செவ்வாய், 29 செப்டம்பர், 2020

தியானித்தல், தியாகம் இன்னும் சொற்கள் சில

முன் நாட்களில் தியானம் செய்தவர்கள், பெரும்பாலும் ஒரு விளக்கின் முன் அமர்ந்து தியானித்தனர். அது பின்னர் நிலவு ஒளியில் தியானம் செய்தலாக வளர்ச்சி அடைந்தது. இப்போது வெளியில் அமர்ந்து தியானிப்பது என்பது மிகவும் குறைந்துவிட்டது.  கொசுத்தொல்லை, மற்றும் திருடர்கள் தொல்லை, வழிப்போக்கர் தொல்லை என்று பலவிதத்தொல்லைகள் வருதல் கூடுமாதலின்.

இன்னுமே, தீயானியைத்தல் ( அதாவது தீயால் மனவுணர்வுகளை நிலைநிறுத்தி இயைத்தல் ) என்பதே பெரிதும் ஏற்புடைத்தாகிறது.  தீ என்ற சொல்.,  விளக்கு, தீபம், நெய்விளக்கு என்று பலவகைப்படும் ஒளிதாரிகளையும் உள்ளடக்கும்.

தீயானியைத்தல் என்பதில் யை குன்றியதாலும் தீயா என்ற முதல் தியா என்று குறுகியதாலும்  தியானித்தல் ஆனதெனபது உணரற்பாலது. முதனிலை குறுகித் திரிந்து இடைக்குறைந்த சொல்

தியாகம் என்பதும் தீயின் தொடர்பானதுதான்.  ஆகுதல் என்ற சொல் முடிதலையும் குறிக்கும்.  குழம்பு ஆகிவிட்டது என்று சொல்வதை அறிந்திருக்கலாம்.  எனின், குழம்பு தீர்ந்துவிட்டது என்பதே பொருள்.  ஆகுதல், ஆதல் என்பவை தொடக்கம் குறிப்பவை. இங்கு முடிவு குறிக்க வந்தது இடக்கர் அடக்கல். எதுவும் முற்றுப்பெற்று இருந்தாலும், முடிந்தது என்று சொல்லாமல் மாற்றமாகவே சொல்லுதல் யாதிலும் நலமே காணும் உயர்பண்பு ஆகும்.  கெடுதலையும் தொடுதலையாகக் கொள்ளுதல் வேண்டும்.  தொடுதல் - தோண்டுதல், தொடங்குதல் குறிக்கும் சொல்.

எ-டு: 

தொட்டதெல்லாம் பொன்.

தொட்டனைத்தூறும் மணற்கேணி.


தீ + ஆகு + அம் =  தியாகம் ,   இது சா > சவம் என்பதுபோல் முதல் குறுகிற்று.

தீயில் புகுந்து உயிர்விடுதல் ஓர் உயர்வகை ஈகமாகக் கருதப்பட்டது,  முன்னாட்களில்


ஊழ்குதல் என்பதும் தியானித்தலாம்.  ஆயல் என்ற சொல்லும் இதையே

விளக்குவதாகும்.

அறிக மகிழ்க.


தட்டச்சுப் பார்வை பின்.










 https://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_10.html

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பாட்டுக் கலைமேதை பாலசுப்ரமணியம் மறைவு

 பாட்டினால் மனங்கவர் பண்பாளர் அவரில்லை

வீட்டினில் இருப்பதும் பாட்டின்றி வீண்படுமே

கூட்டுவார் குழைவினைச் செவிகளில் நறவெழுகும்

நாட்டினுள் பாலையே பாலசுப்ரர் மறைவாலே. 

சனி, 19 செப்டம்பர், 2020

சரணாகதம்

 சரணாகதம் என்பது   அடைக்கலம் புகுதல், தஞ்சம் அடைதல் என்னும் பொருளில் ஆளப்படும் சொல்.

சரண் + ஆகு + அது + அம் = சரணாகதம்.

சரண்புகுதல்.

இனி, கதம் என்பதைத் தனிச்சொல்லாகக் கொண்டு:

கதம் -  அடைதல்.

சரண் +  கதம் >  சரணாகதம் எனினுமாம்.

சரண் + கதி > சரணாகதி என்பதுபோல்.

இடையில் வருவது  ஆ ; ஆதல் குறிக்கும் சொல். இடையில் ஆகதம்,  ஆகதி என்பவாய் வருதலின்,  இவை வினைத்தொகை.  வலிமிகாது. இவ்வாறும் விளக்கலாம்.

சரண் என்பதன் மூலம் அரண்.

அரண் > சரண்

சரண் என்பது முழுமையாய் " சரண்புகுதல் " என்பதே.

அரண்புகுதல் என்பதும் அது.

நாளடைவில் புகுதல் என்பது விடுபட்டு,  சரண் > சரணம் ஆயிற்று.

இன்னொரு காட்டு:  அமண் - சமண்.

அடு > சடு > சட்டி.   ( + இ).

இந்தப் பாடலில்   சரணாகரம் என்பது  ஆளப்பட்டுள்ளது.

" தாண்டவம் செய் தாமரை,  பூஞ்சரணாகரம்   நம்பும் யானும்

அடிமை அல்லவோ?  --  எனை

ஆண்டருள் ஜெகதம்பா யானுன்

அடிமை அல்லவோ".  (பாபநாசம் சிவன்)

பொருள் :  குளத்தில் ஆடும் தாமரை உன்னைப் பணிகிறது. 

உன்னிடம் அடைக்கலம் புகுகின்றது,  அதுபோல்  யானும் பணிகின்றேன். நான்

உன் அடிமை ஆவேன். (என்னைக் காப்பாற்று ) என்றபடி.

பூவினால் சொல்லப்படும் சரணம் பூஞ்சரணாகரம்


உங்கள் உசாவலுக்கு:

சாம்பிராணி  https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_2261.html

"உழிஞைத் திணை" https://sivamaalaa.blogspot.com/2014/10/blog-post_77.html

பரிகாரம்  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_95.html

அரசன் அரட்டன் https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

அரசனும் அரணும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

சாம்பிராணி முதலிய பொருட்கள் https://sivamaalaa.blogspot.c

Pom/2018/09/blog-post_23.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_31.html

அரணும் சரணும் https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_20.html

( இவற்றுள் தொடபற்றவற்றை புறக்கணித்துவிடுங்கள்.  நன்றி).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிபார்க்கப்படும்.



வியாழன், 17 செப்டம்பர், 2020

குபேரன்

 குபேரன் யார் என்பது நீங்கள் அறிந்ததே. இச்சொல்லை அமைத்த விதம் நாமறிவோம்.

குவை என்ற சொல் குவியலைக் குறிக்கும் சொல்.  வேண்டிய பொருளோ வேண்டாத பொருளோ -  ஓரிடத்தில் குவிந்துவிட்டால் அது குவை. மணற் குவை "ஓங்கு மணற் குவை"  (புறநானூறு  24). பணம், செல்வங்கள் ஓரிடத்துக் குவிந்துவிடுகின்றன.  முற்றத் துறந்த முனிவருக்கு செல்வக்குவியல் தேவையற்றது. உணவுகூட மிகுதியாய் எடுத்துக்கொள்ளமாட்டார்.  மூச்சுப்பயிற்சிகள் செய்து பசி, தாகம் ( நீர்விடாய்) முதலிய அடக்கிக்கொள்வார்.  கிடைப்பன பிறர்க்களித்துவிடுவார்.  தேவர் சொன்ன " என்பும் உரியர் பிறர்க்கு" என்பதை எண்பிப்பவர் அவர்.  செல்வம் தேவை என்பவர், அவற்றைக் குவித்து வைத்துக்கொள்வர்.  இவர்போன்றோருள் " ஈதல் இசைபட வாழ்தல் " என்று இயன்ற மட்டும் ஈந்து வாழ்வாரும் சிலர் உலகில் உளர்.

குவை என்ற சொல் வகர பகரத் திரிபு விதிப்படி,  குபை என்று திரியும்.  ஆனால் குபை என்னும் சொல் கிட்டவில்லை..  மொழியில் மறைந்தொழிந்த சொற்கள் பல. அவற்றுள் இதுவும் ஒன்றாகலாம்.  அல்லது தனித்து இத்திரிபு இலங்கவில்லை என்பதாகவும் இருக்கலாம்.  இது நிற்க.

குவி > குவை > (குபை) > குப்பை ( வேண்டாத குவியல்) என்பது உள்ளது. பகர ஒற்று இரட்டிப்பு : காண்க. இவ்வாறு வடிவங் கொள்வது செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோர்க்கு ஏற்புடைத்தென்று நாம் எண்ணலாம்.

ஏர் என்பது "உழவு ஏரைக்" குறித்தல் மட்டுமின்றிப் பிற பொருளும் உடையதே. அப்பொருள்களில் உயர்ச்சி ஒன்றாகும்.  ஏர்தல் என்ற வினைச்சொல்லும் உள்ளது.  ஏர்தல் - எழுதல். மேலெழுகை.

செல்வக் குவியலால் மேலெழுந்தவன் குவை + ஏர் + அன் =  குவேரன் > குபேரன் ஆவான்.  குபேரன் என்ற திரிசொல் நிலைவழக்கு உற்றபின், குவேரன் என்னும் இடை வடிவம் ஒழிதல் மொழியியல்பே.

அறிக. மகிழ்க


மெய்ப்பு பின் .



 

புதன், 16 செப்டம்பர், 2020

பொம்மலாட்டம்

 இச்சொல்லை அறிவோம்.

பொய்+ மெல் + ஆட்டம் >  பொய்ம்மெல்லாட்டம் > பொம்மலாட்டம்.

உலகைப் பொம்மலாட்டம் என்றே இரு;

வாழ்வைக் குடங்கவிழ் நீர் ஓட்டம் என்றே இரு!

இவை பட்டினத்தடிகள் தந்த பொன்மொழிகள்.

நிலநடுக்கம் முதலிய கடுமையான ஆட்டங்களுக்கு முன் மனிதன் ஆடும்  ஆட்டம்  ஒரு மெல்லாட்டம். 

எல்லா ஆட்டங்களும் உண்டாகும்; பின் ஒழியும்; இனியும் தொடங்கும்; பின் ஒழியும். இவ்வாறே உலகம் சென்றுகொண்டிருப்பது.

முகக்கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடித்து

உடல்நலம் போற்றுவீர்.


குறிப்பு:  பொருமலால் ( பொறாமையால் ) ஆடுதல் -  பொம்மலாட்டம்.பொருமல் > பொம்மல்.  எனலும் ஆம்.  ஆதலின் இத்திரிசொல்  ஓர் இருபிறப்பி. இடனறிந்து பொருள்கொளல்.  அழுதுவிடாமல் விம்முவதும் பொருமல்.  அச்சமும் பொருமல். பல்பொருளொருசொல் 

பொரு > பொம் என்றாகும்.

ஒ.நோ:  பெருமான் -  பெம்மான்.   பெரு> பெம் போன்ற திரிபு.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

திருத்தம் : 17092020 செய்யப்பட்டது.

தயார் ( போருக்குத் தயார் !)

 நாம் இப்போது தயார் என்ற சொல்லை அமைப்பறிந்து கொள்வோம். இச்சொல் தமிழர்  சிற்றூர்களிலும் வழக்கிலுள்ள சொல்லாகும்.  இதற்கு மாற்றாக வழங்கத் தக்க தமிழ்ச்சொல் " அணியம்" என்பதாகும். " நாம்  நூல்நிலையத்துக்குச் செல்ல அணியமாய் உள்ளோம்" என்னும் வாக்கியத்தில், அணியமாய் என்பது தயாராய் என்று பொருள்படும்.

அணியம் என்ற சொல்லில் மட்டுமின்றித் தயார் என்ற சொல்லிலும்கூட அடிப்படையாக நிற்பது அணிமைக் கருத்து ஆகும். அண் என்ற அடிச்சொல் அருகில் இருத்தலைக் குறிக்கும்.  அருகில் இருத்தல் என்பது  இடம், காலம்,  பொருள் உருவம் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுட் படும். காலத்தால் அடுத்தது, பின் இடத்தால் அடுத்தது, உருவத்தால் அடுத்தது ( மந்தியும் மனிதனும் போல ).... என்றிவ்வாறு விரித்துக்கொள்ளலாம்.

குற்றவாளியைக் கொல்வதற்கு அரசன் தீர்மானித்தபின் அதற்கேற்ற காலத்திற்காக அவன் காத்திருப்பானாகில், அதுவே அவனைத் தயங்கி நிற்கும்படி செய்கிறது. (காலத்தால் தயக்கம்).  அரசவையில் வீற்றிருப்பவன் குற்றவாளியைக் கொல்வதற்கு அதற்குரிய களத்திற்குச் செல்லக் காத்திருத்தலும் கூடும்.  அரசவையிலே அவனைக் கொல்வது வழக்கமன்று என்பதொரு காரணமாயும் இருத்தல் கூடும். இஃது இடத்தால் தயங்குதல். அரசன் அணிமைநிலைக்கு வந்துவிட்டான் எனினும், தள்ளிவைத்து நிற்றலும் பின்னர் செயல்படுத்தக் குறித்துவைத்தலும் தயங்குதல் > தய > தய+ ஆர் = தயார் ஆகிறது. ஆர்தல் - நிறைதல்.  இஃது தயக்க நிறைவு.  அது நீங்கிடில் செயல் தொடரும்.

தயங்கு - தய என்னும் சொல்வடிவங்கள்  தங்குதல் என்பதனோடும் தொடர்பு உடையவை.  தூங்குதல் என்பதும் தயங்குதல், காலம் கடத்துதல் என்பவற்றோடு தொடர்புடைய கருத்தே ஆகும். மொழியின் தொடக்க காலத்தில்  த - தூ என்று மிக்கச் சிறிய வடிவங்களாய் இருந்திருக்கவேண்டும். ( சீன மொழியிலும்  (த >) தான் என்பது சற்றுநிற்றல், பொறுத்தல் என்று பொருள் படுகிறது).  இனி இலத்தீன் தர்டரே tardare  என்பதும் ஆங்கிலம் தாரி/( டாரி)  tarry என்பவும் ஒப்பீடு செய்யத்தக்கன.  நில் என்று சொல்ல விழைபவன் "த" என்று அதட்டி நிறுத்துவது இன்றும் காணக்கிடைப்பது ஆகும்.

த ய என்ற அடிச்சொல் த - அ என்ற இரு உள்ளுறுப்புகளை உடையது. இதை வாக்கியப்படுத்தின்  த = நில்;  அ = அங்கே என்னலாம்.   தய+ அங்கு = தயங்குஆகும்.  இதைத் தய + அம் + கு என்றோ த + அ + கு என்றோ பகுத்தும் பொருளுரைத்தல் எளிதே. 

இதை விரித்தல் விழையோம்.  தய+ ஆர் = தயார் ஆனது தெளிவு.

தயார் இது தொடராமை நிலையாதல். தொடரப் பொறுத்தல்


தட்டச்சுப் பிறழ்வுகள் கவனம் பின்.




ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ஓதம் ஊதுதல் ( காற்று, நீர் மிகுதல்).

ஓதம்:

 ஓதம் என்ற சொல் மனிதனின் விரை அளவின் பெரிதாதலைக் குறிக்கும்.இது ஒரு நோய். இதனை ஆங்கிலத்தில் hydrocele  என்று சொல்வர். ஒரு தேய்வைப்பை baloon /   நெகிழிப்பை காற்று ஊதிப் பருத்தலைப் போல் விதைப்பை ( விரை)   ஊதிப்போகும் நோய்.  ஆனால் இதில் நீர் மிகுந்து பருத்துவிடுகிறது என்பர்.  இதை மருத்துவரிடம் அறிக.

ஊது (ஊதுதல் ) என்ற சொல்லினின்று இது வருகிறது,  ஊகாரம் ஓகாரமாய்த் திரியும்.   எனவே ஊது > ஊதம் > ஓதம் ஆயிற்று.  

ஓதமென்ற சொல் அண்டவாதம் என்னும் இந்நோய் குறிப்பதுடன், வேறு அர்த்தங்களையும் உணர்த்தும்.  அவற்றுள் நீர்ப்பெருக்கு என்பதும் ஒன்று.  எனவே இந்த நோய் நீர்பெருக்கினால் விளைந்தது முன்னோர் உணர்ந்திருந்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இவையல்லாமல்  கடல், கடலில் எழும் அலை, ஈரம் முதலிய அர்த்தங்களையும் இச்சொல் தெரிவிக்கும்.

ஊதுதல், ஓதை, அண்டம்:

கடலில் காற்று " ஊது"வதாலும்,  அலைகளும் "ஊது"தலால் உண்டாவதாலும் ஊது > ஓது என்ற திரிபு பொருத்தமானதே.  ஓதை என்ற சொல்லுக்கும் காற்று என்னும் பொருள் உள்ளது.

இங்குக் குறித்த அண்டமென்னும் சொல்,  விரைப்பை உடலை அண்டி அமைந்திருத்தலால்  அண்டு > அண்டம் என்று வருவதாகும்.  அண்டுதலாவது அடுத்து நிற்றல்.   அடு> அண்டு. இடையில் ஒரு மெல்லெழுத்துத் தோன்றி அமைந்த சொல்.  " அண்டம் .....  அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் " என்று தாயுமான அடிகள் பாடலில் வருகிறது.  ( தாயுமானவர், மண்டலம் 1)

 அண்டம் என்னும் சொல்லுக்கு முட்டை என்பது உட்படப் பிற பொருள்களும் உள.

"  அண்டமா முனிவரெல்லாம்

அடங்கினார் பெண்டுக்குள்ளே"

என்பது ஒரு நாட்டுப்பாடல் வரி. இதில் அண்டமென்பது பூமியுடன் வானத்தையும் சேர்க்கும் சொல். நாமறியா நாட்டுப்புறத்துப் பாவலர்கள் எவ்வளவு அழகாகத் தம் கவிதைகளை வடிக்கிறார்கள் கண்டீரோ?  அண்டம் பூமி மட்டுமே குறிப்பதுமுண்டு. இடனறிந்து பொருள்கொளல் அறிவார் கடன். முந்திரிக்கொட்டைக்கு  அண்டி என்ற பெயரும் உளது, அது பழத்துக்கு வெளியில் அதனை அண்டி இருப்பதானால்தான்!.

காற்று, வளி,  வாய்வு (பேச்சில் ), வாயு

 

குருதி  ( (அ)ரத்தம் ),  வாயு (காற்று) முதலியவை உடலை அண்டி நிறுவப்பெற்று, அவ்வுடலையே உடலின் திறன் குறைந்தக்கால் நோயுறுத்துவன.  ஆகையால், கல்லண்டம், குடலண்டம் என்று நம் தமிழ்மருத்துவம் கூறும். வளிமுதலாய் எண்ணிய மூன்றும் மிகினும் குறையினும் நோய்செய்யு மென்றார் நாயனார். பல  வலி இழுப்பு முதலிய ஆக்கி உடலின் குறித்த இடங்களில் தொல்லை தருவதால், மற்றும் மூச்சு முதலியவற்றால் உயிரையும் வயப்படுத்துவதால்,  வயம் > வய > வாயு ஆகும்.  வாய் - இடம் என்றும் பொருள். எவ்விடத்தும் உள்ளிருப்பதால் வாய் > வாயு  எனவும் படும்.  வாய்  இடமெனவே, உ - உள்ளிருப்பது,  வாயு ஆம். உயிர்கள் காற்று உட்கொண்டு வெளிவிடுகின்றன. எங்கிருப்பதும் காற்று. வாய் +உ  ஆகும். இவ்வாறு பலபிறப்பி ஆவது இக்காற்றுச் சொல்.. வாழ்வு வாய்க்கப்பெற்றோம் காற்றினால் ஆதலின் வாய்த்தல் > வாய் > வாயு எனினுமாம்.  வாய்வு என்ற பேச்சுவழக்குச் சொல்லில் இன்றளவும் இச்சொல்லில் பகுதி நிலைத்துள்ளமை காண்க.  வாய்த்தல் > வாய்வு.   வாய்வு காலைக் குத்துகிறது, தோளில் குத்துகிறது என்பர்.

உ ஒ திரிபு

உடனென்ற சொல் (உருபும் ஆம்),  உடு என்பதுடன் அன் விகுதி பெற்றது.  உடனென்பதை வேறு சொற்களால் சொல்வதாயின்,  உடு- கூடவே,  அன் - அங்கு என்று கூறி விளக்கலாம். ஒடு எனபது அப்பொருளதே.  உ - ஒ உறவை அறிந்துகொள்க.  ஒடு > ஒடுங்கு ( வினை). ஒடுங்கி நிற்பது ஒருங்கு செல்லுமாகலின்,  ஒடு > ஒரு.   மடி - மரி  திரிபு கவனிக்க.

ஊங்கு என்ற சொல் மிஞ்சிவருதல், கூடுதல் குறிக்கும்.  "அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை" என்ற சொற்றொடர் அறிக.  ஊங்கு  ( மிகுதல்) - ஓங்குதல் மிகுதலே.   ஊங்கு - ஓங்கு.

உடனே என்பதை ஒடனே என்பது பேச்சில்.

 ஊ - ஓ திரிபு அறிக. 

 

தட்டச்சு மெய்ப்பு  பின்.

சனி, 12 செப்டம்பர், 2020

அருணாசலம் என்பது

 இனி, இன்னொரு சொல்லைக் கண்டு தெளிவோம். இச்சொல் அருணாசலம் என்பதாகும்.

இதைச் சொல்லத் தொடங்குமுன் ஆசலம் என்ற சொல்லைப்பற்றி சில கூறல் நலம்  ஆகும். 

இடச்செலவு நிகழ்த்துவோற்குக் கடினம் தந்து ஆதரவாய் நில்லாதது என்ற பொருளிலேதான் " ஆசலம்"  என்ற சொல் உருப்பெறுகிறது. ஆசு+ அல் + அம். ஆசு எனற்பாலது பற்றுக்கோடாக நிற்பது என்று பொருள்தரும்.  "ஆசிடையிட்ட எதுகை" என்ற யாப்பியற் குறியீட்டில் ஆசு என்ற சொல் நன்றாக வந்துள்ளது.

நாள் என்ற சொல் ஆங்கிலமொழியிற்போல பகல்நேரம் என்ற பொருளும் உடையது ஆகும்.  இச்சொல் " நாளங்காடி" என்ற சொற்றொடரில் வந்துள்ளது,

இமயம் போன்ற மலைப்பகுதிகளில் நாள் அல்லது பகல் நேரம் என்பது மிக்க அருமை உடையது ஆகும். கடுங்குளிர் சற்றுக் குறைவுறும். ஆகவே அருநாள் என்பதன் பொருள் அறிந்துகொள்ள எளிதானதே.  அருநாள் என்பது அருநா என்று குறையும். அருநா + ஆசலம் என்பது  அருணாசலம் ஆகிறது. இதன்பொருள் மிக்கத் தெளிவாகவே உள்ளது.

அருணாசலம் என்பதன் ஏனைப் பொருண்மை முன் விளக்கம் கண்டுள்ளன. அவற்றையும் அறிந்துகொள்க.

உங்கள் மேல் வாசிப்புக்கு: ( உசாத்துணைக்கு)

ஆசலம் என்பது:   https://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.html .

கடத்தற்கு அரியவையும் கடுமையானவையும் https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_2.html

அருணன் அருணாசலம் அருணோதயம்  https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_27.html

 

 குறிப்புகள்.

[ஒருசொல்லை ஒரே பொருளில்தான் கையாள வேண்டுமென்பதில்லை. சொல்லுக்கும் சொற்றொடருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிருக்கலாம். இதை உணர்ந்தோர் பலர் எனினும், யாம் பெரிதும் போற்றுவது வழக்கறிஞர்களைத் தாம். எடுத்துக்காட்டாக, சிங்கை வழக்கறிஞர் திரு டேவிட் மார்ஷல் அவர்கள். Trafficking in drug is not the same as "possession of the drug  for the purpose of trafficking " என்பதை விரித்து வாதிட்டு, மரண தண்டனையிலிருந்து குற்றவாளியைக் காப்பாற்றியவர். மேலும் ejuisdem generis என்ற இலத்தீன் சொற்பொருள் விளக்க நெறியைத் தம் வழக்குரையில் பயன்படுத்தி வெற்றிபெற்றவர். அண்மையில் ஒரு தாளிகைக் கட்டுரையின்மேல் நடந்த விவாதத்தில் line of actual control என்பது தற்போது யார் எவ்விடத்தில் குறித்த காலத்து ஆள்கின்றாரோ  அவ்விடம் (அந்த நிலம்) அவர்வயம்  இருக்கிறது என்று  பொருள் என்பதை எடுத்துச்சொல்ல நேர்ந்தது. இலக்கியத்தில் மட்டுமின்றி வாழ்வின் எப்பகுதியிலும் எந்நிலையிலும் பொருள்விளக்கம் என்பது முன்னிற்கும் ஒரு தேவையாய் உள்ளது.

இதை எதற்காக இங்கு சொல்கிறோம் என்றால், யாம் முன்னொரு முறை சொல்லாமல் விட்ட பொருள், ஆங்கு இல்லை என்பதாகாது என்பதற்கே ஆகும்.

சுருக்கம் கருதியும் சில பொருண்மைகள் விடுபாடு கண்டிருக்கலாம். அது ஏன் விடுபட்டது என்பது யாம் வெளியிடாத ஒன்றே ஆகும்.]


மெய்ப்பு:  பின்னர்




துட்டன் (துஷ்டன்)

 துள் என்பது  ஒரு தமிழ் அடிச்சொல்.

இது பின்னர் துண் என்று திரிந்தது.

துண் என்ற திரிந்த நிலையில் அது சேர்ந்திருப்பு என்ற பொருளுடையதாயிருந்தது. பின் அதே துண் என்ற அடி பிரிவு, துண்டு படுதல் என்ற கருத்தையும் தழுவியது. இதற்கு இன்னோர் உதாரணம் தரலாம் என்று நினைக்கின்றோம், காண்க:

இல்   -  இடம்:    " கண்ணில் விழுந்த கரித்தூள்."   இங்கு இல் என்பது இடப்பொருள் தந்தது.  ( உருபு).

இல் -      இல்லை.  " அஃதொப்ப தில் "   உளதாகிய இடம் குறித்த இல் என்னும் சொல் ( உருபு,  இடைச்சொல் )  இங்கு இலதென்று இன்மைப்பொருள் தந்தமை ஒரு முரண் என்று கருதலாம்.

இல்  -   இல்வாழ்வான் மற்றோருக்கு நல்லாற்றில் நின்ற துணையாவான்.

இது இல் என்று வீடு குறித்தது.  உருபில்போல் இடமென்னும் பொதுப்பொருளில் வாராமல்  குறித்த இடமாகிய இல்லத்தையே சுட்டியது. ஒருவற்கு எல்லா இடனும் வீடாமோ?

உதாரணம் என்பது முன் நிறைவாய்ப் போன்றமைந்தது,  உது -   முன்னிற்பது. ( அது இது உது சுட்டடிச் சொற்கள்).  ஆர் (தல்) -  நிறைவு,  அண்+ அம் - விகுதி (  அணித்தான அமைவுப் பொருள் ). அணம் என்றும் ஒருவிகுதி என்று கொள்ளினும் அமையும்.  எனவே இல் என்பது உதாரணமாய்க் காட்டப்பெற்றது.  எடுத்துக்காட்டு,  காண்மானம் ( காமானம் என்பர் பேச்சில்.) எனவும் சொல்வர்.

இனி,  துட்டன் ( துஷ்டன்) என்ற சொல்லுக்கு வருவோம்.   துள் என்பது அடங்காமை குறிக்கும் அடிச்சொல். வேறு பொருளதுமாகும். " ரொம்பத் துள்ளுகிறான் என்பது வழக்கில் சொல்லப்படுவது. துள்ளுதல் பலவகை. மகிழ்வால் துள்ளுதல் ஒன்று.   அடங்காமல் துள்ளுதல் மற்றொன்று.  வேறு துள்ளுதல்களை வந்துழிக் காண்க. இந்தத் துள் என்ற அடி துடு என்று திரியும். ளகர ஒற்று டுகரமாதல் காண்க..பலவுள. ஒன்று:  பள் > படு > படுகை. இன்னொன்று: நள் > நடு.  நள்ளாறு = நடு ஆறு > நட்டாறு.

துடு >  துடு + கு =  துடுக்கு.  ( கு விகுதி ).

இன்னோர் எடுத்துக்காட்டு:   அடு >  அடுக்கு என்பது.  கு விகுதி.

பிடு > பிடுக்கு.

துடு  + அன் =  துட்டன்.  இங்கு டகரம் சொற்புனைவில் இரட்டித்தது.

துடு என்பது துடி என்று இகரம் இறுதியாகி மற்றொரு சொல்லாம்.கர்வம் (கருவம்), கோபம் என்/றும் பொருள்தரும்.

துடு > துடும்புதல் என்பது கூடுதல் ஆவது குறிக்கும்.

துடு > துடைக்குதல்  அழிவு செய்தல் பொருளதுமாம்.

துள் -  துட்குதல்,   வெருவுதல் என்பதுமாம்.

இவ்வழிச்சென்று துட்டகுணங்கள் அறிந்துகொள்க.  இக்குணங்கள் இவ்வுருவங்களில் படிந்துள்ளன.

இடு அம் இட்டமெனல்போல் துடு அம் துட்டமென இரட்டிப்பு ஆயிற்று,

துட்டம் துஷ்டமானது இட்டம் இஷ்டமானதுபோலுமே.  இட்டமாவது மனத்தை ஒன்றில் இடுவது,  இடு > இட்டம்.

"வடவெழு தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே" ( தொல்).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் திருத்தம்.



 





வியாழன், 10 செப்டம்பர், 2020

அரட்டுதல்: அரசனும் அரட்டனும்

 அரசன் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதை முன்னர் விளக்கியுள்ளேம். அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html

அரட்டுதல் அல்லது கத்திக்கொண்டு கட்டளையிடும் முறையின் மூலமே பட்டாளத்திலும் "ஆட்சி" நடைபெறுகிறது. அணிவகுப்பு முதலியவைகளில் இதனை நீங்கள் காணலாம்.

அரசன் அரண் உடையவன்.  அரணன் ஆன அவனுக்கு அரணன் > ராணா  ( மகாராணா)  என்ற பெயர்களும் வழங்கியுள்ளன.

ஒருவன் அரட்டப்படுவது அச்சத்தை விளைக்கிறது.  அரள் > அரளுதல் என்பது அச்சமுறுதல். அன்புடன் பேசி பல்வேறு சலுகைகளையும் வழங்கி வேலைவாங்குவது என்பதெல்லாம் இக்காலத்து நெறி.   பண்டை நாட்களில் கத்திச் சவுக்காலடித்து அல்லது உதைத்து வேலைவாங்கினர்.

நாளடைவில் இந்த ஒலி எழுப்புதற் கருத்தும் அச்சக்கருத்தும் அரசன் என்ற சொல்லினின்று மறைந்துவிட்டது.   அர் என்ற அடிச்சொல் ஒலி குறிப்பது.

இதையும் வாசித்து அறியுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

அரசனிலும் சற்றுக் குறுகிய அதிகாரமுடைய ஆட்சியாளன் அரட்டன் என்று குறிக்கப்பட்டான். இச்சொல் நேரடியாக அரட்டு என்ற சொல்லினின்றே புனையப்பட்டது தெளிவு.  அரட்டு + அன் = அரட்டன்.   திவாகர நிகண்டு அரட்டனைக் குறுநிலமன்னன் என்று குறிக்கின்றது.

அரட்டிப் பிறரை அடக்கியாள்பவனே ஓரிடத்தை ஆளவும் தகுதி உடையோன் என்று பண்டையர் எண்ணினர் என்பது இச்சொற்கள் மூலம் தெளிவாகிறது.

அறிந்து மகிழ்வீர்.


 

 



புதன், 9 செப்டம்பர், 2020

சேர்வில் தோன்றிய பிரிவுக்கருத்து. துண் - அடிச்சொல்.

 

துண் என்ற அடிச்சொல் சேர்ந்திருத்தல் என்ற கருத்தை மையமாகக் கொண்ட அடிச்சொல் என்பதை முன் இடுகையிலே கண்டோம். இந்த அடிச்சொல்லுக்கு ஒரே ஒரு பொருள்மட்டும்தான் உண்டு என்று எண்ணிவிடலாகாது. வேறு அர்த்தங்களும் உண்டு. இவ்வாறு இலங்கும் பொருள்களில் இன்னொன்றை இங்கு அறிந்துகொள்வோம்.


ஒன்றாய் அல்லது முழுமையாய் இருப்பதே உடையும், துண்டுபடும். இரண்டாய் இருப்பனவும் இரண்டு ஒன்றுகள் - இரண்டு தனிப்பொருள்கள் எனின், ஒவ்வொன்றும் ஒரு முழுமை எனக் கொள்ளவேண்டும். எது முழுமையாய் இருக்கிறதோ அது உடையவும் துண்டுபடவும் செய்யும். துண்டுபடுதற்குக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லாக்கத்தில் எப்போதாவது உள்வரும். பெரும்பாலும் வராமலும் போகும்.


காண ஒன்றாய் இருப்பனவெல்லாம் சேர்ந்திருக்கின்றவை என்று பொருள். அணு என்ற சொல்லை ஆதியிலேயே உடையது தமிழ்மொழி ஆகும். டால்டன் முதலிய மேலை அறிஞர் அணு பற்றிய தெரிவியலை ( theory) அறிந்து கூறுமுன்பே அதைக் கண்டுசொல்லிவிட்டனர் நம்மனோர். தனித்தனி முழுமைகளாய் ஒன்றையொன்று அண்மி ( அண்) நிற்பது அணு. இங்கு உ என்பது விகுதி. உகர விகுதிக்கு இன்னோர் எடுத்துக்காட்டு: வல் > வலு. இன்னொன்று: கொள் > கொளு. இவ்விகுதி வினையிலும் பெயரிலும் வரும். அணு இயற்கையில் தனித்தியங்குவது என்பது விளக்கம் இன்றியே புலப்படுவது ஆகும். மேலும் அணுவைக் காண இயலாது. மிக்கச் சிற்றுருவினவற்றுள் மேலும் சிற்றுருவை அடைய இயலாத ஒன்றுதான் அணு. அணுவையும் பிரிக்கலாம் என்பர் அறிவியலார். ஆனால் அக்காலத்தில் அணுவுடன் தமிழன் நின்றான். இதுவே அக்காலத்துக்குப் பேரறிவு ஆகும். ஆகவே சேர்ந்துள்ளது துண்டுபடும், அது இயற்கை; இதிலிருந்து துண் > துண்டு என்ற சொல் அமைந்தது.


துண் > துண்டு (துண் + து).

துண் > துணி > துணித்தல்.

( வெட்டுப்படுதல் ).

ஒன்றாய் இருப்பது வெட்டுண்டால், வெட்டுண்ட ஒவ்வொன்றும் தனித்தனி இயக்கம் உடையவை ஆகின்றன. பிரிந்தவற்றுள் ஒவ்வொன்றும் உள்ளடக்கத்தில் சேர்ந்து இருக்கின்றன. எனவே, பிரிதல் சேர்ந்திருத்தல் எல்லாம் சொல்லாக்கத்தில் ஒன்றுதான். சேர்வில் பிரிவும் பிரிவில் சேர்வும் ஒன்றே. ஆகவே சொல்லாக்கத்திற்கு ஒரே அடியைப் புழங்கியது பொருத்தமே.


பலர் ஒன்றுபட்டு இயங்கும்போது ஒருவன் துண்டுபட்டு நின்றுகொண்டிருப்பான். இவனைப் பெரும்பான்மையினர் நம்பாமையினாலும் அவன்றன் பின்செயல்பாடுகளாலும், அவனைக் கபடு உடையவன் என்று நினைத்தனர். அதனால் அவன் துண்டகன் எனப்பட்டான்.


துண்டு + அகம் + அன் = துண்டகன்;


அகத்துள் துண்டுபட்டு நிற்போன் எனினும் ,


துண்டு + அகல் > துண்டகல் > துண்டகன்


துண்டாய் அகன்று நிற்போன் எனினும்,( ல்-ன்)


துண்டு + (ங்)கு + அன் = துண்டகன்


ங் - இடைக்குறை எனினும்,

எவ்வாறு விளக்கினும் செய்துகொள்க.


விளக்கம் ஏற்பச் செயல். ஒரு பூனையைப் பலவாறு தோலுரிக்கலாம் என்பது ஆங்கிலப்பழமொழி. கபடு சூது வஞ்சகம் நெஞ்சகத்துடையான் துண்டகன். அதுவே பொருள்.


இனித் துண்டன் என்று சொல் நிறுவுற்று, அது கொலைஞனைக் குறிக்கிறது.


துண்டு > துண்டித்தல்.


இது இகர வினையாக்க விகுதி பெற்று, துண்டுபடுதலைக் குறிக்கிறது.


மூங்கில் பல இணைப்புகள் உடையதுபோல் உள்ளபடியால் "துண்டில்" என்பது மூங்கிலுக்கும் பெயராயிற்று.


திடுக்கிட்டவன் மூச்சு விடுகையில் மூச்சு விடுதல் பல துண்டுபட்டதுபோல் இழுப்புடையதாவதால் துண் என்ற அடியிலிருந்தே "துண்ணிடுதல் " என்ற சொல்லும் அமைந்தது.


தன் தந்தை கொலையுண்டதறிந்த அவன், தான் ஆடித் தன் தசையாடித் துண்ணிட்டான்


என்று வாக்கியம் செய்யலாம்,.


இனித் துண்டு என்ற சொல் முண்டு என்றும் திரியும். முண்டினைத் தலையிலணிய, முண்டு + ஆசு = முண்டாசு ஆகும். ஆசு என்ற சொல் பற்றிக்கொள்வு குறித்தது. தலைப்பற்றுத் துணி எனலாம். ஆதல் வினை. ஆசு என்பதில் ஆ -வினையடி. சு - விகுதி.


உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமிட்டு

மகிழ்ந்திருங்கள்.


அறிக. மகிழ்க.

 

குறிப்பு:

பிரியம் என்ற பற்றுதல் குறிக்கும் சொல் ,"பிரியோம்" என்ற  எதிர்மறை வழக்கினின்று தோன்றியதுஇவண் கூறிய வகையுட் படுமெனக் காண்கபிரியா என்ற பெண்பெயர் பிரியாள் என்பதன் கடைக்குறை. ( பிரியமாட்டாள் ஆதலின் "பிரியம்" உடையாள் ).


அச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.


துண் - அடிச்சொல்: சேர்ந்திருத்தல் கருத்து,

 துள் என்பது  ஒரு தமிழ் அடிச்சொல். இது பின்னர் துண் என்று திரிந்தது. துண் என்ற திரிந்த நிலையில் அது சேர்ந்திருப்பு என்ற பொருளுடையதாயிருந்தது. துண் - துணை. துண் - துணங்கல் ( கூத்து: சேர்ந்து நடித்தல். ஆடுதல்) துண் - துணங்கை ( கூத்து, திருவிழா) துண் - துணர் ( பூங்கொத்து) துண் - துணைத்தல். ( பிணைத்தல்) துண் -துணைமை ( ஆதரவு) துண் -துணையல் - பூமாலை ( பூக்கள் சேர்ந்திருத்தல்) துண் -துணைவன் - கணவன். துள் துண் : வேறு பொருள் உடைய சொற்கள் பின்பு அறிவோம்.

திங்கள், 7 செப்டம்பர், 2020

ஆக்கிரமிப்பு - கிரமித்தல் முதலிய

 இன்று ஆக்கிரமிப்பு என்பதை அறிவோம் - சுருக்கமாக.

கிரமித்தல் என்பது ஒர் பிறழ்பிரிப்புச் சொல் என்பதை யாம்

முன்னர் வெளியிட்டுள்ளேம்.

இதனைப் பழைய இடுகைகளிற் காண்க.

ஆக்கு + இரு + அம் + இ + பு =  ஆக்கிரமிப்பு ஆகும்.

தமக்கு ஆக்கம் நேருமாறு ஓரிடத்தில் இருந்துகொண்டு

நிலைமையை அமைத்துக்கொளுதலே ஆக்கிரமிப்பு.

ஆக்கு  இரு :  ஆக்கம் இருக்குமாறு

அம் -  அமைந்து

இ - இது வினையாக்க விகுதி. 

உது -  முன்னது;  + இ ( வினையாக்க விகுதி).

உது + இ = உதி > உதித்தல். முன் தோன்றுதல். இஃது

எடுத்துக்காட்டு.

இதில் உள்ளது எளிமையான கருத்து.

வலிந்துகவர்வு என்றும் இதைக் கூறலாம். வலிமை

காட்டுதற்கு நிலம்/பொருள் இவற்றுக்கு உரியோன் 

இடத்தில் இல்லாதவிடத்தும் ஆக்கிரமிப்பு

நிகழலாம். உரியோன் பின்பு வந்து அறியினும்

வலிந்துபற்றுதலின் பாற் படுவதே.


மெய்ப்பு பின்பு



சனி, 5 செப்டம்பர், 2020

ஆரோகணம் ( இசைத்துறைச் சொல்)

ஆரோகணம் என்ற இசைத்துறைச் சொல்லை இன்று சுருக்கமாக ஆய்ந்துகொள்வோம்.

[மிக்க நீண்ட எழுத்துப் படைப்புகளை இந்த முடிநுண்மி நோய்க்காலத்தில் வாசிப்பது யாருக்கும் சற்று, துன்பம் தருவதாக அமைந்துவிடும். மனிதருக்குப் பல கவலைகள். அவற்றை யெல்லாம் ஒரேயடியாக மாற்றி மேல்வருதல் யார்க்கும் எளிதன்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகத் தீர்த்துக்கொள்ளலாம். முடியக் கூடிய  முயற்சிகளை நாம் மேற்கொள்ளுதல் தவறன்று. காலம் கனிந்துவருங்கால் சிரம்ம தரும் தடைகளையும் நாம் நீக்கிக்கொள்ளலாம். இதுவும் ஒரு நல்ல வழியாகும்.

உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா

என்றார் நம் ஒளவைப் பாட்டி. ]

ஆர்தல் என்றால் நிறைதல், நிறைவு என்றும் பொருள்,

பொருந்துதல் என்பதும் பொருளாகும்.

பிற அர்த்தங்களும் உள்ளன. அருத்தம் - அர்த்தம் என்பது சொல்லுக்கு ஊட்டப்பெறும் பொருள். அருத்துதல் எனில் ஊட்டுதல், பிறவினைச் சொல். அர்

என்பது ஒலி என்றும் பொருள்படும். அர்த்தம் என்பது

ஒலி எழுப்புதலால் அறியப்படும் பொருள் என்றும்

விளக்கலாம். அரற்றுதல் ( அர் அடிச்சொல்) - ஒலி

செய்தல். அர் > அரவம் என்பது ஒலி. அரக்கல் - ஒலி எழுமாறு தேய்த்தல், பின் அது தேய்த்தல் என்று

பொருள் குறுகியது. அரட்டுதல் - ஒலி எழுப்பிப் பயமுறுத்தல். அராகம் என்பதும் ஒலி குறித்ததே. கலிப்பாவின் உறுப்புகளில் ஒன்று.


அர் - அரவம் - ஆரவம் இவை ஒலியே. இங்கு

அர் எனற்பாலது ஆர் என்று திரிந்ததும் அறிக. ஆரவாரம் என்பது ஆர் இருமுறை வந்த சொல்.

ஆர் + ஆர் + அம் > ஆர ஆர அம் > ஆரவாரம். இதில் வகரம் உடம்படுமெய். இது ஒலிக்கிளர்ச்சி குறிக்கும் சொல்.இடை இடை வந்த இரு அகரங்களும் அங்கு என்று சுட்டாக வந்ததுடன் உடம்படுத்தும் வேலையையும் செய்து சொல்லாக்கத்துக்கு உதவியது.


ஆரோகணம் என்ற சொல்லில் ஆர் என்பது ஒலியையும் குறிக்க, நிறைவு பொருத்தம் என்பவும் குறித்தது. ஓ என்பது ஓங்குதல் எழுதல் என்பது குறித்தது. ஓங்கு என்பதில் ஓ என்பது பகுதி. கு என்பது வினையாக்க விகுதி. +கு = ஓங்கு ஆனது. கணம் என்பது இடம். கண் = இடம். இதன் கண், அதன் கண் என்ற வழக்குகள் அறிக. மனத்துக்கண் என்றால் மனத்தில். மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்ற தொடர் நோக்குக. ஓ என்பது ஓசையும் ஆகும்.

ஆரோகணம் என்றால் பொருந்துமாறும் நிறைவாகும் படியும் உரிய இடத்து ஓசை எழுதல் என்று முடிக்க.

ஆர் = ஓசை; நிறைவு.

= ஓசை, ஓங்குதல் (மேலெழல்).

கண் - இடம்.

அம் - அமைதல் குறிக்கும் விகுதி.


இவ்வாறு சொல்லில் உள்ளுறுப்புகளைப் பொருத்தி

அமைத்த நம் முன்னோர் தீரபுத்தி உடையோர் ஆவர்.

தீரம் என்பது தீர்த்து நிறுத்தும் ஆற்றல். புத்தி என்பது

புதிய சிந்தனையில் உண்டான அறிவு ஆகும். புது + = புத்தி,

 

குறிப்பு:


அறுத்தம் > அர்த்தம் - சொற்பொருளை வரையறுத்தல்

எனினும் ஆகும். எவ்வாறு நோக்கினும் இச்சொல்

தமிழே ஆம்.


 

 

 

 

 

Edits paragraphing etc lost in this post. This will

be redone later.  Proof reading will be done later.

 

 


செவ்வாய், 1 செப்டம்பர், 2020

படித்தல், வாசித்தல், படி - பஜி வினைகள்

 படித்தல் என்ற சொல், இக்காலத்தில் இராகம் 

ஏதுமில்லாமல் வாசிப்பதையே குறிக்கிறது.  ஆனால்

 பதினெட்டு - பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்

 வாழ்ந்த மக்களுக்கு இது இருபொருள் தரும்

சொல்லாய் இருந்தது என்பதை நாம் மறந்துவிட

லாகாது. எந்த மொழியிலும் ஒரு சொல்லுக்கு 

ஒரு பொருளே இருந்தது என்று நாம் நம்புவோ

மானால், நமக்கு மொழியறிவு குறைவென்று நாமே 

முடிவுகட்டிக்கொள்ளவேண்டியதுதான். ஒரு 

காலத்தில் ஒரு பொருளிருந்திருக்கலாம்; 

 இன்னொரு காலத்தில் இன்னொரு பொருள் 

இருந்திருக்கலாம்;  இருபொருளும் ஒப்ப 

வழங்கினாலும் அவற்றுள் ஒன்று முன்னணி 

பெற்றுமிருந்திருக்கக் கூடும்.

எனவே சொல்லும் பொருளும் அவ்வளவு 

எளிதானவை என்று கூறிவிடமுடியாது.


எழுத்துக்களின்மேல் கண் அல்லது கண்ணின்

பார்வை படுகின்றது.  தொடர்ந்து பார்வை பட்டு 

நாம் வாசிக்கவே பார்வையானது படிகின்றது;  

ஆக, இவ்வாறு படிதலையே படிக்கின்றோம் என்று 

நாம் சொல்கின்றோம் என்பதை நாம் உணர

வேண்டும்.  ஆகவே  படுதல் > படிதல் > படித்தல்

என்பவற்றை நாம் இதன்மூலம் நல்லபடியாக 

உணர்ந்து கொள்கின்றோம்.


படிக்கும்போது வெளியில் ஒலி எழுப்பாமல்

 படிப்பது ஒருவகை; இதை மனத்துக்குள்ளே 

வாசித்தல் என்பர். இன்னொரு வகையான 

படித்தலில் ஒலிசெய்து பிறர்கேட்கும் வண்ணம் 

படிப்போம். இதைத்தான் முன்னாட்களில் 

வாசித்தல் என்று சொன்னார்கள். வாசித்தலாவது

 வாயிலிருந்து ஒலியெழப் படித்தல்.

வாய் என்பதிலிருந்து வாயித்தனர்: 

வாய் > வாயி> வாயித்தல்.  இது பின் திரிந்து

 வாசித்தல் ஆனது. ( இது  யகர சகரத் திரிபு வகை) 

 வாசித்தான் என்று தமிழன் சொல்வதை 

வாயிச்சு என்று மலையாளி சொல்வதிலிருந்து 

இதை அறியலாம். எனவே வாசித்தலில் வாயின்

பங்கு உள்ளது. இந்தச் சொல் அமைந்த காலத்தில்

 இந்த நுண்பொருள் நல்லபடி வெளிப்பட்டுச் 

சொல் வழங்கிற்று என்றாலும் நாளடைவில் 

அதிலும் மனத்துக்குள் வாசித்துக்கொள்ளுதல் 

என்ற பிரிவு எழுந்தது.  இவ்வாறு பொருள் விரி

கொள்ளுதல் மொழிக்குச் சொற்களில்  இயல்பே  ஆகும்.


சோல்ஜர் என்ற ஆங்கிலச்சொல் எழுத்தில் 

சோல்டர் என்றுதான் எழுதப்பெறும்.  எழுத்தின்படி

வாசித்தல் என்பது ஆங்கில மொழியில் இல்லை.

(குறைவு) . சிரி என்று பொருள்படும் லாஃப் என்ற 

சொல்லை எழுத்தின்படி எப்படி வாசிப்பது?  

முடியாது.  ஆங்கிலமொழிக்கு வேறுமொழியி

லிருந்து வந்த சொல்லை எழுத்துடன் கடன்பெற்று

வேற்றுமொழியில் உச்சரிப்பதுபோலவே 

ஆங்கிலத்திலும் ஒலிக்குமுறை(யும்) இருப்பதால், 

சோல்டியர் என்று எழுதிச் சோல்ஜர் என்றுதான் 

வாசிக்கவேண்டும்.


இதிலிருந்து  ட-வுக்கும் ஜ-வுக்கும் உள்ள ஓர்

ஒலியுறவை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஹாப்டாய் என்று எழுதிக்கொண்டு ஹாப்ஜாய்

என்று வாசிப்பதையும் காண்க.  வேறு எடுத்துக்

காட்டுகள் பல இருந்தாலும் இங்குக் கூறியன 

உணர்ந்தாலே படி என்ற தமிழ்ச்சொல்

பஜி என்று அயலில் வருமாறு நீங்கள் உணர

நேரமாகாது. ஆமாறு உணர்ந்து,   " முருகனைப்

படிமனமே,  திருமால் மருகனைப் படிமனமே " 

என்று பாடி,  அதை அப்படியே "முருகனைப் பஜி 

மனமே, திருமால் மருகனைப் பஜி மனமே" என்று

மாற்றிப் பாடி ஆனந்தம் அடையுங்கள்.

படிதான் பஜியாயிற்று.  பஜி + அன் + ஐ = பஜனை.

படி அன் > படன் > பஜன்,  ட-ஜ திரிபு பன்மொழிக்

காட்சியுடையது.


இதைச் சில ஆண்டுகளின் முன்னமே 

சொல்லிய -எழுதிய நினைவு உண்டெனினும், 

யாம் தேடிப்பார்க்க வில்லை. இங்கு பழைய 

இடுகைகளில் நீங்கள் தேடிப் பார்த்தால் 

ஒருவேளை கிட்டுதல் கூடும்.


இரு நூற்றாண்டுகளின் முன் இருந்த தமிழர், 

பாட்டுப் படி என்றும் சொல்வர். இன்று பாட்டுப்

பாடு என்று சொல்கிறோம். படி என்ற வினையின் 

பொருள் சற்று மாறிவரல் உணரலாம். " உன்னை

 நினைச்சேன், பாட்டுப் படிச்சேன்" என்றுவரும் 

ஒரு பாடல்,  முன்வழக்கினை கொணர்ந்து மீட்டு

 மூட்டுகின்றது. ஆனால் படி , பாடு

என்பன ஒரு மூலத்தின் விளைவுகள்தாம். 

 பழங்காலத்தினர் உரைநடையையும் " இராகம்

போட்டுப் பாடியவர்கள். உரைநடை ஏதேனும் 

பாடலுக்குப் பொருள்கூறுகையில் மட்டுமே 

கைக்கொள்ளப்பட்டது. மற்றபடி தமிழென்றால்

எங்கும் எதிலும் பாட்டுத்தான்.



    பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ
            பத்திநெறி யில்லைவேத
    பாராய ணப்பனுவல் மூவர்செய் பனுவலது
            பகரவோ இசையுமில்லை
    தாயுமான  அடிகள்.
அறிக மகிழ்க


மெய்ப்பு  - பின்பு