ஞாபகம் என்ற சொல் எங்ஙனம் பிறந்தது என்பதை ஆய்வோம்.
Sivamala
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 17 அக்டோபர், 2026
ஞாபகம்
வியாழன், 15 அக்டோபர், 2026
சுடரிற் பிறந்த மணியன்
சுப்பையன் என்ற சொல் அமைந்தது எப்படி என்பது கண்டோம்.
அறிவுச் சுடராய் இருப்பவர் சிவபெருமான். முழுமுதற் கடவுள். இந்த அறிவுச் சுடரிற் பிறந்த ஞானக் கொழுந்து முருகப்பெருமான். அவர் ஒரு அருள்திருவாகுவார்.
இவர் சுடரிற் பிறந்தவர் என்று பண்டைத் தமிழர் எண்ணி வணங்கியதாலே, இவரைச் ''சுடர்ப் பிறமணியன்'' என்று பண்டைத் தமிழர் வணங்கினர். இந்தப் பெயரிற் நீட்டமிருந்ததை , சுப்பிரமணியன் என்று எளிதாக்கினர். இது எளிதாக்கமே யன்றி, இதில் ஏதும் சூழ்ச்சி இல்லை. பிற மணியன் என்பது முக்காலமும் தழுவும், பிறந்த அல்லது தோன்றிய மண்ணியன் என்பதாகும்.
பிறந்த என்பது: பிறத்தல் என்ற சொல், ஒன்றின் பிறவாகிய ஆற்றலமைப்பு என்பதாகும். பிறத்தல் என்ற சொல், இன்னொன்று (பிற) என்று பொருள்தாகும். இன்னொரு தெய்வமாகுவது.
இதற்கு வேறு பொருண்மைகளும் கூறப்படுவதுண்டு. இச்சொல் பல்பிறப்பி ஆகும். பலவழிகளில் உரைபெறுவதாம்.
சுப்பையன் என்பதன் பொருளும் முன் எழுதப்பட்டுள்ளது.
https://www.blogger.com/blog/April 30, 2026
சு என்று மாற்றினும், பிற என்பதைப் ப்ர எனினும், மண்+ யன் எனினும், வேறுபடுவது ஒன்றுமில்லை. பொருண்மையும் தொடர்புள்ள முறையில் மாற்றிக்கொள்ளலாம். மொழிகட்குப் பெயர்களெல்லாம் மனிதன் வைத்தவை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை
செவ்வாய், 13 அக்டோபர், 2026
வயிற்றியம் - வைத்தியம்.
மருத்துவம் என்பது மருந்து என்ற சொல்லின் அடிப்படையில் எழும் சொல். மருந்து என்பது உண்ணும் உணவின் வேறுபட்டது ஆகும். மருந்து என்பதன் சொற்பொருள் யாதென்றால், எப்போதும் உண்ணும் உணவுக்குப் பக்கத்தில் வருவதாக அமைந்து உண்ணப்படுவது ஆகும். அதாவது, நல்ல தமிழில் சொல்ல வேண்டுமென்றால், மருங்கில் - பக்கத்தில் வருவதாக, அமைந்தது. மூன்று வேளையோ, இரண்டு வேளையோ தினமும் உண்ணும் உணவாக வருவது அன்று என்று பொருள். ஆகவே, நோய்வாய்ப் பட்டவன், அதிலிருந்து விடுபடும் பொருட்டு உண்ணப்படுவது ஆகிறது. இங்கு நாம் மருத்துவம் என்ற சொல்லின் உட்பொருளைக் கண்டறிந்தோம்.
அறிஞர் க.ப. சந்தோஷம் என்னும் மகிழ்நன் எழுதிய சொல்லாய்வுகளைத் தேடிக் கண்டு அறிந்துகொள்ளுங்கள். இவரும் சொல்லாய்வுகள் பல செய்துள்ளார்.
வைத்தியம் என்ற சொல்லை யாம் ஆய்ந்து சொல்லியுள்ளோம். இது வயிற்று நோய்களைக் குறிக்கும் மருத்துவ முறையாக இருந்து, பொதுப்பொருளில் பின்னர் வழங்கி இருக்கலாம். பழங்காலத்தில் தேவரடியாள் என்று வழங்கிய சொல், பின்னாளில் தவறாக உணரப்பட்டதுபோல, சொற்களின் பொருள் இழிந்தும் நம்மை வந்து அடைந்திருக்கலாம். உயர்ந்தும் போயிருக்கலாம். ஆகவே, இது வயிற்றியம் - வைத்தியம் என்று வந்திருக்கலாம். மனிதன் எதைத் தின்பது என்று அறியாமல் திண்டாடிய தொல்பழங்காலத்தில், வயிற்றையே முதன்மையாக ஒருகாலத்தில் கொண்டு நோய்களைத் தீர்த்திருக்கலாம். இன்றளவில் வயிற்றுக்கு மருந்து கொடுத்து, பிறபல உடற்பகுதிகளில் நலனை விளைவிப்பனவாகவே மருத்துவமுறைகள் இருந்துவந்துள்ளன. பிற சிகிச்சை முறைகள் பின்வந்தவைகளாகத் தெரிகின்றன. ஆகவே வயிற்று மூலமாகவே இழந்த உடல்நலத்தை மனிதன் மீட்டுக்கொண்டான். வயிற்றுக்கு மருந்து கொடுத்துக் காத்தல் என்ற பொருளில் வைத்தியம் ( வயிற்றியம்) வந்துள்ளது தெளிவாகிறது.
நோய்தீர்த்தானை வைத்துப் பார்த்துக்கொள்ளுதல் என்னும் பொருளில் இச்சொல் வரத்தக்கது ஆகும்.
எப்படிப் பார்த்தாலும் இது தமிழ்ச்சொல்தான். சிவனை வைத்தியநாதன் என்று சொன்னதும் கடவுள் நோய்தீர்ப்பவர் என்ற பொருளில்தான்.
தமிழ்ச்சொற்கள் ஆழ்ந்த பொருள் உள்ளவை. ஒருவர் இருவர் சொன்னவற்றை மட்டும் வைத்து இதை மூடிவிட முடியாது. நீண்ட ஆய்வினை மேற்கொண்டு பிழைத்துணருங்கள்.....
வைத்தியம் என்பது பல்பிறப்பி. வித்து> வைத்து என்றும் வரக்கூடும்!! விது> விதை; விது > வித்து; ( விதையும் மண்ணுக்குள் வைத்து நடுவது அன்றோ?); வித்து> வைத்து.- வைத்து-வைத்தியம்.
சமஸ்கிருதம் என்பது இயல்பான திரிபாக ''வைத்து'' என்பதைக் கொள்கிறது. பாணினி நம் பாணன் அல்லனோ? பாணன் > பாண்+இன்+ இ.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
-----------------------------------------------------------------------------
https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_15.html கைவைத்தியம்.
https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_14.html வைத்தியம், மருத்துவம்.