இதை விளக்குவோம்.
முன்னைத் தந்த விளக்கம் இங்கு உள்ளது. ஒரு சொல்லைப் பலகோணங்களில் தமிழில் ஆராயலாம். தமிழ்மொழியில் ஒரு சொல் சிலேயாடைகிப் பலவழிகளிலும் பயன் தரலாம்.
சிலேடை என்றது சிலவாக எடுத்துக்கொள்ளத்தக்கது என்று பொருள். இந்தப் பொருளை யாம் சொல்லில் பகுத்தே விளக்குகிறோம். சில+ எடு+ ஐ > சிலேடை என்று அமைக்கப்பட்ட சொல்.
பல்பொருள் எடுபடத்தக்க சொல் சிலேடை.
அ+ பாரம் . பர > பர+அம் > பாரம். இது முதனிலை நீண்டு, அம் விகுதி பெற்றது.
அ என்பது அதிகம் என்பதன் சுருக்கம். அது+ இகம் > அதிகம். இகத்தல்: - விரிதல். அங்கிருப்பது விரிந்து ஆவது என்பது பொருள்.
ஒன்று தன்னிலையினின்ற படி விரிந்து பரந்து காட்டினால் அது அபாரம் ஆகும்.
அதிகபாரம் உடையது என்றும் ஆகும்.
இகத்தல் ikattal from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 201)
இகத்தல் - கடத்தல், நடத்தல், பழிந்த ல், புறப்படுதல், பொறுத்தல், போ தல், மீறுதல், விட்டு விடுதல்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிர்வுரிமை உடையது.