உக்கிராந்தி என்பது உள்ளிருக்கும் ஆத்துமா ( அகத்துமா> ஆத்மா, ஆன்மா ) உடலை விட்டு நீங்கிச் செல்வதைக் குறிக்கும் ஒரு சொல்.. ஆகவே ஆன்மாவின் வெளியேறுதலைக் குறிக்கிறது. இதை இப்படிப் பிரித்தால் இதன் தமிழ்மூலம் தெளிவாகும்.
உக்கு + இற -- ஆம் + தி.
உக்கு : உட்கு > உள்+ கு. இதன் பொருள், உள்ளே இருக்கும் ஆத்மா,
இற : இறந்தவாறு அல்லது இறந்த பின். இது இர என்று மாறிவிடும். வேறு சொல்லுள் ஒரு பகுதியாக வந்தால் அதன் வல்லின எழுத்து மாறிவிடும். ஆகவே ர வருவது பல சொற்களில் தெரிகிறது. பழைய சொல்லின் விளக்கங்களில் இதைக் குறிப்பிடும் இடங்களை யெல்லாம் படித்து, குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.இதன் மூலம் உக்கிர என்ற திரிபின் விளக்கம் தெளிவாகிறது.
ஆந்தி என்பது, ஆம்+தி. ஆம் என்பது ஆகும் என்பதன் தொகுப்பு.
தி என்பது விகுதி. இதன் பொருள் திருப்பம் என்றும் சொல்ல, பொருந்துவதாகும்.
இது ஒரு சடங்கினைக் குறிக்க வழங்குகிறது. இந்தச் சடங்கில் ஒரு பசுவைத் தானம் செய்வது குறிக்கப்படுகிறது. ஆதலால் இறந்தவர்க்கு ஒரு கொடை கிடைக்கிறது. அவருடைய செல்லும் காலம், இடைஞ்சல்கள் இலாமல் நடைபெறுகிறது.
ukkirānti from University of Madras "Tamil lexicon" (p. 386)
*உக்கிராந்தி ukkirānti , n. ut-krānti. Departure, usually of life or soul from the body; death; colloquially applied to the ceremony of giving away a cow uttering mantra with the prayer that a dying person may pass away without much suffering; மரணகாலத்திற் செய்யுங் கோதானம். அவர் உக்கிராந்தி வாங்கினார்.
''உக்கிராந்தி வாங்கும்/ கொடுக்கும் பாக்கியம் உடையவர். எல்லாம் இறைவன் அருள் '' என்று பேசிக்கொள்வதுண்டு.
இதை வேறு வகையிலும் விளக்கலாகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்பு.
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக