ஞாயிறு, 24 மே, 2009

etymology by mala: ref: page9 (extract)

சரி, இப்போது இராசி என்ற சொல்லாக்கத்தில் உள்ள துண்டுச்சொற்களை மாற்றிப்போட்டு விளையாடுங்கள்:

இரு+ஆசு+இ = இராசி > ராசி.
ஆசு+இரு+இ+அர் = ஆசிரியர். அதாவது, மாணவர்களுக்குப் பற்றுக்கோடாயிருப்பவர். மாணவர் பற்றிக்கொள்ளவேண்டியது ஆசிரியரை. இதுவே இதன் சொல் மூலமென்பதைத் தமிழாசிரியர்கள் கூறுவர். இது நான் கண்டுபிடித்ததன்று.

"பற்றுக பற்றற்றார் பற்றினை.." என்றார் வள்ளுவப் பெருந்தகை.

இனி, ஆசு+ஆன் = ஆசான் ஆகும்.

இ, அன், ஆன், ஆர், அர் என்பன என்றும்போல் விகுதிகள்.

ஆசிரியர் > ஆச்சார்ய (சங்கதம்).
Ref: p9

------------------------


பார்த்தல் என்ற சொல்லுக்கு அகரவரிசைகள், கண்ணுறுதல் (seeing) என்ற பொருளை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டதாகத் தெரிகின்ற்து. பேச்சுத் தமிழில் இச்சொல்லின் பொருள் இன்னும் விரிவானதென்பதை நம் நேயர்கள் அறிவர்.

"பார்த்துப் போ'ங்கள்" என்றால் take care as you go or proceed என்று பொருள்படுவது தெளிவு.

"பெண் பார்த்தல்" என்பதற்கு வெறுமனே எந்தப் பெண்ணையும் கண்ணுறுதல் என்று பொருளன்று.

பார்த்தால் பசி தீரும் என்ற வரியில், அது நுகர்வுப்பொருள் தரும்.

"எதையும் பார்த்துத்தான் செய்யமுடியும்" என்கையில், "பார்த்து" = நன்கு ஆய்ந்து என்று பொருள்தரும்.

பல சமயங்களில், பேச்சுத் தமிழ் செய்யுள்வழக்கினும் விரிந்து செல்வது தெளிவு.


பார்வை ஒன்றே போதுமே. பல்லாயிரம் சொல்வேண்டுமா : இதில், பார்வை "நோக்குதல்" என்ற நுண்பொருள் உடையது. "கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின்" (குறள்).்

பார்த்தல் என்பதையும் கண்ணுறுதல் என்பதையும் நிகராக நான் மேலே காட்டினாலும் இவை நுண்பொருள் வேறுபாடுடைய சொற்கள்.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விளக்குங்கள் என்று நீங்கள் கேட்க, நானதற்குப் பார்க்கலாமென்றால் "நேரம் ஏனை வசதிகள் எல்லாம் இருந்தால் உங்கள் கோரிக்கை கவனிக்கப்படும்" என்று பொருள்படும். எவ்வளவு சொற்சிக்கனம் உடையது பேச்சுத்தமிழ் என்பது தெளிவாகியிருக்கவேண்டுமே? Ref: pg9
--------------------------------------------

ஆபத்து:

இதில் ஆ = மாடு. பத்து = பற்று என்பதன் பேச்சு வழக்குத் திரிபு.

பழங்காலத்தில், எதிரிகள் போர்தொடுக்கும்போது, நாட்டின் ஆக்களைக் கவர்ந்து செல்வர். ஆக்களை எதிரிகள் கவர்வது அல்லது பற்றிச்செல்வது "ஆபத்து" - அடுத்து முழுப்போர் வெடிக்கும். இப்படிக் கவர்ந்து செல்லும் மறவர்படை, " கள்ளர்" எனப்பட்டனர். இது பின் ஒரு சார்தி (ஜாதி) யாகிவிட்டது.

நாளடைவில், ஆவும் பற்றுதலும் மறக்கப்பட்டு, ஆபத்து என்ற திரிபு ஒருசொன்னீர்மை பெற்றது.

ற்று என்பது த்து என்று மாறுவது பெருவழக்கு ஆகும். வந்துழிக் காண்க.

பின் ஆபத்து என்ற சொல், பேரிடர் (danger ) என்ற பொதுப்பொருளில் வழங்கிற்று.


அபய, அப்வ என்ற சங்கதச் சொற்கள் வேறு. : "ஆபத்து" வேறு. pg 9

----------------------------------------
செகுத்தல் என்ற சொல்லின் அடியாய்ச் சாதி என்ற சொல் ன்றவில்லை என்று நான் நினைப்பதற்குக் காரணம், தொல்காப்பியர் காலத்தில் இச்சொல் நீர்வாழ் இனங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. "நீர்வாழ் சாதி" என்று வரும் தொல்காப்ப்பியத் தொடரால் இதனை அறியலாம். அதாவது நீர் சார்ந்து வாழ்வன என்று பொருள். நாம் போய்ப் பிரித்துவைக்குமுன்பே அவை அங்ஙனம் வாழத் தொடங்கி வாழ்ந்து வருகின்றன. ஆகவே பிரித்துவைக்கப்பட்டவை என்பதைவிட சார்ந்து வாழ்வன என்பதே பொருந்தும். சேர் > சார்: நீரைச் சேர்ந்தவை, நிலத்தைச் சேர்ந்தவை என்க.

சார்திகளை மனிதன் பிரித்துவைத்தான் அல்லது கடவுள் பிரித்தார் என்று கொள்வதை விட, தொழிலடிப்படையாகத் தோன்றி மெல்லப் பன்னூறு ஆண்டுகள் வளர்ந்து, உள்கட்டமைப்புகள் உருவாகி, பிற்காலத்தில் அதிகாரத்தில் உள்ளோரால் குமுக அமைப்புகளாக ஏற்கப்பட்டன என்று கொள்வதுதான் பொருந்துவது.

மேலும் சார்> சார்தி > சாதி என்பது ஒருபடி மாற்றம். Just one step word corruption or change.

செகு என்ற சொல் செகுதி - சாதி என்று மாறுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட திரிபுகள் தேவைப்படுகின்றன.

மற்றும் சார் என்ற அடிச்சொல் உலகவழக்கில் உள்ள எளிய சொல். மக்கள் பேச்சு வழக்கில் எளிதாய் நிகழ்ந்து மாறதலடையத்தக்கது,

மேலும் சார்தி என்பது சேர்வுக் கருத்தை உள்ளடக்கியது, பிரிவினைப் பொருளில் மிளிர்வது அன்று.

இன்ன பிற காரணங்களால், சார்தி > சாதி என்பதே பொருத்தமானது - உண்மையும் ஆகும்.

இத் திரிபை இங்ஙனம் விளக்கியோர் வேறு அறிஞர் ஆவார். அவர் பெயர் நினைவில் இல்லை.

செகு என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து sex என்ற இந்தோ ஐரோப்பியச் சொல் தோன்றியது என்று முன்னரே முனைவர் அரசேந்திரன் முடிவுசெய்தார். அவரும் சாதி என்பது செகு என்பதிலிருந்து வந்ததெனக் கூறியுள்ளதாக அவர்தம் நூல்களிலிருந்து நான் அறியவில்லை. (எனக்குத் தெரிந்தவரை). இந்த ஆய்விலிருந்து இராம கி மேல் சென்றுள்ளார் என்று தெரிகிறது. pg 9

-----------------------------

விழேடம் > விசேடம் > விஷேஷம்.


இப்போது "விஷேஷம்" என்ற சங்கதச் சொல்லின் மூலத்தினைக் கண்டுபிடிப்போம்.

இதை வி +ஷேஷம் என்று பிரித்து க் காட்டுவதுண்டு.

இதில் வரும் வி என்ற முன்னொட்டு, "விழு" என்ற சொல்லின் சுருக்கம்.

விழுமிய, விழுப்பம், விழுப்புண் என்ற சொற்களை மறந்திருக்கமாட்டீர்கள். விழு என்பது "சிறப்பு" என்று பொருள்படும் பழந்தமிழ் உரிச்சொல்.

விழு > வி.

விஷேஷம் என்றால் சிறப்பாக எடுத்துக்கொள்ளப்படுவது, சிறப்புக்குரியது என்று பொருள்.

விழு +எடு +அம் = விழேடம் > விசேடம் > விஷேஷம்.

எடு என்பது முதனிலை நீண்டு, ஏடம் என்றானது. சுடு+ அன் = சூடன் என்பதுபோல.

தமிழிலிருந்து சங்கதம் சென்ற சொல்லுக்குத் தமிழ் மூலம் பொருள் கூறுவது இழுக்கென்பர்.


இது நிற்க, ஆசிரியர் என்ற சொல்லின் மூலம் "ஆசு" என்பதை உடன்படாது நிற்பார், அஃது ஆதன், அத்தன்் என்ற சொற்களின் திரிபு என்று கூறுவர்.
பண்டையாசிரியரும் அச்சொல் ஆசு என்ற மூலத்திற் பிறந்ததாகவே கூறுவர் ஆதலின், அதுவே சரியென்பது தேற்றம்.

ஆதன், அத்தன் என்பன ஆசிரியர் என்றாவதற்குப் பல மடித் திரிபுகள் காட்டவேண்டும். ஆசு+"இரியர" என்று காட்ட பிரித்துக்காட்டுவதே போதுமானது.

இன்னும் ஆழச் சிந்தித்தால், "ஆ" என்பதே அடிமூலச்சொல். ்ஆஆஅஅஆ

ஆ > ஆதல்; ஆ> ஆகு >ஆகுதல்; ஆ > ஆதி (ஆக்க காலம்). ஆ > ஆய்.>ஆயாள். (ஆக்கியவள்) ஆ > ஆத்தாள்.
ஆ > ஆசு. இதில் சு என்பது விகுதி. ஆ >அ >அப்பு >அப்பன், >அத்தன்; >அச்சன். ஆ>அன்>அன்னை.

இப்படிப் பார்க்கப்போனால், ஆயிரக்கணக்கான சொற்கள் தொடர்புடையவை. சீன மொழி, யப்பானிய மொழிகளில்கூடத் தொடர்பு கிடைக்கும். நாம் அவ்வளவு தொலைவு செல்லவேண்டாம்.

சுட்டடிச்சொல் வளர்ச்சியை தேவனேயப்பாவாணர் ஏறத்தாழ முழுமையாகவே காட்டியுள்ளதால், அதை இங்குக் கூற வேண்டியதில்லை.

சில சொற்கள் சுருங்கிவிடுகின்றன. ஆ > அ > அப்பு> அப்பன் போல. சாவு > சவம். (சாவு+அம்).

சில நீண்டுவிடும்: படு > பாடு; விடு > வீடு.

அறிந்தின்புறுவோம். pg 9

------------------
விழேடம் > விசேடம் > விஷேஷம்.


இப்போது "விஷேஷம்" என்ற சங்கதச் சொல்லின் மூலத்தினைக் கண்டுபிடிப்போம்.

இதை வி +ஷேஷம் என்று பிரித்து க் காட்டுவதுண்டு.

இதில் வரும் வி என்ற முன்னொட்டு, "விழு" என்ற சொல்லின் சுருக்கம்.

விழுமிய, விழுப்பம், விழுப்புண் என்ற சொற்களை மறந்திருக்கமாட்டீர்கள். விழு என்பது "சிறப்பு" என்று பொருள்படும் பழந்தமிழ் உரிச்சொல்.

விழு > வி.

விஷேஷம் என்றால் சிறப்பாக எடுத்துக்கொள்ளப்படுவது, சிறப்புக்குரியது என்று பொருள்.

விழு +எடு +அம் = விழேடம் > விசேடம் > விஷேஷம்.

எடு என்பது முதனிலை நீண்டு, ஏடம் என்றானது. சுடு+ அன் = சூடன் என்பதுபோல.

தமிழிலிருந்து சங்கதம் சென்ற சொல்லுக்குத் தமிழ் மூலம் பொருள் கூறுவது இழுக்கென்பர்.


இது நிற்க, ஆசிரியர் என்ற சொல்லின் மூலம் "ஆசு" என்பதை உடன்படாது நிற்பார், அஃது ஆதன், அத்தன்் என்ற சொற்களின் திரிபு என்று கூறுவர்.
பண்டையாசிரியரும் அச்சொல் ஆசு என்ற மூலத்திற் பிறந்ததாகவே கூறுவர் ஆதலின், அதுவே சரியென்பது தேற்றம்.

ஆதன், அத்தன் என்பன ஆசிரியர் என்றாவதற்குப் பல மடித் திரிபுகள் காட்டவேண்டும். ஆசு+"இரியர" என்று காட்ட பிரித்துக்காட்டுவதே போதுமானது.

இன்னும் ஆழச் சிந்தித்தால், "ஆ" என்பதே அடிமூலச்சொல். ்ஆஆஅஅஆ

ஆ > ஆதல்; ஆ> ஆகு >ஆகுதல்; ஆ > ஆதி (ஆக்க காலம்). ஆ > ஆய்.>ஆயாள். (ஆக்கியவள்) ஆ > ஆத்தாள்.
ஆ > ஆசு. இதில் சு என்பது விகுதி. ஆ >அ >அப்பு >அப்பன், >அத்தன்; >அச்சன். ஆ>அன்>அன்னை.

இப்படிப் பார்க்கப்போனால், ஆயிரக்கணக்கான சொற்கள் தொடர்புடையவை. சீன மொழி, யப்பானிய மொழிகளில்கூடத் தொடர்பு கிடைக்கும். நாம் அவ்வளவு தொலைவு செல்லவேண்டாம்.

சுட்டடிச்சொல் வளர்ச்சியை தேவனேயப்பாவாணர் ஏறத்தாழ முழுமையாகவே காட்டியுள்ளதால், அதை இங்குக் கூற வேண்டியதில்லை.

சில சொற்கள் சுருங்கிவிடுகின்றன. ஆ > அ > அப்பு> அப்பன் போல. சாவு > சவம். (சாவு+அம்).

சில நீண்டுவிடும்: படு > பாடு; விடு > வீடு.

அறிந்தின்புறுவோம்.

--------------------------------- pg 9

அது மட்டுமன்று; நன்செய், புன்செய் என்ற சொற்களே உலகவழக்கில் நஞ்சை, புஞ்சை என்றே வழங்குகின்றன. நஞ்சை புஞ்சை என்றே எழுதுவாரும் அவற்றை நன்செய். புன்செய் என்றே எழுதல் வேண்டுமென்று "திருத்துவாரும்" உளர். நம் கருத்து: செய் என்பது சை என்று திரியும் என்பதை இது நன்கு எடுத்துக்காட்டுகிறதல்லவா!

நிற்க, மலாய் மொழியில் மரக்கறி வகைகளுக்கு " sayur " (sayur-sayuran) அதாவது: சையுர் (சாயுர்) என வழங்குகிறது. தமிழர்கள் "சைவர்" என்பர் - மலேசியாவிலே! சைவர் = மரக்கறி.

சைவரு >" சைவர"் > சாயுர். sayur (M).

நன்செய், புன்செய் ஆகிய "செய்யிலிருந்து" (சையிலிருந்து) வரும் உணவு என்று பொருள். சை+வரு; செய்வரு பொருள். நன்செய் வரு பொருள்; புன்செய் வரு பொருள்.

சைவர் (சைவரு) - (சையுர்) என்பன இச்சொல்லின் வரலாற்றை அறிய உதவக்கூடும்.

தென்கிழக்காசிய மொழி(கள்) பேசுவோருடன் தமிழர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். ஓராயிரம் ஆண்டுகட்கு மேலாகவே.

சையுறு பொருள் ( செய்யுறு பொருள்) எனினும் இழுக்காது. (பொருத்தம்தான்). சையுறு/ சைவரு > sayur (Malay)

செய் என்ற சொல்லின் திரிபாகிய சை (சாய்) துண்டுகள், சைவருடன் / சாயுருடன் தமிழிலிருந்து மலாய் மொழிக்குச் சென்றிருக்கலாம்.

எங்ஙனம் ஆயினும், சைவம் (மதம்) வேறு; சைவம் (உணவு) வேறு. இவை வெவ்வேறு பிறப்புக்களை உடையன என்பது தெளிவு.


மலாய் மொழியில் "செய்" "சை" முதலிய தனிவடிவங்கள் இல்லை.
copyright. Pl acknowledge below before reproducing this elsewhere.


-------------------------------

இதுபற்றி முன் மன்ற மையத்தில் நடந்த உரையாடல்களில், விளக்கப்பட்டுள்ளது -- என்று நினைக்கின்றேன்.

சிவம் > சைவம். ( இ, உ, எ -->)
words of similar pattern:
மிதிலா > மைதிலி,
கேரளா > கைராளி,
புத்த(ர்) > பௌத்த(ம் ),
குமாரி > கௌமார(ம்)
விஷ்ணு > வைஷ்ணவ(ம்)்

என்று வரும் திரிபுகள் சங்கத்தத்தில் பெருவழக்கு. இப்படித் தமிழிலும் உண்டு என்று காட்டுவர் சில ஆய்வாளர்கள். எனினும் தமிழில் குறைவு.
சிவ (<சிவத்தல்) என்ற மூலச்சொல் தமிழில் உண்டு. எனவே சிவம் > சைவம் தமிழ்த்திரிபும் ஆகலாம்.

சிவன் உருக்குவேதக் கடவுள் அல்லன் என்பர். ( see German Slater's research ). உருத்திரன் என்று வேதம் கூறுவது சிவனே என்பார் மறைமலைஅடிகள். ஆனால் சிவன் தமிழர் கடவுள் என்பது என் கருத்து.

QUOTE (mithulan @ Jul 2 2008, 04:48 AM) *
சிவம் என்பதிலிருந்து சைவம் திரிந்தது என்றால் அது சங்கதத் திரிபா இல்லை தமிழ்த் திரிபா?

தமிழிலும் அப்படித் திரியக்கூடும். மேலே காண்க.

QUOTE
உங்களிடம் இன்னொரு சொல்பற்றியும் கேட்கவேண்டும், சிந்துவெளி என்பதில் உள்ள 'சிந்து' என்ற சொல் சிந்து என்ற ஆற்றின் பெயரால் வந்ததா? இல்லை சிந்து மரங்கள் நிறைந்த காடு அங்குள்ளதால் அந்தப் பெயர் தோன்றியதா? இல்லை சிந்து என்ற ஆடையைப் பழங்காலத்தில் அங்கிருந்த மக்கள் நெய்ததால் அந்தப் பெயர் தோன்றியதா?
சிந்து என்பதின் வேர் யாது?


சிந்து என்பது தமிழ் இலக்கணத்திலும் இசையிலும் உள்ள பழைய சொல். சிந்து என்பது நீட்டம் குறைந்த பாடல் வகையையும் குறிக்கும், (எ-டு) காவடிச் சிந்து. சிந்தியல் வெண்பா. சிந்தடி
இது சிறிய வகை நூலால் ஆன துணிவகையையும் குறிக்கும் என்பர் அறிஞர் சீனிவாச ஐயங்கார். இதுவே பின் ஆற்றுக்கும் சமவெளிக்கும் பெயரானது என்பார். அவர் சிந்து தமிழ்ச்சொல் என்பார்.

சில் > சிறு.
சில் > சில.
சில் > சின் > சிந்து. (து விகுதி).
சில் > சின் > சின்ன.

QUOTE
பெரும்பாலான ஈழத்து ஊர்ப்பெயர்களிற்கு தாவரவியல் வேர் உள்ளது. தமிழகத்திலும் அவ்வாறா எனத் தெரியவில்லை.

தமிழ் நாட்டில் அப்படியில்லை.

நேரம் கிடைத்தால் விளக்குவேன் மிது.

--------------------------------pg 9

பசுந்தமிழ் > பைந்தமிழ்.

இச்சொல்லில் அ (ப்+அ) என்பது பை (ப்+ஐ) என மாறிற்று.

திரிபுகள் ஏற்படும்போது:


பொருள் மாறியமையலாம்;
மாறாமலும் இருக்கலாம்.

இதற்கு தமிழில் சான்றுகள் பல.

இதையும் கவனிக்க வேண்டும்:

அத்தை > ஐத்தை (சில கூட்டத்தாரிடம் பேச்சு வழக்கு).

--------------------------- pg 9


பித்தம் > பைத்தியம். இதுவும் தமிழ்த்திரிபுதான்.

ஒப்பு நோக்குக: சிவம் > சைவம்!!

தமிழிலும் இத்தகைய திரிபு உண்டு: ஒப்பியன் மொழிநூல், பக்.217.

--------------------------

பித்து > (பித்து+அம்) > பித்தம்.
பித்து > (பித்து +இயம்) > (பித்தியம்) > பைத்தியம்.

பித்தியம் எனற்பாலது பழங்காலத்திலேயே பேச்சு வழக்கில் பைத்தியம் என்று திரிந்தது எனினும் இழுக்கில்லை. பிற்காலத்தில் இத்திரிபினின்று (அல்லது இதுபோன்ற வேறு திரிபினின்று ) இ>ஐ என்ற திரிபுவிதி உண்டாக்கப்பட்டு, சங்கதமுதலிய மொழிகளில் சொற்கள் பல படைக்கப்பட்டிருத்தல் கூடும்.

இயம் என்ற பின்னொட்டு இ+அம் ஆகிய இரு விகுதிகளின் கூட்டு.

அம் என்ற விகுதி, "அமை" (அமைதல், அமைப்பு) என்ற வினைச்சொல்லின் அடிச்சொல் என்று கூறலாம்.

சொற்கள் பிறந்து வழக்கில் உலவும்போது. அவற்றின் அடிச்சொற்கள், முன்வடிவங்கள் முதலியன சிலவேளைகளில் மறைந்துவிடுகின்றன. இப்படி, பித்தியம் என்பதும் மறைந்துவிட்டது எனக்கோடல் வேண்டும்.

சிவம் என்ற கடவுட்பெயர், ஆகுபெயராய் சிவநெறிக்கும் வழங்கிப் பின் "சைவம்" என்னும் வடிவத்தை அடைந்தது. வடிவம் மாறியபின் அது சிவ நெறியை மட்டுமே குறித்தது.

மரக்கறி உணவைக் குறிக்கும் சைவம் என்ற சொல் வேறு. அது முன் விளக்கப்பட்டது.


------------------------ pg9

அதற்கு வருமுன், ஒரு திரிபுச்சொல்லை உங்களுக்குக் காட்டவேண்டும்.

தஞ்சம் என்ற சொல் தான் அது.

தங்கு > (தஞ்சு) > தஞ்சம்.

இங்கே > இஞ்சே ( இஞ்சை) என்பதையொட்டி.

தங்க இடமின்றி ஓரிடத்தில் சென்று இடம் கேட்டு இறைஞ்சிப்் புகுவதைத்தான் தஞ்சம் புகுதல் என்றனர். உண்மையில் அது தங்கப்் புகுதல் தான். அஞ்சி ஓடிக்கொண்டிருந்தவன் ஓரிடத்திற் சென்று தங்குகிறான், அங்கு பாதுகாப்புடன் இருக்கலாம் என்று கருதி. இப்போது அது அடைக்கலம் புகுதல் என்ற பொருளுடையதாகிறது. இச்சொல் வடசொல் என்றும் பிறழ உணரப்பட்டது.

ஒ.நோ: இங்கே - இஞ்சே (சிலர் பேச்சு வழக்கு)

செய்து - செஞ்சு என்று வருவது வேறொரு வகை.




தொடர்வோம்.









திங்கள், 4 மே, 2009

poems

வெங்காவைப் பற்றி விளைத்தோம் ஒருபாடல்
வெங்கா விரைந்தார் பதிலோடு --- எம்கண்கள்
கண்ட ஒருநொடியில் கற்பனையில் இன்னொன்று
பண்டுபோல் ஊறிடும் பார்!

பணம்

தேடாமல் இருக்கவும் முடியவில்லை
தேடிக் கிடைத்தாலும் போதவில்லை
வாடாத பூவில்லை அதனைப்போல
வற்றாத நீரில்லை அதனைப்போல
தேடியே பெற்றதும் ஓடிப்போக
தேடுவார் முன்போலச் சென்றலைவார்!
மாடியில் வாழ்ந்தாலும் வேண்டும்சின்ன
மண்குடிசை வாழ்வார்க்கும் தேவைதானே!

பணம்