நி என்பது ஒரு சங்கத முன்னொட்டு என்றாலும், அது நில் என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறைச் சொல்தான். நில்- நி. அதாவது ஒரு நிகழ்வின் அல்லது எதிர்நோக்கும் நிகழ்வின் முன்நிற்பது.
பந்து என்பது பற்றி நிற்பது என்னும் பொருளது. பல் + து. இது தமிழ் முறைப்படி பற்று என்று வரும். ஆனால் சமஸ்கிருதச் சொல்லாக்கத்தில் பல்> பன் ஆகிறது. இது எழுத்துத் திரிபு அமைப்பின்படி தமிழிலும் வரக்கூடியது. பன்+து > பந்து என்று விளையாடும் பந்து என்ற சொல்லிலும் வருகிறது. இதற்குக் காரணம், பழங்காலத்தில் பந்துகள் கயிற்றினால் கட்டப்பட்டன. அவ்வாறு கட்டி அதை அடித்து விளையாடினர். தேய்வை ( ரப்பர்)ப் பந்துபோல் அடித்தவுடன் அமுங்கி எழக்கூடிய திறன் இதற்குக் குறைவு.
சங்கதத்தில் இது முன் பற்றி நிற்கும் நிலையைக் காட்டுகிறது.
அன், ஐ என்பன விகுதிகள்.
எனவே முன்னரே பற்றி நிற்குமாறு சொல்லப்படும் அல்லது விதிக்கப்படும் ஒரு நிலைப்பாடு ஆகிறது.
இதில் என்ன தெரிந்துகொள்கிறோம் என்றால் தமிழிலும் சங்கதத்திலும் எத்தகு உறவு உடையவை சொற்கள் என்பது. இதை மிக்க நெருங்கிய உறவு என்னலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக