சனி, 14 மார்ச், 2026

நாயகம்

 இன்று நாயகம் என்ற சொல்லுக்கு அமைப்பு  அறிவோம்.

இதை நய + அகம் என்று பிரிக்க வேண்டும்.  இது நாயகம் என்று வந்து,   நயமிக்கப் பல்குணங்கள் உடையோன்,  விரும்பப படுவோன், ஆதலின் பின்பற்றப் படுவோன்  என்று பொருள்படும்.   நாயகம் என்ற சொல்லின் பாலினம் குறிக்கப்படவில்லை,  அதாவது '' கண்ணன் ''  என்ற சொல்லில் அன் விகுதி வந்து ஆண்பால்   காட்டியது போல் எந்த விகுதியும் இல்லை. பால் விகுதிகள் வேண்டின்,  நாயகன், நாயகி என்று விகுதிகள் சேர்த்துச் சொல்லவேண்டும்.

வீடு என்ற சொல்லைப் பாருங்கள்.  இது விடு என்ற வினையிலிருந்து பிறந்த சொல்.  விடுதல் என்பது தொழிற்பெயர்.  எங்கு சென்றாலும்  தங்குவதற்கு எல்லாம் விட்டு இறுதியில் வீடு வந்துவிடுகிறான் மனிதன்.  பல விலங்குகளும் இவ்வாறே திரும்பிவிடுகின்றன.  இவ்வாறு ஏற்பட்ட சொல் தான் வீடு என்பது.  இதை இவ்வாறு காட்டலாம்:

விடு >  வீடு.

பாடு என்ற சொல்லும் இவ்வாறு அமைந்ததுதான்.   பட்டது பாடு,  ஆகவே இதையும் படு> பாடு என்று காட்டலாகும்.

தொழிற்பெயர் என்றால் ஒரு வினைச்சொல்லினின்று அமைந்த ஒரு பெயர். வினை என்பதும் தொழில் என்பதும் இங்கு ஒரு பொருண்மை உடையன.  ஒரு தொழிலுக்கு உண்டான பெயர் தொழிற்பெயர்.   

நய அகம் என்பது முதல் நீண்டு,  நாய அகம் என்று மாறி, புணர்ந்தும் ''நாயகம்'' என்றாகிவிட்டது.

இந்தச் சொல் சமஸ்கிருதத்திலும் சென்றுள்ளது.  இரண்டும்  இந்திய மொழி ஆதலினால், ஒன்றிலிருந்து இன்னொன்று பகிர்ந்துகொள்வது இயல்பானதே. எங்கு முதலில் தோன்றியிருப்பினும் அஃது ஒரு பொருட்டன்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

கருத்துகள் இல்லை: