இது ஒரு திரிபுச் சொல். இதை இவ்வாறு அறிந்துகொள்க.
உடலில் மிகுத்த நீரை, நம் உடல் வெளியேற்றிவிடுகிறது. நீர்க்கழிவுகள் வெளியேறுவதால் உடல் நலத்துடன் வாழ்கிறது என்பது நீங்கள் அறிந்ததாகும்.
பகுதி என்ற சொல், பாதி என்று திரிந்து வழங்குகிறது. பகு>பா, அதுபோல மிகு > மீ என்று திரிகிறது.
மிகுதி> மீதி, மீதி+ அம் > மீதம். தி என்பதில் உள்ள இறுதி இகரம் வீழ்கிறது. மீத்+ அம்> மீதம். மிகுத்து அமை> மீத் அமை>மீத் அம்> மீதம் என்றும் காட்டலாம். எல்லாம் எப்படி விளக்கினால் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இருக்கும் என்பதே நாம் காண விழைவது ஆகும்.
அஞ்சு > அச்சம் என்பதுபோல் மிஞ்சு > மிச்சம் ஆகிறது.
பகுத்துண்ணுதல் என்பது பகுத்துண்> பாத்தூண் என்று திரிதலைத் தெரிந்துகொள்க. பகு> பா. அதுபோல், மிகுத்திரு> மீத்திரு> மூத்திரு+ அம் > மூத்திரம் ஆகிறது. இது பேச்சுவழக்கில் விளைந்த ஒரு சொல்.
இதை வேறு விதமாகவும் ஆசிரியர்கள் விளக்குதலால், இது பல பிறப்பி ஆகும். பலரும் கூறியவை அறிந்துகொண்டு இங்கு கூறுவதால், இதுவே சிறந்த விளக்கம் என்று உணர்க.
மிகுத்தது > மீத்தது. இருத்தல் இது பேச்சு வழக்கில் கழித்தல்.
மீத்தது, மிகுத்தது, மூத்தது, என இவை முல் என்ற மூல அடியிலிருந்து பிறந்த தமிழ்ச் சொற்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக