மசாலை என்ற தமிழ்ச்சொல் வேறு மொழிகளிலும் இப்போது பரவி "சேவை " செய்துவருகிறது. மசாலா தோசை மூலம் மசாலா என்ற சொல் சீனர்கள் மலாய்க் காரர்களுக்கும் தெரிகிறது. கிழங்குப் "பெரட்டல் " (புரட்டல்)) தோசையின் உள்ளீடாக வைக்கப்படுவதால் அதுதான் அவர்கள் அறிந்த மசாலா . மசாலைத் தூள் தயாரிப்பாளர்கள் மூலம் இச்சொல் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் அன்றாட வழக்குச் சொல்லாகிவிட்டது.
மசித்தல் , இது அம்மியில் வைத்து அரைத்து மசிக்கப் படுவதை குறிக்கிறது.
இப்போது அரைபொறிகள் இவ்வேலைச் செய்கின்றன.
மசி + ஆல் + ஐ = மசாலை. மசித்தலால் குழைவாக்கப்படுவது என்று பொருள். ஆல் = கருவிப் பொருளில் அழகாக வந்துள்ளது. ஐ - .விகுதி .
மசாலா என்பது அதன் திரிபு .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக