செவ்வாய், 19 மார்ச், 2024

இலம்போதரசுந்தர வினாயகன்

 விநாயகன் என்று தான் இத் தெய்வப்பெயரை எழுதுவர்.  ஆனால் இன்னொரு இனிய பொருளையும் யாம் கூறுவதுண்டு:

வினை+ ஆயகன் >  

இந்தச் சொற்புணர்வில் வினை என்ற சொல்லிறுதி  ஐகாரம் கெடும்.   ஆகவே:

வின் + ஆய் + அகன்,

>  வினாயகன்.   ( பொருள்:  வினைகளை ஆய்பவன் ).

அகன் -  அகத்திலிருப்போன்.

வினை என்பதில் ஐ விகுதி விலக்குதல் பாணனாகிய. பாணினி கண்ட குறுக்க முறைதான்.

இலம் -  வறுமை.   ( இலம்பாடு -  வறுமைத்துன்பம்).

போது -  காலம்,

அற என்பது அர என்று திரிந்தது.

இலம்போதர என்பதற்கு இன்னொரு நற்பொருள் பெற்றோம்.


சுந்தரம் என்பது பலவாறு அறியத்தக்கது,

உந்து + அரு + அம் > உந்தரம்>  சுந்தரம்.

அகர வருக்கம்  சகர வருக்கமாகும்.  உகரம் சுகரமாகும்.

ஆகவே உந்து என்பது சுந்து என்று ஆயிற்று.

இச்சொல்லுக்கு எப்போதும் கூறப்படும் பொருள் அழகு என்பது.

சிந்தூரம் என்பதும் சிந்துரம்> சுந்தரம் என்றாகும் என்பர்.

சுவம் என்பது சொந்தம்.  சொ(ந்தம்)  + அம் >  சொவம்>  சுவம்.

சுவம் தரம் >  சுவந்தரம்,  இது இடைக்குறைந்து சுந்தரம் ஆகும்.

சொந்தம் தந்தது,  பிறன்பொருள் அல்லாதது என்று பொருள்.

அம் என்றாலே  அழகு என்பதுதான் பொருள்.  அமைப்பு என்பதன் அடிச்சொல்.

அம் - அழகு

(அம் -  சீனமொழியில் பாட்டி!)  மிகப்பணிவான சொல்.  தைவானுக்குப் போய் ஒரு பாட்டியம்மாவை பார்த்து அம் என்று அழையுங்கள்.  

உலக மொழிகளில் நாம் செல்லவேண்டாம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.

கருத்துகள் இல்லை: