வேசி என்ற சொல்கூட, வேய்ந்துகொண்டவள் என்ற பொருளில்தான் அமைந்தது. யகர சகரப் போலியில், வேயி என்றபாலது வேசி என்றானது.. ஒப்பனைகள் பல செய்து, அரிய சேலை முதலிய துணிகளை அணிந்துகொண்டிருப்பவள் தான் வேசி. அவ்வாறு அணிந்துகொண்டிருந்த பெண்டிரை, தவறாகக் கருதி, விலைமாது என்று எண்ணி, வேசி என்றனர் என்பது தெளிவு. இப்போது அந்தப் பொருளில்தான் வழங்கி வருகிறது. தமிழில் விபசாரி என்ற சொல்லும் . விரிந்தும் (வி ) பரந்து ம் ( ப) ஒழுகி, ஆடவர்களைச் சார்ந்து வாழ்பவள் என்ற ( சார் + இ ) பொருளில் இச்சொல் வரும்..
சாரி என்ற இறுதியைக் கண்டவுடன் மற்றவை தெளிவாகியிருக்கவேண்டும், விரிதல். பரத்தல் என்னும் கருத்துகள் மீமிசை , ஒருவகையில் கூறியது கூறலும் ஆகலாம். அல்லது பொருள்திட்பத்தின் பொருட்டுத் தரப்பட்ட அழுத்தம் என்று ஒப்பவும் கூடும்
அதனால்தான் தொல்காப்பிய முனிவர் சொன்னார் : "மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா " என்று; அவர் கவனமாகவே நூற்பா இயற்றினார். சொல் நூலும் மொழிநூலும் அறியாமல் எளிதில் "விளங்காது" என்றுதான் இதற்குப் பொருள். .
வாயி என்பது வாசி எனத் திரிந்தமை போலவே, வேயி என்பதும் வேசி ஆனது.
வாய் என்றால் இடம். இடத்திலிருப்போன் வாயி. அது வாசி ஆயிற்று. ஆகவே, சென்னைவாசி என்றால், சென்னையாகிய இடத்தவன் என்பதுதான். தோன்றும் வாய் என்றால் அது தோற்றுவாய். தோன்றும் இடம். ஆரம்பம். தொடக்கம்.
தோய்த்த மாவில் சுடும் அப்பம் தோய் > தோயை > தோசை. யகர சகரப் போலி.
கல்லில் அப்பிச் சுடுவது அப்பம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக