வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021

 இருபதிரு பத்தொன்றே வருக நீயே

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்

இன்னுயிர்கள்  எல்லாமும் வளர்ந்து நன்மை

பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

அறிவாழ்வில் மக்கள்தாம்  பிறங்க  நன்றே.



 

செவ்வாய், 29 டிசம்பர், 2020

இன்று செவ்வாயா வெள்ளியா?

 செவ்வாயெது  வெள்ளியெது  தெரிய வில்லை

சேவைகளை  வீட்டினின்று  புரிவ தாலோ?

ஓளவைசொலும் இடும்பைகூர் வயிறுண் டேனும்

அதற்காவிச் சூட்டுணவு அகத்துள் கிட்ட,

எவ்வகையில் நோக்கிடினும் இடரொன் றில்லை!

இன்றுநேற்று  நாளையெலாம் கையின் பேசி

செவ்வையாகச் சொல்லுவதால் குழப்பம் இல்லை!

செந்தமிழால் என்றுமினி இணைய வாரீர்.


அரும்பொருள்:

செவ்வாய் எது -  எது செவ்வாய்க் கிழமை?

வெள்ளி எது -  எது வெள்ளிக்கிழமை?

தெரியவில்லை -  தான் தெரிந்துகொள்ள முடியவில்லை

சேவைகளை  வீட்டினின்று  புரிவ தாலோ? -  கோவிட் என்னும்

மகுடமுகி நோயின் காரணமாக நாம் இப்போது வீட்டிலிருந்து

அலுவலக வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோமே,

அதனால் தானோ? 

ஓளவைசொலும் இடும்பைகூர் வயிறுண் டேனும் =  நமக்கு ஒளவைப்பாட்டி உணர்த்திய  பசி என்னும் துன்பத்தை ஏற்படுத்துகின்ற ஊணடை பை இருந்தபோதிலும்

அதற்காவிச் சூட்டுணவு அகத்துள் கிட்ட  - அந்த வயிற்றுக்கு  ஆவி பரியும் சூடான உணவு வீட்டினுள்ளே கிடைப்பதால்;

எவ்வகையில் நோக்கிடினும் இடரொன் றில்லை! -  எப்படி ஆய்ந்தாலும் நமக்குத் துன்பம் ஒன்றுமில்லை;

இன்றுநேற்று  நாளையெலாம் -  இன்று என்ன கிழமை , நேற்று  என்ன கிழமை, நாளை என்ன கிழமை,  மற்றும் தேதி மாதம் என்பவெல்லாம்;

 கையின் பேசி  -  நமது கையின் அகலாத கருவியாய் உள்ள கைப்பேசி,

[கைக்குள் நிரந்தர இடம் பிடித்துவிட்டது என்பது தோன்ற கையின் பேசி என விரிக்கப்பட்டது;]

செவ்வையாகச் சொல்லுவதால் -  தவறாமலும் தடுமாறாமலும் சொல்லுவதனால்,

குழப்பம் இல்லை! -(  அதிலிணையும் வரை குழப்பமே அன்றி)  அப்புறம் ஒரு குழப்பமும் இருத்தலில்லை;

செந்தமிழால் என்றுமினி இணைய வாரீர். -  என்றுமே நல்ல தமிழில் இணைந்திருங்கள்,  ஆங்கிலத்திலோ பிறமொழியிலோ சொல்லாமல் தமிழாலே நாட்களைச் சொல்லுங்கள். -  வீட்டிலிருக்கையில்.

இன்று செவ்வாய் Tuesday   அப்புறம் இரண்டு நாள் செல்ல வெள்ளி Friday என்று கைப்பேசியே மொழி ஆசிரியர் ஆகிவிடுகிறது.

கிழமை எது என்று தெரியாவிட்டாலும் கிழமை என்ன என்று தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கைப்பேசி. தினக்குழப்பம் மொழிக்குழப்பம் எல்லாம் தீர்த்துவைக்கும்.

என்றவாறு.


 











திங்கள், 28 டிசம்பர், 2020

ஊரார்வீட்டு நெய்யும் பெண்டாட்டி கையும். அது கருணை.

 எள்நெய் என்ற சொல்லைத்தான் மக்கள் திரித்து உளைத்து ( = உச்சரித்து) எண்ணை என்று மாற்றிக்கொண்டனர்.  கொஞ்ச நாள் கடைக்காரர்களும் எண்ணை என்றே அச்சடித்துத் தம் புட்டிகளில் ஒட்டினார்கள்.  அது சரியன்று  என்று தமிழ்வாத்திமார் எதிர்த்ததனால் இப்போது மீண்டும் நல்லெண்ணெய் என்று எழுதத் தொடங்கினர். இதில் நமக்கொன்றும் உளைத்தல் ( வெறுப்பு )  இல்லை. நாம் இங்குக்  கண்டுகொள்ள விழைவது என்னவென்றால், நெய் என்பது ணை என்று மாறிவிடத் தக்கது என்பதுதான்.

ஓர் ஊரில் ஒரு மனைவி, அவள் கணவன் சாம்பாரும் சாதமும் சாப்பிடும் போதெல்லாம் அவன் நெய் கேட்டுத் தொந்தரவு செய்வானாம். அவனுக்குத் தினமும் வேண்டுமென்பதற்காக மனைவியானவள் கொஞ்சம்தான் சோற்றில் போடுவாளாம்.  மீண்டும் கேட்டால் அவளுக்குக் காது கேட்காது!  அடுக்களைக்குள் போய்விடுவாள்.

ஒருநாள் நெய் முற்றும் தீர்ந்துவிட்டது.  அடுத்தவீட்டில் போய் நெய் கேட்கவே, அந்த வீட்டுக்காரர்கள் நெய்யைப் புட்டியுடன் கொடுத்துவிட்டனர். நிறையவே இருந்ததாம்.  மனைவியானவள் அதைக் கொண்டுவந்து, அன்று தன் கணவனுக்குப் "போதும் போதும்" என்று சொல்லுமளவுக்கு நெய்யை உருக்கி ஊற்றினாளாம். அதே நெய்யில் வறுத்த முருங்கை இலைகளை வேறு அன்புடன் பரிமாற, அவற்றையும் சோற்றில் பிசைந்தபடி அன்றைத் தினம் நன்றாகச் சாப்பிட்டானாம்.

அப்போது அவ்வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒரு மூதாட்டியும் அங்கு வந்து சேர்ந்தாள்.  ' எப்படிச் சாப்பாடு?"  என்று அவள் வினவ,  "ஊரார் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே" என்று சொல்லிக்கொண்டு, கணவன் எழுந்து கைகழுவ மகிழ்ச்சியுடன் சென்றானாம்.

தன் சொந்த நெய்யாய் இருந்தால் அது பாராட்டுக்குரிய நெய் என்னலாம். இது அடுத்தவீட்டு நெய்யாயிற்றே.  அது கருப்பு நெய் என்றுதான் சொல்லவேண்டும். பொறுப்பில்லாத மனைவி கருப்பு உள்ளத்துடன் கணவனுக்கு இட்ட கருநெய்.    இது  எள்நெய் எண்ணை ஆனதுபோல் கருநெய் கருணை ஆகி,  சாம்பார் சோற்றில் அதிகமாகவே கலந்துவிட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? கணவனுக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லாமல் போய்விட்டது.

கணவன்பால் மனைவிக்கு வந்த கருணைதான் என்னே!

கை என்ற சொல்லும் கர் என்று திரியும். இந்த இடுகையை வாசித்துக் கொள்ளுங்கள்.  கர்+ அம் = கரம். 

https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_12.html

அந்தப்பெண்டாட்டி தன் கரத்தால் பரிமாறிய நெய் ஆதாலால் அது  கைநெய் என்று பொருள்படும் கர்நெய் தான். கர்நெய் அப்புறம் கர்ணை,  கருணை  என்று மாறியிருக்கும்.  இந்த நிகழ்ச்சி மிகப் பழங்காலத்தில் நடந்ததனால் இதை உங்கள் ஆய்வுக்கே விட்டுவிடுகிறோம்.


தொடர்புடைய வேறு இடுகைகள்:

தனிமையில் கிடந்து இறந்தவர்கள் 

https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_85.html

வீரியம்  https://sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_24.html

கைகேயி  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_15.html


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்



ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ப - சில சொற்களில் பரவற் கருத்து.

 ஒரு சிறுபிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, ஒரு சொல்லின் எல்லா எழுத்துக்களையும் வாசித்தபின்னரே அச்சொல்லின் பொருளை அப்பிள்ளை உணர்கின்றது. இதுவே வாசித்துப் பொருளுணர்தற்குப் பொருத்தமானது ஆகும். ஆனால் சொல்லின் ஆதிப்பொருளை அல்லது ஆக்கப் பொருளை உணரவேண்டுமானால்  -    அதாவது சொல்லாய்வில் ஈடுபட வேண்டுமானால் -  அதன் முதல் ஒன்றோ இரண்டோ எழுத்துக்களை நோக்கினால் அது புரிந்துவிடுகிறது. அது எப்படி என்று நீங்கள் கேட்கவேண்டும். ஏனெனில் நாம் காண முற்படுவது ஆதிப் பொருண்மையையே. சொற்களைப் பிறப்பித்தோர், ஓர் அடிப்பொருளை அடைந்தே சொல்லின் உருவாக்கத்தைக் கண்டறியத் தொடங்கினர் . மாறாக,  பெரும்பாலும் ஒரு சொல்லை முன்வைத்துக்கொண்டே அச்சொல்லின் தோற்றத்தை முழுமையாக அறிந்துவிட முடிவதில்லை.  ஒரு சொற்குடும்பத்தையே ஒருசேர நோக்கித்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

உலகில் பொருள்கள் பலவும் பல்வேறு உருவில் உள்ளன. சில உருண்டையாய் உள்ளன.  சில சப்பட்டையாய் ( இடப்பரவலாய்) உள்ளன. இன்னும் உருவங்கள் பல. இடப்பரவலாய் உள்ள உருப்பொருளும் உருவற்ற பொருளும் பற்றிய பல சொற்களும் பகரத்திலே தொடங்குதல் காணலாம்.  இதனைச் சில எடுத்துக்காட்டுகளால் நாம் உணரமுடிகிறது.

பரமன்   -  பர  -  எங்கும் பரவலாய் உள்ள ஆனால் காணவியலாத உலகாளும் ஒரு பொருள்.  [  பர என்ற இரண்டு எழுத்துக்களை அறிந்தவுடன் சொல்லின் ஆக்கம் தெரிந்துவிடுகிறது ]

பலகை -   பல  -   சப்பட்டை நிலையில் உள்ள ஒரு மரப்பொருள். இடப்பரவல். காரணம் ஆய்ந்தாலே தெரிகிறது.

பனி  -  பன் -  பரவலாக வான் தெளிக்கின்ற சிறு குளிர் திவலைகள்  

பலி    -   பல் -  ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களைப் பலவிடங்களிலும் கொல்லும் முறை.  ( இடப்பரவலும்  செயற்பரவலும் காலப்பரவலும் )

 (ஆறிலும் சாவு, நூறிலும்  சாவு -  பழமொழி).இது காலப்பரவல்.

பரிப்பெருமாள் -  பரி -  எங்குமுள்ள பெருமாள். இடப்பரவல், காலப்பரவல்.

பர > பரி.  பரி என்பது குதிரையையும் குறிப்பதால் குதிரையில் வரும் பெருமாள் என்றும் கூறுதல் உண்டு. இது கடவுள் தன்மையை விளக்காமல் ஒருவாறு தொன்மப் பாணியை முன்வைக்கிறது.

பரிபாடை   பரவலாக பயன்படுத்தப் படும் பேச்சு.

பரணி -பர.  மேலே இடப்பரவலாக அமைக்கப்படுவது.

பார்  - பரந்த இவ்வுலகம்   (வியனுலகம்)

பார் (<   பர )

பஞ்சு  பறந்து ( பரந்து)  பரவும் மெல்லிய பொருள்

ப > பர் > பர > பார்.

பர் > பல்.

பல் > பன். இவ்வாறு அடிச்சொல்லும் திரியும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்பு.

பரந்தாமன்.

"   அத்துவித வத்து " என்ற தொடரைவைத்துப் பாடினார் தாயுமான சுவாமிகள். அத்துவிதமென்பதற்கு நேரடியான இன்னொரு தொடர்:  அத்வைத வஸ்து என்பதாகும்.கடவுள் வேறு மனிதனாகிய "நான்"  வேறு உணர்வோமானால் அது துவைதம் என்பர். 

கடவுளும் நான் என்னும் மனிதனும் ஒன்று என்போமானால் அது அத்வைதம்  ஆகும்.  இரண்டல்லாத ஒருமைநிலை அதுவாகும். இயேசு கூறிய நான் கடவுள் என்ற கொள்கை உண்மையில் நமது வேதங்கள் கூறிய அத்வைத (வேதாந்த)மே ஆகும். இக்கொள்கையை அவர் இந்தியாவிற்கு வந்து சொல்லியிருந்தால் யாரும் அவரைக் குறுக்கையில்* அறைந்திருக்கமாட்டார்கள் என்று நாம் திடமாகச் சொல்லலாம்.

கடவுள் பேரான்மா  அவர்போலவே அமைந்த  நாமோ  ஒவ்வொருவரும் ஒரு சிற்றான்மா.  கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாற்றல் அல்லது ஒன்றைச் செய்து உருவாக்கும் ஆற்றல் உள்ளோனாய் இருப்பதற்குக் காரணமே நாம் கடவுளிலிருந்து போந்ததே ஆம்.

கண்ணன் ஓர் அவதாரம் அல்லது தோற்றரவு என்பதே மகாபாரத நூல் கூறுவது.    இதையும் தாண்டி அவரே கடவுள் என்பது கருத்து. தாமே கடவுளும் ஆனவர் - பரந்தாமர்.

இப்போது பரந்தாமன் என்ற சொல்லை ஆய்வோம்.  இச்சொல்லில் பரம் என்ற சொல்லும் தாம் என்ற சொல்லுமிருப்பதால்,  அவர் தாமே பரம் ஆகிறார். பரம் என்பது கடவுள் எனற்பொருட்டு.  தாம் என்பது தாம் என்று நாம் பயன்படுத்தும் சொல்லே ஆகும்.  தாமே பரம் என்ற சொற்றொடர்,  பரம் தாம் என்று மாறி அமைந்தது. இது அன் விகுதி இணைந்து  பரந்தாமன் ஆகிற்று,  இஃது முறைமாற்று அமைப்பு.

பரம் + தாம் + அன் = பரந்தாமன் 

வேறு பொருள்:  பரந்த ஆகாயத்தில் உள்ளவர்.  பரந்த + ஆம்+ அர்.  ஆம் என்பது ஆகாயம் என்பதன் இடைக்குறை.  ஆகும் என்பதன் தொகுப்பும் ஆவது இச்சொல். அன். அர் என்பன ஆண்பால் பலர்பால் (உயர்வுப் பன்மை ) விகுதிகள்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 *  குறுக்கை -  சிலுவை என்பதற்கு இன்னொரு பெயர். இச்சொல்லுக்கு குறுக்கை என்பதை ஞா.தே, முதலிய அறிஞர் வழங்கினர்.  குறுக்கை என்பதன் பழைய பொருள் வேறு சில.

வெள்ளி, 25 டிசம்பர், 2020

நடிகை சித்திரா ( தமிழ்நாடு) மரணம்

எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார்

எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர்

அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார்

மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.


அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்

வருதுன்பம்  அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!

சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை

அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர்.


கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான் எனச்சொல்வார்

நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே!

உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக;

நிலவுலகில் வருவனவே  அறியுறைவார் நிகருளரோ?



பொருளுரை:


எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார் - இந்தப் 

நில உலகில் எதிர்காலம் முழுவதும் அறிந்த மனிதர்கள்  

யாருமில்லை;


எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர்  -  எதிர்காலம் 

அறிந்துவிட்டால் அவர் கடவுள் என்னலாம்;


அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார் - இதன்

காரணமாகத்தான் திருமணத்துக்கு முன் சோதிடம் 

பார்க்கிறார்கள் (பொருத்தம் முதலியவை).


மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.-  சோதிடர்

அறிவுரையைப் பெற்று எதிர்கால வரவுகளை முதலில்

அறிந்துகொண்டு திருமணவாழ்வில் புகவேண்டும்; ( இதனால்

நீங்கள் இழப்பது சோதிடருக்குத் தரும் கூலி மட்டுமே; இது

பெரிய இழப்பு அன்று.)


அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்-

இதனை அறிந்துகொள்ளும் முன்பே கல்யாணம் செய்துகொண்டு

குடும்ப வாழ்க்கை நடத்தினால் (துன்பம் ஏற்படக்கூடும்,  அதைத் 

தவிர்க்க )  மரணயோகம் இருக்கிறதா,  

என்பது தொடங்கி;


வருதுன்பம்  அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!---

வாழ்க்கையில் காணப்போகும் இன்னல்கள் பற்பல, அவற்றை

அறிந்துகொள்ளாவிட்டால் எவ்வாறு, தெரிந்துகொள்ளுங்கள்.


சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை -  

சின்னத்திரை நடிகை சித்திரா விரைந்து மரணம் எய்தியதை;


அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர். ---

தெரிந்துகொண்டு இவ்வழகிய உலகில் இருந்து நல்லபடி

வாழ்கின்றீர்கள். ( இந்த உயிரிழப்புக்கு உங்களால் செய்ய

முடிந்தது ஒன்றுமில்லையே!)  அதாவது சோதிடமாவது அதை

மற்றியிருக்குமே! ஒருவேளை அதைக் கண்டறிய முடிந்திருந்தால்.


கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான் 

எனச்சொல்வார்---அது கொலை என்றும்,  இல்லை என்றும்,  

தற்கொலை என்றும் (பலவாறு ) சொல்வர்;


நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே! --

நிலவரத்தைப் பார்த்தால் தலைக்குமேல் அலைகள் தோன்றியுள்ளன;


உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக;  -  உண்மை

சொல்லுதலை நிலைநிறுத்துங்கள்;  பிறவற்றைச் சொல்வதை

விலக்குவதே நன்று;


நிலவுலகில் வருவனவே  அறியுறைவார் நிகருளரோ? - இந்தப்

புவியில் வருவதை அறிந்து வாழ்பவர்கட்கு நிகரானவர் யார்

உள்ளனர், யாருமில்லையே.





உருவணிமை: அப்புதல் மற்றும் apply

 அவ்வப்போது சில ஆங்கிலச் சொற்களும் ஒலிப்பிலும் பொருளிலும் அண்மித்து நிற்றலை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  உள்ளார்ந்த தொடர்பொன்றும் இல்லாமலே சொற்கள் ஒருமைகொண்டு நிற்றலும் உண்டு. மனிதர்களைப் போலத்தான்: வேறு வேறு கண்டங்களில் பிறந்திருந்தாலும் சிலவேளைகளில் உருவொற்றுமை யுடன் ஒருவருக்குப் பதில் இன்னொருவர் நடிப்பது முதலானவற்றைச் செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இவ்வாறின்றி  இருவேறு மொழிகளில் உண்மைத் தொடர்பு இருந்து அதனால் சொற்களில் உருவணிமை உள்ளதாதலும் நிகழ்தலுண்டு. ஒருமொழியிலும் இன்னொருமொழியிலும் தொடர்பு கற்பிக்கவும் உடனிகழ்வின்மையை உறுதிசெய்யவும் குறைந்தது நானூறு சொற்களாவது கிட்டுதல் வேண்டும் என்று ஆசிரியர் சிலர் வேண்டுவதுண்டு. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் தொடர்பு காட்ட அத்தகைய ஓர் இடுகை முப்பது ஆண்டுகளின் முன் கிட்டிற்று,  ஆனால் இப்போது அது இல்லை என்பர். இவற்றை நீங்காது வைத்திருத்தலுக்கும் செலவு உண்டாதலின் சில நீக்கப்படுதல் உண்டு. இருக்கும்போது அறிந்து வைத்திருக்காமல் அஃது போனபிறகு கவலை காட்டுவதில் தமிழர்கள் முன்னணி கொள்வதுபோல் தெரிகிறதென்பது உண்மைதான்.

ஒரு மருந்தை புண் முதலிய பட்ட இடத்தில் அப்புவதென்பது யாண்டும் நிகழ்வதே.  அப்புதல் அத்துதல் என்பன போலிச்சொற்கள். இவ்விரண்டிலும் அப்புதல் என்பது அப்பிளை என்பதுடன் உருவணிமை கொண்டது. அப்பிளை - ஆங்கிலச்சொல்: apply,  as in " Apply some powder (or snow) to your face."

ஐரோப்பிய  மொழிகளில்  "அப்ளை"  என்ற சொல்லுக்கு பழைய அர்த்தம் அப்புவது, ஒட்டுவது, தடவிச்சேர்ப்பது என்பதுதான்.  ஆங்கிலத்தில் 1400 -ஆம் ஆண்டுமுதல் இது  பயன்பாட்டில் இருந்துவருகிறது. வேலைக்கு மனுப்போடுவது என்ற பொருளும் இச்சொல்லுக்கு உள்ளது.  ஆனால் அது 1850 "வாக்கி"லிருந்து மக்களால் புழங்கப்பட்டு வருகிறதென்று தெரிகிறது. இவற்றை ஆங்கிலச் சொற்றொகுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இப்பொருளில் இச்சொல் வழங்குவது பிற்காலத்தது என்று தெரிகிறது.

"பிலிக்காரே" என்ற இலத்தீனிலிருந்து  அவர்கட்கு இச்சொல் கிட்டியுள்ளது.  இதன் முன்னைப்பொருள் " மடக்கு " என்பது என அறிந்துரைக்கின்றனர். ஒட்டும்போதும் சேர்க்கும்போது மடக்கி ஒட்டுதல் நிகழும் செயல் என்ற அளவில்  அஃது தொடர்புடைமை காண்பதே. அதனால் அப்புதல் இச்சொல்லுக்கு அடியாய் இருத்தல் கூடுமெனினும், இன்னும் ஆய்வுக்குரியதாகவே இதைக் கிடத்தவேண்டும்.  முடிவாய்க் கூறுமளவு ஒற்றுமை காண இயல்வில்லை.

ஆயினும் இற்றை அளவில் ஓரளவு ஒலியணுக்கமும் உருவணிமையும்  கொண்டசொற்கள் இவையாகின்றன.

அறிக மகிழ்க.

பெய்ப்பு - பின்னர்.



புதன், 23 டிசம்பர், 2020

அன் அடியில் இரு சொற்கள் அமைத்த திறம்

 அன் என்ற அடிச்சொல் இருவேறு சொற்களின் அமைப்புக்கு நிலைக்களனாய் மிக்க அழகாகப் படைக்கப்பட்டுள்ள தன்மையைக் கண்டு தமிழன் மகிழாமல் இருக்கமுடியாது. இதை அறிந்தபின் இதே புனைவுத் தந்திரத்தை இன்னொரு சொல்லமைப்பின்போது கையாண்டு திறனைப் பெருக்கிக்கொள்ளலாகாதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளத் தோன்றுமே.

சுட்டடிச் சொல் வளர்ச்சியில் அன் இன்றியமையாத சொல். அ, இ, உ என்பவற்றில் அ என்பது அங்குள்ள பொருளை அல்லது மனிதனைக் குறிக்கவருகின்றது. அங்கிருத்தலாவது இலக்கணத்திற் படர்க்கை என்று சொல்லப்படுவதாகும். மிகு எளிய சொல்லாகிய அவன் என்பதில் இக்கருத்து இலங்குகிறது. அவன் என்பது அ+ அன் என்று பொருந்தி,  இடையில் ஒரு வகர உடம்படுமெய் (வ்) இடைப்புகுந்து, அ+ வ் + அன் = அவன் ஆயிற்று.  அ என்ற சுட்டுமட்டும் இருமுறை வருகின்றது.   அ, அன் என்ற இரண்டு.  அ என்பது இடம்; அன் என்பது இங்கு மனிதனைக் குறித்தது. இதை வாக்கியமாக்க வேண்டின், அவ்விடத்து அம்மனிதன் என்று கூறி முடிக்கலாம்.

இப்போது உள்ள காலம் இன்று என்று அமைத்தனர்.  அ அன் அவன் என்று இனிதாய் அமைத்த தன்மைபோலவே,  இந்நாளைக் குறிக்க,  இ என்ற சுட்டிலிருந்து  இன்+ து > இன்று என்று அமைத்தனர்.  பேச்சு வழக்கில் இன்று என்பதில் அமைந்த தகர ஒற்றை நீக்கிவிட்டு, இன்+ உ > இன்னு என்றனர். இதை வாக்கியப்படுத்தினால் இந்த நாள்,  ( இன் ) நம் முன் உள்ளது ( உ ) என்றவாறு  அழகாக வருகிறது.

இப்போது உள்ள காலம் இன்று ஆதலால் அப்போது உள்ள காலம் அன்று ஆகவேண்டுமே.   அங்குள்ள என்பதற்கு  அன் என்றும் து விகுதியை இறுதியில் வைத்தும் அன் + து >  அன்று என்ற சொல்லை உருவாக்கினர்.  பேச்சுவழக்கில் இன்னு என வந்தமை போலவே  அன்று என்பது அன் + உ > அன்னு என்று வந்தது.  எழுத்து மொழி "திருந்திய மொழி" என்று கருதிக்கொண்டு அக்கால மனிதர்களால் அமைக்கப்பட்டது. ஒலிகளால் அமைந்த மொழி எம்மொழியாயினும் திருத்தம் பெற்ற மொழி என்பது ஒரு கருத்தமைவு அல்லது  அபிப்பிராயமே ஆகும். இயற்கையாய்க் கருதுவதானால்,  திருந்தியது என்று ஒன்றுமில்லை.  இன்னு என்பது இன்று ஆகினால் ----அப்போது உள்ளவர்கள் "இன்று" எனச் சொன்னால்----- கேட்க நன்றாக உள்ளது என்று எண்ணினர்.  அவ்வளவுதான். மரபின் காரணமாக நாமும் அதைத் திருத்தமான சொல். என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். சொல்லில் திருத்தம் என்று ஒன்று இல்லை. கருத்தமைவில் ஏற்புடையதாய்ப் பெறப்பட்டது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். Many a time, it is an opinion; there is nothing factual about it.

சென்ற நாளைக் குறிக்க " அன்று " என்னும் அழகிய சொல்லைப் புனைந்த மனிதன்,  அது ஒரு நீண்ட கால ஓட்டத்தில் முடிந்துவிட்ட காலத்தைக் குறித்தது என்று உணர்ந்திருந்தான்.  ஆயின் இன்று உள்ள நேர நிலையின் விளிம்பு என்பதைக் குறிக்க ஒரு சொல் தேவைப்பட்டதை உணர்ந்தான். மீண்டும் அன் என்ற சொல்லை எடுத்தான்.  து என்ற விகுதியை மீண்டும் எடுத்து அன் + து என்று பூட்டினான். ஆனால் அது மீண்டும் அன்று என்று முடிந்த நாளையே குறிந்த்தது.  அந்தக் குறையைப் போக்க,  இன்றைய நாள் என்று வருவித்துக்கொள்ள,  இ என்ற சுட்டினை இணைத்துக்கொண்டான்.  அது அன்+ து + இ =  அந்தி ஆகிவிட்டது. மீண்டுமோர் அழகிய சொல் கிடைத்தது.

ஒரு நாள் முடியும் நேரத்துக்கு,  முடிதல்தான் அந்தி. இந்தப் பொருள் ஊட்டப்பட்ட பொருண்மையாகும்.  ஊட்டப்பட்டதால் அது அருத்தம் ( அருந்து + அம் = அருந்தம்  அருத்தம்  அர்த்தம்)..  சொல்லின் உள்ளுறு பகுப்பில் அந்தப் பொருள் இல்லை. நாளின் முற்றுநிலையைக் கருதிக்கொண்டு சொல்லை அமைத்தபடியால் அது அந்த நாள்முடிவைக் குறிக்கலாயிற்று.  காரணக் காலப் பெயராய் அது மலர்ந்தது.  அன் + து + தல் >  அன்றுதல் என்பது முடிதலைக் குறிக்க வழக்குப் பெற்றது. தாள் முதலியவற்றைக் கடித்து அதைக் கெடுக்கும் பூச்சிக்கு " அந்து" என்ற பெயரும் வந்தது. அன்றுதல் என்ற முடிதல் குறிக்கும் "திருந்திய" சொல் அமைந்துவிட்டதால், " அந்துதல்" என்ற பேச்சுமொழி இணை ஏற்படவில்லை. ஆனால் அந்து + அம் = அந்தம் என்ற சொல் அமைந்து ஒருவாறு சமநிலையைக் காத்தது.  அன்+ து + அம் =  என்பது இன்னொரு வகைப் புணர்ச்சி விதிப்படி அமைந்து சொற்பெருக்கத்தினை விளைத்தது.

அந்தி என்பதும் அழகிய தமிழ்ச்சொல் ஆயிற்று.

"அந்தி சாயுற சேரம், வந்தாரைத் தேடி ஓரம் "  --  என்றான் ஒரு கவி.

"ஏடி ஒளி முகத்தாளே அந்தி "  என்றான் இன்னொரு கவி.

"அந்திப் பெண்ணாள்" என்றான் இன்னொருவன்.

அன்+ து = அன்று.

அன் + து = அந்து.

அடியும் விகுதியும் ஒன்றுதான்.  இருவேறு வடிவங்கள் வந்து மொழியின் வளம் ஆர்ந்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



 




செவ்வாய், 22 டிசம்பர், 2020

அண்டிரண்டு பட்சி

 நம்மிடம் உள்ள கதைகளில் சிலவாவது அகவை குறைந்த அருங்கனிக் குழந்தைகளிடம் அவர்களில் சிலர் உண்டாக்கிய கதைகளாக இருந்து, பிற்பாடு அவை கற்பனையும் கேட்டுமருள் தன்மைகளும் ஊட்டப்பெற்று வயதுமிக்கப் பெரியோரிடமும் பெருமிக்கும் *1 வண்ணமாக வழங்கத் தலைப்பட்டவையாய் இருக்கவேண்டுமென்பதைச் சிலர் ஆய்ந்து கருத்துகள் வழங்கியிருக்கலாம். ஆனால் அவை நம்மை எட்டவில்லை.

அவற்றுட் சில தெய்வ நம்பிக்கையுடன் விரவி,  ஆய்வுரி நிலையினின்றும் எழுந்து தொடாமைத்திறம் அடைந்துவிட்டனவாய் இன்றிருத்தல் கூடும். அவற்றை யாம் ஈண்டு கருதாமை அறிவுடமையாகும்.

ஆயினும் அண்டிரண்டு பட்சிகள் பற்றிய கதை அவற்றுள் இன்னும் கருதற்குரித்தாகவே உள்ளது.  உலகிற் சிலவிடத்து வானிலிருந்து வந்து இறங்குவன இப்பட்சிகள் என்றும், காட்சிக்கு மருட்சி விளைக்கும் தகையனவாய் அவை விளங்குமென்றும் கூறுவர்.  இக்கதை கேட்ட சிறுவர், தாம் வளர்ந்துவிட்ட நிலையில் அவற்றை மறந்துவிடுதல் பெருவரவாகும்.

இப்போது " அண்டிரண்டு" என்ற சொற்றொடர் காண்போம்.

இதை அண்டு இரண்டு என்று பிரிக்க.

இது வினைத்தொகை.  அண்டும் இரண்டு பட்சிகள் என்று விரிக்கலாம்.

ஒன்றை ஒன்று அண்டும் இரண்டு பறவைகள்,  உண்மையில் காதற்பறவைகள். இவற்றை உருவிற் பெரியன என்று கற்பித்து,  ஒன்றாக வந்து இறங்குவன என்று கூறினமை,  இவைபோலும் காதலாய்க் கூடித்திரியும் பறவைகளை சிறு குழந்தைகள் காணாமை வேண்டும், அப்போது ஒழுக்கம் கெடாது வாழ்வர் என்ற கருத்தினடிப்படையில் கதையின் சிறப்பியல்புகளைக் கூட்டியுள்ளனர் என்பதன் உண்மை புலப்படுகின்றது.

எனவே அண்டு இரண்டு என்பது அண்டும் இரண்டே ஆகும்.

குறிப்புகள்

*1 பெருமிக்கும் -  பிரமிக்கும், கண்டு பெரியதாய் வியக்கும்.

*2 https://sivamaalaa.blogspot.com/2017/02/bird.html பட்சிபற்றி.

*3 பகு+இ = பக்கி.  ககரம் இரட்டிப்பு.  பக்கி> பட்சி. க்ஷ = ட்ச. எனினுமாம்.


மெய்ப்பு பின்.



ஞாயிறு, 20 டிசம்பர், 2020

பாரியையும் பர ஐயன் மொழியும்.

 கூரிய வெயில் காயும் இடங்களில் வாழ்வோர் நாளடைவில் சீரிய கருநிறத்தோர் ஆகிவிடுகின்றனர் என்று அறிவியலாளர் நமக்கு அறிவிக்கின்றனர். குளிர்வாட்டும் நிலப்பகுதி வாழ்நர் பளிச்சென்ற பாங்கான வெண்ணிறமுடையாராய்க் கவின் காட்டுகின்றனர். இங்கிருப்போர் அங்குச் சென்று புதிய உறைவிடம் புகுதலும் அங்கிருப்போர் இங்குவந்து மங்காத மாண்புறு வாழ்வின் வைகுதலும் உலகில் எந்நாட்டிலும் பலகாலும் காண்புறுமொரு நற்காட்சியே  ஆகும்.   ஆனால் ஆரியர் என்றொரு மக்கள் இவண் வந்தேறினர் என்ற தெரிவியற் கருத்து ( theory )  ஒரு வெற்றுத் தெரிவியலே அன்றி அதற்கு உரிய சான்றுகள் கிட்டிற்றில என்பதே உண்மையாகும்.  சமத்கிருத மொழியினிற் சொல்லாய்வு செய்து அதிற் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளமையினால் ஆரியமக்களென்பார் புலப்பெயர்வும் கலப்புறவும்  நடைபெற்றன வென்பது ஆதாரமற்றதாகும்.  ரோமிலா தாப்பார் முதலிய வரலாற்றறிஞரும் இப் புலப்பெயர்வுத் தெரிவியலை ஏற்றுக்கொள்ளவில்லை.

சமஸ்கிருதமென்பது வெளிநாட்டு மொழியன்று.  அம்மொழிக்கு வழங்கிய பண்டைப் பெயர்களும் தமிழிலிருந்து அமைந்த பெயர்களே.  சமஸ்கிருதமென்பது ஒலிச்சிறப்பு மிக்க மொழி.  அதற்குப் பலபெயர்கள் வழங்கி மறைந்துள்ளன. அதற்குச் சந்தமொழி என்று பொருள்படும் சந்தாசா என்ற பெயர் வழங்கியது.  அது  சந்த அசைவு*1 என்ற தமிழ்ச் சொற்றொடரின் மூலம் ஏற்பட்ட பெயராகும்.  சமஸ்கிருதமென்பதும்  சமைந்த ஒலி என்று பொருள்தரும் சொற்றொடரிலிருந்து பெறப்பட்டதாகும். சமை > சம.   கதம்.> கிருதம்  ( கதம் என்பது ஒலி எனற்பொருட்டு.  கத்து >  கது > கது அம் > கதம். அதற்குமுன் வழங்கிய மொழிகள் பாகதங்கள்.  பா என்பது பர என்பதன் முதல் நீண்ட சொல்.  கதம் என்பது முன் சொல்லியதே.  பர > பார் > பா கடைக்குறை எனினுமாம். நானிலம் எனப்பட்ட பண்டைத் தமிழ் நிலப்பகுதிகளும் ஒன்றில் வைகாது எல்லா நிலங்களிலும் பரவலாக வாழ்ந்த பரையர் என்ற பறையர் வழங்கிய மொழி. இவர்களே ஆதிப்பூசாரிகள்.  இராமாயணம் பாடிய முந்து கவியாம் வால்மிகி என்னும் பெரும்புலவனும் அம்மொழியின் இணையற்ற புலவன்.  அம்மொழியின் முந்து அமைப்புக்கு உந்தும் இலக்கணம் அமைத்த பாணினியும் பரவலாக வாழ்ந்த கூட்டத்துப்  பர ஐயனே. மனுநூலை வரைந்த ஆசிரியனும் ஒரு திராவிட அரசனென்ப.  ஆரியன் என்று இன்று கூறப்படும் "பிறமண்ணான்" .  என்று கருதப்படுவோன் அல்லன். எந்த ஆரியன் என்பானும் எந்த முதன்மை  நூலையும் இயற்றவில்லை.  வியாசன் மீனவன்.   எப்படி வெள்ளைக்காரன் ஆரியர் எழுதியவை என்று இந்த நூல்களைச் சுட்டினான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

சமஸ்கிருதமென்பது தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பண்டை நாட்களில் பண்படுத்தப்பட்ட மொழியென்று அறிஞர் கா.  அப்பாத்துரைப் பிள்ளை தம் ஆராய்ச்சி நூலில் வெளியிட்டிருந்ததும் மறக்கலாகாது.

சமத்கிருதமென்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் சொற்கள் பல தமிழ் மூலங்கள் உடையவை என்பது இங்கு நிறுவப்பட்டுள்ளது.

இந்து என்ற சொல் சிந்து என்ற  சிறு நூல்வகையைக் குறிக்கும் என்றும்  அந்நூலால் ஆன துணி பண்டமாற்றுச் செய்யப்பட்ட இடமான ஆற்று நிலப்பகுதி குறிக்குமென்றும் வரலாற்றசிரியர் கண்டுபிடித்துள்ளனர் என்பதை அப்பாத்துரையாரே கண்டெழுதியுள்ளார்.  எம் நினைவில் அது தென்னாடு என்ற நூலில் உள்ளது. தென்மொழி என்ற அவரே எழுதிய நூலையும் படித்தறிக. கோவிட்19 காரணமாக இந்த நூல்கள் இப்போது எம் வசமில்லை. சிந்து மொழி என்பதோ திராவிட அல்லது தமிழின  மொழிகட்கு நெருக்கமானது.  இதை முன்பு இங்கு வெளியிட்டிருந்தோம்.

இனி மனைவியைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன. அவற்றுக்கான விளக்கங்கள நம் இடுகைகளில் காண்க.  அவை வருமாறு:

பாரியை என்பதன் திறப்பொருள் : https://sivamaalaa.blogspot.com/2019/05/blog-post_30.html

பாரியை  https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_6.html

வாழ்க்கைத் துணை https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_47.html

இவற்றைப் படித்துத் தமிழ் மூலங்களை உணர்க. சமஸ்கிருதமென்பது ஆரிய ர் மொழியன்று என்பதையும் உணர்ந்துகொள்க.  ஆனால் கல்வி கலைகளினால் பெயர்பெற்ற உயர்ந்தோர்தம் மொழி. இவர்கள் இனத்தால் உயர்ந்தோர் அல்லர்.  அறிவால் உயர்ந்தோர்.  ஆர் என்ற உயர்வு குறிக்கும் தமிழ் விகுதியும் ஆர்தல் என்ற வினைச்சொல்லும் இனக்குறிப்புகள் அல்ல. பிராம்மணர் சூழ்ச்சி ஏதுமில்லை. சாதிகள் என்பவையும் தமிழர் நிலம் நான்கென்பதால் விளைந்தவை.  சாதிகள் என்ற பாகுபாட்டில் ஏற்றத்தாழ்வுகள் பின்னாள் ஒட்டு ஆகும். இவ்வேற்றத் தாழ்வுகள் சாதியாக்கத்தின் உடன்விளைவுகள் அல்ல. சாதி என்பது கடல்வாழ் உயிரினங்கட்கு ஏற்பட்ட குறிப்பு. "நீர்வாழ் சாதி" என்கின்றது தொல்காப்பியம். சார்தல் - வினைச்சொல். சார்பு:   சார் >  சார்தி > சாதி. (ஜாதி வேறு சொல்).

வான்மிகி பாடிய சங்கப் பாடலொன்றும் உள்ளது.  அவர் இன்னொரு வான்மிகி என்பது கற்பனை. பாத்திரப் படைப்புகளில் தமிழ் மூலங்கள் உள.  எ-டு: விபீடணன் < வி( ழு ) + பீடு + அண(விய) + அன் = விபீடணன் > விபீஷணன். விழுமிய பீடினை அணவி நின்ற பெரியோன்.. கைநீட்ட முடியுடையாள்:  கை+ கேச(ம்) + இ > கைகேயி. இரா + வண்ணன் > இராவணன்.

அறிக .நோயினோடு அணுக்கம் தவிர்க்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.


குறிப்புகள்

*1  சந்த அசை -  https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_13.html

மற்றும்  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_6.html.



சிகரம் சிறுத்து அருகில் வருவது.

 இன்று சிகரம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

இமையத்தில் மிக்க உயர்ந்த உச்சி உடையது மவுன்ட் எவரஸ்ட் என்பது  நம்மிற் பலருமறிந்ததே. உயர்ந்த உச்சியை மலைமுடி என்று ஒரு கவிஞர் வருணித்தார். அடி முடி என்னும் சொல்வழக்கு இருப்பதால் மலையின் இறுதியை முடி என்றதும் பொருத்தமே ஆகும்.

மலையில் ஏறி மேலே செல்லச் செல்ல அடி சிறுத்து, ஓரங்கள் அருகில் வந்துவிடும்.  இது யாவரும் அறிந்த ஒன்றே ஆகும்.  இதிலிருந்து எப்படி ஒரு சொல் அமைந்தது என்பது அறிதற்கு இனியதாகும்.

மலைமுடி நோக்கிச் செல்லச்செல்ல, ஓரங்கள் அருகில் வந்துவிடுகின்றன. அகலம் குறைந்துவிடுகின்றது அல்லது சிறுத்துவிடுகிறது.

சிறுகு  :  அடிசிறுத்தல்.

அருகு  :  ஓரங்கள் அருகில் வருதல்.

அம் :  அமைவு காட்டும் விகுதி.


சிறுகு + அரு (கு) +  அம் >   சிறுகு அரம் >  சிறுகரம் > சிகரம்.

கு + அ =  க. உகரம் கெட்டது ( மறைந்தது).

அருகு >  அரு.  இங்கு குகரம் கெட்டது.

சிறு என்பதில் று கெட்டது.

இவ்வாறு வெட்டி ஒட்டி ஒரு புதிய சொல் கிட்டியது.

சுருங்கச் சொன்னால் சிறுகரம் என்பது சிகரம் ஆயிற்று.

"ஈடில்லா அழகின் சிகர மீதிலே

கண்டு இன்பமே கொள்வோம்"  -  ஒரு கவிஞர்.*

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின். 

குறிப்பு.

* கவி கா.மு. ஷெரீப்  என்பர். தமிழ் முழக்கம்

இதழாசிரியர்.

சனி, 19 டிசம்பர், 2020

சொத்து உடைமை, செல்லுபடி, சோலி (ஜோலி) உடைமை

 இதனை பற்றி நன்கு அறிந்து கொள்ள இவ்விடுகைகளையும் படித்தறியவும்.

சொந்தம் சுதந்திரம் :  https://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_22.html

சொம் - சொந்தம் - சொத்து. https://sivamaalaa.blogspot.com/2016/05/blog-post_29.html

ஒருவனுக்கு எந்தப் பொருளும் சொந்தமில்லையானால் அவன் வெறும் அற்றைக் கூலியாளாக இருக்கவேண்டும்.  ஒரு விவசாயியிடம் போய் கூலிவேலைக்கு அன்றன்றைக்கு உழைத்து விவசாயி தரும் உணவினை உண்டுவிட்டு, அங்கு வேலை இல்லையென்றால் இன்னொருவனிடம் அதேபோல் வேலை செய்துவிட்டு, மனைவி பிள்ளைகள் இருந்தால் கிடைக்கும் உணவினை அவர்களுக்கும் கொடுத்து உயிர்வாழ்பவன் அவன்.

ஒரு செம்மையான மனிதன் எனில் நிலமும் வருமானமும் இருக்கவேண்டும். அதனால் கிட்டிய அதிகாரமும் இருக்கவேண்டும்.  ஆடு மாடுகள் இருக்கவேண்டும். மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருளும் உள்ளது.

செம்மை என்ற சொல்லின் ஒரு பகுதியாகிய செம் என்பதே  சொம் என்று திரிந்தது.   செம்பொருள் என்பது சொம்பொருள் என்றும் திரிந்து வழங்குவது காண்க. செம்பாதி என்பது சொம்பாதி ஆகும்.

செம் என்பதோ ஓர் இருபிறப்பிக் கிளவி ( கிளவி என்றால் வார்த்தை )..  அதன் முந்து வடிவம் செ அல்லது செல். நிலம்,  வீடு, மாடு கன்று ஆடு நாய் என்பன உடையவன் செல்லுபடியாகத் தக்கவன்.  அவன் எதுவும் சொன்னால் அது செல்லும்.   செ,  செல், செம் என்பன தொடர்புடையவை.  நிலத்தாலும் விளைச்சலாலும் வாழ்ந்த பண்டை மன்பதையில் செம்மையானவன்,  செம் என்ற நிலையை எய்தியவன் சொம் உள்ளவன்.

சொம் >  சொம் + து  >  சொ + து > சொத்து.

நிலம் முதலியவை,  தம் சொம்  ( இதை முறைமாற்றி )  சொம்+ தம் > சொந்தம் ஆகும்.  அவன்பொருட்கள் அவன் சொந்தம். அவன் குடும்பத்திலிருந்து கிளைத்துத் தனிக்குடும்பமானோர்,  அவன் " சொம்+ தம்" ( சொந்தம்).

விளைச்சலின் பகுதி,  சொம்பாதி என்று குறிக்கப்பட்டது.  உடைய ஆள்  சொம்மாளி எனப்பட்டான். 

இன்னும் சொல்லப்போனால்,  சொத்து இருந்தவன் பேச்சுரிமை உடையவன் ஆனான்.  செல்லும் வாய் ஒலியேதான் சொல்.   செல் > சொல்.  செம்> சொம்.

செம்பாதி -  சொம்பாதி.

பதிதல் வினைச்சொல்.  பதி  என்பது முதனிலை நீண்டு பாதி ஆகும். ஒருவன்பால் பதிவுற்ற  பொருட்களே செம்பாதி/ சொம்பாதி  ஆகும்.  பகுதி என்ற சொல்லும் பாதி எனவரும். என்றாலும் அது வேறுசொல்.  பதி > பாதி என்பது இங்கு உரிமையாய்ப் பதிவுற்றது என்பதே இது.  இடு > ஈடு என முதனிலை திரிதல் காண்க.

சொத்து என்று சொல்லிக்கொள்ளப் பொருளுடைமை,  சொல் > சொ > சொத்து எனினுமாம்.  சொல்லிக்கொள்ளும் தகுதியுடைமை:  சொல் > சொல்+ இ = சோலி உடையவன்:  அதாவது சொத்து உடையவன். பெயர் உடையவன். அதாவது இல்லாரிடமிருந்து பெயர்த்தறியத் தக்கவன்  பேறு உடையவன். பேரும் உடையவன்.

இவற்றை கூர்ந்துணர்ந்து கொள்ளுங்கள்.

மகிழ்வீர்.

நோயிலிருந்து காத்துக்கொள்க. 


குறிப்பு:

சொல் > சோல் > சோல் இ > சோலி  ( ஜோலி என்பது பின்னைத் திரிபு).

மெய்ப்பு பின்



வெள்ளி, 18 டிசம்பர், 2020

எத்தனித்தல்

 எத்துதல் என்பது தமிழ் அகரவரிசைகளின்படி  ஏய்த்தல் என்பதாம்.

"எத்தித் திருடும் அந்த காக்கை -- அதற்கு

இரக்கப் படவேண்டும் பாப்பா"

என்பதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். ஆனால் பேச்சு வழக்கில்  இன்னொரு பொருளும் இருந்தாலும், அந்தச் சொல்லை அப்பொருளில் பயன்படுத்துவோரே அதைத் தங்கள் நினைவுகளிலிருந்து மீட்க முடியவில்லை போலும். " அவன் காலால் எத்தியதில் ஒரு பல விழுந்துவிட்டது" என்ற பேச்சு வாக்கியத்திலிருந்து இதை உணர்ந்துகொள்ளலாம்.

"இந்த வண்டி இன்னும் ஒருமணிக்கூறுகொண்டு திருவனந்தபுறத்து எத்தும் " என்ற மலையாள வாக்கியத்தில், எத்தும் என்பது சென்றடைதலைக் குறிக்கிறது.

அகரவரிசைக்காரர்களும் நிகண்டுகளும் ஒரு சொல்லின் எல்லாப் பொருள்களையும் கூறிவிடுவதில்லை.  அடிசறுக்குவது மனித வலிமைக்குன்றுதலையே காட்டுகிறது.

எத்துவது என்பது உதைத்தல் என்ற பொருளில் இன்னும் வாழ்கிறது. இப்போது இச்சொல்லைப் பயன்படுத்துவோர் குறைவுபோலும்.  "கிக் பண்ணிவிட்டான்" என்பர்.

எத்துதல் என்பது உண்மையில் ஒத்துதலே. கால் சென்று ஒத்தித் திரும்புகிறது. எகரம் ஒகரமாகும் என்பதை முன்னர்க் கூறியுள்ளோம்.  எ-ஒ திரிபு.

எத்துதல் -  அடைதல், சேர்தல். ஒத்துதலும் அதுவன்றி வேறில்லை.

ணகரம் னகரமாகும் என்ற எம் இடுகைகாண்க. இவ்விதிப்படி, அணித்தாகுதல் என்பது அனித்தல் என்று திரியும்.

எத்த -  சென்றடைய,

அனித்தல் -  அணிமையாகுதல்.

எத்தனித்தல் என்பதன் பொருளறிந்தீர்.

இதை யத்தனித்தல் என்றும் எழுதுவர். அகர வருக்கம் யகர வருக்கமாய் நிகழ்வதுண்டு.   ஆனை -  யானை ;  ஆக்குதல்  -  யாத்தல் என்பதும் அறிக. (ஆ- யா.)  ஆங்கு  - யாங்கு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 



புதன், 16 டிசம்பர், 2020

னகரம் ணகரமாகத் திரியுமா?

 திரிபுகள் பற்றி அறிந்துகொள்வதற்குப் பல்கலைக்கழகத்துக்குப் போகலாம். அங்கு வாத்தியார் அவர் அறிந்தவற்றை அறிவித்து மகிழ்வார். தேர்வில் அவர் அறிவித்தவற்றில் பாதியைச் சொல்லமுடிந்தாலும் நீர் தேர்ந்தீரென்று ஒரு தாளில் எழுதிக்கொடுக்க அதுவே உம் சான்றிதழாக உம்வாழ்வில் மலரும். இருநூறு ஆண்டுகளின் முன்பானால் அவரே எழுதிக்கொடுத்தால் கதை அத்துடன் முடியும்.  இப்போது காலக்கடப்பினால் அதை அவர் செய்வதற்கும் பதிலாண்மை நடைமுறைகள் (Proxy procedures) உள்ளன. அதன்படி உம் தேர்ச்சி அறிவிக்கப்படும். இக்காலத்தில் இன்னொரு வகையிலும் அறிந்துகொள்ளலாம்.  அதைக் காப்பி ( குளம்பிநீர்)க்  கடையிலோ  ,  கடைத்தெருவிலோ அறிந்துகொள்ளலாம். முயற்சி திருவினை ஆக்கும். எந்த வகையானாலும் முயற்சிதான் தேவை. அதுவே உயர்வை  ( திருவினை)த் தரும்.

இன்று தமிழென்பது பேச்சில்தான் வாழ்கிறது.  அதுவும் பெரிதும் இல்லத்தினுள் வாழ்கின்றது. எழுத்துத் தமிழுக்கு வலு குறைந்து வந்துகொண்டே உள்ளது. அதற்குப் பலவிதமான ஊக்குவிப்புகள் தேவைப்படுகின்றன. இலக்கண நூலொன்று பத்துப் படிகள் (பிரதிகள் ) வெளியிட்டால் விற்றுமுடிக்க ஐம்பது ஆண்டுகள் ஆகலாம்.

மூன்று என்ற சொல்லில் னகர ஒற்று வருகிறது.   ஆனால் பேச்சுமொழியில் (னகரம்)   மூணு என்று பலுக்கப்பட்டு,  ( னகரம்)   ணகரமாகிவிடுகிறது. ஒன்று என்பது அதுபோலவே  ஒண்ணு ஆகி,  மற்றொன்றாய் வருகிறது

அணுக்கம் என்ற சொல்லின் அடிவினைச்சொல்  அணுகு(தல்) என்பது.   அனுபந்தம் என்ற சொல்லில் 

அணுகு >  அணு :> அனு. ஆகும்.

பந்தம் என்பதைப் பார்ப்போம்.

பன் + து + அம் =  பந்தம்.  இந்த எழுத்துப்புணர்ச்சி,  பின்+தி > பிந்தி என்ற சொல்லில்வருவது போன்றது.  முன்+தி > முந்தி என்பதும் அது.

லகரம் னகரம் ஆகும்.  பல் + து > பன்+து >  பந்து + அம் =  பந்தம்.

பல் என்ற அடி,  பல்+ து > பற்று > பற்றுதல் என்பதில் உள்ளது.

பந்தம் என்ற சொல்லுக்கும் அதுவே அடியாதலின்,  பந்தம் என்றால் பற்றி நிற்பது ஆகும்.

அனுபந்தம் என்றால்  அணுகிப் பற்றிநிற்பது,  ஆகவே  பின்னால் இணைந்து நிற்பது என்ற பொருள் கிட்டுகிறது. பற்றுதல் - இணைதல் ஒன்றுதான். சிலவேளைகளில் " இணைந்து, பற்றி" என்று மீமிசையாகச் சொன்னாலும் காதில் ஏற்றுவிப்பதில் சொல்வோன் வெல்லவேண்டுமே!

ஈங்கு  அணுகு என்பதில் உள்ள அணு,  அனு என்றாயது காண்க.

அனுமன் என்றால் மனிதனை அணுக்கமாக உடைய பிறவி என்று பொருள். இவ்வணுக்கம் உருவில் அணுக்கமென்கிறது  இராமகாதை. கதையைச் சுவைப்படுத்த அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மனிதத் தன்மையை அணுகி நின்ற பிறவி என்று அறிந்துகொள்ள நுழைபுலம் இன்றியமையாதது ஆகும்.

இங்கு நாம் கூறவிழைந்தது யாதெனில்  ணு -  னு  ஆனதுதான்.( ன வருக்கமெல்லாம் ண வருக்கமாய் ஏற்ப மாறும்.

இப்படித் திரிந்த வேறு சில சொற்களை நீங்கள் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின். 

பிழைகளை நீக்கி வாசித்துக்கொண்டிருங்கள்.

வருவோம், பிழைநீக்கம் தருவோம்.


நோய்க்கு இடம் கொடேல். (ஓளவை)



.

செவ்வாய், 15 டிசம்பர், 2020

Corona Singapore Situation

 [Gov.sg அனுப்பிய தகவல்]


*கொவிட்-19: டிசம்பர் 13 நிலவரப்படி*


புதிய உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள்: 0

- சமூகத்தில் இருப்போர்: 0

- ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போர்: 0


வெளிநாட்டிலிருந்து வந்தோர்: 7 (அறிகுறிகள் இல்லாதோர்)

- அனைவருக்கும் சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


இன்று பதிவாகிய புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்: 7


*தற்போது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர்: 83*

- மருத்துவமனைகளில்: 21 (தீவிர சிகிச்சைப் பிரிவில் எவரும் இல்லை)

- சமூகப் பராமரிப்பு வசதிகளில்: 62


உயிரிழப்பு: 29

மருத்துவமனையிலிருந்து வெளியேறியோர்

- இதுவரை: 58,208

- இன்று: 11


இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர்: 58,320


Go.gov.sg/moh13dec

தார்மீகம் தமிழ்த்திரிபு ஒப்புமை

 தார்மீகம் என்பது வடசொல் என்று சொல்வர்.

இச்சொல்லில் யாம் சுட்டிக்காட்ட விழைவது என்னவெனில், இச்சொல்லின் கையாளப்பட்ட திரிபு, தமிழ்த் திரிபு விதிகளைப் பின்பற்றியதே.

இவற்றைப் பாருங்கள்:

கரு + மழை -   >   கார்மழை.

கரு + திகை >  கார் + திகை >  கார்த்திகை

( திகை என்பதே பின் திசை என்று திரிந்தது. இது கிழக்கு, இது மேற்கு என்று திகைக்கப்பட்டதே  திசை   தீர்மானப்பட்டது திகை> திசை )

கார்த்திகை > கார்த்திக்.

பரு > பார் > பார்வதி.  மலைமகள்.

மரு >  மார் > மார்பு.  ( உடலை மருவி நிற்கும் உறுப்பு).

வரு என்பது வார் என்று திரியும்.   வாராய் விளி.

தரும இ(க்)கு  அம் என்பது இதன்படியே தார்மீகம் என்று திரிந்தது.

இக்கு என்பது ஒரு சாரியை.  இகு என்று குறைந்து இடைநிலையாய் நின்றது.

இகு அம் > ஈகம் என்று சாரியையின் முதல் நீண்டது எனினும் ஆம்.

ஈதல் என்ற சொல்லே  கு என்ற சாரியையுடன் ஈகம் என்று வந்து  பின் தார்ம ஈகு அம் = தார்மீகம் என்றாயது எனினுமாம்.

தருமத்தால் ஈயப்படுவது அல்லது அதிலிருந்து வரப்பெறுவது.

மரை ஈசன் என்ற புணர்ப்பு மாரீசன் என்று முதல்நீண்டதும் காண்க.


தமிழ்த்திரிபு முறையையே இச்சொல் பின்பற்றியது, பிற சொற்களும் இவ்வாறே.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.






ஞாயிறு, 13 டிசம்பர், 2020

ADMINISTRATOR AND TECHNICAL COORDINATOR:

MRS  B  SHEEBA KUMARAN has assumed position as ADMINISTRATOR for the Blog this day.

She will also edit posts and attend to technology matters.

PARTICULARS:

MRS  B  SHEEBA KUMARAN

Educated at :

Nanyang Technological University:  Master of Education.   (M.Ed).

University of  Queensland:   Bachelor of Information Technology.

Has worked as Network Engineer (ST)

Teacher.


The Blog welcomes Mrs Sheeba Kumaran..


சனி, 12 டிசம்பர், 2020

கரம் மூலம்

கரம் என்பது கை என்று பொருள்படும் சொல்.. 

சுருங்கச் சொல்வதானால்,  கை என்பது  கர் என்று மாறும்.

அது அம் ( அமைப்பு) என்ற விகுதிபெற்று,  கர்+ அம் = கரம் என்றாகும்.

இதுபோல் திரிந்த இன்னொரு சொல்லைத் தெரிந்துகொள்ளுங்கள்.

விர் ( அடிச்சொல்) >  விய் ( அடிச்சொல்).

ஒப்பு:  கர் > கை.

இந்த அடிச்சொற்களை இவ்வாறு பொருளறிந்துகொள்ளலாம்.

விர்> விரி > விரிதல்.

விர் + இ > விரி,  இதில் இ என்பது வினையாக்கவிகுதி.

தல் என்பது தொழிற்பெயர் விகுதி.

விய்>  வியன்.   ( பொருள்: விரிவு).

வியன் என்பது உலகவழக்கில் இல்லை;  இலக்கியவழக்கில் உள்ளது.

எடுத்துக்காட்டு:

விரிநீர் வியனுலகு.  ( திருக்குறள் சொற்றொடர்).

இதன் பொருள்:  நீரால் சூழப்பட்ட அகண்ட உலகம்.

வியல்  -  விரிவு

விய் :  இந்தச் சொல் இன்னும் உலகவழக்கில் உண்டு.  ஒரு பொருளை

விய் என்றால் விலைக்குக் கொடு என்பது.  ஒரு பொருள் பிறருக்குக் கொடுபடும்போது அது பயன்பாட்டு விரிவாகிறது

இதிலிருந்து விசு என்ற சொல்

தோன்றியது.   விசு என்றாலும் விரிவு. விசு>  விசி - விசிப்பலகை:  உட்கார உதவும் விரிபலகை.

விசு + ஆல் + அம் = விசாலம் (  விரிவு.)  விரிவினால் அறியப்படுவது  அல்லது விரிவு.   ஆல் : இடைநிலை.  அம் - விகுதி.

விசு+ அம் = விசுவம்.      ( வ் உடம்படுமெய்)  விரிந்தது,  வானம் உட்பட்ட இவ்வுலகம்.

விய் என்பதிலிருந்து வந்த சொற்கள் சில:

விய் >  வியாசம்,  வியாதி,  வியாத்தி, வியாபகம், வியாபாரம்,  வியாபித்தல்,

வியாமம் ( ஒளி,  இது பரவுதல் உடையது)  இன்னும் பல. இவை நேரம் கிட்டினால் சொல்லப்படும்.

கர் என்ற அடிச்சொல்லிலிருந்து

கர் > கரு > கருவி.

கர் >  கரு > கார் > காரியம்

கர் > கரு > கார் >  காரணம்

கர் >  கரணம் ( செயல்,  கரணம் போடுவது)

கர் > கரை:  நீரோட்டத்தால் அல்லது மனிதனால் கட்டப்படும் ஒரு மண்தொகுதி.

இதுவும் இன்னொரு வழியில் விளக்கத்தக்க சொல்.

கர் >  கரித்தல் என்னும் பின்னொட்டு:  அதிகரித்தல். என்ற சொல்லில்போல. இன்னும் சுத்திகரித்தல்.

இது கு+ அரித்தல் என்றும் பெறப்படுவதால் இருபிறப்பிச்சொல்.

நீள்வதால் இத்துடன் முடிப்போம். பின்னொரு மேலேற்றுகையில் சொல்வோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.



வெள்ளி, 11 டிசம்பர், 2020

பிறவட்டு (தமிழ்) - பிரைவேட்டு (ஆங்)

 ஆங்கிலச் சொல்லைப்போலவே ஒலித்து அதேபோலும் பொருளைத் தரும் தமிழ்ச்சொல்லை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பல உள்ளன. தண்ணீர்த்தாங்கி என்ற சொல்லில் உள்ள "தாங்கி" என்ற சொல், ஆங்கிலச் சொல்லான "tank" என்பதைப்போலவே ஒலித்து,  அதே பொருளைத் தருகிறது.  பாராளுமன்றம் என்னும் சொல்லும் "பார்லிமென்ட்" என்ற ஆங்கிலம்போலவே ஒலித்து அதே பொருளைத் தருகிறது என்றாலும் இவை இருவேறு வகைகளில் அமைந்த சொற்கள்.

தாங்கி என்ற சொல் வட இந்திய மொழிகளிலிருந்து போர்த்துக்கீசிய மொழிக்கு வந்து அப்புறம் ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகட்குப் பரவினது என்று சிலரும்,   இல்லை, அது போர்த்துக்கீசியருடைய  மொழியிலிருந்தே இந்தியாவுக்குக் கிடைத்ததென்று வேறுசிலரும் கூறினர். ஆனால் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருமுன் இந்தச் சொல் அவர்கள் மொழியில் அவர்கள் நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

தாங்குதல் என்ற சொல் வினைச்சொல்லாகத் தமிழில் இருக்கிறது. நீரைத் தாங்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நீர்த்தாங்கி.  சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பது சுமைதாங்கி.

"சம்சார சாகரத்தின்

துயர் தாங்கொணாத போது

பொறுமையோடு கணவன்---  அதைத்

தாங்கி வாழவேண்டும்"

என்றொரு கவி ஓர் ஐம்பதாண்டுகட்கு முன்பு  எழுதினார். இதைக்கொண்டு, கணவனைத் "துயர்தாங்கி" என்றுகூடக் குறிப்பிடலாம்.

எதையும் தாங்குவது தாங்கி - தமிழில்.  நீர்த்தாங்கி என்பது தமிழ்க் கூட்டுச்சொல். இச்சொல்லின் கடைப்பாகம்தான் அங்கெல்லாம் போய் வாதத்தை விளைத்துக்கொண்டிருக்கிறது போலும்.  தாங்குதல் என்ற வினைச்சொல் மற்ற மொழிகளில் காணக்கிடைத்திலது. [?]

தாக்கு அப்புறம் நில்லு,   நில்லு அப்புறம் தாக்கு என்று பொருள்படும் படைக்கலை சார் சீனமொழிச் சொற்றொடரில்--  (  தாங்க் தா,  தா தாங்க் ) என்பதில் தாங்க்  ( தாங்கிக்கொள் அல்லது நில்லு) என்று தமிழுக்கு ஒப்புமையான சொல் உள்ளது.  தாக்கு என்ற சொல்லுக்கு நிகராக "தா" என்ற  அடி என்னும் பொருளில்)  சீனச்சொல்லும் உள்ளது. சீனக் கிளைமொழியில்  "தா சீ " என்ற தொடரும் உள்ளது.  சீ, செய் என்பன "செத்துபோ"  என்பதாம்.   சா (தமிழ்) -  சீ/ செய் ( செத்துப்போ) ( சீனம்).

இப்போது  "பிறவட்டு" என்ற சொல்லுக்கு வருவோம். இது ஒரு பேச்சுமொழிச் சொல்.  பிறவட்டு என்றால் பிற வட்டாரம்,  இந்த வட்டாரம் அன்று என்பது பொருள்.  வட்டு என்பது வட்டாரம், வட்டம் என்பதன் சுருக்கமென்னலாம் எனினும் உண்மையில்  வட்டு என்பதே  வட்டம்,  வட்டாரம் என்பவற்றுக்கெல்லாம் அடிச்சொல்.  வட்டு+ ஆரம் = வட்டாரம்  ( சூழ்வட்டம்).  இப்போது ஒரு வாக்கியம்:

" உங்களுக்குக் கொரனா வேண்டுமென்றால்,  வௌவாலைப் பிறவட்டிலிருந்துதான் தருவிக்கவேண்டும்"

நல்ல அழகான வாக்கியமன்றோ?

ஆனால் அவன் "பிரைவேட் பள்ளியில் படிக்கிறான்" என்பதை அவன் பிறவட்டில் படிக்கிறான் என்று  (ஆங்கிலமறியாதவர்)  பேசி இரண்டையும் குழப்புவதிலிருந்து,  இத்தகைய போன்மைச்சொற்களால் குழப்பமும் விளையலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

 



 


வியாழன், 10 டிசம்பர், 2020

(டற்பம்) இடற்பம்

"டற்பம்" என்பது ஒரு பேச்சுமொழிச் சொல் (தமிழ்).

இது ஆங்கிலம் படிக்காத,  தமிழும் எழுதவும் படிக்கவும் அறியாத குடும்பப் பெண்களிடம் கேட்டிருக்கிறோம்.

இஃது  இடற்பம் ஆகும்

இடு -   தேய்க்கவேண்டிய மருந்து என்பது.

அல் - ( அல்லல் ) வேதனை உள்ள இடம்:  உடம்பில் கால் கை முதுகு முதலானவையும் பிறவும். இது இடைநிலையும் ஆகலாம்.

பு -  விகுதி , இடைநிலை

அம் -  விகுதி.

துன்பம் அல்லது வேதனை உள்ள இடத்தில் தேய்க்கும் மருந்து. சூடம் முதலிய கலந்த மருந்து.

  

(இந்தச் சொல் அறிந்து புழங்கிய இருவர் மறைந்தனர்.)


English:  embrocation  பூச்சுத்தைலம்

தை = தடவுதல் பொருத்துதல்.

தைவருதல் -  தடவுதல்.

என் தலை தைவரும் மன்னே - ஒளவையார், புறநானூறு.

தைலம் <  தை இல் அம் > தயிலம்> (தைலம்).  

தை மாதம் - பல நன்மைகளும் பொருந்தும் மாதம்.

தை > தையல்:  துணிகளைப் பொருத்தித் தைப்பது.

Please note : all our writings are "off the cuff". No research is done now. So we do not give you the stanza number etc. We do not have our books ( a few thousand) in a house in Malaysia for some time.(Covid 19). No access. We do not intend to quote anything from those books later. You may proceed to research. What comes to our mind and we remember, we write for you. Many books have been given away to interested students and friends,  like the one on Dead Sea scrolls.   Some lost.  Thanks.

We cannot reply to e-mails. Presently 23000 pending. No way to manage.  Past e-mails deleted or discarded.

---- author.

செவ்வாய், 8 டிசம்பர், 2020

கோ என்ற சொல்லில் அடங்கியுள்ள தத்துவம்.

 கோ - தத்துவம். இங்கு தத்துவமென்பது, பிறசார்பின்றி,   தானே நின்றியங்கும் கருதுகோள். தன் > த.  (கடைக்குறை). து - உடைமைக் குறிப்பு.  அம் - அமைதல் குறிக்கும் விகுதி. த + து + அம் = தத்துவம்.

தமிழ் நெடுங்கணக்கில் (அரிச்சுவடியில்)  உள்ள இரண்டு எழுத்துக்களுடன் அணுக்கமானது கோ என்ற எழுத்தாகும்.   அந்த இரண்டு எழுத்துக்கள் :  கு என்பதும் ஓ என்பதும்.

கு என்பதனை மேலும் பிரிக்காமல்,  அதை நாம் சேர்விடம் குறிக்கும் பண்டைச் சிறுசொல் என்றே அறிந்துகொள்வோம்.  அது சேர்விடம் மற்றும் சேர்ந்திருந்தலைக் குறிக்கும்.  இந்தியாவிற்கு என்னும்கால் அது சேர்விடம் குறிக்கும்,  வாக்கியம்: இந்தியாவுக்குச் சென்றான்.  குடி, குடும்பம், கூட்டம், கூம்புதல் முதலிய பல தொடர்புடைய சொற்கள் கூடியிருத்தலைக் குறிக்கும். 

ஓ என்பது ஓங்குதல், ஓம்புதல் என்று மிகுதி குறிப்பதும் காத்தல் குறிப்பதும் ஆகும்.

கோ என்ற சொல்லுக்குப் பல பொருள் உள.  அவற்றுள் சில:  

அரசன்:  குடிகளுடன் கூடியிருந்து அவர்களைக் காப்பவன்.

அம்பு :     எய்த இடத்துக்குச் சென்று சேர்வது.

ஆண்மகன்: பெண்ணுடன் கூடிவாழ்பவன்.

நிலா:  ஆகாயத்துடன் கூடியிருப்பது

சூரியன் ( சூடியன்):  ஆகாயத்துடன் கூடியிருப்பது.

திசைகள் : அடுத்தடுத்துக் கூடியிருப்பவை;

நீர் :  பிரிந்தாலும் கலக்கும்போது  வேறுபாடின்றிக் கூடியிருப்பது.

பசு:  மற்ற மாடுகளுடன் கூடிவாழ்வது. மனிதனுடனும் வாழ்ந்து வளம் உறுத்துவது.

பூமி :  ஆகாயத்துடன் கூடியிருப்பது.

மலை:  அடிவாரத்துடன் கூடியிருந்து வானையும் தொடவிழைவது.

தந்தை தாய் - கூடிவாழ்பவர்கள்

தலைமை:  அடியாருடன் சேர்ந்திருப்பது. அடியார் இலையேல் தலைமை இல்லை.

இவ்வாறு கூடியிருக்கும் பலவற்றையும்  கு+ஓ (கூடி ஓங்குதல்) எனக் கோவென்று மாறிப் பொருள்தருகிறது .

கு என்பது இடத்தில் சேர்வு ஆதலின், அங்கு ஓங்கி நிற்பது கோவாகும். நெடுங்கணக்கில் க் + ஓ என்று வருமேனும் அது கு+ ஓ எனக் கோ என்று ஒன்றாக நின்று அணுக்கமாகிறது.

க் உ என்பதில் உ என்பது முன்னிருப்பு.  க் என்பதே  இடம் குறிக்கும் மண்தோன்றிய காலத்துச் சொல். இங்கு சொல்லப்பட்ட அனைத்தும் இடத்தில் கூடியிருப்பவை.  க் + உ + ஓ எனபவற்றில் உகரம் என்ற இடம் விலக ஓங்குதல் மேலாயிற்று.  உகரமும் ஓகாரமாகத் திரியவும் வல்ல ஒலி.  ஒடு (ஓடு) என்ற உருபினையும் உடன் என்ற உருபினையும் பொருளொற்றுமையால் அறிந்து இங்கு அமைவீராக. எனவே  ஓ வர உ விலகியது ஒலியியலில் அமைதக்கதாம்.

கோ என்ற சொல் பசுவையும் அரசனையும் ஒருங்கு குறித்தது இக்கூடிவாழும் தன்மையினால். இது சொல்லமைப்புப் பொருள். பசுவென்பது பசுமையின் ஊற்றாவதனாலும்  அப்பெயர் பெற்றது. கோவென்னும் அரசனும் நாட்டுக்குச் செழிப்பூட்டுபவனாகையால் அவ்வாறு (கோ என்று ) குறிக்கப்பட்டான். இது வழக்கில் போந்த இவ்விருபொருள்களின் ஒருமையாகும்.

.அடிச்சொற்கள் ஒன்றே.  இடத்தில் கூடிவாழ்ந்து  ஓங்குவன அரசும் பசுவும்,  இத்தத்துவத்தை அறிக. மகிழ்க.

(மொழியும் வழக்கும் கடந்த தத்துவ விளக்கம்),

(ஓரு காலத்தில் மொழிகட்கும் பெயரில்லை. அறிக.)



குறிப்புகள்:

சீனமொழியில் "குவோ'  அல்லது கு-ஓ   guo  என்பது சிற்றரசர் குழுவையும் குறிக்கும். கூடிவாழ்தல் (ஒத்தியல்தல்) get along  என்ற பொருளும் இதற்குண்டு. இஃது இவண் கூறப்பட்ட பொருளுக்கு நெருக்கமானது. நீங்கள் இதை ஆராயலாம்.

கூடியிருத்தல் என்றது  ஒன்றாய் இருத்தல் என்று பொருள்தருவதுடன், அதிகமாவது என்றும் தமிழில் பொருள்படுதல் போல், இந்தச் சீனச்சொல்லும் excessively என்று பொருள்படுகிறது.\\

இது பல உச்சரிப்புகள் உள்ள சீனச்சொல்,


மெய்ப்பு பின்


கோரோசனை அல்லது ஆமணத்தி மாத்திரைகள்.

 இன்று ஆமணத்தி என்ற சொல்லைப் புரிந்துகொள்வோம்.

ஆமணத்தி என்பது  கோ உறு ஓச்சனை அல்லது கோரோசனை என்னும் வாசனைப் பொருள். ஓச்சுதலாவது,  வீசுவது அல்லது பிறர் பட்டுமோக்கும்படி எறிவது.  மோ> மோத்தல்.  மோக்கும் - மோந்தறியும்.  

ஓச்சுதல் :  ஓச்சு+ அன் + ஐ > ஓச்சனை>  ஓசனை..

ஆவிலிருந்து வருவதும் மணத்தை உடையதுமான ஒரு பொருளே  ஆ+ மணம்+ அத்து + இ =  ஆமணத்தி:  அதாவது ஆவின் மணப்பொருள்.

கோரோசனை என்பதில்  கோ உறு ஓசனை >  ( இதில் ) று + ஓ > றோ > ரோ என்று திரிந்துவிட்டது.

ஆமணத்தி, கோரோசனை  என்பவை  ஒருபொருளன.

சித்த வைத்தியத்தில் கோரோசனையிலிருந்து மாத்திரை அல்லது மருந்து செய்வர். இதைச் சித்த வைத்தியர்பால் அறிக. இதை இங்கு விரித்து வரிக்கவில்லை  (வி-வரிக்கவில்லை).

கோ = ஆ.  ( பசுமாடு).

உறு -  தோன்று(ம்). உண்டாகும்..


அறிக மகிழ்க.

மெய்ப்பு - பின்.


திங்கள், 7 டிசம்பர், 2020

அதிகாரம் இச்சொல்லின் உள்ளுறைவு.

அதிகாரம் என்றால் என்ன என்பதை உணர்த்தும் வரையறவுகள் சட்டநூல்களிலும் ஆட்சியமைப்பு பற்றிக் கூறும் நுல்களிலும் கிடைக்கும். என்றாலும் நாம் " அதிகாரம்" என்ற சொல்லினமைப்பையும் அது போந்தமைந்த வழியில் கண்டுணரக் கிடக்கும் தெளிவுகளையும் ஆய்ந்து அறிந்து,  அதன் பின் அதிகாரம் என்பது எதைக்குறிக்கும் என்று உணர்ந்துகொள்வோம்..  

பெரும்பாலும் இச்சொல் அதி + காரம் என்று பிரிக்கப்படும்.  அதிகம் என்பதன் பகுதியே அதி என்றும் அது மிகுதிப்பொருள் உணர்த்துமென்றும்  அடுத்துக் காரம் என்பது சொல்லிறுதி என்றும்.  காரமெனின் செயல் என்று பொருள்படுமென்றும் கூறப்படுவதுண்டு. இவ்வாறு கூறின்.  அதிகாரமென்பது ஓர் மிகுசெயல் என்று முடிப்பதே பொருண்மை அறிதிறன் என்னலாம்.

சொல்லில் மூன்று உள்ளுறுப்புகள் இருக்கின்றன என்னலாம். அவை, 1. அகம்,  2. திகை  3.ஆரம் என்பன .

 அகம் என்பது எக்காரியத்திலும் உட்சுற்றில் உள்ள மனிதர்களை (இச் சொல்) குறிக்கிறது. இவ் உட்சுற்றில் ஒரு மனிதரோ ஒருவருக்கு மேற்பட்டவர்களோ இருக்கலாம். அவர்களிடம் ஒன்று திகைவுறுகிறது.   திகைதலாவது தீர்மானப்படுதல்.  இத்தீர்மானத்தின்பின்,   ஆரம் என்பது  அது சூழ இருப்போரிடம் சென்று சேர்கிறது. சூழ இருப்போர்  அதனை ஏற்றுக்கொண்டு நடைபெறுவிக்கின்றனர்.  அதனால் உட்சுற்றில் உள்ளவர்களிடம் நடப்புறுத்தும் திறம் உணரப்படுகிறது.  அத்திறமே " அதிகாரம்"  ஆகிறது. ஆர்தல் - சூழ்தல். பரவுதல்.

அகம் + திகை + ஆரம் =  அகதிகாரம் , இது இடைக்குறைந்து,  அதிகாரம் ஆம்.  அகம் > அக என்பதில் ககரம் இடைக்குறைந்தால்,  மீதமிருப்பது {அ+ திகை} என்பதுடன் ஆரம் சேரத் திகாரம் ஆகும்.   அ + திகாரம் -  அதிகாரம் ஆகும்.  ஒருவன் தீர்மானித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் தீர்மானித்தாலும், அது சேர்விடத்தில் நடப்புக்கு வருகிறது.  அதி என்பது உட்சுற்றில் தீர்மானப்படுவது.  எனவே அதி என்பது மிகுதி என்று உணரப்பட்டதில் பெரிய தவறில்லை.

அறிக மகிழ்க.

குறிப்புகள்

அகரம் ( அ ) என்பதும் ஒரு சுட்டடிச்சொல் தான்.

ஆயின் அகம் என்ற சொல் முன் இடுகையில்

விளக்கம்பெற்றுள்ளது. (  அ+கு+ அம்).

 இவற்றுள் அ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு

திகைதல் என்பதன் தி (முதலெழுத்தை) மட்டும் அதனுடன்

பொருத்தினால்,   அதி என்ற "காரண இடுகுறி" கிட்டிவிடும்.

அகத்துத் திகைந்தது என்னும் தொடருக்கு அதி என்பது

முதற்குறிப்பு ஆகிவிடுகிறது.

அதிகாரம் என்பது முன் பலவாறு விளக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் இவண் கூறப்பட்டது சரியானது.

அகத்து -   அரண்மனைக்குள்.  திகைதல் - முடிவுசெய்யப்பட்டது.

இது அரண்மனைக்கு வெளியிலிருந்த சிற்றதிகாரிகள்  புனைந்த

சொல் என்பது தெளிவு.

அதி என்ற முன்னொட்டும்  அகத்துத் திகைந்தது என்ற 

சொற்றொடரின்  சுருக்கமே  ஆகும்.  அதன்பின் என்ற தொடரின்

முதலெழுத்துச் சுருக்கமாகிய அபி என்பதும் முன்னொட்ட்டாகவே

கொள்ளப்பட்டது.  எ-டு:  அபிவிருத்தி.   [  அபி - அதன்பின்  விருத்தி - இது

விரித்தி என்பதன்  திரிபு.]  

மெய்ப்பு பின்.

கள்ளப்புகவர் நுழைவித்த சில எழுத்துப்பிறழ்வுகள்

திருத்தம் பெற்றன. 1235 08122020

        


வெள்ளி, 4 டிசம்பர், 2020

பூனைக்குட்டி போன்ற சிறு நாய்க்குட்டி (ஹாங்காங்)

படத்திலிருப்பவர்  எல். உரோஷினி,  ஹங்காங்  2020.


கடைத் தெருவிற்குப் போனாலுமே

கைத்தொங்குப் பைக்குள்ளே

காவலுக்கோ இந்தக் குட்டிநாய்

காண்போர் கரள் கவர  அது

கூடவே சென்றுவர

நாடும்பல   நலம்வருமே. 
 


------------------------------------------------------------

கரள் ( மலையாளம்) -  நெஞ்சம்.

இந்த மலையாளப் பாட்டில் இச்சொல் காண்க:

உள்ளில் கடன்னு கரள்

கொள்ளயடிக்கு நின்னே

கள்ளிப் பெண்ணென்னு விளிக்கும்;

ஆடானும் வரில்ல ஞான்

பாடானும் வரில்ல ஞான்

மாடத்துப் பச்சக்கிளியே.

மலையாளக் கவி .பாஸ்கரன்


அட்சரம் சொல் உட்பொருள்

 சரியக்கூடியவை சரியும்போது, ஒன்றன் அழுத்தத்தால் அடுத்து உள்ளது முன்னது பட்டு வீழ்கின்றது. இவ்வாறு சரிதலைச் சரம் என்றனர். சரி + அம் = சரம் ஆகிறது. இங்கு வினைச்சொல் சரிதல். இகரம் கெட்டது.

படி+ அம் = பாடம். இது முதலெழுத்து நீண்டு, டி என்பதன் இகரம் கெட்டு அமைந்தது.

வரிசையாகச் சரிவது, வச்சரம்.  வரிச்சரம் என்பதே இடைக்குறைந்து வச்சரம் ஆனது. சரிதலென்பதன் அடியாக  விழாமல் ஒன்றன்பின் ஒன்று வருவது சரம் என்றே குறிக்கப்பட்டது.  இது ஓர் ஒப்புமையாக்கம் ஆகும். சரவிளக்கு என்பதில் எதுவும் விழுவதில்லை என்றாலும் அது சரிந்து விழுதல் போலவே கற்பித்துச் சொல் அமைந்தது.  விழுக்காடு என்ற சொல்லை நோக்கின்,  எதுவும் விழுதல் இல்லை;  எனினும் விழுதற்கு இணையான நிகழ்வு ஆகும். எனவே. ஒன்றன்பின் ஒன்றாய் விழுதல் என்ற கருத்திலிருந்து (விழாமல்) வருதல் குறித்தது ஒரு கருத்துவளர்ச்சியே ஆகும்.

வீதம் என்ற சொல்லைக் கவனியுங்கள். இது விழுக்காடு என்று பொருள்படும். (பெர்சன்டேஜ் என்பர் ஆங்கிலத்தில்). இதுவும் விழு என்ற சொல்லின் இன்னொரு வடிவமான வீழ் என்பதனடியாய்,  வீழ்தம் என்று உருப்பெற்று, ழகர ஒற்றுக் கெட்டு  வீதம் என்றாயிற்று. விழு> விழுதம் > (முதனிலை நீண்டு) வீதம் எனினும் அதுவே. இதையறியாத சிலர், இது தமிழன்று என்று அலமரலாயினர். நுழைபுலம் இன்மைதான் இந்த வழுக்கல் முடிவுக்குக் காரணம் என்போம். ழகர ஒற்று வீழ்தல்,  வாழ்த்தியம் என்ற சொல்லிலும் நிகழ்ந்துள்ளது கூறுப.  அது வாத்தியம் ஆனது காண்க.

சுருங்க உரைப்பின்:

சரிதல்   விழுதல்;  அடுத்துவரல்.

ஒரு மரம் சரிந்தது என்றால், நின்ற நிலை மாறி, தரையை அடுத்துவந்துவிட்டது என்பதுதான் பொருள். அம்மரம் ஒரு நிலையில் நீங்கி மறுநிலைக்கு வந்தது. ஆகவே கருத்துவளர்ச்சியில் தவறில்லை.

சரி > சரம். ( அடுத்துவரல்.).

எழுத்துக்கள் அடுத்தடுத்து வருதலை உடையவை.  அகரம்  ஆகாரம் இகரம் ஈகாரம் என.    இது அடு + சரம் =  அடுச்சரம்,  டுகரம் இடைக்குறைந்து, அச்சரம் ஆகும். அடுத்தடுத்து வரிசையாய் வைக்கப்படுவன.  டுகரத்தை முழுமையாக நீக்கிவிடாமல்,  டுகரத்தில் உகரம் மட்டும் குறைத்து,  அட்சரம் என்பது இன்னொரு வடிவமாகும்.

இவற்றைத் தந்திரம் என்றும் வருணிக்கலாம்.  அல்லது  இயல்பான சொல் அமைப்பு என்றும் சொல்லலாம்.  எப்படிச்சொன்னால் என்ன?

அட்சரம் என்பது உண்மையில் alphabet தான்.

அடுக்குச் சரம் என்று வந்திருக்கவேண்டுமோ?  அடுக்கு என்பதில் அடு என்பதே அடிச்சொல். கு என்பது சேர்விடம் காட்டும் விகுதி.  சென்னைக்கு என்பதில் அது உருபு.  அந்த விகுதியை ஏன் கட்டி அழுதுகொண்டிருக்கவேண்டும் என்று அந்தச் சொல்லை அமைத்த அறிவாளி அதை விட்டுவிட்டான். அவ்வளவுதான் கதை. எல்லாவற்றையும் வைத்துக்கொண்டிருந்தால், வாக்கியம் ஆகுமே தவிர சொல்லாகாது.

அறிக, மகிழ்க. 

மெய்ப்பு பின்

வியாழன், 3 டிசம்பர், 2020

ஏடன், ஏலன் - தோழமைப் பொருள்.

 எடுத்தல் என்பது அன்றாட வழக்கில் உள்ள சொல். எழுதுகோலை எடுத்தல், இலையை எடுத்தல் என்று பொருள்களை எடுத்தலுக்கும் இதை ஆள்வர். பெண் எடுத்தல், மாப்பிள்ளை எடுத்தல், விழா எடுத்தல் என்றும் வழக்கில் வரும். ஒரு நண்பனையும் எடுக்கலாம், நல்லபடியாக எண்ணிப்பார்த்த பின் நண்பனை எடுக்கவேண்டும். " நாடாது நட்டபின் வீடில்லை"  என்பதிலிருந்து நன்கு ஆய்ந்தபின்னரே ஒருவருடன் நட்புக்கொள்ளுதல் வேண்டும் என்பது தெளிவாகிறது.  நட்பும் எடுக்கவும் விடுக்கவும் கூடிய ஒன்றே ஆகும்.

எடுத்தல் என்பது வினைச்சொல்.

எடு + அன் =ஏடன். (தோழனாய் எடுக்கப்பட்டவன்)

இது முதனிலை திரிந்து (நீண்டு)   அன் விகுதி பெற்றது. அன் என்பது ஆண்பால் விகுதி.  தோழன் என்பது பொருள்.

ஏடன் -  ஏடி :  ஏடி என்பது  தோழி என்று பொருள்படும். இன்று பொருள் இழிந்துவிட்டதனால், இதைப் பொருள் வீழ்ச்சி அடைந்த சொல் (இழிபு) என்னலாம். இ என்பது பெண்பால் விகுதி.

ஏடன் என்பது  ஏடே. ஏடா என்றும்  ஏலே. ஏலா என்றும் திரியும்.

ஏல் என்பதற்கும் ஏற்கப்படுதல் என்னும் பொருள் உள்ளது.

ஏலன்( ஏலா) என்பது இதன்படி உரிய பொருள்பெறும்.

எனவே எவ்வாறு நோக்கினும் தோழமைப் பொருள் காண்பது இயலும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


ஏலா - இது விளிவடிவம்


புதன், 2 டிசம்பர், 2020

வினை மற்றும் பெயரில் விளைந்த வினைகள் (முயற்சித்தல்)

இக்காலத்தில் பார் என்ற சொல்லின் உண்மைப்பொருளைப் பெரிதும் மக்கள் கவனிப்பதில்லை. இதற்குக் காரணம் நோக்குதல் என்ற சொல் ஓரளவு மக்கள் மொழியிலிருந்து (பேச்சு) நீங்கிநிற்பதுதான். நாம் ஒன்றைக் கூர்ந்து "பார்க்குங்கால்" அதை நோக்குதல் என்றே சொல்லவேண்டும். பார்வை பரந்து செல்லுமாயின் "பார்த்தான்", "பார்த்தேன்" என்றெல்லாம் பார் என்ற வினைச்சொல்லினடிப் பிறந்த முற்றுக்களையும் பார்த்த, பார்த்து என்ற எச்சவினைகளையும் பயன்படுத்தலலாம்.


பார்வை பரந்து செல்லுதல் என்று குறிப்பிட்டோம். பர (பரத்தல்) என்ற வினையினின்றுதான் பார் என்ற வினைச்சொல் விளைந்தது. பரத்தல் என்பதும் வினை குறித்தது, பார்த்தல் என்பதும் வினைகுறித்தது, எனவே வினையினின்று இன்னொரு வினை தோன்றுவதற்கு இதுவும் ஓர் உதாரணம் ஆகும்.


பர > பார்.


ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றுவதுண்டா என்று யாரும் வினவின் இந்தச் சொல்லமைப்பினை நீங்கள் சுட்டிக்காட்டுவது சரி.


இன்னும் பல வினைகள் வினைகளிலிருந்தே திரிந்துள்ளன. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் பெருகும். இன்னும் ஓர் எடுத்துக்காட்டு மட்டும் காண்போம்.


இறுதல் என்றால் முடிந்துவிடுதல் என்று பொருள். இதைக் கண்டுகொள்வது எளிது. இறுதி என்ற சொல்லைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.


இறு என்ற வினைச்சொல்லிலிருந்து இற என்ற சொல் தோன்றியது. இறத்தல் என்றாலும் முடிவுதான். ஆனால் உயிருடன் வாழ்வோன் அல்லது வாழும் ஓர் உயிரியின் முடிவு. இச்சொல் ஒரு சிறப்புப் பொருளில் வருகின்றது. இறுதல் என்பது பொதுப்பொருள்:


இறு > இற.


இறத்தல் என்பதும் பின்னர் பொருள் விரியத்தான் செய்தது. உயிரற்றவை இறுதியடைதலையும் குறிக்க விரிந்தது. -டு: ஒரு சொல் வழக்கிறந்தது. இது "வழக்கு" என்பதை உயிருள்ளதுபோல் பாவிக்கிறது. --- உயிர்ப்பொருள் போல் ஒப்புமையாக வைக்கப்படுகிறது.


முயற்சித்தல் என்ற வழக்கில் உள்ள சொல்லைப் பார்ப்போம்.


முயல் (முயலுதல் ) என்பதே வினைச்சொல் ஆம். சி என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து, அஃது முயற்சியாகும். தொழிற்பெயரானபின் இகர வினையாக்க விகுதி பெற்றும் அது முயற்சித்தல் ஆகுதல் இயலாது என்றனர் தமிழ் வாத்தியார்கள். எனினும் தமிழ்ப்பேரகராதி இதனை பேச்சுமொழிச் சொல் என்று குறித்து பதிவு செய்துள்ளது. இது இப்போது அறிஞர் மொழிநடையிலும் இடம்பெற்றிருப்பதால் தொழிற்பெயரானபின்னும் மீண்டும் வினைச்சொல் ஆதலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இதன் எழுச்சியை மறுக்கின்ற முயற்சியால் பயனொன்றும் இல்லை என்றே நாம் சொல்லவேண்டும். முயற்சியெடுத்தல் என்பதன் இடைக்குறை என்றும் கொள்ளலாம். (யெடு) என்பது குறைவுற்றது என்று முடித்தல் கூடும்.


மெய்ப்பு பின்னர்

திங்கள், 30 நவம்பர், 2020

குசேலா என்ற பெயர்.

 குசேலா (குசேலன்) என்பதில் இரு சொற்கள் உள்ளன.  ஒன்று குச என்பது. இன்னொன்று ஏலா என்பது.  குச என்பது இவர் குயவர் வழியினர் என்பதை உணர்த்தும். குய என்ற சொல் இன்றும் குச என்றே திரிந்து வழங்குகிறது. இது தமிழ்ச்சொல். ஏலா என்பது விளிப்பெயர். இதன் எழுவாய் வடிவம் ஏலன் என்பது. இது ஏடன் என்பதன் திரிபு.  இதன் பொருள் தோழன், நண்பன் என்பதே. எனவே, இஃது ஓர் இயற்பெயரன்று என்பது தெளிவாகிறது.

வியாசர் இதனைக் காரணப்பெயராய்க் கதையில் அமைத்துள்ளார்.

பிற்காலத்தில் குசேலன் பிரம்மம் என்னும் பெருமானை உணர்ந்து வாழலானார். பிரம்மத்தை உணர்ந்தவனே பிராமணன்.  ஆதலின் இவர் வாழ்ந்த காலத்தின்பின்பு இவர் பிராமணர் என்றே குறிக்கப்படலாயினார்.. குசேலனின் தொடக்கத் தொழிலை இலைமறைகாய்போல் பெயரில் அமைத்தது வியாசரின் கதைசொல்லும் திறனையே கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ்ச்சொற்கள் சில திரிபுகளுடன் எவ்வளவு அழகுள்ளவையாக அமைந்துவிடுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். தொடக்கத்தில் எத்தொழில் உடையரேனும் பின்னர் அவர் தெய்வத்தொண்டராய் மாறுதற்கு இவர் வாழ்ந்த காலத்தில் வழியிருந்தது என்பது தெளிவு.   கண்ணன் அரசானதும் இதையே மீண்டும் வலியுறுத்துகிறது,  வியாசன் மீனவத் தொழிலினின்றும் கவியானதும் இதையே தெளிவுபடுத்துகிறது.

மக்கள் அனைவரும் ஒருவரே போல் வேறுபாடின்றி வாழ்ந்தனர். இதனைக் கூர்ந்துணரலாம் என்பதறிக.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

பிறழ்வுகளைச் சரிசெய்தல் பெரிய வேலையாய் உள்ளது. நீங்கள்

பின்னூட்டமிட்டு உதவினால் நன்றியுடையேம்.


கலைத்தல், கலத்தல், கலயம்.

 முன் காலத்தில் ஐயம் இட்டுண்பது ஓர் அறச்செயல் என்று கருதப்பட்டது. இதற்கான அறக்கலயங்களை வீட்டுக்கு வெளியில் திண்ணையில் வைத்திருந்தனர். இரந்து நிற்போரைக் காணின் கலயத்தில் இட்டுவைத்திருந்த அரிசியை அள்ளிப்போட்டு  அன்புடன் அனுப்பிவைத்தனர்.  இந்தப் பாத்திரங்களில் பலவகை அரிசிகளும் கலந்து வைத்திருந்தனர். குறுநொய் (குருணை), பிறவும் இருக்கும். அதனால் இவ்வகைப் பாத்திரங்கள் "கலயம்" எனப்பட்டன.

பாற்கலயங்களும் பயன்பாட்டில் இருந்தன.

ஐகாரம் குறுகி அகர இறுதிபெற்றாலும்  அம் விகுதிபெற, யகர உடம்படுமெய்  சொல்லாக்கத்தில் தோன்றும்.

கலைத்தல் > கலை > கல > கலயம்.  கலையம் > கலயம்.

நிலைத்தல்  நிலை > நிலையம் > நிலயம்.


கல + அம் = கலயம்

மலை + அம் >  மலையம், மலயம். [மலயமாருதம்]

வினை+ அம்>  வினையம் > வினயம்.

இல்லை  > இலை. 

இலை+ அம் > இலயம்.  (அழிவு). [ இல்லையாதல் ]. லை - ல : ஐகாரக் குறுக்கம். னை - ன என்பதும்  அது.


சொல்லாக்கத்தில் ஒரே அடியிலிருந்து வெவ்வேறு இடைநிலைகள் பெற்றுச் சொற்கள் அமையும்.

கல+ அம் > கலயம்

கல+ அம் > கலவம்.

கலம் என்பதே கலயம் என்று வந்தது என்றும் ஆசிரியர் சிலர் கருதுவர். உயிர்மெய்யெழுத்துத் தோன்றுதல்:  இவ்வாறு சொல்வதன் கருத்து யாதெனின் கல என்பதே இரு வடிவங்கட்கும் அடி எனல் ஆகும்.

மண் கலந்து, நீரும் கலந்து குழைத்துச் செய்யப்படுவதால்,  கல+ அம் = கலயம் என்பதுமாம். வெவ்வேறு வகை மட்கலப்பினால் கலையத்தின் தரம் மாறு படுமா என்பது குயவர் பெருமக்களிடம் உசாவி அறிக.

ய ச திரிபு: கலயம் > கலசம்.

வாயில் > வாசல் என்பது எடுத்துக்காட்டு. 

முடிமுகி நோய்நுண்மி பரவாமல் காத்துக்கொள்க. (கொரனா)

மெய்ப்பு பின்னர்.

சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 01122020




ஞாயிறு, 29 நவம்பர், 2020

Coronavirus in Singapore

 

[Sent by Gov.sg]


*COVID-19: 29 Nov update*


New locally transmitted cases: 1

- Cases in community: 1 (1 asymptomatic)

- Cases residing in dormitories: 0


Imported cases: 7 (4 asymptomatic, 3 symptomatic)

- All placed on SHN or isolated upon arrival in SG


Total new cases: 8


*Active cases: 60*

 - in hospitals: 31 (0 in ICU)

 - in community facilities: 29


Fatalities: 29

Total discharged: 58,124

 - discharged today: 5


Total cases: 58,213


Go.gov.sg/moh29nov


[Sent by Gov.sg – 26 Nov]


As of 12pm, MOH has preliminarily confirmed 1 new case of locally transmitted COVID-19 infection. 


Based on investigations so far, the case is in the community, and there are no new cases in the dormitories.


There are 4 imported cases who had already been placed on Stay-Home Notice upon arrival in Singapore. In total, there are 5 new cases of COVID-19 infection in Singapore today.


MOH will share further updates in its press release that will be issued later tonight.


புறத்தோதிய புரோகிதன்.

 பண்டைக் காலத்தில் அரசரும் அவர்தம் கொடிவழியினரும் விரிவான வாழிடங்களில் வசதிளுடன் வதியும் பாக்கியத்தை அடைந்திருந்தனர். இயல்பான மக்கள்,  குடில்கள், குடிசைகள், செலவமிலார் எனினும் சீருடன் வாழும் வீடுகள் ஆகியவற்றில் குடியிருந்தனர். கடவுட் கொள்கைகள் அப்போதுதான் மெல்ல மக்களிடைப் பரவிக்கொண்டிருந்தன. அவற்றை ஒருவாறு அறிந்த மக்கள், இறைவணக்கம் செய்யத் தலைப்பட்டனர். மரங்களிலும் குகைகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் கட்டத்தைக் கடந்து பலர் சேர்ந்து ஓரிடத்து  வைகும் நிலையை மக்கள் அடைந்துகொண்டிருந்தனர். ( சேரிகள் அமைதல் ). அவர்கள் பேச்சும் கருத்துகளும் வளர்நிலைக்கு வந்துகொண்டிருந்தன. அது மொழிவளர்ச்சி எனலாம். புதிய சொற்கள் உருப்பெற்று உலவின. பயன்படாத காட்டுக் காலத்துச் சொற்கள் மெல்ல மறைந்துகொண்டிருந்தன. மக்கள் தாம் சொந்தமாகச் சாமி கும்பிட்டதுடன், அத்தொழுகையை நன்றாகச் செய்வதாக உணரப்பட்ட சிறப்புச் செயலர்களை அறிந்தணுகி அவர்களிடமும் சென்று இறைவணக்கம் செய்வித்து மனனிறைவு கொண்டனர்.  ஓ ஓ ஓம் என்று ஒலியெழுப்பித் தொழுகைகளை நடாத்திய இவர்கள் ஓதுவோர் ( ஓதுவார்)  என அறியப்பட்டனர்.  ஓ என்பது ஓசை, அதை எழுப்பி இறைவணக்கம் செய்தோர் ஓது ( ஓ அடிச்சொல், ஒலிக்குறிப்பில் தோன்றிய சொல்) > ஓதுவார் என்று சுட்டப்பட்டதன் அமைதிறத்தை நாம் எளிதில் சிந்தித்து அறியலாகும். 

குடியிருப்புகள் இக்காலக் கட்டத்தில் பெரும்பாலும் சிறியனவாய் இருந்தன.ஓதுதொழிலர்கள் வீடுகட்கு வெளியில் இருந்துகொண்டே தங்கள் வேலையைச் செய்தனர்.   வெளியிலென்றால் வீட்டின் முன்பு ஒரு மரத்தடியிலோ அல்லது ஆலமரத்தடியிலோ இவை நடைபெற்றன.   அடிக்கடி மக்கள் குழுமி இத்தொழுகைகள் நடைபெற்ற இடங்கள்  "ஆலயங்கள்" எனப்பட்டன. ஆல் -  ஆலமரத்தடி;  அ - அங்கு;  அம் - அமைந்த இடம்.  எல்லாம் சேர்த்தால்  ஆலயம் (என்னும் சொல்) ஆய்விடும். மரப்பட்டை சீரை > சீலை > சேலை என்று இன்று பட்டுச்சீலையையும் குறிப்பதுபோலவே,  ஆலயம் என்ற சொல்லும் அதன் அமைப்புக் காலத்தைக் கடந்து இன்று பெரும் கற்கட்டிடங்களையும் குறிப்பதாய் வளர்ந்து பொருளைத் தருகிறது.

வீட்டுக்கு வெளியில் அல்லது மரத்தடியில் செயல்பட்டனர் என்பதுதோன்ற இவ் வோதுவார்கள் "புற ஓதிகர்" எனப்பட்டனர். இதுவே பின் திரிந்து,  "புரோகிதர்" என்றானது.

புற ஓதிகர் >  புரோதிகர் > புரோகிதர்.  (திரிசொல்).

புறம்  ஓது  இ  கு  அர். இவை சொல்லுறுப்புகள்.

ஓதிகர் > ஓகிதர். 

இதில் எழுத்து முறைமற்றுத் திரிபு ஏற்பட்டுள்ளது. இது போல எழுத்து முறைமாற்று ஏற்பட்ட சொல் , விசிறி > சிவிறி;  மருதை > மதுரை ( எனப்பல). றகரத்துக்கு ரகரம் வந்த சொற்களைப் பழைய இடுகைகளில் கண்டறிக. ரகர றகர வேறுபாடின்றி வழங்கிய சொற்களும் இப்போது வழங்கும் சொற்களும் உள. அவற்றைச் சில இலக்கண நூல்களில் பட்டியலிட்டிருப்பார்கள். அந்நூல்களில் கண்டறிக.

நம்பிக்கை மிக்குவந்த பிற்காலத்தில், வீடுகள் விரிவாக அமைக்கப்பட்டு புரோகிதர் வீட்டினுள் வரவழைக்கப்பட்டுத் தம் சேவைகளைச் செய்தனர். இதனால் அக + ஓதிகர் = அகோதிகர் என்ற ஒரு புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டு மகிழ்வுடன் இருங்கள். புதுச்சொல்லை அது வழக்கில் இன்மையால் பிறர் அறியார். இது ஒவ்வொரு மொழிக்கும் உள்ள இயற்கையான வரம்பு ஆகும். புற ஓதிகரென்பது திரிந்தமைந்திருந்தாலும் வழக்குண்மையால் பொருள்தருகிறது. மொழியில் உள்ள எந்தச் சொல்லிலும் சரியும் இல்லை, தவறும் இல்லை. எந்தச் சொல்லிலும் பொருள் உள்ளில் இல்லை; பொருள் இருப்பதாக மனிதன் உணருகிறான். பொருள் என்பது சொல்லின் உள்ளுறைவு என்று நீங்கள் நினைத்தால், " சிங்க் சியாங்க்" என்றவுடன் உங்களுக்குப் பொருள் தெரியவேண்டுமே! அதில் ஒரு சீனன் பொருள் உணர்கிறான், தமிழன் விழிக்கிறான்.  காரணம், தமிழில் அந்தச் சொல் இல்லை என்பது மட்டுமன்று;  சிங்க்சியாங்கில் பொருள் ஏதும் உள்ளுறைந்திருக்கவில்லை. என்பதுதான் உண்மை. அமைந்துவிட்ட ஒரு சொல்லில் ஒலிப்பிறழ்வுகள் ஏற்பட்டு அதுவே வழக்குக்கு (பொதுப்பயன்பாட்டுக்கு ) வந்துவிட்டால், அதுவே பின் சரியென்று கொள்ளப்பட்டுவிடும்.  அப்படி ஆனதுதான் விசிறி > சிவிறி. இது தத்துவம்.

புற+ ஓது + இகு + அர் = புரோxகிதர் எனினுமாம். இகுதல் - தாழ்ந்துவிழுதல் ,  இகுத்தல் - (முழவு முதலிய )  ஒலித்தல்.  சுட்டடிப் பொருள்:  இ - இங்கு; கு - சென்றுசேர்தல்.  இங்கு > இகு. இடைக்குறை. இவற்றைக்கொண்டு ஏற்ப வரையறவு செய்தல் ஆகும். அமையும். 

குறிப்பு:

புரோகிதன்

புறஓதிகன்

புறஓகிதன்  (முறைமாற்று:  திக > கித)  இருகுறில் முறைமாற்று

புறஓகிதன்

புரஓகிதன்  ( றகர ரகரத் திரிபு)

புரஓகிதன்

புரோகிதன் -  பு ர்  அ ஓ ~ கிதன்

பு ர் ஓ கிதன் : ( அகரம்) கெட்டு மிஞ்சிய (ர் ஓ) இணைந்தன. 

அமைவு  நன்று.

பாயசம்:

பய அசம் >  பயாசம் > பாயசம்

( குறில் நெடில் முறைமாற்று)

பயறு  ( பய - கடைக்குறை)

அசித்தல் - வினைச்சொல்  பொருள் : உண்ணுதல்.

அசி + அம் =  அசம் ( இகரம் கெட்டுப் புணர்ந்தது): 

உண்பொருள்.


அறிக மகிழ்க. 


மெய்ப்பு பின்னர்.

சனி, 28 நவம்பர், 2020

"ஒரு" -வில் விளைந்த இனிய சொற்கள்.

 ஒத்திடம் கொடுத்துக்கொண்டிருந்த எப்போதாவது ஒன்று, ஒரு என்பவற்றை நீங்கள் நினைத்துக்கொண்டதுண்டா? எங்காவது விரைவாகப் போகமுயன்றபோது இடித்துக்கொளவதுண்டு. இதனால் வீக்கம் ஏற்பட்டால் இப்போது குளிர்க்கட்டி ஒத்திடம் கொடுக்கச்சொல்வார்கள்.  சுடுநீர் ஒத்திடத்திலும் குளிர்க்கட்டி ( ஐஸ்) ஒத்திடம் நல்லது என்பார்கள். எதற்கும் மருத்துவரின் பரிந்துரைப்படி நடக்கவேன்டும்.

    ஒத்தி ஒத்தி இடுவதே ஒத்திடம். (ஒத்தடம் அன்று).

    ஒத்திடம் என்பதில் ஒ என்பதே அடிச்சொல் ஆகும். ஒ  எனின் ஒன்று.

    ஒ என்பதனுடன் து என்ற விகுதியைச் சேர்த்தால் இருவகையாய்ச் சொற்கள் ஏற்படும்.

    ஒ + து =  ஒத்து  >  ஒத்துதல். (வினைச்சொல்).

    ஒ + து  >  ஒன்று.  அல்லது ஒ > ஒன் > ஒன்று.  ஒன்+ து > ஒன்று.

    இனி ஒரு மூன்றாவது வடிவமும் தோன்றும்.

    ஒ > ஒல் > ஒல்+து > ஒற்று.

    ஒல்லி என்ற சொல்லில் ஒல் உள்ளது. இரு இணைகோடுகள் ஒன்றாவதுபோல்,  பக்கங்கள் ஒன்றாதல் நோக்கிய நெருக்கத்தால்  ஒல்லியான தன்மை ஏற்படுகிறது. ஒ என்னும் ஓரெழுத்துச் சொல்லை  ( ஒ+த்த)  உணர இவ் வரையறவு தேவையாகிறது.

  ஒப்பு என்ற சொல்லில் பு விகுதி. இது பெயரும் வினையுமாகும். தொழிற்பெயர் ஒப்பு முதனிலைத் தொழிற்பெயர், ஒப்புதல் விகுதி பெற்ற தொழிற்பெயர்.

   ஓங்குதல் என்ற சொல்லில், ஒன்று பிறவின் மிக்குநின்றதே கருத்து. ஒப்புமைக் கருத்து ஈண்டு கரவுகொண்டு நிற்கின்றது. உலகில் ஒரே பொருளாய் அது இருப்பின் ஓங்குதற் கருத்துக்கு வேலையில்லை.

 முடிவனவும் ஒருவனுக்கு ஒன்று பின் ஒன்றாக நிகழுதலே பெரும்பான்மை ஆதலின் ஓண்ணு > ஒண்ணுதல் என்பதும் முடிதற் கருத்தைக் கொண்டிருக்கிறது.

   ஒ > ஒரு என்பதும், கு என்னும் வினையாக்க விகுதி ஏற்று, ஒருகுதல் ஆகும். இதன் பிறவினை ஒருக்குதல்.  ஒன்றை இன்னொன்றில் சொருகும்போது இச்சொருகுதலால் இருபொருள் ஒருவித இணைப்பைப் பெறுகிறது. இவ்விணைப்பு  ஒருமை உறுத்துவதால்,  ஒருகு -  சொருகு என்பன உறவுடைய சொற்கள்.  அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாதல் பழைய இடுகைகளில் தெளிவுறுத்திய கருத்து.  அவற்றை மீண்டும் வாசித்துக்கொள்க.

    ஒருகு > சொருகு.

    ஒ.நோ:  அமண் > சமண்.

                    அடு > சடு> சட்டி.

ஒருகு உருவம் > சொருகு உருவம் > (சொரூவம்) >  சொரூபம்.

உருவம் > ரூபம்.

உரு என்பதில் முதல் உகரமும்  இறுதி உகரமும்  தோன்றற் கருத்தின் வெளிப்பாடு.

உரி என்றால் தோன்றி இங்கேயே இருப்பது. ஆகவே உரியது.  உர்+இ

ஒர் உ > ஒரு என்பது வேறுபடா முன்னிருத்தல் குறிக்கிறது.

இவை சுட்டடி வளர்ச்சிகள்.

அறிக மகிழ்க

மறுபார்வை பின்.


 



வியாழன், 26 நவம்பர், 2020

தனிமையில் கிடந்து இறந்தவர்கள்

என்பொடு தோலுமாய் இளைத்த உடம்பினர்

எண்பது போல்பலர் எண்ணிடு அகவையர்

பண்புடை யவர்கள் பாவம் ஒற்றையாய்

நண்பர் உறவினர் யாருமி  லாதவர்


நகர்களில் நாட்களைக் கழித்தோர் இவர்கள்

பகர்வதும் இலர்தம் துயர்தரு தனிமை;

புகர்மலி மானிட வாழ்க்கை! ஒருநாள்

தகர்ந்துயிர் நமற்குத் தந்துல ககன்றனர்.


போயபின் ஆரும்  அறியாப் புகுதியாய்

மாயவிவ் வாழ்வில் மயங்குல கசங்காச்

சாயுறு கூடாய்க் கிடந்தனர், சாவினை

வாய்கொடு சொல்வார் வையகத் தில்லை.   


தனிமைத் துன்பம் முடிவிலும் தொடர்வது;

மனிதன் சாவில் இணைந்திடு பின்பும்

புனிதமும் புனலா டுதலும் வேண்டுமே;

இனையதோர் காப்பும் இனிவரல் நாடுவம்.


உள்ளார் தனியெனில் உள்ளவர்  கூடி

மெள்ள அவரை மன்பதை புகுத்தித்

தள்ளா அணைப்பினில் தகையுறக் கூட்டிப்

பிள்ளைகள் போலும் பிழையற நின்றும்


இறுதிக் கருமமும் இனிதாய்ப்

பெறுகபின் செல்கெனப் பீடுறச் செய்வமே.  


பகர்வதும் -  சொல்வதும்

இலர் - இல்லை 

நமன் - எமன். நமற்கு - எமனுக்கு.

புகர்மலி -  துன்பம் நிறைந்த;

புகுதி -   நிகழ்வு, சம்பவம்.

அசங்கா(த) - (இரங்கி) அசையாத 

சாயுறு கூடாய் - இறந்த (சடலமாய்)

வாய்கொடு சொல்வார் - அறிவிப்பவர்கள்

தனிமைத் துன்பம் - ஆதரவின்றி வாழும் இடர்

முடிவிலும் -  இறந்துவிட்ட பின்னரும்

புனிதமும் புனலாடுதலும், - சடங்குகளும் பிணம் குளிப்பாட்டுவதும்

இனையதோர் காப்பு - இத்தகைய ஒரு காவலுடைய சூழல்

நாடுவம் -  நாடுவோம்.

உள்ளார் தனியெனில் உள்ளவர் கூடி - தனியாக வாழ்ந்து வருந்துகிறவர்களைப் பக்கத்தில் வாழ்பவர்க்ள் ஒன்றுசேர்ந்து;

மன்பதை புகுத்தி -  சமூகத்துக்குள் கொண்டுவந்து;

தள்ளா அணைப்பினில் - (இத்தகு தனியவர்களை) விலக்கி விடாமல் உதவிக் கரம்   நீட் டி      உடன் சேர்ந்து;

பிள்ளைகள் போலும் - ( பிள்ளைகுட்டி இல்லாதவர்கள் ஆகையால்)

நாமே பிள்ளைகள் போலச் சுற்றி நின்று;

இறுதிக் கருமம் -  இறுதிக் கடன்களை [முடித்து அவர்

உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வோம்.]


இதுபற்றிய ஒரு துன்பச் செய்தியைக் காண

கீழ்க்கண்ட தொடர்பினைச் சொடுக்கவும்: 


https://theindependent.sg/remains-of-elderly-woman-dog-found-in-condo-unit-over-a-year-after-she-was-last-seen/


எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும். 

விந்தை

 இச்சொல்லைப் பார்ப்போம்.

இது ஓர் இடைக்குறை சொல். எனினும் அதன் மூலச்சொல் வழக்கிறந்துவிட்டது. ஒரு செடியில் பூத்தது, உலரத் தொடங்கி விழுந்து மறைந்தபின், புதிய மலர்கள் தோன்றிப் பார்ப்போரை மகிழ்விக்கின்றன. மொழியின் ஒரு நீண்ட உலக ஓட்டத்தில் சொற்களும் இவ்வாறே மறைந்துவிடுகின்றன. இயற்கை ஒலியைத் தன் செயற்கை முயற்சியினால் அமைக்கும் சொற்களும் விதிவிலக்கு ஆகமாட்டா. ஆங்கிலோ செக்சன் மொழியிலிருந்த எத்தனையோ சொற்கள் இன்று வழக்கில் இல்லை.  " மர்ட்ரம்" என்பது ஒரு தண்டத்தின் ( அபராதத்தின்) பெயர். ஒருமனிதனைக் கொன்றுவிட்டால் அரசன் அதைக் கொன்றவன்மேல் விதித்தான். அதிலிருந்து கொலை என்று பொருள்படும் ஆங்கிலச் சொல் " மர்டர்" வந்தது.  ஆனால் இற்றை ஆங்கில மொழியில் " மர்ட்ரம்" இல்லை. அஃது ஒரு வரலாற்றுச் சொல் ஆகிவிட்டது. அறிஞர்தம் வரலாற்று ஆய்வில் இது வெளிப்படுகிறது.

விந்தை என்ற சொல்லின் மூலச்சொல் வியந்தை என்பது.  இந்த வியந்தை என்ற சொல்லின் ஓர் எழுத்து அல்லது ஒலி மறைந்தது.  அது யகரம்தான்.  வியப்புக்குரிய ஒன்றுதான் விந்தை.  வியன் > வியந்தை > விந்தை ஆயிற்று. விந்தை என்பதற்கும் விந்து என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. இதை அறியாமல் விந்தை என்ற சொல்லைப் பகுதி, விகுதி என்று பிரித்தால் அது  முட்டாள்தனம் ஆகிவிடும். இத்தகைய சொற்களைத்  தொல்காப்பியப் பேராசான் திரிசொல் என்று வகைப்படுத்தினார்.

இடுக்கண் > இடுக்கண்+து > இடுக்கட்டு > இக்கட்டு என்றானதுபோலவே. இக்கட்டு என்பது திரிசொல் ஆதலின் அதில் பகுதி அல்லது முதனிலை அதன் உருவில் அங்கு இல்லை.

ஆங்கிலம் "வொண்டர்" என்பது ஜெர்மானிய " wundran" என்பதிலிருந்து அறியப்பட்டாலும்,  அதற்கப்பால் எங்கிருந்து வந்ததென்பது மேலை ஆய்வாளர்க்கு எட்டவில்லை. அவர்கள் சுமேரிய, எலு, போனிசிய மொழிகளைத் தேடிப்பார்க்கவில்லை. சுமேரியத் தமிழ்த் தொடர்புகளை அறிந்திருக்கவில்லை. (மயில்)  தோகை என்னும் தமிழ் யூதத்தொன்மத்தில் உள்ளதை டாக்டர் கால்டுவல் கண்டுபிடித்தது பாராட்டுக்குரியது.  பண்டை மயில்தோகை நண்ணிலக் கிழக்குக்கு ( மிடல் ஈஸ்ட் நாடுகட்கு) தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியானதை இது காட்டுகிறது. நாம் சொல்வதன் உள்ளுறைவு யாதெனின்  விந்தை - வொண்டர் ஒலியணுக்கம் ஆகும்.

ஆங்கில மற்றும் இந்தோ ஐரோப்பியம் தமிழ்ச் சொற்களின் ஒப்பீடு ஏறத்தாழ இருபது ஆண்டுகளின்முன் இணையத்தில் வெளியிடப்பட்டது.  அது இப்போது கிட்டவில்லை. இணையப் பதிவின் இருப்புக்கும் பணம் செலவாகிறது. அச்சிட்டு வெளியிட்டனரா என்பதை அறியோம்.


அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் - பின்பு கவனம்.


கௌபீனம் என்ற கோவணம்.

கோவணத்தைக் கௌபீனம் என்றும் சொல்வதுண்டு. இடைச்சுற்றுக் கயிற்றில் ( அரைஞாண் ) இருபக்கலும்  கோத்து அணியப்படுவதால் அது கோவணம் எனப்பட்டது.  

கோத்தல் என்பது வினைச்சொல்.

கோ+ வ் + அணம் = கோவணம்.  வ் என்பது உடம்படுத்தும் இடைநிலை. அணம் என்பது விகுதி அல்லது இறுதிநிலை. அணி+ அம் என்பதும் அணம் ஆகும்.

சொல்லை மிகுத்து இன்னொரு சொல் படைப்பதற்கு உதவுவது விகுதி.  மிகுதி என்பது விகுதி என்றானது.  மிஞ்சு என்பது விஞ்சு ஆனதுபோலுமே இது.

கோவு + அணம் = கோவணம் எனினும் இழுக்காது.

இனிக் கௌபீனம் என்பது.

இவ்வரையுடை,  முன்னே கோத்துப் பின்பக்கமும் செல்வதால்:

கோ > கௌ.

பின்னு + அம் =  பின்+ அம் = பீனம்.

பீனம் என்பது பின்னுதல் என்ற வினைவடிவம் (பின்) முதனிலை பீன் என்று நீண்டு, அம் விகுதி பெற்று பீனம் ஆனது.

கோபீனம் > கௌபீனம்.

காக்கும் பின்னுகை என்ற பொருளில் கா+பீனம் > காபீனம்> காவுபீனம்> கௌபீனம் எனினும் இழுக்காது. காபீனம் - வினைத்தொகை.  காவுபீனம் இருதொழிற்பெயரொட்டு.