செவ்வாய், 17 மார்ச், 2026

நீர் என்பது

 நீரின் தன்மை  குளிர்ச்சியாகவும் இருக்கலாம்,  வெப்பமாகவும் இருக்கலாம்.  வெந்நீர்க் குளங்களும் இந்தோனேசியா, மலேசியா முதலிய நாடுகளில் காணலாம்.  பிற நாடுகளிலும் உள.

நீர் என்பது பள்ளங்களில்  தன்னை நிறுத்திக்கொள்ளும் தன்மை வாய்ந்தமையால் ஏற்பட்ட பெயர்.

நில்> நிறு> நிறுத்து.

நில்> நிறு > நீர்.. இதன் முதனிலையாகிய நி என்பது நீ என்று நீண்டுவிட்டால், று என்பது ஏலாமையால், ர் என்பதே வந்து ஈற்றில் நின்று பெயராகும்.  நீறு என்பது நீரின் வேறுபட்ட சாம்பற் பொருள்.

நில்> நிறு> நீறு> நீற்றல்  என்ற வினை அமைகிறது.  இது சாம்பலாகிவிடுதல் என்று பொருள்படுகிறது. மேலாகச் சாம்பல் பூத்திருத்தல்.

நீர் உள்ளதாவது நீர்த்தல் என்ற வினையினால் சுட்டப்படுகிறது. நீர்ப்பு என்பதும் அமையும். 

நீர் என்பது இணைமொழியாகிய  சமஸ்கிருதத்திலும் வரும். அது தமிழினோடு வந்த மொழி. அது இந்தோ ஐரோப்பியம்  ஆனது அதிலிருந்து கடன் கொண்டு ஐரோப்பிய மொழிகள் தம்மை வளப்படுத்திக் கொண்டதால்  அவர்கள் அவ்வாறு கொண்டனர்.  இக்கருத்துக்கு (  இந்தோ ஐரோப்பியம் என்பதற்கு)  தேவநேயப் பாவாணரும் உடன்படுவார். சமஸ்கிருதம் என்பது தென்மொழியின் வழிப்பட்டது என்று தம் ''முதல்தாய்மொழி'' என்னும் நூலில் அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை




கருத்துகள் இல்லை: