இச்சொல்லை அறிவோம்.
பொய்+ மெல் + ஆட்டம் > பொய்ம்மெல்லாட்டம் > பொம்மலாட்டம்.
உலகைப் பொம்மலாட்டம் என்றே இரு;
வாழ்வைக் குடங்கவிழ் நீர் ஓட்டம் என்றே இரு!
இவை பட்டினத்தடிகள் தந்த பொன்மொழிகள்.
நிலநடுக்கம் முதலிய கடுமையான ஆட்டங்களுக்கு முன் மனிதன் ஆடும் ஆட்டம் ஒரு மெல்லாட்டம்.
எல்லா ஆட்டங்களும் உண்டாகும்; பின் ஒழியும்; இனியும் தொடங்கும்; பின் ஒழியும். இவ்வாறே உலகம் சென்றுகொண்டிருப்பது.
முகக்கவசம் அணிந்து
இடைத்தொலைவு கடைப்பிடித்து
உடல்நலம் போற்றுவீர்.
குறிப்பு: பொருமலால் ( பொறாமையால் ) ஆடுதல் - பொம்மலாட்டம்.பொருமல் > பொம்மல். எனலும் ஆம். ஆதலின் இத்திரிசொல் ஓர் இருபிறப்பி. இடனறிந்து பொருள்கொளல். அழுதுவிடாமல் விம்முவதும் பொருமல். அச்சமும் பொருமல். பல்பொருளொருசொல்
பொரு > பொம் என்றாகும்.
ஒ.நோ: பெருமான் - பெம்மான். பெரு> பெம் போன்ற திரிபு.
தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.
திருத்தம் : 17092020 செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக