் இன்னொரு பகுதியில் பெண்ணாதிக்கமாகவும் இருந்துள்ளது சொல்லாய்விலிருந்து தெரிகிறது.  பாஞ்சாலி தமிழ்நாட்டில் வாழ்ந்தவளல்லள்,  பக்கத்திலுள்ள நாட்டில் வாழ்ந்தவள் என்று கதைகள் கூறினாலும்,  பாஞ்சாலி என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் பொருள் உரைக்கலாம். அதிலொன்று:

பால் - பகுதி.
பால்+ மை > பான்மை.   பான்மை + சால் +  இ  > பான்சாலி>  பாஞ்சாலி ஆகிறது.
பான்மையான  ( பகுதிகளான) வாழ்வுடையவன்.
பகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்தலும் , ஒரேகாலத்தியல்தலும் என இருவகையாக நிகழும்.

பாஞ்சாலிகாலம் பெண்ணாதிக்க காலமாகும்.

பாஞ்சாலி என்பது தமிழ்மூலங்களிலிருந்து விளைந்த சொல்லென்று இது காட்டும்.

அப்பனின் பெயரின்றி  அம்மாவின் பெயர் பிள்ளைக்கு முன்பெயராய் வருமுறையும் பெண்ணாதிக்க முறையே.  இது நாள்வரை இம்முறை மக்கள்  சிலரிடைத் தொடர்ந்துள்ளது.

மக என்ற சொல் மா என்று திரிந்தது என்று கூறுங்கால்,  மக என்ற சொல்லில் பால்தெரிவு  இல்லை.  மகள்,, மகன் என்ற சொல்லிலேதான் பால்தெரிகின்றது. இதுபோலவே,  மகான் என்பதில்  ஆன் விகுதி வருவதால்,  ஆண்பால் தெரிகின்றது.  மகான் என்பது உண்மையில் "பெருமகன்" என்பதே ஆகும். மகான் என்பது சிறப்பு பொருள் அடைந்த பின்பு,  பெருமகன் என்ற சொல் சற்றே வேறு பொருட்சாயலை உணர்த்தத் தேவைப்பட்டது. அதுவே மீண்டும் உயர்நிலைப் பொருள் பெற்றகாலை.  பெருமான் என்று திரிந்து உன்னதம் உணர்த்தியது.  எ-டு:  ஏசுபெருமான்,  நபிபெருமான்,  வள்ளுவப்பெருமான்.

அரசியரில், மகவை உடைய அரசியே உயர்வாக உணரப்பட்டாள்.  அவள் மகவரசி என்று போற்றப்பட்டாள்.  இது திரிந்து " மகராசி" ஆனது.  மகவு உடைய அரசன்: " மகராசன்" ( மகவரசன்).  இதில் வரும் மகவென்ற சொல், ஆண்மகவு என்று எடுத்துக்கொள்ளலாம்.  ஆணுக்குப் பட்டம் கட்டும் முறை வழக்கிலிருந்த காலங்களில்.  மக என்பதே மகா, மஹா ஆயிற்று.

சமுதாயம் ( குமுகாயம்) குறிக்கும்  மன்பதை என்ற சொல் ம(க)ன் பதி ஐ >  மன்பதை என்று அமைந்திருத்தலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே  ஆகும்.  மகன் பதிவாய் உள்ள கூட்டமே மன்பதை அல்லது சமுதாயம் ( குமுகம் )  ஆகும்.

மகளிர் இருந்த பெருமனையே  மகள் > மகளிகை >  மாளிகை என்று அமைந்தது என்பதும் ஏற்புடைய விளக்கமே.  அவர்கள் பயன்படுத்திய மணமுடைய சாந்து  "  மாளிகைச்சாந்து"  என்று கூறப்பட்டது.  கன்னிமாடம் என்பது இன்னொரு பெயர்.   இவற்றை இனி ஆய்வு செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


குறிப்புகள்:

பதி பதிதல் -  வாழ்தல். பதி > வதி > வாழ்தல். வாழ்தற்பொருள் மன்பதை என்ற சொல்லில் கிடைப்பது.  ப-வ போலி.

பல் - வல் - மல்.  இவை வலிமை குறிப்பன.  வலிமையாகக் கட்டப்பட்டது என்ற பொருளில்,  மல்> மள் > மாள் > மாளிகை என்றும் காட்டலாம்.  சுற்றாக உள்ளது என்பதுதவிர,  வழுவில்லை.

இகுதல் -  இறங்குதற் கருத்து.  இறங்குமிடம்  இகை எனப்பட்டது.  இகு+ ஐ.  சுட்டுச்சொல் விளக்கம்:  இ - இங்கு.  கு-  சேர்விடம் குறிக்கும் சொல்.  "மகளிர் இங்கு வந்து சேர்வர்"  என்பது.  ஆகவே மகளிர் கூடுமிடமாகத் தொடங்கி, பின் பொதுவாக யாரும் தங்குமிடம் என்று பொருள் விரிந்தது என்று உணர்க, அரசிளங்குமரிகள் அவர்களின் தோழிகள் வேறு பெருமாட்டிகள்  முதலானோர் வந்து தங்கி உடைமாற்று ஒப்பனை முதலியன செய்துகொண்ட இடமென்று தெரிகிறது.  ஏனைப் பயன்பாடுகளும் சேர்ந்துகொண்டிருக்கும். இப்பொருள் பின் மாறிவிட்டது.  தேவரடியாள் என்பது போல. அரண்மனை தவிர அவர்கட்கு பிற வசதி இடங்கள் தேவைப்பட்டிருக்கும். வேறு உயர்ந்த பெண்களுக்கும் இத்தகைய இடம் வேண்டுமென்பது கூறவேண்டியதில்லை.

வண்டி வாகனங்களில் வந்து இறங்கிச் செல்வதால்  இறங்குதற் கருத்துடைய விகுதி மிக்கப் பொருத்தமானது.

இன்னும் வாசிக்க:


மக என்பதை விரித்து ஆய்கிறது,  இவ்விடுகை.




வியாழன், 12 மே, 2022

என்ன மசாலா? எந்த மசாலா?

இணைக்குறளாசிரியப்பா. 

( அடிகளில் சில் சீர்கள் குறைந்துவரத் தொடுக்கும்

ஆசிரியப்பா)


சிலமசா  லாவகை   நன்றாய்  இருக்கும்;

சிவவகை கறிக்குச்  சுவைதரா தவையே.

சாப்பிடும் மன்னர்  இதன்நீ   திபதிகள்!

ஆப்பிடு   வார்கள் இவர்களே   கடைக்கு!

கடைக்குள் நீர்போய்

எதைமசாலா  என்றுபோட்    டே நீர்

கறிவைத்       தீர்களோ?  என்று 

கடாவி     னீரெனில் கடிவர்  உமையே!

ஏனந்த  வம்பு?

வம்போ  ?     வேண்டாம்,   வேண்டாம்

வம்பு   வளர்ப்பின்  பின்புதலை யணையை

தம்பின்  முதுகில தன்பின்  கட்டணும்.

ஓரலை  பேசிப்  படமெடுத்  தாலே

பேரறி  வினரும் கண்டு களிப்பர்.

என்னம  சாலா என்பதை அறிந்தீர்

எண்ணம  னைத்தும்  இனித்திடக் குதிப்பீர்

என்று  குழந்தையும்  இனித்திட முடிக்கும்.

வாய்ப்பேச் சென்பது தாய்ப்பேச்   சினைப்போல்

இனிப்ப  தெனப்பா லதுவே

கனிப்பயன் காண்க மென்மை மிகுத்தே.

பொருள்:

சாப்பிடு மன்னர் -  சாப்பிடுகிறவர்களை மன்னர் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறது.

ஆப்பிடுகிறவர்கள்  -  ஆப்பு இடுகிறவர்கள் ( மசாலை சரியில்லை என்றால் இவர்கள் வரமாட்டார்கள்.  அதனால் " ஆப்பு இடுவார்கள்" எனப்பட்டது.

முதுகிலதன்பின் -  முதுகில் அதன் பின்

அலைபேசி  -  கைத்தொலைபேசி

கடாவி  -  கேள்வி கேட்டால்

முடிக்கும் -  சொல்லி முடிக்கும்

( பொருள் தொடர்கிறது)


  ( மசாலா பெட்டிகள் கடைமுன்னர் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.)

(பொருள் தொடர்ச்சி)


வம்பு என்ற இறுதிச் சொல் அடுத்த அடியிலும் வரும்படி அந்தாதித்  தொடையாகத் தொடுக்கப்பட்டுள்ளது.  பின்னரும் இதுபோன்றே முயலப்பட்டுள்ளது.

எனப்பாலது -  எனப்படுவது.   (  என, பான்மை உடையது )

எனற் பாலது என்பது இன்னொரு  வகைத் தொடர்.

தாய்ப்பேச்சு --- அன்னையின் பேச்சு

கனிப்பயன் -  கனிபோலும் பயன். ( உவமைத் தொகை)

மசாலா :  இச்சொல்லுக்கான விளக்கம் இங்கு வாசிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_7508.html

உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டம் இடுக.






This shop is situated in Sengkang East.  Curry (sambar) and chutneys are tasty.  You must go early before 10.00 am for chutney to be served.  The tasty chutney finishes quickly.  Buses 161, 163. nearest MRT is Buangkok..   nearest road junction is Sengkang East Avenue x Sengkang East Rd.  LRT is Renjong.  There are other good shops too. What they did not hide was what curry powder they are using. ( Perhaps due to lack of space inside their place or temporarily left there). 

Written by APM.  




         This is not an advertisement.

செவ்வாய், 10 மே, 2022

அன்னைக்குப் பாடியது

 உலகமெல்லாம்  மகிழும் நம்  அன்னைகட்கே,

உலர்விலாத நன்றியிலே ஊறுமகிழ்வே!  

பலகற்றார் கல்லாதார்  வேறுபடார்,

அன்னையன்பு முன்னெவரும் ஒருமைகொள்வார்

குலவுகுழந்  தைகளெனில் ஒன்றுதன்மை

அன்னைபாசம் என்பதிலே உலகம் ஒன்று,

நிலவுமிது  படைத்திட்ட ஆண்டவரின்

நேர்நிற்கும் பொருளொன்றோ ஞாலத்தில்லை.


உரை:


உலகமெல்லாம்  மகிழும் நம்  அன்னைகட்கே   -----   நம் அன்னையரைப் பற்றி யாரும் எழுதினாலும் பேசினாலும் நினைத்தாலும் இவ்வுலகம் மகிழ்வு கொள்ளும்; 

உலர்விலாத நன்றியிலே ஊறுமகிழ்வே!  ----  இந்த மகிழ்ச்சியானது காய்ந்துவிட முடியாத ஒரு இயல்பினதான நன்றியில்  ஊறிவருகின்ற மகிழ்வு ஆகும்.  ( அதாவது நன்றி கலந்த மகிழ்ச்சி ).  

பலகற்றார் கல்லாதார்  வேறுபடார்,----  இதில் கற்றவர், கல்லாதவர் - தெரிந்தவர் தெரியாதவர் என்று வேற்றுமை இல்லை

அன்னையன்பு முன்னெவரும் ஒருமைகொள்வார்----- தாயன்பு என்பதில் நடவடிக்கை எதுவும் பன்மைநிலை கொள்வதைக் காணமுடிவதில்லை,  ( ஒன்றான நிலையே எடுப்பர் ),

குலவுகுழந்  தைகளெனில் ஒன்றுதன்மை  ---- தாயிடம் பிள்ளை குலவுதலிலும் ஒரு வேறுபாடு இல்லை,  எந்தக் குழந்தை ஆயினும் அன்னையின் அணைப்பிலே ஆனந்தம் காண்கிறது.

அன்னைபாசம் என்பதிலே உலகம் ஒன்று,-----  அன்னை பிள்ளையின்மேல் கொள்ளும் அன்பிலும்   வேறுபாடு இல்லை;

நிலவுமிது  படைத்திட்ட ஆண்டவரின்----இதுவே உலகில் நிலவுவதாகும்;  படைப்பில் 

நேர்நிற்கும் பொருளொன்றோ ஞாலத்தில்லை.---  இதற்கு நிகராக எதையும் கூறமுடியாது, இவ்வுலகில் என்றபடி

இவற்றை எல்லாம் கூட்டிச் சொன்னால்:

அன்னையர்க்கு என்றும்இணை கண்டதில்லை.

எல்லா அன்னையர்க்கும் எம் அன்புவணக்கம்.




திங்கள், 9 மே, 2022

திருடுபவரைக் பிடிக்க




 தாமாய்  மனந்திருந்தி  தாரணி போற்றிடவே

தீமை யகல்  வாழ்வு  மேற்கொண்டு  ----- தாமுயர்ந்த

மேதக்க நல்லோரும் பல்லோர்  உளர்காண்பாய்

நாதக்க வாறுயர்த்து வாய்.


வீட்டில் நயம்பேசி நண்பாகி க்   காணாமல்

கூட்டில் புகுநாகம் போல்முட்டை -----ஓட்டுடைப்பில்

உள்ளவை  உண்பாரைக்  காண்பிடி  ஓர்படம்

உள்ளதைக் காட்டி விடும்.

உரை:

தாமாய் -  யாரும் சொல்லாமலே;  தாரணி -  உலகம்,  தாரணி என்றால் வாழ்வுக்கு அனைத்தும் தரும் அழகினை உடையதாகிய உலகம்.   தீமை அகல் வாழ்வு -  கெடுதல் இல்லாத வாழ்வு;  தாம் உயர்ந்த -   உலகில் தாம் மேன்மை கண்ட ( நல்லவர்கள் ). பல்லோர் உளர் - பலர் உள்ளனர்.  காண்பார் -  அறிந்துகொள்வார்கள்;   நா - நாவினால்;  தக்கவாறு -  பொருந்தும்படி;  உயர்த்துவாய் -  போற்றுவாய்.

நயன்  -  நல்லபடி;   நண்பாகி  -  கூட்டாளியாகி;  காணாமல் -  பிறர் அறியாமல்;   கூட்டில் புகுநாகம் -  பறவைக்கூட்டில் உள் புகுந்த நாகம்.    போல -  ஒக்க; 

முட்டை ஓட்டுடைப்பில் உள்ளவை உண்பார் -  உடைத்து முட்டையில் உள்ளதை உண்பார்,   காண் பிடி ஓர் படம் -  கண்டுவிட்டால் ஒரு படம் பிடித்து விடுங்கள். உள்ளதைக் காட்டிவிடும் -  உண்மையைக் காட்டிவிடும்,
  

நம் நந்தகோபனைக் கண்டனையோ? [கிருஷ்ண பகவான்]

 கோப்பன் என்ற சொல் இப்போது பேச்சு மொழியில் வழங்குவதில்லை. அது அயற்சொல் போல் செவிகளை வந்து எட்டினாலும், பழைய தமிழ்நூல்களில் இன்னும் கிட்டுவதே யாகும்.

இந்தச் சொல்லின் பொருள்,   போக்கிரிப்பையன் என்பதுதான்.  கண்ணபிரானும் தம் சிறுவயதில் சேட்டைகள் பல செய்தவரென்பர்.

பலரும் செய்யும் சேட்டைகளில் சில கெடுதலானவை. ஆனால் கண்ணன் செய்தனவாகச் சொல்லப்படும் சேட்டைகள் கோபியரிடைப் பின்னர் ஓர் இன்ப அதிர்வினை விளைத்தவை.  அறியாப் பருவத்தில் கொஞ்சம் வெண்ணெயை வழித்துத் தின்றது.

கோபத்தை உண்டாக்கினாலும் நல்லவனாகப் போற்றப்பட்டவன்.  ஆகவே "நல்ல போக்கிரி".

நன்+ த  கோப்பன்.  (பொருளை மேலே கவனித்துக்கொள்ளுங்கள்).

நந்தகோப்பன் >  நந்த கோபன்   ஆயிற்று.

கோப்பன் > கோபன்  இஃது இடைக்குறை.

நந்த   இது உண்மையில் நன்றான என்பதன் திரிபு.    நன் த > நந்த என்றது பிந்தி

முந்தி  என்பன போலும் ஓர் புணர்ச்சி.

இச்சொற்கள் பலவாறு உரைக்கத் தக்கவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.




ஞாயிறு, 8 மே, 2022

கோபமும் சிவப்பு நிறமும் தொடர்புடைய கருத்துகளும்.

 இவை விளக்கி உணர்த்தற்கு எளிதான கருத்துகள்தாம்  என்றாலும் ஒரு சுருக்கமான வரைவாக்கி முன்வைத்தலுக்கே முதலிடம் தருதல் வேண்டும். அதை இங்கு எவ்வாறு நிறைவேற்றலாம் என்று  எண்ணியவாறே தொடங்குகிறோம்.

கோபம் என்பது நல்ல தமிழ்ச்சொல் என்று இலங்கைப் பெரும்புலவர் ஞானப்பிரகாச அடிகளார்  முடிவு செய்தார். இவர் எழுதிய ஒரு நூற்படி  ( 1 copy of his treatise )  நிறைதமிழ்ப் புலவர் மறைமலையடிகளிடம் இருந்ததாகத்  தெரிகிறது. உங்களிடம் அது இருக்குமானால் அந்நூலையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

கோபம் மிகுதியானால் மனிதனின் முகம்,  கூம்பிவிடும்.  கோபம்  கொண்டமுகம் சிவந்துவிடுதலும் இயற்கையாகும். 

கோம்பு என்பது சினக்குறிப்பும்  ஆகும்.

கூம்பு என்பதும் கோம்பு என்பதும் தமிழில் தொடர்புடைய சொற்கள். இதற்கு மாறாக  கோபமின்மையில் முகமலர்ச்சியைக் கவிஞரும் எழுத்தாளரும் குறிப்பிடுவர்.  மக்களும் அவ்வாறே குறிப்பர்.

கூம்பு(தல்) >  கோம்பு(தல்) >  ......

கோம்புதல் என்றால் சினத்தல். 

கோம்பு + அம் =  கோம்பம் , இவ்வமைப்பு  இடையில் ஓர் மெய்யெழுத்தை இழந்து  கோபம் என்று அமைந்தது,   இது இலக்கணத்தில் இடைக்குறையாகும்.

இன்னோர் இடுகையில் இவ்விடைக்குறைகள் எவ்வாறு தமிழை வளமாக்கி உள்ளன எனற்பால அமைப்பைக் கொஞ்சம் விரிவாகக் கவனிக்கலாம்.

இனி, முதனிலை குறுகிச் சொற்கள் அமைதலும் இங்கு வேறு இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது.   கூம்பு(தல்) >  கூம்பு > கூம்பு + அம் > கும்பம்.

இன்னொன்று:  கூடு(தல்) > குடு+ பு  >  குடும்பு + அம் >  குடும்பம்.  இங்கு கூடு என்ற வினை குடு என்று குறுகியவாறு,  பு என்ற இடைநிலையையும் அம் என்ற இறுதியையும் பெற்று  தொழிற்பெயராயிற்று.

விகுதி என்பது சொல்லின் மிகுதி.    மிகுதி > விகுதி. இன்னொரு திரிபு இதுபோன்றது:  மிஞ்சு> விஞ்சு.

சொல்லாற்றலில் இந்தப் பொழிவு செய்தவர் பிறரை விஞ்சிவிட்டார் என்ற வாக்கியத்தினைக் கவனித்துக்கொள்ளவும். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


வெள்ளி, 6 மே, 2022

உலோகம் என்ற சொல்லுக்கு இன்னொரு காரணம்.

 உலோகம் என்பது இருபிறப்பி என்பதை உணர்ந்துகொள்ளச் சொல்லில் உள்ளமைந்த காரணங்கள் இருக்கின்றன.  இது கடினமன்று.

அதிலொரு காரணம்.  இரும்பை உலையில் இட்டு உருக்கி எடுப்பர். அதன்பின் அது அடிக்கப்பட்டு வேண்டிய உருவினை அடைவிப்பர். அதன்பின்னரே அது   இறுதியுருவிலும் பயன்பாட்டிலும் ஓங்குவதாகும்.   ஓங்குதலாவது, இங்கு இறுதிநிலை பெறுவது.

உலை + ஓங்கு + அம் =   உலை ஓகு அம்  > உல் ஓகு அம் =  உலோகம் ஆகும்.

இன்னோர் ஆய்வும்  இதை ஒட்டியதே.  அதனை இங்கு வாசிக்கலாம்.

https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_15.html

அயம், அயில் என்பன அது அயலிலிருந்து வந்தது என்பதைக் காட்டுகிறது.  இந்த இரும்படிக்கும் இடங்கள் குடியிருக்கும் வீடுகட்கு அருகிலில்லாமல்  அயலில் வைக்கப்பட்டிருந்தன என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.  இந்த அயற்கருத்துக்கு அதுவும் ஒருகாரணமாக,  அல்லது அதுவே ஒரு காரணமாக இருந்திருத்தலும் கூடும். எவ்வாறாயினும் அயன்மைக் கருத்து உள்ளடங்கிய சொல் இதுவாகும் என்பதில் ஐயமில்லை. இரும்பைக் கண்டு வியந்தது ஒரு காரணமாக இருக்கும்.  ஐ -  வியப்பு.   ஐ >  ஐ+ அம் > ( ஐகாரக் குறுக்கமாகி )  அ+ அம் > அயம் எனலும் பொருந்தும்.  இரும்பு புடமிட்டுச் செய்யப்படும் சித்த மருந்து " அயச்செந்தூரம்"  ஆனது.

இரும்புக்கு இறைப்பற்று வழிகளில் வேலையில்லை ஆதலால்,  இச்சொல்லுக்கு பூசாரிகளிடம் வேலையில்லை.

அடித்து  ( அடிச்சு)  உருவு தரபட்ட தன்மையால்,   அடிச்சு>  அச்சு என்ற அமைந்தது இடைக்குறை ஆகும்.

ஓகு+ அம் >  ஓகம் என்பது போலும் அமைப்புகள் முன் பழைய இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளன. இவைபோல்வன இவண் மீண்டும் விளக்கப்படவில்லை

உலை என்ற சொல்லின் ஐ விகுதி, ஓங்கு என்பதில் ங்,  கு என்பதில் இறுதி  உ இவை ஒழிக்கப்பட்டாலே சொல் அமைப்புறும். சொல்லமைப்பாளர்கள் இவற்றை வைத்துக்கொண்டு மாரட்டிப்பதில்லை என்பதைப் பலமுறை கூறியுள்ளோம்.  மூலம் அல்லது சொல்லடிகளே இருத்திக்கொள்ளப்பெறும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

செவ்வாய், 3 மே, 2022

நீர்க்குழாய் ஆலோசனைகள்

 நீரலைக்கும்போது  பாதிச் சீரலைப்பே போதும்

நீரிருப்பைச் சேமிக்க இந்தளவே  ஆகும்!


தோய்க்கும்துணி  கூடுவதால் நீர்ச்செலவோ குன்றிக்

குறைவான அளவுநீர் சலவைக்குப் பற்றும்.


சவர்க்காரம்  இடுங்காலை குழாய்நீர்  அடைப்பின்

எவர்க்கெனினும் நீர்ச்செலவு குறைந்திடவே செய்யும்.


பல்துலக்கும் அப்போது அடைத்திடுக குழாய்நீர்

நில்லாமல் ஓடுவதால் நட்டமொன்றே  காண்பீர்.


இவை அரசாங்க ஆலோசனைகள்.  பலர் சொல்வனவும்  இவையே.

பாடலாக்கியுள்ளோம்.  சிவமாலா.


திங்கள், 2 மே, 2022

நெகிழியைப் பாடுவேனோ?

 உழைக்கும் --

கைகளைப்  பாடும்  வாயால்  ----- நெகிழிப்

பைகளைப்  பாடுவேனோ?

வாழ்வினைப் பாடும் வாயால் -----  மண்பெறும்

தாழ்வினைப்   பாடுவேனோ?


தாவிடும் பாங்கறியா  ---  நிலைத்துத்

தவிப்புடன்  பரவும்கொடி

ஓவிய மரஞ்செடிகள்  ----  படும்துயர்

கூவி உரைதரவோ?


ஓரிடம் பழுதுபட்டுவிட்டால் தாவி இன்னோரிடம் செல்லுதற்கு மரஞ்செடிகட்கு திறம் இல்லை. விதை கொட்டைகள் மூலமே பின்வருவனவற்றை ( இனி முளைக்க இருப்பன )  நகர்த்த முடியும்..  பாவம் இவை.  இவற்றையும் பாதுகாக்க வேண்டும்.

நிலைத்து - முளைத்த  இடத்திலே இருந்துகொண்டு.

ஓவிய -   ஒரு சித்திரம்  போல.

கூவி -  யாவரும் அறிய ஒலி எழுப்பி.

உரை -  எடுத்துச் சொல்லி.

இவை தாவுவதற்கு அரியவை ,  ஆகையினால் தாவரம் எனப்பட்டன. வேறு விளக்கமும் உண்டு.  தாவுதல் என்றால் இடம்பெயர்தல்.

தாவு + அரு + அம் >  தாவரம்.   ( தாவிச் செல்ல [ இடம் பெயர]  முடியாதன )

தாழ் + வரு + அம்  >  தாழ்வரம் > தாவரம் :  உயரமாக முளைக்க இயலாதவை.

இச்சொல் இருபிறப்பி.




நெகிழிப்பை.  PLASTIC BAG



விசுவநாதன் என்ற தமிழ்ப்பெயர்.

 இன்று "விசுவநாதன்"  என்ற  பெயரில் அமைந்துள்ள தமிழ் மூலங்களை அறிந்துகொள்ளுவோம்.

தமிழல்லாத சொற்களைப் பற்றிக் கூறுவதாயின்,  அத்தொகுப்பில் பல தமிழாதலைக் காணலாம்.  தமிழே இல்லாத மொழிகள் உலகில் அரியன என்று அறிஞர் சிலர்   கூறுவது உண்மையாகும். ஆங்கிலத்தில் உள்ள அட்வான்ஸ் என்ற சொல்லில் உள்ள "அட்"    என்பது "அடு"  ( அடுத்துவரல் ) என்பதன் திரிபாகும்.   ரேர் ( அரிது )  என்பது அகரமாகிய தலையிழந்த சொல்.  ஆங்கிலத்தில் காணப்படும் தமிழ்ச்சொற்களில் பல தமிழாயிருத்தலால்  தமிழும் ஓர் இந்தோ ஐரோப்பியத்துக்கு மூலமொழியாதல் கூடும் என்பது முன்னர்  ( இருபதாம் நூற்றாண்டில்)  சுட்டிக் காட்டப்பெற்றுக் கட்டுரைகளிலும் வெளிவந்துள்ளன.  அவற்றில் சில உங்களை எட்டியிருத்தல் கூடும்.

நன்னூல்  என்னும் தமிழ் இலக்கணம் தமிழிலிருந்து இந்தோ ஐரோப்பிய மொழிகட்குப்  மொழிபெயர்க்கப்பட்டபின்,  அம்மொழிகளில் மொழிநூல் கலை வளர்ச்சியடையத் தொடங்கிற்று. இந்தியாவிலிருந்து ஐரோப்பியர் அறிந்துகொண்டவை பல.  சீனாவிலிருந்து அவர்கள் வெடிமருந்துகளை அறிந்துகொண்டது போலவே இதுவும்.  அகரவரிசைகள்  நிகண்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை.  இது நிற்க: 

விசுவநாதன் -  இச்சொல்லில் உள்ள விசு என்ற சொல்லுக்கும் வீசுதல் என்ற வினைச்சொல்லுக்கும் உள்ள தொடர்பு முன்பு விளக்கப்பட்டுள்ளது.  அதை இங்குக் காணலாம்:  ஒன்றை வீசுவீரானால் உம் கையிலிருந்து இடைவிரிவில் அது பயணித்துச் சென்று கீழே விழுகிறது. இது விரிசெல்கை.

விழித்தல் என்பதும் இமை விரித்தல்தான்.    விர்>விரி> விழி.

இலத்தீன் பகர்ப்பு:  விர் > விழி > விஸ்  (viz )  visual.  viz>   video ( I see).

https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_16.html 

விசு என்பது தமிழ் அடிச்சொல். 

அது விரிதற் கருத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்  ஆகும்.

இதையும் வாசித்தறிக:

https://sivamaalaa.blogspot.com/2014/08/blog-post_63.html

வாயித்தல்   ( வாயாற் சொல்லுதல் )  என்பதன் திரிபுதான்  வாசித்தல்.  ய- ச போலி.  ய -ச திரிபு பிறமொழிகளிலும் காணப்படுவதாகும். (  Not language  specific   )

ஒரு சொல் தமிழா அன்றா என்பதை ஸ், ஷ் என்று வரும் ஒலிகளை வைத்து முடிவு செய்யப்படாது.  உயர்> உயர்த்தல் > உயர்த்தி > ஒஸ்தி ( திரிபு)   அதனால் அது தமிழன்று எனப்படாது.

விர் > விரி [  விரிவு  ]

விர் >  விய்   ( வியனுலகு).

விய் >  (  வியு)  >  விசு >  விசும்பு.  (   காயம்  [  ஆகாயம் ] )

விசுவம்  .  > விசும்பு (எங்கும்  விரிந்து அமைந்ததாகிய உலகம்.)

இதனை "விரிநீர் வியனுலகு"  என்று சொல்லமைப்பையும் தெளிவுறுத்திக் கூறினார்  வள்ளுவனார்.

(தமிழை ஒட்டிய பூசாரிமொழிதான்  சமத்கிருதம். அது தமிழின் பிம்பமாய் எழுந்து சில அயல்சொற்களையும் உள்ளடக்கி விரிவடைந்தது)

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

(மீள்பார்வை செய்யுமுன் இடைக்காலத்தில்

எழுத்துபிறழ்ச்சிகளை சரிப்படுத்தி வாசித்துக்கொள்க.

நேரமிருந்தால் பின்னூட்டம் செய்து உதவுக )


ஞாயிறு, 1 மே, 2022

திங்கட்கிழமை வாழ்த்து

 திங்கட்கிழமை  ஒவ்வொன்றுமே 

தித்திக்கும் புதுத்தொடக்கம்!

புத்தாற்றின்  புதியபுனல்

செடியிற்பூத்த  இன்றைப் பூவே.

படியமையாத  புதிய பாதை.

வானுலாவும் தாரை ஒவ் வொன்றும்

தேனுமிழ்ந்து கண்சீமிட்டும்.

வல்லவன் இறைவன் துணையொடு

நல்லதெலாம் நடைபெறும், மகிழ்க.


புனல் - தண்ணீர்

படியமையாத -   முன் உள்ளதுபோல் அமையாத

படி -  முன்பே படிந்திருப்பது.  (படு > படி,  படர்)

தாரை - நட்சத்திரம்


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

புங்கனூர் வெற்றியும் சிங்கை உலாவும்

 புங்கனூர் வெற்றிமன்னர் நாம்

பொங்கிடும் வளத்தினில் புரண்டநல்  ஆட்சிபின்

சிங்கையில்  வலம்வந்  திட்டோம் ----- நம்

சீரிய மொழியொடு சிலமொழிகள் அறிந்த (  புங்கனூர் )