ஞாயிறு, 31 மார்ச், 2024

முக்குவர்கள் சொல்

 செம்படவருள் ஒரு  பிரிவினர் கடலில் மூழ்கி  முத்தெடுப்பார்கள். இவர்களுக்கு முக்குவர்கள் என்று பெயர். 

பண்டொரு முக்குவன் முத்தினு போயி

படிஞாறன் கடலத்து  முங்ஙிப்  போயி

என்ற கவி வயலார் மலையாளப் பாட்டிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம்.

முழுகுதல் என்பதுபோலவே  முழுக்குதல் என்பதும் ஒரு வினைச்சொல்.  இந்த இரண்டாவது வினைச்சொல் இடைக்குறைந்து  முக்குதல் என்ற வினை அமையும்.  மூழ்கி  முத்து  எடுத்தலை முக்குவர் செய்வர்.

முழுக்குதல் என்பதில் ழு மறைந்தது போலுமே  வாழ்த்தியம் என்பதில் ழ் குன்றி வாத்தியம் என்றாகும். யகர ஒற்றும் இவ்வாறு குறையும்.  சாய்த்தல் என்றால் வெற்றியுடன் ஒன்றைச் செய்தல்.  சாய்த்தியம் என்பதில் யகர ஒற்று மறைந்து சாத்தியம் என்று ஆகும்,  சாய்தல்:> சாய்தித்தல் >  சாதித்தல் என்று ஆகும்.  சாதித்தல் முதலியவை தமிழ்வினைகளே.  ஆய்> ஆய்  +  தாய்  >  ஆத்தா என்றாவதில்  இரண்டு யகர ஒற்றுக்களும் கெட்டன.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்  

சனி, 30 மார்ச், 2024

மாலுமி

 மாலுமி என்று சொல் அறிவோம்.

மால் என்பது பல்பொருட் சொல்.  காற்று என்றும் எல்லை என்றும் பொருண்மைகள் உள்ளன,  இவற்றுடன் பிறவும்.

மால் உ   இம் இ.

மாலு + இமி.>   மாலுமி   இதில் இ மறைந்தது.

இங்குக் காற்று என்பது கடல் காற்று.

பகவுகள்:

மால். கடற்காற்று.

உ -  முன்.

ம்  இது இடைநிலை.  இம்>  இமி  என்பது கற்று ஊதுவதும் ஆகும்.  இமிர்  என்பதில் ர் கெட்ட கடைக்குறை.  ( இமிர்தல்),  

இ - இங்கு வந்தோன்..என்பது குறிப்பும்  ஆகும்.

இது பாய்மரங்கள் பொருத்திவந்த காலத்துச் சொல்.

வேறு பொருளும் உள்ளது.. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

வெள்ளி, 29 மார்ச், 2024

பிறந்த நாள்


 பிறந்த நாள்  இன்பஞ்சை 

படத்தில் சோனி

Sony with birthday cake





சந்திப்பு சொல்

 சந்திப்பு  என்ற சொல்லை சிற்றூர் மக்களே முதன்முதல் உருவாக்கிப் பயன்படுத்தியவர்கள். இதன்பின் அது தமிழ் இல்லமொழியிலும் தொழுகை மொழியிலும் இடம் பிடித்தது. இதற்கு நேரான தமிழ்ச்சொல்: எதிர்கொள்தல்.

கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்

எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்

------என்பது ஒளவையின் பாடல் வரிகள்

தண்டுதல் என்ற சொல்லின் பொருளின்படி இருவர் சந்தித்தாலும், ஒருவர் மற்றவரிடம் பணம் கொடுத்தார். பணம் கைமாறாத  வேளையில் அது தண்டுதலாகாது என்று நினைத்தனர். தண்டுதல் என்பது கைதொடுதல் என்று பொருள்பட்டாலும்,  எதிர்மறையில் மட்டுமே  "தொடாமல்" என்ற பொருளில் "தண்டாமல்" என்று வரும் என்றனர். இது ஒரு வகையில் வியப்புக்குரிய விளக்கமே.

மரங்கள் செடிகள் முதலியவை அடர்ந்திருந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த சிறுவர்கள் விளையடச் செல்கையில் வேர் குச்சி முதலிய தடைகள் தண்டாமல் செல்க என்று தாய்மார்கள் சொல்லியனுப்புவது வழக்கம்.  தண்டுதலின் எதிர்மறைதான் அவர்களின் கவனத்துக்குரியதாயிற்று. நான்போய் ஊர்த் தலையாரியைத் தண்டிக்கொண்டு வருகிறேன் என்றும் சொல்லியிருக்கக் கூடும். சந்திப்பு என்ற சொல்லுண்மையின் காரணமாக, தண்டிவருதல் என்பது நாளடையில் வழக்கிறந்தது.  


தட்டுதல் என்பது தொடுதல் கருத்துடைய  சொல்லாதலின், அதன் மெல்வடிவமாகிய தண்டுதல் என்பதும் சந்தித்தல் பொருளைத் தரவேண்டும்.  ஆனால் அது "வசூலித்தல்" என்று பொருள்படுகிறது. காலக்கழிவில் பொருண்மையில் வழுத் தோன்றிற்று என்று தெரிகிறது.

இனிச் சந்திப்பு என்ற சொல்லுக்கு வருவோம். 

ஒருவன் இன்னொருவனை எதிர்கொள்வதே சந்திப்பு. எனினும் இச்சொல்லின் பொருள்  முன் அறிந்தோனை எதிர்கொள்வதையே குறித்தது.  அறியாதவர்களைத் தெருவில் காண்பதும் சந்திப்பு எனப்பட்டாலும் இவை பெரும்பாலும் காண்பதே அன்றி ஒரு சந்திப்பு ஆகாது. தெருவில் ஒருவனைத் தாண்டிப் போவது சந்திப்பு ஆகாது.

தன் - சன்.  ( தகர சகர மாற்றீடு )

திரும்பு > திருப்பு > திப்பு.  இடைக்குறை.

சன் + திப்பு >  சந்திப்பு  ஆயிற்று.

தான் திரும்பக் காண்தல் என்பது பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

 


வியாழன், 28 மார்ச், 2024

வாச்சியம் திரிபு

"பொண்ணு மாப்பிளையை வாத்துங்க"  என்பது பண்டை நாட்களில் பாட்டிமார் வாய்மொழியில் வருவது.  வாழ்த்தியம் என்ற சொல்லே வாத்தியம் ஆனது.  இயம் என்பது இசைக்கருவிகள் வாசிக்கும் குழுவினரைக் குறிக்கும் சொல்.

வாழ்த்து >  வாத்து  இது பேச்சுத்தமிழ் வினைச்சொல்.  இஃது ஓர் இடைக்குறை.

வாழ்த்தியம் >  வாத்தியம்.  இது இடைக்குறை.

தகரம் சகரமாய்த் திரியும். இடுகைகளில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. காண்க.

 வாத்தியம் > வாச்சியம்

இது தனி > சனி என்பதுபோலும் திரிபுதான்.  

வாசிச்ச இயம்  என்பது பேச்சுமொழித் தொடர்.

இது மருவி வாச்சியம் ஆயிற்று எனினும் ஏற்கலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

புதன், 27 மார்ச், 2024

கூட்டம், கோத்திரம். கொத்து சொல்லமைப்புகள்

 இந்தச் சொற்களின் பிறப்பு  பற்று இப்போது உங்களுடன் ஆய்வுசெய்வோம்.

இவற்றுள் மிக்க எளிதான வழியில் அறியத்தக்க சொல் கோத்திரம் என்பதுவே.

கோத்தல் என்ற தொழிற்பெயரின் தொடர்பு காட்டும் கோ என்பது  ஓர் ஏவல் வினை.

ஓரு வினை எச்சத்திலிருந்து முழுச்சொல்லை அமைத்துக்காட்டும் மரபு தமிழ் இலக்கணியரிடம் அருகியே உள்ளது எனினும்,  மற்ற மொழியாளரிடம் பெருவழக்கு  ஆகும்..  எடுத்துக்காட்டு: பாலிமொழி,  சங்கதம் முதலியவை.

கோத்து  என்பது வினை எச்சம்.

கோத்து + இரு+ அம் >  கோத்திரம்   ஆகிவிடும்.

இவ்வாறின்றி, தமிழ் முறைப்படி,  

கோத்தல் வினை:

கோ + திரம் >  கோத்திரம்.

திரம் என்பது திறம் என்ற முழுச்சொல்லின் இடையினப்பட்ட திரிபாகவோ, இரு+ அம்     என்பனவுடன்  துகரம் முன்னின்ற இணைப்பாகவோ கருதலாம். இப்படிக் கருதுவதால் அடிப்படை வேறுபாடு எதுவும் எழுவதில்லை. தமிழ்மொழியின் நெடிய வரலாற்றில் ரகர றகர வேறுபாடுகள் பின் முளைத்தவை என்பதே மொழிநூற் கருத்து ஆகும்,  எவ்வாறாயினும் திரம் திறம் என்பவை விகுதிகளே.

சமஸ்கிருதம் என்பது உள்ளூர்ப் பூசை மொழியே என்பதால்  கோத்திரம் என்பது தமிழென்றாலும் அன்றென்றாலும் ஒன்றே  ஆகும்.  சொல் வேறுபடுதல் இல்லை.  ஆய்வும் திசை பிறழ்வதில்லை. திரு அம்> திரம்  எனினும் அதுவே.

கொத்து என்பது பெரும்பாலும் மலர் போலும் அஃறிணைப் பொருட்களுக்கும் பயன்பெறவு உள்ள சொல்லாதலின்,  அதனைக் கோத்திரத்திற்கும் பயன்படுத்துவதில் தடை  எதுவும் இல்லை.  கொத்து என்பதும் கோத்திரம் என்றாகும்.

கொத்து + இரு + அம் >  கொத்திரம் >  கோத்திரம்.

இது வெறும் நீட்டலே.  கொ> கோ:    முதனிலை நீண்டு திரிதல்.

வா என்ற பொருள் அடிப்படையிலெழும் சொல்லில் கூட  வந்தான், வாருங்கள் என்று நெடிலும் குறிலுமாகிய நீட்டக் குறுக்கங்கள் வருகின்றன.   கோத்திரம் என்பது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிடுகிறது.

கூடு என்ற வினைச்சொல்லுக்கு நிகராக  துகர இறுதியை உடையதாய் கூகாரத்தில் தொடங்கு  சொல் ஒன்று இல்லை.  ஆனால்  கூதல் என்ற சொல் கூது என்ற அடியில் தோன்றியதே  ஆகும்.   அடிச்சொல் என்ற முறையில் கூடு> கூது என்பன இணையானவை ஆதலினாலே இவை பொருளொற்றுமை உடையவை..  இதன் பொருள் சேர்தல் என்பதே. கடுங்குளிரில் குழந்தையைத் தாய் இறுக அணைத்துக்கொள்வது ஒருவகைக் கூடுதலே.  ஈருயிர்கள் மிக்க நெருக்கமாகி ஒன்றன் வெப்பத்தை மற்றொன்று  மேற்கொள்ளுதல். குளிர் என்பது கூடுவதை விளைவிக்கிறது/ இதை உருவாக்குவது கூதல் அதாவது குளிர். இவ்வகையில் கூடுதலை வெகுவாகப் புரிவிப்பது கூதலே  ஆகும். கூத்திலும் கூடுதல் உள்ளது ஆதலின்,  கூத்து என்ற சொல் கூடுதல் அல்லது சேர்தல் குறிக்கும் சொல்லே.  பனிக்குளிர் காய்ச்சற் குளிர் இரண்டும் வேறுபடுத்தி அறியப்படுவது. ஊறு எனற்பாலவற்றுள் வேறானவை.

கூட்டம் என்பது ஒன்றாதல் ஆதலின்  கோத்திரம்  கொத்து என்பவற்றுக்குச் சமமாமவை ஆகும்.

குளிர் என்ற  சொல்லும் குள்> குட்டை என்று பிறப்பிப்பதே.  குளிர் உயிரினங்களை உடலைக் குறுக்கிக்கொள்ளச் செய்வதாகும்.  இவற்றில் தமிழ்ச் சொற்கள் தங்கள் பொருள் வளத்தையும் சொல்லாக்க உயர்வையும் காட்டுவனவாம்,

கோத்திரம் என்பது Gகோத்திரம் என்ற ஒலியால் வேறுபடுத்தல்  வெறும் மேற்பூச்சுத்தான்.  கொத்து இரு அம் என்பதன் நீட்சிதான். காட்சிப் படுத்தத் தக்க வேறுபாடு ஒன்றுமில்லை. வேறுவகையில் விளம்புதல் வேண்டின் மனிதக்கொத்து என்னலாம். 

கூட்டு>  கூத்து> கோத்து > கோத்திரம் எனினுமது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 28032024  2226


செவ்வாய், 26 மார்ச், 2024

வனஜா படம்


 நம் வலைப்பூவின் பேராதரவாளர் திருமதி பாக்கியவதி வனஜா

மனமெங்கும் நிறைந்தது துர்க்க்கையம்மன் தான்.

சேவை அனைத்தும் சிறந்தது.
பார்வை எங்கும் கருணை.

குலதெய்வம்:  பகவதியம்மன்.
தந்தையின் இட்டதெய்வம்; ஸ்ரீ கிருஷ்ணன்
வணக்க தெய்வம்: அருள்மிகு துர்க்கை அம்மன்
ஐயப்ப சாமி

சகரமெய் இரண்டாமெழுத்துத் திரிதலும் பிறவும் : (ஆச், நாச், என)

சொற்படைப்பு:- சோ என்னும் சொல்.

 மொழிகள்,  எழுத்துத் திரிபுகளால் புதிய சொற்களைப் படைத்துக்கொள்கின்றன.  இந்தத் திரிபுகளை மொழியினுள் உள்ளிருத்திய மனித உறுப்பு வாய்,  வாயினுள் நாக்கு,  பல், உதடு, வெளிப்படும் காற்று, ஒலி எனப்பல உள்ளன. மூக்கும் உதவுகிறது.   தொண்டையும் உதவுகிறது. நெஞ்சுப் பாகமும் உதவுவதாகச் சொல்வர்.  முயற்சியும் முயற்சியின்மையுமே உருவேதும் அற்றவை.  ஒரு சொல்லைப் பிறப்பிப்பதற்கு இத்துணை உறுப்புகளா என்று வியப்பாக இருப்பதில்லை.

சோம்பல் இல்லாமல்  எப்போதும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மனிதன் உலகிலே இல்லை என்னலாம்.  சோ என்ற தொடக்க எழுத்தைப் பயன்படுத்திய முதல் மனிதன் யாரென்று தெரியவில்லை.  அவனைப் பாராட்டலாம்.  சோ என்ற ஒலியை அவன் முயற்சிக் குறைவுக்குப் பயன்படுத்தினான்.  அதைக் கேட்ட பான்மையினரும்  ( பகு> பாகு > பாக்கு>  பாக்கு + இயம் > பாக்கியம் > பாக்கியம் உடையாரும்) அதை முயற்சிக்குறைவினைக் குறிப்பதாக உணர்ந்துகொண்டனர்.

பொருளுணர்தல்:  அடிச்சொல்லும் அதன் வளர்ச்சியும்

  ஒருவனே  சோ என்று பலுக்க, இன்னொருவன் ஒன்றும் உணர்ந்துகொள்ளவில்லை என்றால்,  அவ்வொலியினால் ஒன்றும் பயனில்லை ஆகிறது. உணரும்போதுதான்  சொல்லுக்குப் பொருள் உண்டாகிறது.   மொழி என்பது இத்தகு பல்லாயிரம் ஒலிகளின் கூட்டமைப்பு. அது எந்த வட்டாரத்தில் பெரிதும் ஒலிப்புறுகிறது என்பதை வைத்து,  ஒரு மொழி ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறோம். வட்டார எல்லைகளில் உள்ளவர்கள் சொற்களைப் பலுக்கும் நெறிகளை ஆய்ந்தால்  இரு நிலப்பகுதிகளில் நிலவும் ஒலியமைப்புகளின் கலவையைக் காண்கிறோம்.  வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என்னும் திசைகளைக் கொண்டு  சொல் வடக்கத்திப் பாசையா,  தெற்கத்திப் பாசையா என்றெல்லாம் அடையாளம் செய்துகொள்கிறோம். இவைதவிர  இன்னும் மொழிச்சொற்களுக்குப் பல அடையாளங்கள் உள்ளன.

இத்தகைய கலவைகளை யாரும் திணிப்பதென்பது  ஒரு மிகக் குறைந்த நிகழ்வே. மக்கள் இயல்பாகவே திணிப்பின்றிச் சொற்களை வேண்டியபடி கையாண்டு பேசக் கூடியவர்கள்.  ஒன்றை முயற்சி அதிகமின்றி முடிக்கவேண்டும் என்பதே அவர்கள் சிந்திக்காமல் மேற்கொள்வதாகும். 

சோம்பல் என்பது  சோ என்ற அடியின் தொடக்கத்தைக் கொண்டு எழுந்தது.  சோ என்பதற்குத் தொடக்கத்தில் பொரு ளிருந்திருந்தாலும்,  இப்போது அதன் பொருள் தெளிவாக இல்லை.  அதாவது சோவென்பது செவிப்பட்டவுடன் என்ன சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை. வேறு பல மொழிகளில் பொருள் இருக்கலாம்,  எடுத்துக்காட்டாக,  ஆங்கிலத்தில் சோ என்றால்  அப்படி என்று பொருள்.  தமிழில் அது ஓர் அடிச்சொல், ஓர் எழுத்து என்ற அளவிலேதான் வருகிறது. சோர் என்று இன்னும் ஓர் ஒலியை இணைத்தால், பொருள் வந்துவிடுகிறது. சோர்தல் என்று பெயராக்கம் செய்து,  ஒரு முயற்சிக்குறைவினைக் குறித்தமையை உணர்ந்துகொள்கிறோம். சோம்பு என்பது ஒரு விதை குறிப்பதாகவும்,  ஓர் ஏவல்வினையாகவும் அறிந்துகொள்கிறோம். அல் என்று இன்னொரு விகுதியைச் சேர்த்து,  ஒரு முயற்சிக்குறையைக் குறிப்பதாக அறிகிறோம்.  இதையே ஒரு மலாய்க்காரனிடம் சொன்னால் அவன் என்ன என்று கேட்கிறான்.  இச்சொல் அவன் பேச்சில் இல்லை.  பேசு> பாசு> பாசை என்று,  அவன் "பாசை"யில் இல்லையாகின்றது.மொழியின்றி இயங்க முடிவதில்லை.

சோ என்ற அடிச்சொல்லின் பொருட்கள்: 

1  உடற்சோர்வைத் தருவது:  ( இரத்த நோய்.)

2  மாறுபடுவது.  இயல்பாய் இல்லாமை  (சோங்கண்)

3 நினைவைப் பாதிப்பது    (மறதி ) ( சோங்கு    )

4 மனிதரை நீங்கியவை : (  மரங்கள்  மற்ற நிலைத்திண)

5 மாறுதலான வெட்டுகள்

6 இயற்கையான வடிவில்  இல்லாமை  (சோறு)

7 நீர் இல்லாமை

8 சரிவு   அல்லது சாய்வு

9 தொழிலால் மதிப்பு இல்லாதவன்

10 மாயமந்திரங்களில் ஈடுபடுதல்

இவ்வாறு நிலையில் மாறுபாடு குறிக்கும் சொற்களை  அடிச்சொல்லிலிருந்து உண்டாக்கிக்கொள்ள இந்த  அடிச்சொல் ( சோ) பயன்படுகிறது.

சோம்பல் என்ற புதுச்சொல் உண்டாதல்

சோ என்ற ஓரெழுத்துச் சொல்லிலிருந்து  சோம்பல் என்று இன்னொரு சொல் அமைந்தது நம் நற்பேறு என்றே   கருதவேண்டும். இப்போது மொழி உள்ள நிலையில்  சோம் என்று ஒரு பகுதியையும் பல் என்றோரு பகுதியையும் கண்டு இது ஒரு கூட்டுச்சொல் என்னலாம்.  இதில் சோம் என்பது  சோரும் என்பதன் இடைக்குறையாகவும்  பல் என்பது வாயிலுள்ள பல் என்றும் விளக்கி  ஆடிக்கொண்டிருக்கும் ஒரு பல் என்றும் கூறலாம். ஒரு சொல்லில் என்ன பொருள் காண்பது என்பது தனிக்கலையாக இருக்கிறது.  சோரும் என்பதை சோர்ம் என்று குறுக்கிக் கவிதைக்குள் ஒரு சீராக்கிக்கொள்ளலாம்.  அப்போதும் பொருளறியத் தக்கதாக இருக்கவேண்டும்.  தமிழ் பயன்படுத்துவோர் யாருமே அறியமுடியாத பொருளாயின்  கருத்தறிவிப்பாகிய மொழியின் பயன் இலதாயிற்று என்று கொள்ளப்பட்டு அது வழுவாகிவிடும்.

திரிபுகள்

பல சொற்கள் ஆக்கப்பட்ட நிலையினின்று மாறிவிடுகின்றன.  அவற்றைத் திரிபு என்கிறோம்.   திரியாத சொல் இயற்சொல். திரிந்துவிட்டது  திரிசொல்.  சொல் விகாரப்பட்டது என்றும் சொல்வர்.  மிகுந்துவிட்டால் மிகாரம்>  விகாரம் என்று இதுவும் ஒரு திரிசொல்லே ஆனது. மிஞ்சு > விஞ்சு என்ற  திரிபுவிதியின்படி இது மெய்ப்பிக்கப்படுகிறது. முன் இல்லாத எழுத்தொன்று தோன்றியிருந்தால் அது "தோன்றல்"   எனப்படும்.  இங்கு மி என்பது வி  ஆகிவிட்டதால்  இது திரிதல் எனப்படும்,  ஒன்றோ பலவோ ஆன எழுத்துக்கள் இல்லாமற் போய்விட்டால் அது "கெடுதல்"  என்பர்.  

நாற்சேர் என்ற சொல்  நால் + சேர் என்ற இருசொற்கள் அமைந்த   ஆக்கம்.  இது நாச்சேர் என்று மாறிவிடுகிறது.  ஆசு   என்பது  ஆசு+ ஆர் + இ என்று இன்னும் இரு பகவுகளுடன் இணைந்து  ஆச்சாரி என்று வருங்கால்,  ஆசாரி என்றும் வரும்;  ஆச்சாரி என்றும் வரும்,  ஆசு என்பது புணர்ச்சியில் ஆச்சு என்று வந்தால் இது இரட்டிப்பு. இங்கு, சகர ஒற்றுக்கள் இரட்டித்தன.  ஆ+ ச் + ச்+ ஆர் + இ  என்று பிரித்தால்  இரண்டு ச் என்ற மெய்யொலிகள் சொல்லில் வந்துவிட்டன. ஒன்று முன்னரே சொல்லில் இருந்தது.  இன்னொன்று பின்னர் ஏற்பட்டது.  ஆதலின் மெய்யெழுத்து இரட்டித்தது. இது சொல் எவ்வாறு நம் காதைச் சென்று சேர்கையில் ஒலித்தது என்பது பற்றிய வரணனை. வீட்டின் முற்றத்தை நாற்புறமும் வீடுகள் இணைந்திருப்பது நாச்சேர் என்று சொல்லப்படுகிறது. 

மால் சரி  அம் என்ற மூன்று பகவுகள் இணைந்து  மாற்சரியம் என்று அமைந்து பின் மாச்சரியம் என்று ஆகின்றது.  மாலுதல் என்றால் மயங்குதல். எவ்வாறு ஒன்றை எதிர்கொள்வது என்ற தெளிவு இல்லாமல் நிலையின் வீழ்ச்சியை அடைதல் என்பது பொருள். இது பொறாமை என்றும் பொருள்படும்.  சொல்லின் இரண்டாமெழுத்துத்  திரிந்தது.

தச்சன் என்ற சொல்.

தைத்தல் என்பது இணைத்தல். நூலினால் தைத்தல் என்பது பின்னாளில் உண்டான பொருள்.  தைத்தல் :  தைத்து > தச்சு > தச்சன் என்று சொல் அமைந்தது.  தை> தச்சு> தச்சன் எனினுமாம்.  சு என்பதும் ஒரு விகுதி.  இது மாசு என்பதிலும் காசு என்பதிலும் உள்ளது.  இவ்விகுதி பெயரிலும் வினையிலும் வரும்.  வினையில்:  பேசு,  கூசு என்பவற்றில் அறிக. தை என்ற வினையில் சு சேர்ந்தது எனின் தைச்சு என்பது  தச்சு என்று ஐகாரம் குறுக்குற்று , சொல் அமைந்தது எனினும் இழுக்காது. தை என்ற அடியினின்று சொல் அமைந்தது என்ற அறிவைத் தெளிவித்தலே நோக்கமாதலின் எவ்வாறு இங்கு அறியினும் அதில் ஒப்புதல் ஏற்படும்.  எனவே தை என்பது த் என்பதனோடு இணைந்த  ஐகாரம் கெட்ட திரிபு ஆகும். ( த் +   )

மாடிவீடும் மச்சு வீடும்

மச்சு வீடு என்பது மாடியுள்ள வீடு.  இங்கு ஒவ்வொரு மாடியும் ஒரு மடிப்பாகிறது. மடி> மாடி. இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  மடிச்சு வீடு கட்டியதனால் இச்சொல்லால் அமைந்து பின்னர் டிகரமாகிய கடின ஒலி கெட்டு, மச்சு  என்று ஆனது.  கடின ஒலிகள் விலகி அமைதலை,  கடைஞ்சி என்பது கஞ்சி என்றானதிலிருந்து அறியலாம்.  கடைந்தது அல்லது "கடைஞ்சது" கஞ்சி. [ க(டை)ஞ்சி ]  டை என்னும் கடின ஒலி (வல்லொலி) ஒழிந்தது. கரைஞ்சி என்பதும் இடைக்குறைந்து கஞ்சி என்றே  முடிதலால்  இச்சொல் இருபிறப்பி ஆகும்.  கடை, கரை என்பன வினைச்சொற்கள்.  சி என்பது விகுதி.

இஞ்சி என்ற சொல்:

இஞ்சி என்ற சொல்,  இன்+ சி என்பது தவறு,  அதில் இனிமை எதுவுமில்லை. இடை இடையே சிறிதாகி அதன் உடற்பகுதி அமைவதால், இடை+சி > இடைஞ்சி என்றாகி பின் கடின ஒலியாகிய டை குறைந்து அல்லது கெட்டு, இஞ்சி என்னும் சொல் அமைந்தது. சி என்பது ஒரு விகுதியும் சிறுத்தல் என்ற குறிப்பும் ஆகும். இது நன்கு அமைக்கப்பட்ட சொல். காரணம் சி என்ற சிறுத்தல் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதுடன் ஒரு விகுதியுமாய் ஆனது.

மீண்டும் சந்திப்போம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 

சில திருத்தங்கள் செய்யப்பட்டன }

( தட்டச்சுப்பிறழ்வுகள்) 27032024        }

குறிப்பு: எழுத்துக்கள் தாமே மாறிக்கொள்கின்றன.

கவனம்.  மாற்றங்கள் போல் தோன்றினால் பின்னூட்டம்

இட்டுத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 27032024 1613

Please do not enter compose mode  esp  with your mouse.




திங்கள், 25 மார்ச், 2024

Outperforming : the Singapore Dollar

 https://theindependent.sg/singdollars-outperformance-of-asian-currencies-may-end-soon-bloomberg-report/?utm_source=izooto&utm_medium=news_hub&utm_campaign=Singdollar%E2%80%99s%20outperformance%20of%20Asian%20currencies%20may%20end%20soon%E2%80%94Bloomberg%20report%20-%20Singapore%20News&utm_content=article_click#google_vignette


Singdollar’s outperformance of Asian currencies may end soon—Bloomberg report

ஞாயிறு, 24 மார்ச், 2024

கச்சேரி.

 கச்சேரி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களின் இடைக்குறைச் சொல் ஆகும். இவற்றில் ஒன்றினை முன்னரே இங்கு விளக்கியுள்ளோம்.  நாலாயிரத்துக்கும் மேற்பட்ட இடுகைகள் இங்கு இருப்பதால் இவற்றைக் கண்டுபிடிப்பதில் தடைகள் சில இருக்கலாம்.  உதவிக்கு இங்கு இதனை எளிதில் அடையக் குறிப்பினைத் தருவோம்.

கச்சேரி என்ற சொல்லுக்குரிய முழுச்சொற்களை இங்குப் பட்டியலிடுவோம்:

கலைச்சேரி:

வேலை முடிந்தவுடன் ஊழியர்கள்  ஒன்றாகக் கலைந்து செல்வது எங்கும் நடைபெறுவதொன்று.  இவர்கள் செல்லும் வண்டிகளில் ஒன்றாக உடன்பயணம் செய்வதும் அடிக்கடி நிகழ்வதே.  கலையும்போது ஒன்றாகச் சேர்ந்து வெளிப்படுதல் என்ற பொருளில் "கச்சேரி" என்ற குறைச்சொல்லின் நிறைவடிவம் அமைந்தது.


கலச்சேரி:-   >  கச்சேரி.

கலைதல் -  கலைந்து தம்தம் இடம் அல்லது இல் நோக்கிச் செல்லுதல். அப்போது கலந்து = வெவ்வேறு இருக்கைகளிலிருந்து வந்து,   சேர் இ >  சேர்ந்தவாறு செல்லுதல். 

வினைச்சொல்: கலைதல் மற்றும் கலத்தல்.

கலைசேரி>  க+ சேரி >  கச்சேரி  ( லை  குறைந்தது)

கல சேரி >  கலச்சேரி >  கச்சேரி  ( ல குறைந்தது )

கலசேரி  >  க(ல)ச்சேரி மற்றும் க(தை)ச்சேரி

பல வித இசைப்பாடல்களும் கலந்து வரிசையாகப் பாடப்பெறும் இடம்.

வினைச்சொல்:  கலத்தல்.

கதைச்சேரி >  கச்சேரி  எனினுமாம்.  பல கதைகளும் சொல்லும் மேடை.

இரு பெயர்ச்சொற்கள்  ஒட்டு.


கருமச்சேரி

கருமச்சேரி > ( கருச்சேரி) >  கச்சேரி.   அலுவலகம்,  வழக்குமன்றம்.

மேலும் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_43.html

பல முதன்மைக் கருமங்கள் நிறைவேறும் இடம் என்ற கருத்திலோ,  அல்லது தம் முன் கருமவினையின் காரணமாகவோ இங்கு போக நேர்ந்தது என்ற நினைப்பின் காரணமாகவோ இவ் விடைக்குறை ஏற்பட்டிருக்கலாம்.  தமிழ்மக்கள் முன்னாட்களில் காவல்நிலையத்திற்குச் செல்ல விருப்பம் இல்லாதவர்கள்.

கதம் என்பது ஒலி.  இவ்வொலிகள் எழுப்பப்படும் இடமும் கச்சேரி ஆகலாம்.

கத்து >  கது > கதம்.  சேரி என்பதிணைந்து கதச்சேரி >  கச்சேரி ஆகும்.


மேலும் வாசிக்க:  சொடுக்குக

https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_43.html

https://sivamaalaa.blogspot.com/2020/08/thii-and-day.html


மெய்ப்பு:  பின்னர்






வெள்ளி, 22 மார்ச், 2024

இந்து என்ற சொல்.

 வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்த போது அவனுக்கு இந்திய மொழிகளைப் பற்றி ஏதும் தெரிந்திருந்தது என்று நினைக்கக் காரணம் எதுவுமில்லை. நீங்கள் புதியவராக ஒரு புதுநாட்டுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அங்குள்ள மொழியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்துவிடுமா? தெரியாத நிலையில் கற்பனையின் மூலம் கதையைக் கட்டிக்கொண்டு தெரிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறான். மொழிகளை அறிந்துவிட்டதாக அவன் எழுதிவைத்தவை,  கற்பனை பலவற்றை உள்ளடக்கியவையே ஆகும்,  தமிழ்நாட்டு மக்கள்  கெட்டிக்காரர்கள். " எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்,  பாடியவன் பாட்டைக் கெடுத்தான்" என்ற அவர்களின் அறிவுரை,  உண்மையில் முதலில் வெள்ளைக் காரனுக்கே பொருந்துவதாகும்.

ஆயினும்  இது அவன் சொல்லிய அனைத்துக்கும் பொருந்துவதாகாது.  சில கருத்துகளிலே அவன் பிழைபட்டான்.

ஆரியன் என்ற இனத்தவன் உள்ளே வந்தான் என்பதும்,  படை எடுத்து வந்து வெற்றிகொண்டான் என்பதும் இத்தகைய ஆதாரமற்ற கருத்துகளே  ஆகும். இதை அவன் கூறக் காரணம் அவன் செய்த பொருந்தாத சொல்லாய்வு. நாட்டுக்குள் பலர் வந்திருக்கக் கூடும்.  ஆனால் அவர்கள் ஆரியர் என்போர் அல்லர்.   ஆரியர் என்பது ஆர் விகுதி பெறுவதற்குரிய கற்றோர் என்று கருதினால் அது சரி.  படித்தவர்கள்  அறிஞர்கள் பலர் அப்போதும் இருந்தனர்.  ஆரியர்கள்  - இது இனப்பெயரன்று. இயம் என்பது தமிழில் வாத்தியத்தையும்,  ஆரியம் என்பது நிறைவான வாத்தியத்தையும் குறித்த தமிழ்ச்சொற்கள். .ஆர்தல் - நிறைதல். ஆர் என்ற சொல் தமிழில் இருந்ததையும் அவன் அறிந்திருக்கவில்லை. பார்ப்பான் என்பது பூசாரிகள், சோதிடம் பார்ப்போர் என்ற தொழிலரைக் குறிக்கும் சொல்.  அஃது ஒரு மக்கள் தொகுதியைக் குறிக்கும் சொல்லாகப் பின்னர் பொருண்மை பெற்றிருக்கக் கூடும்.  சொல்லுக்கு இயற்கையில் பொருள் ஒன்றுமில்லை.  சொல் என்பது ஒலிகளின் கூட்டு என்பதே உண்மை.  அதற்குப் பொருள் பயன்பாட்டின் காரணமாக ஏற்படுகிறது. ஒரே ஒலியுள்ள சொற்கள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பொருளைத் தரும்.  மா என்ற சொல் பல்பொருளொருசொல்.  அதற்குத் தமிழில் விலங்கு என்ற பொருளும் உள்ளது.  சீனமொழியில் குதிரை என்ற பொருளும் உள்ளது.  வேறு மொழிகளில் அவ்வொலிக்கு வேறு பொருண்மைகள் இருக்கலாம்,

மா மா என்று இரண்டு முறை சொன்னால் மாமனைக் குறிக்கலாம். எழுதுகையில் இது மாமா என்று எழுதப்படும்.

" இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை" -  இந்து  என்பது சைவநூலில் வரும் பாட்டில் வரும் சொல் =  .  இதற்கு நிலா என்று பொருள். இளம்பிறை என்பது அதன் வளராத பகுதி.  இதற்குத் திருடன் என்று பொருளில்லை.  ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பொருளிருக்கும். 

இந்து என்பதற்குத் தமிழில் உள்ள பொருள்:

1  சந்திரன்

2 கற்பூர மரம்

3 சிந்துநதி

4 இந்து மதத்தான்

5 ஒரு விடம்  ( விஷம்)  கவுரிபாசாணம்

6  எட்டிமரம்   

7 தாமரைப் பூ  ( இந்து கமலம் எனப்படும்)

8 ஒரு காந்தக் கல்.  ( இந்து காந்தம்)

9 சிவன் ( இந்துசிகாமணி).  இந்துவாகிய சிகையின் அணிகலன் உடையோன்


10 இன் து அல்லது தூ.    இனிய துய்யதானது அல்லது தூயது.

11  இம் து  - இம்சையைத்  துறந்தவன். முனைவர் சிவப்பிருந்தா தேவி   எம்மிடம் தெரிவித்தது.


இவ்வாறு பல் பொருள் தமிழில் உள்ளன. இவற்றை உணர்த்துவது இச்சொல்.

இக் கூட்டுச்சொற்களில் சிலவற்றில் வல்லெழுத்து  மிக்குவரவேண்டும் என்பார் உளர்.  எ-டு: இந்துக்கமலம். 



அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு

புதன், 20 மார்ச், 2024

சக்கரம், சக்கரதாரி, சக்கராயுதம், சக்கரவர்த்தி.

 வண்டியே இல்லாத காலம் ஒன்று இருந்தது.  அந்தக் காலத்திலும் தமிழும் தமிழனும் இருந்தமை  வரலாறு  ஆகும்.  "கல்தோன்றி  மண்தோன்றா"  என்ற தொடரை,  கல்லையும் மண்ணையும் கடந்து   வீடு மாடு வண்டி எல்லாவற்றையும் மேற்கொண்டு வாழ்வு முன்னேற்ற மடைந்த கால ஓட்டத்தையும் உள்ளடக்கிய மொத்த வளர்ச்சியையும் குறித்ததாகவே   கொள்ளவேண்டும்.    கற்பனை செய்தாலே கண்டுணர முடிந்த,  எல்லாம் எழுத்துக்களிலே அடங்கிவிடாத நீண்ட வரலாறு உடையோர் தமிழர் என்பதைச் சிந்தித்தே உணர்தல் கூடும்.  சொற்களை ஆய்வு செய்கையில்  இதனை மறந்து ஆய்வில் தொய்வுற்றுவிடாத திண்மை ஆய்வாளனின் பான்மையில் நிற்றல் வேண்டும்.  தமிழரின் வரலாறு பற்றிச் சொற்களின் மூலம் சில தரவுகளை நாம் உணர முற்படுகையில், ஏனை மொழிகளையும் மொழியினரையும் நாம் குறைத்து மதிப்பிடுவதாகப் பொருள்படாது என்பதை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.

சக்கரம் இல்லாதது வண்டி என்று நாம் சொல்வதில்லை.  சக்கரம் இல்லாத காலத்தில் ஒரு பொதிபெட்டி  இழுத்துச்சொல்லப்படவேண்டும்.  அல்லாது உள்ளிருக்கும் பொருளோடு தூக்கிச்செல்லப்படவேண்டும். அல்லது இறக்கை கட்டிப் பறந்து செல்லுமிடத்தைக் குறுகவேண்டும்.  பண்டையர் இவை எல்லா முறைகளையும் ஏற்புழிப் பயன்படுத்தியிருப்பர்.  கயிறு கட்டி இழுத்தும் சென்றிருப்பர்.  இழுக்குங்கால் பெட்டியின் கீழ் மரச்சட்டம் சறுக்கிச் செல்லும். இவ்வாறு சறுக்குங்கால்  அச்சட்டம் தேய்ந்து அதிக நாள் நிலைக்காது இதை மாற்றவே உருளைகள் கண்டுபிடிக்கப் பட்டன. சறுக்கும்போது தேய்மானத்தைக் குறைக்க,  சக்கரம் கண்டுபிடித்தனர்.  இதைத் தமிழ்மொழியே நன்கு  தெரிவிக்கிறது.

சறுக்கு + அரு+ அம். 

சக்கரம் சரிவளைவாக இருந்தாலன்றி உருளாது. எவ்வளவு காலத்துக்குப் பின் உருட்சி கைவரப் பெற்றனர் என்பது தெரியவில்லை. சக்கரம் சுற்றவும் கழன்று விடாமல் இருக்கவும் இரும்புப் பாகங்கள்  தேவை.   உருளாத சக்கரங்களெப்போது உருண்டன?

உருளைக்கு முந்தியது சறுக்கரம்.

திணறுதல் வேண்டாம்.

அருகு -  இது அண்மை குறிக்கிறது.   அருகில் :  இட அண்மை தெரிவிக்கிறது. அருகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி.

அருகுதல்: குறைதல்.  இங்கு தொலைவு குறைதல். 

அருகுதல் என்பது கூடுதலையும் குறிக்குமாதலால்,  இடன் நோக்கிப் பொருள்கொள்ளவேண்டும் என்பதை உணர்க.

எடுத்துக்காட்டு: இறைவன் பற்றனை நோக்கி அருகில் வருகிறான்.  அப்போது அவனுக்கும் பற்றனுக்கும் உள்ள தொலைவு குறைகிறது.  அவனுக்கு அவன் வழங்கும் அருள் கூடுகிறது. உங்கள் சம்பளத்தைக் குறைத்துவிட்டால், உங்கள் பொருளியல் நெருக்கடி கூடிவிடுகிறது.  இதைப்போல்தான் சொற்களும் பொருண்மையில் கூடுதல் குறைவு காட்டுகின்றன. உலகம் இது. 

சறுக்குத் தேய்மானத்தைக் குறைத்து  போமிடத்துக்கு அருகில் செல்லும்  அமைப்பு  என்று இந்த மூன்று துண்டுக்  கிளவிகளையும் வாக்கியமாக்கி இந்த வரலாற்றை உணர்ந்துகொள்ளலாம்.

சறுக்கரம் என்பது  று என்பது குன்றி அல்லது தொக்கி நிற்க,  சக்கரம் என்றானது.

சகடு என்றால் வண்டி,  சறுகி  ( சறுக்கி)  அடுத்துச் சென்று சேர்வது சறுகு+ அடு> சறுகடு >  சகடு  ஆகி,  வண்டி என்ற பொருளில் வழங்கிற்று.

சக்கரம், சகடு இன்னும் சில  சகரத்தில் தொடங்கும் சொற்கள்.  று என்பது குன்றிற்று,  இது தமிழாக்க உத்தி. இடைக்குறை ஆகும்.  கவிதையில் எதுகை மோனைக்காகக் குறைத்து இசையொடும் புணர்ப்பது கவிஞனின் உரிமை. poetical license.  பலமொழிகளிலும் உண்டு.  உங்கள் அப்பன் என்பதை ங்கொப்பன் என்பதும் குறுக்கம். ஆனால் பேச்சுக் குறுக்கம்.  எங்க ஆயி என்பதை     ஙாயி என்பதும் காண்க.

வண்டி என்ற சொல் வள் என்ற அடிச்சொல்லிலிருந்து வருகிறது.   வள்> வண். ஒப்பிட இன்னொரு சொல்: பள்> பள்ளு   ( பாட்டு).  பள் > பண்  ( பொருள் பாட்டு).

வள்> வண்> வண்+ தி>  வண்டி.    

வள் என்ற வளைவு குறிக்கும் அடிச்சொல்  வண் என்று திரியும்.  வள் என்பதற்கு வேறு பொருண்மைகளும் உள.  அவை ஈண்டு பொருட்டொடர்பு இல்லாதவை.

இந்தச் சொல்.  வளைவான உருளைகள் பொருத்தப்பட்ட செல்திறப் பளுவேந்திப் பெட்டியைக் குறிக்கிறது.  ஆகவே இது சக்கரம் கண்டுபிடித்த காலத்துக்குரிய சொல்.  இந்தப் பளு என்பது பொருட்பளு, மனிதப்பளு இரண்டினையும்  அடக்குவதாகும்.  வண்டி சுமக்கும் எதுவும் பளுவாகும்.

சக்கரம் உடைய வண்டி,  நடப்பதினும்   விரைவு உடையது..  இறைவனும் பற்றனுக்கு ( பக்தனுக்கு)த்  துன்பம் நேர்கையில் விரைந்து வருவான்.  இந்த நம்பிக்கையையும் துணிவையும் படிபலிக்கும் வண்ணமாக இறைவனுக்குச் சக்கரம் நாட்டி  அவனைச் சக்கரதாரி என்றனர்.  அவன் விழைந்த காலை அச்சக்கரம் வந்துவிடும்.  அதைத் தரித்துக்கொண்டு,  அவன் பற்றனுக்கு உதவுவான், உதவினான், உதவிக்கொண்டிருக்கிறான்.  ஆகவே அவன் சக்கரதாரி  அல்லது சக்கரபாணி  ஆயினான்.   அவனின் கருவிகளில் சக்கரம் ஒன்றானது.  இது  சக்கரமும் ஓர் மனித நாகரிகத்தில் ஒரு முக்கிய ஆயுதம் ஆனதைத் தெரியக் காட்டுகிறது.  இது மனிதப் பரிணாமவளர்ச்சியைக் காட்டுகிறது.

தமிழில் இறைவன் என்ற சொல் மன்னனையும் குறித்தது.  மன்னனும் தெய்வத்திற்கு அடுத்து மதிக்கப்பட்டான். இறைவன் கொல்லும் அதிகாரம் உடையான் அதுபோல் மன்னனும் ஒருப்படாமல் நின்றோரை ஒறுத்தான்.  சக்கரத்தை அவனும் வருவித்துக்கொண்டதால், சக்கரவருத்தி  ஆனான்.  எடுத்துக்காட்டு:  அசோக சக்கரவர்த்தி.   வருத்தி > வர்த்தி.   வருகிறான், வர்றான் என்பதுபோலும் குறுக்கமே. வரு> வர். மன்னனே மற்றோரினும் வலியோன் என்பதை இது காட்டுகிறது.

இச்சொற்கள் வீட்டுமொழியிலும் பூசைமொழியிலும் வழங்கி மொழிவளம் பெருக வகைசெய்தன.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.

செவ்வாய், 19 மார்ச், 2024

இலம்போதரசுந்தர வினாயகன்

 விநாயகன் என்று தான் இத் தெய்வப்பெயரை எழுதுவர்.  ஆனால் இன்னொரு இனிய பொருளையும் யாம் கூறுவதுண்டு:

வினை+ ஆயகன் >  

இந்தச் சொற்புணர்வில் வினை என்ற சொல்லிறுதி  ஐகாரம் கெடும்.   ஆகவே:

வின் + ஆய் + அகன்,

>  வினாயகன்.   ( பொருள்:  வினைகளை ஆய்பவன் ).

அகன் -  அகத்திலிருப்போன்.

வினை என்பதில் ஐ விகுதி விலக்குதல் பாணனாகிய. பாணினி கண்ட குறுக்க முறைதான்.

இலம் -  வறுமை.   ( இலம்பாடு -  வறுமைத்துன்பம்).

போது -  காலம்,

அற என்பது அர என்று திரிந்தது.

இலம்போதர என்பதற்கு இன்னொரு நற்பொருள் பெற்றோம்.


சுந்தரம் என்பது பலவாறு அறியத்தக்கது,

உந்து + அரு + அம் > உந்தரம்>  சுந்தரம்.

அகர வருக்கம்  சகர வருக்கமாகும்.  உகரம் சுகரமாகும்.

ஆகவே உந்து என்பது சுந்து என்று ஆயிற்று.

இச்சொல்லுக்கு எப்போதும் கூறப்படும் பொருள் அழகு என்பது.

சிந்தூரம் என்பதும் சிந்துரம்> சுந்தரம் என்றாகும் என்பர்.

சுவம் என்பது சொந்தம்.  சொ(ந்தம்)  + அம் >  சொவம்>  சுவம்.

சுவம் தரம் >  சுவந்தரம்,  இது இடைக்குறைந்து சுந்தரம் ஆகும்.

சொந்தம் தந்தது,  பிறன்பொருள் அல்லாதது என்று பொருள்.

அம் என்றாலே  அழகு என்பதுதான் பொருள்.  அமைப்பு என்பதன் அடிச்சொல்.

அம் - அழகு

(அம் -  சீனமொழியில் பாட்டி!)  மிகப்பணிவான சொல்.  தைவானுக்குப் போய் ஒரு பாட்டியம்மாவை பார்த்து அம் என்று அழையுங்கள்.  

உலக மொழிகளில் நாம் செல்லவேண்டாம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.

ஞாயிறு, 17 மார்ச், 2024

இரேகை ரேகை தமிழ்

 ரேகை என்ற சொல் தமிழென்பதை வெளியிட்டோம்.  இந்த வலைப்பூவைத் தொடங்குமுன்பிருந்தே இது எம்மால் சொல்லப்பட்டதுதான்.

இச்சொல்லின்  இரு,  ஏகு  ஐ என்ற மூன்று பகவுகள் உள்ளன. ஒரு ரேகை என்பது ஓரிடத்திலிருந்து இன்னும் ஓர் இடத்திற்குச் செல்லும் கோடுதான்.  வேறு எதுவும் இந்தச் சொல்லில் மந்திர தந்திரங்கள் இல்லை.

ஏகுதல் என்பது எப்போதாவது நாம் நூலில்  காணும் சொல்தான். இதைப் பிரித்தாலே இதன் பொருள் தெளிவாகிவிடும்.  ஏ  -  எங்காவது,  கு - சென்று  அவ்விடத்தை அடைவது  :  என்பதே பொருள்.  எளியதான ஓரெழுத்து மொழியில் தொடங்கிப் பின்னர் பல எழுத்துக்களும் அசைகளும் உள்ள சொற்களைத் தானே உருவாக்கிக்கொண்டு  அமைவுற்ற மொழியே  தமிழ்.  சீனம்போன்ற உலகின் மொழிகள் இன்னும் ஓரசை மொழிகளாகவே  ( monosyllabic ) உள்ளன.  கா என்பது சீன மொழியில் ஓர் ஓரசைச் சொல்.  இன்னும் நேரசைச் சொல்லாகவே உள்ளது. இதன்பொருள் "கடி(த்தல்)"  என்பது.  ஆனால் தமிழில் கடி என்ற சொல் உண்டாகி,  நிரையசைச் சொல்லாக வழங்கிவருகிறது.  தொடக்க காலத்தில் தமிழிலும் கா என்றே இருந்திருக்கும்.  ஆனால் இது தமிழில் கடி என்ற ஈரெழுத்துச் சொல்லாகிவிட்டது.  இது மொழி அடைந்த முன்னேற்றமாகும்.  ஏகுதல் என்றால் செல்லுதல் என்று பொருள் என்பதைச் சுவையுடன் உணர்ந்திருப்பீர்கள். இது மொழிநூல் சார் கருத்து ஆதலின்,  இதை விரிக்காமல் விடுப்போம்.

எழுதுகோலை வைத்த இடத்திலே இருந்து மேலும் இழுக்காவிட்டால், கோடு என்பது உண்டாக மாட்டாது.  அப்போது வெறும் ஒற்றைப்  புள்ளியையே வைத்துள்ளோம்.  இழுத்தாலே அது கோடு ஆகிறது.  இழுப்பது கோடு. இழு - இலு > இல்.  இல் என்பதும் கோடு அல்லது பலபுள்ளிகளின் இணைப்பு ஆகும், அப்போது அது எல்லை குறிப்பதாக ஆகிவிடவும் கூடும்.  மிக்கச் சரியான முறையில் இல் என்பது இடம், வீடு, ஓர் உருபு என்று பல பொருள் உணர்த்தும்.  ஆகவே இழு என்பதும் இல் என்பதும் தொடர்புடைய சொற்கள் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.  எது முதல் என்பதைக் கருதினால்,  இது இல்> இலு> இழு என்றாகும்,

கோடிழுக்கும் போது,  எழுதுகோலின் முள்முனையும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தில் போய் முடிவதால்,  ஏ- கு என்பது சரியாக அமைந்த தமிழ்ச்சொல் ஆகும்.  தொடக்கம், கோடிழுப்புச் செல்லுகை, முடிவு என்பவையே இரேகை என்பதன் உள்ளடக்கம் ஆகும்.

இரேகை என்று அமைந்தபின்  இச்சொல் தன் இகரத்தை இழந்து,  ரேகை என்று தலைவெட்டுண்ட சொல்லாகி வழங்கி வருவதலால், இதனைப் பலரால் தமிழ்ச்சொல் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இங்கு கூறினவை மூலமாக இதை உணர்ந்து போதிப்பீராக.

இச்சொல் வேறு மொழிகளுக்கும் சென்று வழங்குகிறது.  ரேகா என்ற பெண்ணின் பெயரும் இதிலிருந்து பிறந்த சொல்தான். இந்தியாவிலும் பிறவிடங்களிலும் இச்சொல் பரவிச் சேவை செய்துவருகிறது. அடிப்படைப் பொருள் கோடுதான்.

தமிழில் இருந்தால் தமிழன் தொழுகையில் வழங்கிய பூசுர மொழியிலும் அது இருக்கவே செய்யும்.  தமிழனின் அரசுகள் இமயம் வரை விரிந்து ஆசியாவில் பல நாடுகட்கும் பரவியதால் இது போலும் சொற்கள் எங்கும் காணப்படாமல் இருக்கவியலாது.

சொற்கள் ஆகார விகுதி பெற்று முடிவதும் தமிழ் மரபுதான்.  நிலா, பலா (பல சுளைகள் உள்ளது),  உலா,  சுறா எனப்பல சொற்கள் உண்டு.  கூசா என்பது தமிழ்,  கூம்பிய வாய்ப்பகுதி உடையது என்று பொருள், ஆனால் பின்னர்  சா  என்பது ஜா ஆகிக் கூஜா ஆனது.  வடசொற் கிளவி  வடவெழுத்து ஒரீஇ,  எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் என்று தொல்காப்பியம் கூறும்.

எவனொருவன் சாவு தொடர்பான தொழிலை மேற்கொள்ளுகிறானோ அவனுக்கே யாக்கை நிலையாமை, இறைவன் செயல் பற்றிய எண்ணங்கள் உருவாகி,  தெய்வநெறிகள் பற்றிய கருத்துருவாக்கம் ஏற்படும். அவ்வாய்ப்பு அவனுக்கே அதிகம். பிறருக்கு ஒரோவழி ஏற்படலாம்  இக்கருத்துகளின் கோவையே சா+ திறம்>  சாத்திரம்>  சாஸ்திரம் ஆயிற்று. சா= சாவு பற்றியது. திறம் =  திறத்தை விளக்குவது.  சாத்திரம் என்பது தொடக்கத்தில் சாவு அல்லது இறைவன் பற்றி விளக்கி,  பின்னர் பிற பொருளும் கூறித் தெளிவாக்கிய நூல் அல்லது அறிவுநூல்.

சமஸ்கிருதம் என்ற சொல் சமம், கதம் என்ற இருசொற்களின் கோவையே. இதைப் பல்வேறு வகைகளில் அறிஞர்கள் ஆய்வு செய்து,  வேறுபட்ட பொருண்மைகளைத் தெரிவித்துள்ளனர்.  சமம் என்றால் ஒப்புமை. கதம் என்றால் ஒலி. கத்து> கது > கதம்.  கத்து கதறு என்று கத் என்ற அடியில் வந்த சொற்கள் பலவும் தமிழிலுள்ளவை.  சமமான் ஒலிகளால் - அதாவது தமிழுக்குச் சமதையான ஒலிகளால் ஆனதே சமஸ்கிருதம் ஆகும்.  கதம் என்பது கிருதம் என்று திரியும்.  சம கதம் > சமக் கிருதம் > சமஸ்கிருதம்,  மற்றும் சங்கதம் என்றும் இந்தத் தொழுகை மொழி குறிப்புறும்.  ரேகை என்ற தலைக்குறைச் சொல் சமஸ்கிருதம் என்ற தொழுகை மொழியிலும் உள்ளது கண்டுகொள்க.

சமஸ்கிருதம் என்பதற்கு வேறு பொருள் கூறினோரும் பலர்.

கமில் சுவலெபெல் ஒப்புக்கொண்டதுபோல் தமிழ் என்பது  தம் இல் மொழி> தமிழ் மொழி என்பது சரியானால்,  அதற்குச் சமமான ஒலிகளைக் கொண்டு இயங்குவது  சம கதம்>  சமஸ்கிருதம் என்றாகும்.  சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் இங்கு சிறந்து ஏற்புடையதாகிறது. ஒலித் திருத்தத்தின் மூலமே தமிழ் வேறுபடுகிறது.  தொல்காப்பியர் ஏற்காத ஒலிகள் வடவெழுத்தொலிகள்.  வடம்  என்றால்: பலகை என்று பொருள்.  வீடுகளுக்கு  வெளியே  மரப்பலகையில் அமர்ந்துகொண்டு ஓதினமையால்  அது வடமொழி என்று பெயர்பெற்றது என்றும் சொல்லலாம்.  சொற்கள் கயிறுபோல் நீண்டுசென்றதால் அது பெயராயிற்று என்றும் சொல்லலாம்.  வட என்றால் வடக்குத் திசை என்பது மட்டும் பொருளன்று.  இம்மொழி தென்னாட்டில் உருவாக்கப் பட்டு வடதிசையில் தமிழர்களால் பரப்பப்பட்டதென்றும் கூறுவதுண்டு. பழங்காலப் பூசாரிமார் தொழுகை மொழியாகப் பயன்படுத்தினர் இதனை.

வீட்டுக்கு வெளியில் மரப்பலகைகளில் இருந்தபடி பாடியவர்கள் பாணர்களே. அவர்களும் இம்மொழியில் அறிஞர்கள்.  அவர்களின் ஒருவரான பாணினியே இம்மொழிக்கு இலக்கணம் வகுத்தான்.  பாண் என்ற அடிச்சொல்லைக் காண்க. இம்மொழியில் முதற்கவியாகிய வால்மிகி இத்தகைமையரே.

இதை இந்தோ ஐரோப்பியம் என்று கூறியதானது, பாணர், வேடர் முதலானவர்களுக்குச் சேரவேண்டிய பெருமையை மறுத்துரைத்த களவு ஆகும். 

இது சந்தாசா என்றும் பெயர் பெற்றது.  சந்த அசைகள் உள்ள மொழி என்பது பொருள். பாட்டுக்கு உரிய மொழி.  பாட்டுப் பாடியவர்கள் பெரும்பாலும் பாணர்.  பிறரும் இருந்தனர். இவை முன்னர் யாம் விளக்கியதுதான்.  தம் தம்> சந்தம்,  தகர சகரப் போலி. பூசையில் பாடும் மொழி. 

எழுத்து ஒவ்வொன்றுக்கும் பொருள் சொல்லக்கூடிய திறன் தமிழுக்கு உள்ளது. பிறமொழிகட்கு இல்லை என்பதன்று வாதம், உணர்க. அவ்வம்மொழியையும் ஆராய்ந்து சொல்லவேண்டும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


சனி, 16 மார்ச், 2024

பூர்தல், பூருதல் வினையாக்கம் , விக்கிரகம்.

 பூர்த்தி என்ற சொல் வழக்கில் உள்ளது.  ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடு  என்று பேச்சு வாக்கியங்களில் வரும்,   பூர்(-தல்) என்ற ஏவல் வினையுடன் தி என்ற தொழிற்பெயர் விகுதி வருவதே  பூர்த்தி என்ற சொல். வினையில் மிகுந்து அதை நீட்டமாக்கிப் பெயராக்குவதே விகுதி   .  மிகுதி> விகுதி,  இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:  மிஞ்சு> விஞ்சு என்பதாகும்,  விகுதி என்பது  சொல் மிகுதலே.. விகுதி என்பது காரண இடுகுறிபோன்றது,  இதற்குக் காரணம் முன்னில் மிகுதலா பின்னில் மிகுதலா என்பது பின்னில்தான் என்று வருவிக்கவேண்டியுள்ளது.  விகுதி என்பது  பூசை மொழியில் விக்குருதி என்று வரும். (  விக்ருதி).  இதை மிக்கு + உரு + தி என்று உணர்ந்தால்,   மிக்குருதி, விக்குருதி என்று சிந்தனை பெறலாகும்.  உருவானது மிகுந்து வருவது.

அடிப்படைக் கல்லின் மிக்கு  ( மிகுந்து)   அழகுடன் செதுக்குற்று பீடத்தில் அமர்த்தப்பட்டிருப்பதே  மிக்கு+ இரு + அகம்   >  மிக்கிரகம் >  விக்கிரகம். இங்கும் அடிச்சொல் மிகுதல் என்பதே. கல்லின் மிக்கது விக்கிரகம், அது மிக்கு இரு அகம்.  அகம் என்பது  அ+  கு + அம்  :  அங்கு சேர்ந்து அழகாயிருப்பது என்று பொருள். அம் அமைதல், அழகு,  அம்மை, ( அம்மா) இவற்றுக்கெல்லாம் அடிச்சொல்லும் ஒரு விகுதி அல்லது இறுதிநிலையும்  ஆகும். 

இனிப் பூர்தல் என்ற வினையை ஆய்க:

புகு > புகவு >  புகர்வு

புகர் >  பூர்.

பகுதி என்பது பாதி என்று நீண்டு திரிதலை உணர்க.  அதுபோலவே புகு என்ற ஈரெழுத்துக்களும் பூ என்று நீண்டு திரிந்தது.

பூ -  பூத்தல்  என்ற வினை வேறு.

பூர் >  பூர்ந்தது பூர்ந்தான் என்று வினைகளாகி ரகர மெய் இழந்தது பூந்தது மற்றும் பிறவாக வழங்கும்,

தொழுகை மொழியில் சொற்கள் வேகமாக வெளிப்படுத்தப் படுவதாலும்  நாவின் சுழற் சி பிறழ்சிகளாலும் திரிபுகள் பல்கி அது தனிமொழியானது.  திரிபுகள் மொழிக்கு வளம் சேர்ப்பனவே.

அர் என்பது அருகு,  அருகில் என்ற சொற்களில் உள்ள் அர் என்ற அடிச்சொல்.  அருகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி. இது வேற்றுமை உருபாகவும் தமிழில் வருவது.  புகு +  அர் > புகர்.  இங்கு அர் என்பது  நீட்சி.  இதனால் புதுப்பொருள் யாதும் ஏற்படாமையின் சாரியை என்னலாம்,  பூத்தல்  (  தோன்றுதல் )  என்ற வினையினின்றும் பூர்தல் என்பதை அர் வேறுபடுத்திற்று என்னலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

வியாழன், 14 மார்ச், 2024

பேயைப் பார்த்த கதை

 


அம்மையார் வனஜா  முன்னிரவில் தங்கி இருந்த இடத்தில் பேயைக் கண்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது பேத்தி உரோசினி எடுத்த படம்.

Madam Wanaja saw a ghost in a room where she stayed for the night. A hospital.

Frightening experience. Others came to see her. They were listening.

Then thaththa told them: In 1961 I was sleeping    in the vicinity of KK Hosp mortuary and a  a fellow worker was also sleeping nearby. Each of us lay on a big lace containing wooden  carton.  After midnight.(2 am) my colleague was forcefully pushed into the drain. I had to drag him out of it. He had bruises and lacerations . He had to be brought to GH A&E.

Roshini commented:

Thatha hope you will feel better with this video of amumma's encounter of a ghost in the hospital hehe

Shamini commented,:

OMGGGG I miss her! She’s so cute the way she talks 😂😍

Commented by APM:

[14/03, 22:02]: They said he was sleeping in the ghosts' path .( referring to the fellow worker pushed into the drain)

[14/03, 22:05]  Don't put your bed in a place the room door opens to . Be inside.. Not directly facing doorway. ( But you won't be allowed to change bed location in hospitals )

Roshini  commented:

So scary!

புதன், 13 மார்ச், 2024

கோலு-தலும் கோருதலும் திரிபு

 இன்று கோருதல் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

கோரிக்கை என்ற சொல் இப்போது வழக்கிலுள்ளது.  

வாங்குதல் என்ற சொல்லை ஆய்ந்த அறிஞர்கள்,   அதை வளைதல் என்ற சொல்லுடன் தொடர்பு படுத்தி,  வளைந்து பெற்றுக்கொண்டதனால் வாங்குதல் என்ற சொல் பொருளை ஏற்றுக்கொண்டபோது வளைந்து ஏற்றதனால் இப்பொருள் உண்டாயிற்று என்று அறிந்துகொண்டனர்.

வாங்குவில் தடக்கை வானவர் மருமான் என்ற தொடரில்  வாங்குவில் என்பது வளைந்த வில் என்று பொருள்தருவதை அறியலாம்.  வாங்கறுவாள் என்பது வளைந்த அறுவாள் என்று பொருள்படும்.  அறுவாள் என்பது அறுக்கும் வாள். அரிவாள் என்பது சிறிதாக அரிந்தெடுக்கும் வாள்.  மறக்கலாகாது.

அதைப் போலவே  கோலுதல் என்பதும் சுற்றிநிற்றல் அல்லது சுற்றிவருதல் என்று பொருள்பட்ட சொல்.

மரத்தில் பரண் கட்டி வாழும் காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக யாரையும் நேராக அங்கு வரவிடுவதில்லை.  கோலிவர நின்று வரவின் அறிகுறிகளைத் தெரிவித்து அழைக்கப்பட்டவுடன் தான்  எதையும் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.  இன்று இம்முறை வேண்டிய மாற்றங்களுடன் கடைபிடிக்கப்படுகிறது.

ரகர லகரத் திரிபின்படி அமைந்த சொற்கள் பல இங்கு ஆராயப் பட்டுத் தரப்பட்டுள்ளன.  படித்து அல்லது வாயித்து ( வாசித்து)  அறிந்துகொள்க.  கோலுதல் என்ற சொல்லே திரிந்து கோருதல் ( ஒன்றை வேண்டுதல்)   என்ற பொருளைப்  பெற்றது.  

இது இங்கு விரித்து எழுதப்பட்டுள்ளது: சொடுக்கி அறிந்து மகிழ்க.

https://sivamaalaa.blogspot.com/2023/08/blog-post_27.html

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



செவ்வாய், 12 மார்ச், 2024

சஞ்சலம் என்ற சொல்.

 சஞ்சலம் என்ற சொல்,  மக்கள் மொழியில்  மனச்சஞ்சலம் என்ற அடைபெற்று வழங்கிவந்தது.  இவ்வாறு பேச்சில் வரும் இச்சொல்லை செவிவழி அறிந்துள்ளோம். இதை வேறு சொற்களால்  விளக்குவதென்றால்  மன அலைவு அல்லது மனத்து அலைவு என்று சொல்லலாம். அலைவு என்பது அலவு என்று கன்னடத்திலும் வழங்குவதே.

இச்சொல்லில் வரும்  சம் என்ற முன்னொட்டு,  தம் என்பதன் திரிபு.  சம் எனற்பாலது சம் என்று வரும் சொற்கள் சிலவற்றை  முன் வெளியிட்ட இடுகைகளில் குறித்துள்ளோம். தனி என்ற சொல் சனி என்று  போந்தது போன்ற நிலையே  இங்கு ஒப்பீடு  ஆகிறது.

அடுத்து ,  சலம்  என்று வரும்சொல்  அலம் என்பதாகும்.  அலம் என்பதன் பொருளைத் தெரியக்காடுவது, அலம்புதல்,  அலசடி, அலப்புதல் ( நிலையற்ற பேச்சு),  அலம்வருகை என்பன பல்வேறு வகை அலைதலைக் குறிக்கும்.   அலம் பின் ஓய்ந்த நிலையையும் குறிக்கும். புயலுக்குப்பின் அமைதி என்பதுபோல்  அலைதல், ஓய்தல், அலைதல் என்பன தொடர்வருகை ஆதல் காண்க. இதை விரைவில் அறிய, அலை என்ற சொல்லிலிருந்து  விகுதியாகிய ஐ என்பதை நீக்கிவிட்டால்,  அல் என்பது மிஞ்சும்,   அல் என்பதற்குப்  பல்பொருள் உளவாயினும்  ஓரிடத்து நில்லாமை,  அங்குமிங்கும் செல்லுதல் என்பதும் ஒரு பொருளாகும், இப்பொருண்மை  அலை என்பதிலும் உளதாகும்.   அல் என்ற  அடி,  சல் என்று திரியும்.

அல் என்பதற்கு அளவிற் குறைதல்,  நிலைபெறுதல் என்ற பொருண்மைகளும் உள்ளன.   இது வேளாண் தொழிலரிடமிருந்து எழுந்த பொருண்மை.  அரிசி, கருவாடு, வற்றல் முதலிய காய்ந்து சிறியவான பின்பே கூடுதலான காலத்திற்கு இருக்கும்.  பின்னர் இவ்வாறு சேமித்த பொருட்கள் இறுதியில் அழிந்து விடுதலின்,  அழிதல் என்ற பொருளும் இவ்வடிக்கு ஏற்பட்டுவிடுகிறது.  அல் என்ற அடிக்கு இப்பொருள்களும்  இவ்வாறே  உணடாயின. இப்பொருண்மையும் மனமானது அலைவில் சிக்கி ஊக்கம் வற்றிவிடக் குறுகிவிடுதலையும் குறிக்க இயல்வதே.

அலம் சலமாகி  இறுதியில் சஞ்சலம் என்ற சொல் பிறந்துவிடுகிறது. அமணர் - சமணர்.  ஆடு( தல்)  > சாடு,  என்பனவும் திரிபுக்கு உதாரணங்களே.

அஃகுதல்,  அல்குதல்,  அற்குதல்,   ---  இவை ஒரே சொல்லமைப்பின் வெவ்வேறு வடிவங்கள்.

காயவைத்துக் காத்த பொருள் ஒருவித நீர்பயின்ற நாற்றமுடையதாகிவிட்டால் அது சலித்துவிட்டது என்று களையப்படும்,  ஆகவே கெடுதல், அழிவு என்பவை அல் , அலம் என்பவற்றின் இயல்பான பொருண்மைகளே.

ஒரு சொல்லுக்கு இத்தகு வெவ்வேறு பொருண்மைகளையும் காரணங்களையும் இவ்விடுகையின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இதன்மூலம் சஞ்சலம் என்பது ஒரு திரிசொல் என்பதும் கண்டுகொள்க.  தம் அலைவு என்ற இருசொற்களே சஞ்சலம் என்பதன் தாய்ச்சொற்கள்.

கொஞ்சி மகிழ்ந்து குழவியோ டுறைவாளேல்

சஞ்சலம்  என்பது சாந்துணையும் மேவாதே!

என்பது எம் கவி.

இஃது தமிழிலக்கியத்திலும் உள்ளுற்ற சொல்தான். மற்றும், மனமேநீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய் என்ற பாகவதர் பாட்டில், சஞ்சலம் என்ற சொல் உள்ளுறையக் காண்கிறோம்

திரிசொற்களைக் குறைத்து இயற்சொற்களை மட்டும்  அல்லது பெரிதும் கொண்டு எழுதினால் தமிழ் உரைநடை சிறக்க உருப்பெறும் என்பது அறிக.  இயன்மொழி என்பதன் பொருள் அதுவே.  ஆனால்  திரிசொற்களும் தமிழின் உள்ளடக்கமே என்பது உணர்க.  தமிழ் இயற் சொற்களைக் கொண்டு ஏற்பட்ட மொழி. திரிசொற்கள் என்பவை பிள்ளைகள் போன்றவை என்பது பொருத்தமான உணருரை ஆகும். பிள்ளைகள் குடும்பத்து உள்ளடக்கம். 

மேலும் படிக்க:

பாகவதர்  சொல்லாக்கம் -  https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_21.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்





திங்கள், 11 மார்ச், 2024

சிவதுர்க்கா ஆலயம் பூசையின் போது ......


பூசை நடைபெறுகிறது.



ஒளிவிளக்குகளின் அழகிய காட்சி.



பூசைக் காட்சி



சிவராத்திரி பூசை நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. கருவறைக்கு வெளியிலிருந்து எடுத்த படம் அருள்மிகு சிவ துர்க்கா ஆலயம் சிங்கப்பூர்.


 கலிவிருத்தம்

முழுமுதற் கடவுள் சிவதெரி சனமே

கெழுமிய பற்றர்தம்   வழுவறு மனமே

எழுகதிர் ஒளிபோல் விளங்கிடும்  தினமே

 இழுகவர் காந்தமே  பெறுபொற் குணமே.


முழுமுதல் -   ஐந்தொழிலும் புரியும் ( இறைவன்.)

கெழுமிய - நிறைவாகிய.

பற்றர் -  பக்தர்

வழுவறு  -  நெறி மாறிடாத மனம் உடைய(வர்கள்).

எழுகதிர் ஒளி -  காலைக் கதிரவனின் ஒளி.

விளங்கிடும் தினமே  -  நாள் தோறும்  விளங்கிடும்

இழுகவர் காந்தம்  -   இழுத்துக் கவர்ந்துகொள்ளும்  காந்தந்தத்தின்

பெறுபொற்குணம் -  பற்றுடையார்,  இவர்கள் பிறரையும் கவர்ந்து பற்றுநெறிப் படுத்துவர்/.

சிவராத்திரி தெரிசனம்

 தெரிசனம் நற்பேறு







சனி, 9 மார்ச், 2024

கூர்மம் (ஆமை ) என்ற சொல்.

 கூர்ம  என்பது  ஆமையைக் குறிக்கும் சொல். இறைவன் உலகையும் அதில் காணப்படும் எல்லாப் பொருட்களையும் உயிர்களையும் படைத்தவர். இறைவன் படைப்பை இயற்றியபின்,  சில உயிரினங்களாகவும் அவ்வப்போது தோன்றினார். நம் நூல்களில் சில உயிரினங்கள் கூறப்பட்டுள. அவர் தோற்றமெடுத்தவற்றுள்  ஆமையும் ஒன்று.


அவம்+ தாரம் என்பது கூட்டுச்சொல். அவம் = அழிவு.  தாரம்  ( தரு+ அம்> ) தருதல், அதாவது மீண்டும் தோற்றம் தருதல்.  மீண்டும் என்பது வருவிக்கப்பட்டமையின், இது காரண இடுகுறிப் பெயர். அவிதல் : அழிதல். கெடுதல். அவி அம் - இதில் வி என்பதில் இகரம் குன்றியது.  நாற்காலி என்பதில் இருக்கை என்பது வருவிக்கப்பட்டது போலுமே இது.  "நான்கு காலதான இருக்கை".


இப்போது கூர்ம என்ற சொல்லைக் காண்போம்.  கூர் என்ற சொல்லும் குறு என்ற சொல்லும் தொடர்புடையவை.  ஒன்று குறுகும் போது,  அதன் தொடக்கம் விரிவாகவே இருக்கும்.   விரிவிடம் தொடங்கிக் குன்றுவதே கூர் என்பதாகும்,  வெவ்வேறு பொருட்களில் ஒன்று மற்றதை நோக்கக் குறுகி நிற்கும். ஆமை என்ற உயிரி,  தன் உடலை ஒரு கூட்டுக்குள் குறுக்கிக் கொள்வது.  அதனால் குறு+ மா ஆனது.  மா என்றால் விலங்கு.   குறுமா என்பதே கூர்மா என்று திரிக்கப்பட்டு,  ஆமையைக் குறித்தது.  கூர்ம என்ற சொல்லமைந்தபின், குறுமா என்ற தமிழ்மூலம் தேவையில்லையாயிற்று.  கூர்ம என்ற சொல்லின் மூலம் மறைவாய் இருப்பது, கூர்மா என்பதை மக்கள் ஏற்க நின்ற தடையுணர்ச்சி ஒழியக் காரணமாயிற்று. கூர்மா எனற்பாலது பூசைமொழிக்கு இனிய சொல்லானது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

வெள்ளி, 8 மார்ச், 2024

கருவி சொல்.

கல் என்பது ஒரு பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் தமிழில் உள்ளது. பெயர்ச்சொல் என்பதில் பொருட்பெயரும் அடங்கும்.  கல்லுதல் என்பதில் கல்   ( அல்லது கல்லு) என்பது  ஏவல்வினை. (command).

மனிதன் ஒரு வேலையைச் செய்வதற்கு மரம், கல், இரும்பு, ஏனைக் கனிமங்கள் எனப் பலவற்றைப் பயன்படுத்திக்கொண்டான். ஓர் இரும்புத் தக்கைமுறுக்கியைக் ( screwdriver ) கொண்டு இரு பலகைகளை இணைக்கும்போது அவ்வாயுதம் இன்றி அதைச் செய்வது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை எனற்பாலதை உணர்கிறோம் .  தக்கைமுறுக்கியை ஒரு கருவி என்கின்றோம். கருவிகள் செயல்முறைகளை எளிதாக்கித் தருகின்றன.

மரத்தாலான கருவியை மட்டுமே பயன்படுத்திவந்த மனிதன்,  கல்லாலான கருவியையும் செய்து பயன் கண்ட போது,  அவன் வாழ்க்கை மேம்படத் தொடங்கியது. மரப்பிசினிலிருந்து ரப்பர் என்னும் தேய்வையைச் செய்யக் கற்றுக்கொண்டபின், ஓசை குன்றிய சக்கரங்களைச் செய்து, இன்னும் முன்னேறிவிட்டான்.  இன்று கருவிச் செய்பொருட்கள் பல்கிவிட்டன.

பெரிதும் கற்கருவிகளை  மனிதன் புழங்கத் தொடங்கிய வரலாற்றுக் காலம் "கற்காலம்" எனப்படுகிறது.  தமிழில் கற்காலத்தில் பயன்பாட்டுக்கு வந்த சொல்லே " கருவி"   என்று இன்று நம்மிடை வழங்குகிறது.

ஒவ்வொரு முறையும் புதிய கருவியை உருவாக்கிக்கொண்ட மனிதன், அவ்வந் நிகழ்வின்போது மனம் மிக மகிழ்ந்துகொண்டான்.  இதனால், கலி என்ற சொல்லுக்கு மகிழ்வு என்ற அடிநிலைப் பொருள் ஏற்பட்டது.  கல் + இ என்றால்  கல்லினை உடைய நிலை" என்று பொருள்.  இலக்கிய முறையில் சொல்லாமல் சுட்டடி வளர்ச்சி முறையில் சொல்வதானால்,  " கல் இங்கு"  என்று சொல்லவேண்டும்.

கலி என்ற சொல், தமிழ் யாப்பு இலக்கணத்தில் துள்ளலோசையைக் குறிக்கிறது.  கல்லினால் கருவிசெய்ய இயல்வதறிந்த மனிதன் துள்ளலில்  ஈடுபட்ட அந்தச் சென்றுவிட்ட காலத்தையே  இது நன்கு நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.  கலி என்பது துள்ளல் என்று தமிழ் அகரவரிசையால் இன்று பொருள்கூற இயலாவிட்டாலும், கலியோசை என்பது சரியாகத் துள்ளலையே புலப்படுத்தும். செழிப்பு,  தழைப்பு முதலியவை மகிழ்வு தருவன.  கல்லினால் துன்பமும் ஏற்படக் காரணங்கள் இருந்தன. மரவேலை மண்வேலைக்காரர்களின் வாழ்க்கை பாதிப்படைந்திருக்க வேண்டும். முன்னேற்றம்  வந்த போது  சில சாரார்க்குத் துன்பம் நேர்வதுண்டு.  கலி எனபது துன்பமும் குறித்தது.

கல்லுக்கு அடுத்து வந்தது இரும்புக் காலம்.

கல்லுதல் என்பது  கற்றறிவு  என்பதற்கு  அடிச்சொல் ஆயிற்று. கல்வி என்ற சொல் இதுநாள் வரை வழங்கிவந்துள்ளது.

யுகம் என்பது உகம் என்பதன் திரிபுதான்..   முன்னேற்றக் காலத்தை மனிதன் உகந்து போற்றினான்.   ஆனை > யானை என்றதுபோல்,  உகமே  யுகமாயிற்று. கலியுகம் என்பது துள்ளிமகிழ்ந்த,  மகிழ்ந்துகொண்டுள்ள யுகமாகும். காலம் என்பது நீட்சி என்பதன் அடிப்படையில் எழுந்த சொல். உகம் அல்லது யுகம் என்பது உகப்பு என்ற அடிப்படையில் எழுந்தது ஆகும்.

இனி, சுருக்கி முடிப்போம்.  கல் என்ற சொல்லிலிருந்தே  கரு என்ற அடிச்சொல் தோன்றியது.  வி என்னும் விகுதி சேர்ந்து ,  கருவி என்ற சொல் அமைந்தது.  கருவி என்ற சொல் தமிழிற் பிறந்தது கற்காலத்தில் என்பதில் ஐயமில்லை.

அதனால்தான் "கல்தோன்றி" என்றான்.

மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2019/04/blog-post_3.html   :  கலியாணம் (கல்யாணம்)

தமிழிற் பலவகையாய் விளக்குதற் கியலும் சொல். 

https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_16.html  கல்யாணம்.

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_82.html   கத்தி   (கல்+தி)

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 2 மார்ச், 2024

வேசி விபசாரி இன்னும் சில



வேசி என்ற சொல்கூட, வேய்ந்துகொண்டவள் என்ற பொருளில்தான் அமைந்தது. யகர சகரப் போலியில், வேயி என்றபாலது வேசி என்றானது.. ஒப்பனைகள் பல செய்து, அரிய சேலை முதலிய துணிகளை அணிந்துகொண்டிருப்பவள் தான் வேசி. அவ்வாறு அணிந்துகொண்டிருந்த பெண்டிரை, தவறாகக் கருதி, விலைமாது என்று எண்ணி, வேசி என்றனர் என்பது தெளிவு. இப்போது அந்தப் பொருளில்தான் வழங்கி வருகிறது.  தமிழில் விபசாரி என்ற சொல்லும் . விரிந்தும் (வி ) பரந்து ம் ( ப) ஒழுகி, ஆடவர்களைச் சார்ந்து வாழ்பவள் என்ற ( சார் + இ ) பொருளில் இச்சொல் வரும்..

சாரி என்ற இறுதியைக் கண்டவுடன் மற்றவை தெளிவாகியிருக்கவேண்டும், விரிதல். பரத்தல் என்னும் கருத்துகள் மீமிசை  , ஒருவகையில் கூறியது கூறலும் ஆகலாம்.  அல்லது பொருள்திட்பத்தின் பொருட்டுத்  தரப்பட்ட அழுத்தம் என்று ஒப்பவும் கூடும்

அதனால்தான் தொல்காப்பிய முனிவர் சொன்னார் : "மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா " என்று; அவர் கவனமாகவே நூற்பா இயற்றினார். சொல் நூலும் மொழிநூலும் அறியாமல் எளிதில் "விளங்காது" என்றுதான் இதற்குப் பொருள். .

வாயி என்பது வாசி எனத் திரிந்தமை போலவே, வேயி என்பதும் வேசி ஆனது.

வாய் என்றால் இடம். இடத்திலிருப்போன் வாயி. அது வாசி ஆயிற்று. ஆகவே, சென்னைவாசி என்றால், சென்னையாகிய இடத்தவன் என்பதுதான். தோன்றும் வாய் என்றால் அது தோற்றுவாய். தோன்றும் இடம். ஆரம்பம். தொடக்கம்.

தோய்த்த மாவில் சுடும் அப்பம் தோய் > தோயை > தோசை. யகர சகரப் போலி.
 கல்லில் அப்பிச் சுடுவது அப்பம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வெள்ளி, 1 மார்ச், 2024

கச்சிதம் - சொல்லமைப்பு

 "காரியத்தைக் கச்சிதமாய் முடித்த கருப்பண்ணன் " என்று சிற்றூரார் சேர்புகழ் மிக்குரைப்பர் ,  இதனைக் கேட்டு இது என்ன சொல் என்று நீங்கள் திகைத்திருக்கமாட்டீர்கள்.  காரணம் எந்தச் சொல்லாயினும் அதைப் பயன்படுத்தி, மனத்தெழும் கருத்தினைக் கேட்போனிடம் கொண்டுசேர்ப்பதே நோக்கங்களில் உங்களுக்கு முதன்மையாய் இருந்திருக்கும் என்பதுதான்.

எந்த வேலையாய் இருந்தாலும்,  ஒன்றைப் பிழை பிசகு தவறு வழுவுதல்  குழப்பம், அரைகுறைப்பாடு  என்று அடுக்கி,  எல்லாம் எல்லாம் இல்லாத வேலைதான் கச்சிதம் என்று கூறலாம் எனினும்,  இந்த விளக்கம் -  என்ன என்ன இல்லையோ அவை அனைத்தும் இல்லாமைதான் கச்சிதம் என்கிறது.  ஆனால் இது சொல்லாய்வோனைத்  மனநிறைவுப் படுத்தவில்லை.

இன்னொரு விளக்கம் மிக்கப் பொருத்தம் என்பதுதான் கச்சிதம் என்பதன் பொருள் என்கின்றது.  பொருத்தமென்றால் என்ன?  கூடவும் இல்லை குறையவும் இல்லை -- ஏற்ற அளவு என்கின்றார்கள்.

எதைச்செய்தாலும் அழகாக இருக்கவேண்டும்.  எடுத்துக்காட்டாக, இந்த இடுகையை எழுதும்போது ஒவ்வொரு வரியும் நீட்டம் ஒத்திருக்குமாறு வரவில்லை.  படிப்போருக்கு அழகு காட்டும்படியாக வரிகள் அளவாக இருந்தால் அது கச்சிதமாக இருக்கிறது என்னலாம் என் கின்றது ஒருவிளக்கம்.  இதையும் ஒத்துக்கொண்டாலும்,  கச்சிதம் என்பது பிடிபடவில்லை.

இச்சொல் யூத மதச்சொல் என்பர். இந்தி மொழியில் ஒரு பெண்ணின் பெயர் என்றும் கூறுவர்.  இணைப்பு என்று  பொருள் என்கின்றனர்.  

இதே பொருளுடைய ஆங்கிலச் சொற்கள்:  accurate, neat,  correct, compact,  perfect.

எந்தப் பாட்டைக் கொடுத்தாலும் பாகவதர் காச்சிதமாகப் பாடிக்கொடுத்துவிடுவார் என்று  ஒரு வாக்கியமும் காணக் கிடைக்கின்றது.

ஆகவே  செய்யும் வேலை வெற்றியாய் முடிவதைக் குறிக்கும் சொல்லாகவே உருவெடுத்தது  இது வாகும். பிழைபடாமல் செய்து முடிப்பதைக் குறிக்கும் சொல். பிறகு பல்வேறு சுற்றுச்சார்புகளுக்கும் இது பயன்விரிந்த சொல்லாகும். செய்வோன் கடமை உணர்வுடன் செய்தாலே இது  நிறைவாகும்.

கடமைச் சித்தம் >   கட + சித்தம் >  கடச்சித்தம் >  (  வல்லொலியாகிய டகரம் நீங்கி)  :   கச்சிதம்   ஆயிற்று.

பல வல்லொலி நீங்கிச் சுருங்கிய சொற்களைப் பழைய இடுகைகளில் தந்துள்ளோம்.  படித்துக் குறிப்பு  எடுத்துக்கொள்ளுங்கள்.   இதில் டகரம் இடைக்குறை.  முன்பு கடமை என்பது தமிழில் கடம்,  கடன் என்றுதான் வழங்கியது.  

கடன் கடமை உணர்த்திய எடுத்துக்காட்டுகள் வருமாறு:

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்          பெரியோர்  ஆயின் பொறுப்பது கடனே.  - காண்க.

அறம் என்பது அறன் என்றும் வரும்.   "  அன்பும் அறனும்.."

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே. இதுவும் கடமையே குறிக்கும்.

கடப்பாறை என்று சொல் அமையுங் காலை கடச்சித்தம் என்று அமைதலில் வியப்பு ஒன்றும் இல்லை.

கடமைச் சித்தம் >  கடச்சித்தம் >  கச்சிதம்  

கடப்பாறை.


பண்பும் பண்ணையாரும்

 பண் என்னும் சொல், தமிழில் கேட்டின்புறுதற்குரிய இனிமையான சொல்.  இச்சொல்லிலிருந்துதான்,  பண்பு என்ற அழகிய  குணம் குறிக்கும் சொல் உண்டாயிற்று.  குணம் என்ற சொல்லும்  ஈராயிரம்  ஆண்டுகட்கு மேலும் பழமையான சொல்.  திருக்குறளிலும் பயன்பட்டு,  "  எண் குணத்தான்",   "குணமென்னும் குன்றேறி  நின்றார்"  என்றெல்லாம் வருகிறது.  குணித்தல் என்பதும் கணித்தல் என்பதும் வினைச்சொற்கள்.  எந்த மொழியில் வினையாக வருகிறதோ,  அந்த மொழிக்கு அஃது உரியது என்பதுதான் சரி என்று மேல்நாட்டு மொழிநூலார் முடிவு செய்துள்ளனர்.  எம்  கருத்துக்கு இது மிக்கப் பொருந்துவது என்று அறிக.

குணி + அம் . இவற்றைப்  புணர்த்தினால், முதலில் குணி என்பதிலுள்ள இகரம் கெடும்,------என்றால் விலக்குறும்.  குண் என்பதே அடிச்சொல்.   இதனோடு அம் ( அமைப்பு) என்பதன் அடியான விகுதியை இணைக்க,  குணம் என்று வந்துவிடும்.  குணியம் என்ற சொல்லைப் பண்டைத் தமிழர் அமைக்கவில்லை என்று தெரிகிறது,   இதன் காரணம் இது எந்த நூலிலும் யாமும் கண்டறிய இயலவில்லை.  சிந்தித்துக் கண்டறியும் ஏதேனும் பொருளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டவேண்டின்  அதற்குக் குணியம் என்று  பெயரிடலாம்.  ஆனால் குண்ணியம் என்று ணகர இரட்டிப்புச் சொல்,  பெருக்கப்படும் எண்ணைக் குறிக்கப் பயன்படுகிறது.  (  multiplicand ).

பண்டைக் காலத்தில் பாணர்களே வீடுவீடாகப் போய்ப் பரிசில் வாங்கிச் சென்றனர்.  பரிசில் கிட்டினால் கூடவருபவனுடன் பகிர்ந்து கொள்வதால்,  பயன் சிறிதாகிவிடும். இதைச் சரிக்கட்ட, போகும் வீடுகளை மிகுத்துக்கொள்ளுதல் வேண்டும். வீட்டுக்கு வருகிறவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது வீட்டிலுள்ளோர் கருதுவதற் குரியதாகிவிடுகிறது.  பரிசில் கொடாத மன்னன்பால் பாவலன் சீற்றம் கொள்கிறபோது,  அவன் தன் பண்புநலனைக் காட்டுகிறான். இதைப் பிறர் அறியின், அச்செயலைக் குணிக்கின்றனர். பாவலன் பண்பு யாது?  வீட்டுக்காரனின் பண்பு யாது?  என்பதெல்லாம் அறிதரு பொருளாகிவிடுகிறது.  பண்பு என்ற சொல்லே இவ்வாறு தோன்றியதுதான்.  

இவ்வாறு, பாடியவர்களுக்குப்  பெருஞ்செல்வம் கிடைத்ததும் உண்டு. நிலம் வழங்கிய வள்ளல்களும் இருந்தனர்.  நன்கு பெருஞ்செல்வம் பெற்றவன், நாளடைவில் பண்ணை அமைத்துக்கொண்டு, நிலையான வாழ்வினனாகியதால்,  அவன் இடம் "பண்ணை"யாயிற்று.   பண்ணன் என்றோ பாணன் என்றோ அறியப்பட்டவன்,  பண்ணையார் என்று பின்னர் அறியப்பட்டான்.  பாணர்கள் அரசர்களாகவும் ஆகினார். பிற்காலத்து, பாணர்களும் போர்களில் ஈடுபட்டு,  தோற்றுவிட்டகாலைத்  தம் அரசை இழந்தனர். பாடிப் பிழைத்தவர்கள் செல்வம் வந்துவிட்டபின் பாடுதலொழித்து அமைதியாக வாழ்ந்த காலத்து வந்த சொல்லே பண்ணை என்பதாகும்.  பண்ணையின் கட்டிய வீடு  பண்ணைவீடு  ஆயிற்று.  பண்ணை ஐய( ர் ) வீடு  என்றும் இது  குறிக்கப்பட்டது.  ரகர ஒற்று வீழ்ந்த கூட்டுச்சொல்,  இது பண்ணைய வீடு ஆனது.(பண்ணை ஐயா வீடு என்று இதை உணர்ந்து கொள்ளலாம்).

பாடுவோர் இருந்த, --------  பாடி  வெளியில் வந்து கேட்போர் அவர்களின் இல்லமாய்க் கருதிய இடமே பண்ணை.  அந்தப்  பொருண்மை கால ஓட்டத்தில் ஒழிந்தது.  பாணர் விளைச்சல் வேலைகளில் ஈடுபட்டதால்,  பொருள்  மாறிற்று.

பாண்பெண்,  சிறந்த குணத்தினள் ஆகி.  பாண்+ சால்+ இ > பாண்சாலி> பாஞ்சாலி  ஆயினாள். தெய்வமாயினாள்.   சாலுதல் நிறைவு.  சால்பு என்ற சொல்லும் அறிக.  தண்+ செய் >  தண்செய்,  தஞ்சை  ஆனதுபோல்.

இன்னும் சொற்களைப் பின் அறிவோம். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சில திருத்தங்கள்: 03032024 0328