வியாழன், 31 மார்ச், 2022

சத் - - சத்குரு பெயரமைவு

 இன்று நாம்  " சத் குரு" என்ற கூட்டுச் சொல்லை அறிந்துகொள்வோம்.
இதை அறிந்துகொள்ளுமுன் வேறு இரண்டு சொற்களை அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழில் சுட்டுச் சொற்கள் என்பவை  அ, இ, உ என்பனவாகும்.  அங்கு என்பதற்குப் பண்டைத் தமிழன்  "அ"  என்று சொன்னான்.  பண்டை நாட்களில் ,  அதாவது மனித இனம்  நாகரிகம் அடையாமல் காட்டில் வசித்த காலத்தில்,  இது ஆ என்று இருந்தது. இவ்வாறு நெடிலில் அமைந்த சொற்கள் ஒன்றும் காணாமற் போய்விடவில்லை.  " (ஆ)ங்கு":  என்ற சொல் இன்னும் நம்மிடையே உள்ளது. [ கு : சென்றடைதல்] காட்டான் என்பவன் நாட்டானாய்  ஆகுமுன் அப்போதிலிருந்து  இதுநாள் வரை இச்சொல் தமிழில் உள்ளது என்றால்,  தமிழின் கழிநெடு  வரவாற்றை எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
அதனால்தான் தொல்காப்பியத்தில் அந்த அடிச்சுவடு இன்னும் காணப்படுகிறது. 
" வடவேங்கடம் தென் குமரி  ஆயிடை"  என்று வருவதில்,   ஆ + இடை என்ற பதப் பயன்பாட்டினை அறிந்துகொள்க.
ஆ >  அ என்ற\ ஆகாரம் அகரமாகக் குறுகியதனை விளக்கவேண்டும்.  எனினும் இத்துடன் நிறுத்திக்கொண்டு,  யாம் எடுத்துக்கொண்ட ஆ> அ> அது என்பதற்குப் போய்விடுகிறோம். ஏனென்றால்  சத் என்பதை விளக்குதற்கே இங்குப் புறப்பட்டுள்ளோம்.  மற்றவை இன்னோரிடுகையில் சொல்வோம்.
அது என்பது ஒன்றைச் சுட்டுவது.   இச்சொல்லில் அ என்பது சுட்டு என்றால், து என்பதே ஒற்றைப் பொருளைக் குறித்த சொல்லாகும்.  து என்பது கலந்து,  முச்சுட்டிலும் வருகிறது:  அது, இது, உது.  இனி எது என்ற வினாவும் கொள்க.  அ. இ. உ, எ என்பவை சுட்டுவன ஆயின், து என்பதே பொருளைக் குறிக்கும் சொல்.
கூத்தாட்டு அவைக்குழாத்து  அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்  தற்று
என்பது தேவர்சொல் திருக்குறள்.

குழாம் >  குழாத்து.   குழாம் என்னும் ஒரு கூட்டத்தினுடையது என்று பொருள்.
Pay attention to  ~து.  "குழாமின் ஒன்று"

து > த்  என்றால் ஒன்று. இது கழிபன்னெடுங்காலத்துத் தமிழ்.

இங்கிருந்து நாம் தாவுதல் வேண்டும்.   அது என்பது அகர முதலானதால்,  அது திரிபு விதிகளின்படி,  சது என்றும்,   அத்து என்று சாரியையாக வரும் சிலசொற்களிலும் தோன்றும் சொல்,  சத்து என்றும் வருகிறது, வரும், வரவேண்டும்.  அது என்பது அத் என்று இறுதி உகரம் குறைந்தும்,  அத்து என்பது உகரம் குன்றி  அத் என்றும் வரும்.  இதில் தகர இரட்டிப்பு  வருதற்குரியது.  அது என்பது அத்து என்று இரட்டித்தது;  அவ்வளவுதான்.
கலிங்கத்துப் பரணி என்ற தொடரில்,  அத்து வந்து,  உரிய ஒன்று என்று பொருள்பட்டது.  கலிங்கத்துக்கு உரிய பரணி என்று பொருள்.  உரிய - பற்றிய.
கலிங்கப்பரணி, 
கலிங்கமது ஓர் தேசம், நாடு.
கலிங்கத்துப் பாட்டு,
கலிங்கத்தின் மேன்மை.
இவற்றுள் அது,  அத்து என்ற சொல்லாட்சியின் இன்மை உண்மைகளை அறிந்துகொள்க.
இதன் பொருள்:  "அவ் வொன்று" என்பதுதான்.   ஆகவே து என்பதான பொருளைக் குறிக்கிறது.
நிலையத்து மேன்மை என்பதான தொடரில்,   நிலையத்துக்கு உரிய ஒன்றான மேன்மை என்பது.
அமண் என்பது சமண் என்று திரியும்.
அது என்பது அந்த ஒன்று ஆதலின்,   அத், என்பதும் அது என்பதன் இந்தக் குறுக்கமே  ஆகும்.
ஆகவே  அது > சது;   அத்> சத்.   அத்து > சத்து > சத்.
அது என்பது அங்குள்ள ஒன்று என்ற பொருளுடையதாதனினால்,  சத் என்பதற்கும் சுட்டு விலக்கி, ஒன்று என்பதே பொருள்.
குரு என்பார் ஆசிரியர் ஆதலின்,  சத் குரு என்றால் ஒருவரான ஆசிரியர்.
ஒருவர்பின் ஒருவராகப் பல தொடராசிரியர்கள் இருந்தால் அவருள் முதலாமவரே சத் குரு.  தனக்குமுன் தனக்கோர் ஆசிரியர் இல்லாதவர் சத்குரு.
எடுத்துக்காட்டு:  சத்குரு ஞானானந்தா.  
இதுவே இலக்கணம்  தொடர்புடையதாயின்,  முதல்நூலார்.   வழிநூல் சார்புநூல் என்பன பின்வருவன என்று அறிக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
சில திருத்தங்கள்: 02042020 1606

சுகம் எங்கே - உணர்ந்த நாய்க்குட்டி.

 சுவரில்  சார்த்தி வைத்த  துடைப்பம் தன்னை

சுகம்வேண்டித் தன் தலைமேல் இழுத்துப்போட்டு

இவள்( இந்த நாய்க்குட்டி ) தலை நுழைத்தே

என்ன ஒரு  சுகம் கண்டு  தூங்கு  கின்றாள்?


வாசல்களில் படுத்தபடி வாழ்க்கை தம்மை

வந்த பெரும் பாகமும் முடித்துக்கொண்ட

கூசலிலா வைரவர்கள் கூட்டம் தாமே

கொண்ட சுகம் எங்கே  என்றறிந்துயர்ந்தார்.


சுகமெங்கே என்றே  உகந்தே  அறிந்துவாழ்

வகைதெரிந்த நாய்க்குலமே வாழ்க  நெடுங்காலம்.





சுகம்கண்ட  நாய்க்குட்டியின் படம்:


இந்த விளக்கத்துக்கு நீங்கள்  உங்கள் விளக்கத்தை வரைந்து பின்னூட்டம் இடவும்


மெய்ப்பு  பின்னர்






புடின் அமைதிக்கு வந்துவிடுவார் --- புகழ்பெற.

 வலதுகையை  வீசாத  வண்ணத்  துடனே

வளர்திட  உள்ளத்தர்  வன்மைத்   ----  தலைவரென.

நின்று தயங்கா  நிமிர்நடையர்  புட்டினே

என்று  பலர்கூறு வார்.


ஒருகையை வீசித்தான்   ஒன்றசைக்   காமை

பெறுபுகழ்போல் சண்டைசேர்  பீடும் ---- ஒருபக்கல்

போரெனினும்   ஓர்பக்கல்  ஆரமைதி  தான்நாடிப்

பார்புகழ்தல் தந்துயர்  வார்.


போர்மற மன்னரெனப்  போற்றும் உயர்விலும்

நீர்நிலம் சூழமைதிப்  பேராளாய்ச் ----  சீருறுதல்

உங்கள் புகழுக்  கொருமகுடம் வைத்திடுமே

பொங்கபோ  ரின்மைக்  கதிர்.   


நிமிர்நடையர் -  நிமிர்ந்த நடை உடையவர்

ஒன்றசைக்காமை - ஒரு கையை அசைக்காமல் இருப்பது

பெறுபுகழ்  பொல்- பெற்ற புகழ் ஒப்ப

பக்கல்  -    பக்கம்

பீடு -  பெருமை

ஆரமைதி -  நிறைவான அமைதி

பார் புகழ்தல் -  உலகம் போற்றுகை

மற மன்னர் -  வீரமிக்க ஆட்சியாளர்

சூழமைதி -   சூழும் அமைதி

மகுடம் -  சூட்டும் முடி

பேராள்  -  பிரதிநிதி,   பெரிய ஆள்.

போரின்மை - அமைதி, சமாதானம்


சுவைத்து மகிழ்க.

மீள்பார்வை பின்னர்.

உங்கள் கருத்தை அல்லது காண்பனவற்றைப்

பின்னூட்டம் செய்க.

புதன், 30 மார்ச், 2022

மையம் , இரு கருத்துகள் அடிப்படை

 மையம் என்ற சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அணுகி விளக்கலாம். இதற்கான வசதி தமிழில் மிகுதியாய் உள்ளது.

முன்னரே விளக்கியவற்றை  இங்கு முழுவதுமாகத் தருவிக்காமல்  சில குறிப்பிட்ட பின் மற்றொரு விளக்கத்தை முன்னிறுத்தலாம்.

நடுவில் உள்ள ஓர் இடமோ பொருளோ, நாற்புறமும் உள்ள் இடங்களை மருவி நிற்பதனாலேதான் மையம் ஆகின்றது.  இது நல்லபடியாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டத்தின் மையமானது, அவ்வட்டத்தில் எல்லாப் புள்ளிகளையும் மருவி நிற்கின்றது.

மரு என்பதன் அடி மர் என்பது.

சுருக்கமாக,

மர் > மய்>  மை > மையம் ஆகும்.

இதுபோல் திரிந்த இன்னும் உள்ள சில:

விர் >  விய் > வியன். ( வியனுலகு).  விர்> விரி> விரிவு.

கர் > கை.    கர்> கரம்;    கர்> கை.

அல்லது கை> கர் எனினுமாம்.


மர் > மரு.

மர் > மர் >  மர்த்து.  > மத்து ( இடைக்குறை)  > மத்தியம்.

மர்த்தியம்> மத்தியம் என்பதில்,  இ அம் என்பன இடைநிலையும் விகுதியும்.


மையத்துக்கொல்லை என்பது ஊர்களுக்கு நடுவான இடத்தில் உள்ள புதைகுழி  நிலம் என்று பொருள் விளக்கலாம்.


மாய் >  மய் > மய்யம் > மையம்.  இதில் மாய் , அதாவது இறந்தோரைப் புதைக்கும் இடம் என்று பொருளுரைக்கலாம்.

இங்கு இதை முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர் என்பது சரியாகும்.

ஆகவே சுடுகாடு குறிக்கும் மையம் என்பது முதனிலை குன்றியமைந்தது.

மையம் என்பது இருபிறப்பி ஆகும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.


செவ்வாய், 29 மார்ச், 2022

சில காய்கறிகட்குக் காத்திருக்கவேண்டும்.

 

கொள்ளுப்பாட் டன்காலம் வீட்டுத் தோட்டம்

கொடுக்கின்ற காய்கறிகள் தம்மைக் உண்டு

வள்ளல்போல் அரிக்குவியல் வைத்து வீட்டில்

வாழ்ந்திட்ட காலம்போய் விற்க வாங்கி

எள்ளுக்கும் எண்ணெய்க்கும் ஏக்கம் காக்கும்

எழில்நாக ரிகந்தன்னை  ஈண்ட டைந்தோம்.

கிள்ளுக்குக் கீரையுமே கிட்ட வில்லை.

கீரைவரும் நேரமன்று, கிடப்போம் காத்தே.


தெருமூலை கறிகாய்கள் அடுக்கி வைப்பார்

தேடிச்சென் றாங்கவைதாம் வாங்க வென்றால்

வருநேரம் வரவில்லை வாரும் பின்னே

வாய்திறந்து இதுசொன்னார் விற்கும் அன்னார்;

ஒருபடமே எடுத்துவீட்டுக் காங்க னுப்பி

உரைபரப்பி விட்டாங்க கன்று விட்டேம்.

தருபடமே கீழுளதே பார்த்துக் கொள்வீர்

தற்காலம் முற்காலம் பாலம் அற்றோம்.


அரிக்குவியல் - நெற்குவியல் எனினும் ஆம்.

ஏக்கம் காக்கும் -  விற்குமுன் சென்று வாங்கிவிடுதல்

ஈண்டு - இங்கு

கிள்ளுக்குக் கீரை - நல்ல கீரைதானா என்று எடுத்துப் பார்த்தல்

கீரைவரும் நேரம் -  வழங்கல் வண்டி வரும் நேரும்

நேரம் ஆகுமாதலால் படம் எடுத்து அனுப்பிவைத்தோம்.

இது தற்காலம் வேறு என்பதைக் காட்டுகிறது.

வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளில் முற்காலத்தோர் போல் நாம் இல்லை..

வேறு உலகில் உள்ளோம்.  படம்:



கீரைகள் அடுக்கு காலியாய் உள்ளது. ( வழங்குவோர் இன்னும் வரவில்லை).


This line has been changed:  எழில்நாக ரிககாலம் ஈண்ட டைந்தோம்  >  எழில்நாக ரிகந்தன்னை  ஈண்ட டைந்தோம்..  இசை நல்லபடி ஒழுகுதல் பொருட்டு.


ஞாயிறு, 27 மார்ச், 2022

பசலைக்கீரைச் சாம்பாரும் பகலுறக்கமும்

 

பொடிஉரு ளைக்கிழங்கு பொரித்துவை சாப்பாட்டில் 15

கடிதரச் சுவைத்திடக் காய்முருங்கைச் சாம்பாரில் 16

இடுவத னில்பசலைக் கீரையைச் சமைத்துண்பாய் 15

படுபகல் ஒருபாயில்   பகவறியாத்     தோய்வுறக்கம்  16


குறிப்புகள்:

பொடிஉருளைக் கிழங்கு -  ஒருவகைச் சிறு உருளைக் கிழங்கு

கடிதர - கடித்துக்கொள்ள

தோய்வுறக்கம் -   ஆழ்ந்த உறக்கம்

பகவறியா -  பகுதிபடாத

இடைநீங்கா  -  என்றாலும் எழுத்துக் கட்டளை அதுவே ஆகும்.  ஆனால்

மோனை இராது.


இந்த கவியில் முதலடி மூன்றாம் அடிகள் மெய்யெழுத்து நீக்கி   15 

எழுத்துக்கள்.  இரண்டாம் நாலாம் அடிகள் அவ்வாறே  16  எழுத்துக்கள்

உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.


பசலைக் கீரை குளிர்ச்சி என்பார்கள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



சனி, 26 மார்ச், 2022

வாழ்த்துக் கவி

 ஏறத்தாழ  ஒருவார காலத்தில் அன்பர் ஒருவருக்கு யாம் அனுப்பிய தொலைபேசி வாழ்த்துக்களைத் தொகுத்துப்  புனைந்த ஒரு "கவிதை".

நன்றாயிருக்கிறதா படித்துப் பாருங்கள்.


காலைவணக்கம் சொல்லும் தித்திக்கும் திங்கள்

காசினியில் உளவெல்லாம் முருகென்னும் அழகே

சீலமருள் குடும்பநலம் உலகமைதி பெருகி.

செந்தமிழால் அனைவருமே பணிவோம்நம் சிவனை!

மாலைமதி தோன்றுகின்ற வரையொளிரும் பகலோன்

மருவியநா ராயணனை மனம்நெகிழ்ந்து புகழ்வீர்

சோலையழ கதிலாழ்ந்து சூழுலவு தென்றல்

சொந்தம்நம தென்றினியே நன்றனைத்தும் கொள்வோம்.


இதைப் படிக்கையில் இது வாழ்த்துச் செய்தியைக் கவிதையாக்கியது  என்று ஓரளவு புரிந்துகொள்ளமுடியும்.  சூர்யநாராயணனைப் பணிவோம் என்ற வாழ்த்தை "பகலோன் மருவிய நாராயணனைப் புகழ்வீர்" என்று விரித்ததிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.

முன்பு எழுதியவற்றை அழித்துவிட்டோம்.. ஏன் அழிக்கவேண்டும்? என்ற எண்ணம் தோன்றியது. நம் நேயர்களுக்கும் பகிர்ந்தளிப்போமே என்று எண்ணினோம். இங்குக் கவிதை பிறந்தது.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



பச்சை மின்னி குன்றிப் பத்துமினி (பத்மினி)

 

 பத்துமினி (பத்மினி)பச்சை மின்னி-- குன்றுதல்

பத்துமினி  ( பத்மினி என்பது )  இன்னொரு வகையிலும் விளக்கமுறும் சொல். இதனை இப்போது பார்ப்போம்.

பச்சை+ மின்+ இ  >  பச்சு+ மினி ,

இது சகர தகர போலியின் காரணமாக:

பத்து + மினி >  பத்துமினி > பத்மினி ஆகிவிவிடும்.

பத்-மினி என்று வெட்டுப்படுத்திச் சொல்வது அயல்பேச்சு முறை. 


இனி மினி என்பது காண்போம்:

மின் + இ >  மின்னி >  மினி ( இது இடைக்குறை. ன் குன்றியது).

ஆக இதன் பொருள் பசுமையுடன் மின்னும் ஒன்று.  அதாவது பச்சை ஒளி வீசி மின்னுவது.

பச்சை என்பது வேற்றுக்கலப்பு இல்லாத இளநிலையைக் குறிக்கும். 

இன்னொரு வகை என்று கூறினோம். முன் விளக்கிய முறை இங்கு உள்ளது. அதையும் வாசித்து மகிழுங்கள்.

பற்றுதல் பத்துமினி

https://sivamaalaa.blogspot.com/2022/03/blog-post.html


பச்சை என்ற சொல் குறுகிய இடங்கள்

இனிப் பச்சை எனற்பாலது பச்சு என்று திரிதலுக்கு எடுத்துக்காட்டு:

பச்சையுடம்பு  >  பச்சுடம்பு.

பச்சை இரும்பு  >  பச்சிரும்பு

யாப்பியலில் தொல்காப்பிய மாமுனியால் கூறப்பட்ட ஐகாகரக் குறுக்கம் பேச்சிலும் சொல்லாக்கத்திலும் பரவிப் புதுமை விளைத்துள்ளமையையே இது தெளிவாகக் காட்டுகிறது.

பச்சிமகாண்டம்.

முற்பட்டுப் பிறந்தவர்கள் "கிழவன்-கிழவிகள்" ஆகிவிடுவார்கள். தற்போது தோன்றியது இன்னும் பச்சையாகவே இருக்கும்.  இதன் காரணமாக பச்சை+இம்+ அம் என்ற துணுக்குகள் கலந்து,  பச்சிமம் என்ற சொல் உண்டாயிற்று..  இது கம்பன் காலத்திலே வழக்குக்கு  வந்தது.  விவிலிய நூலில் புதிய ஏற்பாட்டுக்கு:  பச்சிமகாண்டம் என்ற சொல் தமிழில் ஏற்பட்டது.  ஆனால் இன்று கிறித்துவத் திருச்சபைகட்குச் சொல்வோருக்கு இது மறதியாகி இருக்கலாம்.  பழைய வரலாறு யூதமதத்து வரலாறு.Old Testament.   புதிய ஏற்பாடு: New Testament.  பச்சிமம் New.

இது ஆட்பெயரிலும் திரிந்து வழங்கும். எ-டு:

பச்சை முத்து >  பச்சிமுத்து.  இளையமுத்து  என்பது பொருள்.

(  இது பட்சி முத்து என்பதன் திரிபு அன்று).

இன்னும் பல. பின் காண்போம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.



வெள்ளி, 25 மார்ச், 2022

மனோன்மணி - சொல் வந்த விதம்.

 மனோன்மணி என்ற ஒரு திரைப்படம் சென்ற நூற்றாண்டில் வெளிவந்து வெற்றிப்படமாய் அமைந்தது.  இந்தப் படத்தின் கதை, மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தினை ஒட்டி வரையப்பட்டது. அக்காப்பியத்தினை  சுந்தரம் பிள்ளை என்ற பெரும்புலவர் எழுதி வெளியிட்டார்.   தமிழ்மொழியில்  ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் ஆக்கியவைபோன்று நாடகங்கள் இல்லாத குறையைப் போக்க,  இப்புலவர் இதனை யாத்தளித்துள்ளார்.

மனோன்மணீயம், மனோன்மணி என்ற பதங்கள் எவ்வாறு அமைந்தவை என்பதைத் தமிழாசிரியர் விளக்கியுள்ளனர்.  அவர்கள் அளித்துள்ள விளக்கங்களை ஆங்குக் காண்க.  இங்கு தரப்படும் விளக்கம்,  தமிழ்மொழியின் மூலமாக அறியப்பட்டவை.  ஆதலின் அவற்றினின்று இவ்விளக்கம் வேறுபடும் என்பதை உணர்ந்துகொள்க.

மனோன்மணி என்ற சொல்லில்,  மனம் என்பது உள்ளது.  இதைத் தமிழ்ச்சொல் என்றே கொண்டு,  அதற்குத் தனி விளக்கம் எதுவும் தரப்படவில்லை. இச்சொல்லுக்குப் பாவாணர் தந்த அமைப்புவிளக்கம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மனம் என்பதில் மன் என்பது பகுதி.  அம் என்பது விகுதி.

1.மன்.

2.  ஒன் என்பது அடுத்த உள்ளுறைவு ஆகும்.   இதன் முழு வினைச்சொல் ஒன்னுதல் என்பது.  இதன் பொருள் பொருந்துதல்.   ஒன்னு என்பதில் ஒன் என்பது பகுதி.  இது முதனிலை திரிந்து ஓன் என்று  ஆகும்.   ஒன்> ஓன் என்று நெடிலாயிற்று.    ஓன் என்ற தனிச்சொல் காணப்படவில்லை என்றாலும்,  இலக்கணத்தின்படி,  நீட்சிபெற்றுத்  தொழிற்பெயர் அமையும்.   எ-டு:  இவ்வாறு நீண்டு அமைந்த தொழிற்பெயர் சுடு(தல்) > சூடு.

மின்னுதல் கருத்தில் வந்த மீன் என்ற சொல்லையும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.   மின் > மீன்.

ஓன் என்ற தனிச்சொல் காணப்படாவிட்டால்,  அவ்வாறு ஒரு சொல்லமைந்து அது மற்றொரு சொல்லின் உள்ளுறைவாக இருக்கக்கூடாது என்று எந்த விதியும் இல்லை.  இவ்வாறு தனிச்சொல்லாக இல்லாத அமைப்பு உள்ளுறைவினை வேறு சொல்லாக்கத்தில் ஆங்காங்கு காட்டியுள்ளோம்.  அங்குக் கண்டு தெளிக.

3. மணி என்பது தமிழில் உள்ள சொல். இதற்கு இங்கு தனி விளக்கம் தரப்படவில்லை.   எம் பழைய இடுகைகளைப் படித்து இதனைக் காணலாம்.

மனம் + ஓன் + மணி >  மன ஓன் மணி >  மனோன்மணி  என்றாகும்.  மனம் பொருந்திய மணி என்பது பொருளாகிறது.   மனோன்மணி என்பதில் வகர அல்லது  யகர உடம்படு மெய்கள் தேவையற்றவை.  நிலைமொழி வருமொழிப் புணர்ச்சி ஆயின் தேவைப்பட்டிருக்கலாம்.  மனவோன்மணி, மனயோன்மணி என்பவை இன்னாவோசை பயப்பன.

பாணினி  (என்ற பாணப்புலவர் வரைந்த )  இலக்கணத்தை இங்குக் கைக்கொள்ளவில்லை என்பதறிக.

யாம் விவரித்தபடி விளக்க, இது தனித்தமிழாகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

இடுகைகளைச் சுருக்கமாக வைத்துக்கொள்ள, முன்னரே கூறியவற்றை குறைத்து வெளியிடுதல் இன்றியமையாதது ஆகும்.

இணையம் செம்மொழி வாழ்க.

கலிவெண்பா. 


இரவில் இரண்டுமணி  கண்விழிக்க,  யார்க்கும்

அரவம் இலாத   அமைதி -சரமாய்

எதிருள்ள விற்பனைஇல்  லங்கள் மறவர்

மதிற்கோட்டை   நீங்கிய மையிருள்போல் கவ்வக்

கணினியும்  கற்றல்  இணையமுமே கையில்

தனிமையாய் யாமில்லை செம்மைத் தமிழிலே 

இனிமை  இனிமை! இவணுள சாளரத்தில்\

தோன்றும் இருளை மறந்தேம் ஒளியிலே

ஊன்றிக் களித்திட  ஓர்தடை இங்கில்லை,

எம்மெதிர் பல்கடைகள் இல்லா விடினென்ன

செம்மொழி ஞாலமோ டிங்கிணைந்து நிற்பேம்!

இணையம் இனிதுவாழ்க இவ்வுலகு வாழ்க!

அணையில் உறங்குவேன் பின்.


அரவம் -  ஒலி.  சரம் - வரிசை.

கற்றல் இணையம் - கல்வி விளங்கும் இணையம்.

சாளரம் - சன்னல்.  மறந்தேம் - மறந்தேன் என்பதன் தன்மைப் பன்மை

ஒளி -  கணினித் திரையின் ஓளி.

ஓர்தடை = ஒருதடை.  கவிதையில் ஒரு என்பது ஓர் என்று வரலாம்.

ஞாலம் - உலகம்

அணை -  பஞ்சணை. ( முதற்குறை).


கவிதை மகிழ்க.

மெய்ப்பு பின்.

பிழைகள் காணின் பின்னூட்டம் செய்க.


இன்பம் என்பதன் வகைகள் - அவற்றின்மேல் மனம்

 




வெண்ணெய் உரொட்டி என்பது சிங்கப்பூரில் பலர் 

விரும்பி எடுத்துக்கொள்ளும் "சீஸ்ப்ரட்ப் " என்னும் வகையில்

உள்ளது ஆகும். இந்த நாற்காலியின்மேல் நெகிழிப்பைக்குள்

இரண்டு உரொட்டிகள் உள்ளன. படத்தில் காணுங்கள்.

இது கடிப்பதற்கு மென்மையான உரொட்டி ஆகும்.

தொடக்கத்தில் உரொட்டி ( ரொட்டி) செய்தவர்கள், ஓர்

உருவில் செய்து  ( சப்பட்டை வட்டமாக) அதைச் சூடான இரும்பு தகட்டில் 

ஒட்டிச் செய்தார்கள்.  உரு+ஒட்டி என்ற இரண்டு சொற்களும்

இணைந்து  உரொட்டி > ரொட்டி ஆகிற்று.  இது மலாய் சீனமொழிகளிலும் 

பரவிவிட்ட சொல் ஆகும்.  தலையிழந்த சொல். இவ்வாறு பலவுள.



வெண்ணெய்ரொட்டி   தின்றவர்க்கு வேறே  இன்பம்----- மொருகி

வெந்ததோசை தின்றவர்க்கு வேறே இன்பம், 

கண்ணும்வேறு பாடுசொல்ல வார்த்தை இல்லை ----வாயால்

கழறுகின்ற போதில் பிறிது சொல்வதே இல்லை.


குட்டை குளிக்  கின்றவேளை  வேறே இன்பம்  ----- அதில் 

மட்டை கிடப் தாயின் அதற்கும் இன்பம் உண்டோ?

நெட்டை குட்டை ஒன்றுதேனே குடிப்ப தாயின் ---  அதில்

கிட்டுமின்பம் ஒன்றுதானே வேற்றுமை இல்லை.


எந்த ஊணைக் கொள்ளும் எண்ணம் வந்தபோதும் ----  அதில்

இன்பம் என்று சொல்ல மனம் இடுதல் வேண்டுமே! 

உன்றன் நெஞ்சம் அந்த ஊணில் இல்லை என்னிலே ---- அது

இனித்தபோது கசத்தல்காணும் உண்மை ஞாலமேல்.


கண்ணும் வேறுபாடு -  கருதும் வேறுபாடு.

பிறிது -  மற்றது,  இன்னொரு வகையான இன்பம்.

நெட்டை - நெட்டையன், குட்டை - குட்டையன்.

ஒன்று தேனே -  தேன் என்னும் ஒன்றையே

ஊண் - உணவு

மனம் இடுதல் -  இட்டம் (  இடு அம் )

ஞாலம் - உலகம்.


இன்பம் என்பதை வருணிக்க முடியுமோ?  வேறுபாடு அறியுமாறு வருணிக்க இயல்வதில்லை. இனிமை, நன்றாய் இருக்கிறது என்று சொல்லலாம். ஓர் இனிமைக்கும் இன்னோரினிமைக்கும் வேறுபாடு தோன்றும்படி வருணிக்கச் சொற்கள் இல்லை. இன்பம் தருவதாக இருந்தாலும், மன ஈடுபாடு இல்லாவிட்டால் அது துன்பமாகவே தோன்றுகிறது.  இட்டம் என்ற சொல் இதைத் தெளிவு படுத்தும்.  இடு +அம் = இட்டம். இதில் டகரம் இரட்டித்தது. தமிழ்நாட்டில் திசைக்கு ஒப்ப பொருண்மை,  சொல் ஒலிப்பு  மாறுபடும்.   தமிழ்நாட்டின் வடக்கில் இருந்தவர்கள்  இதனை இஷ்டம்,  இஸ்டம் என்றனர். வட எழுத்து எனப்படும் ஒலியை நீக்கிவிட்டால் அது தமிழ் என்பதை உணரலாம். இதைத் தொல்காப்பியனார் " வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ,  எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்" என்றார்.  எழுத்தொடு - மீதமுள்ள எழுத்தொடு, அல்லது உரிய எழுத்தோடு" என்பதுதான் பொருள். சமத்கிருதம் தமிழனால் சாமி கும்பிடப் பயன்படுத்தப்பட்ட  பேச்சு முறை.  அதில் தமிழன்/ இந்தியன்  மூளையும் பயன்பட்டுத்தான் மொழி உருவானது.  வெள்ளைக்காரன் அதிலிருந்து சொற்களை மேற்கொண்டான். அது மேலை மொழியன்று. 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 

வியாழன், 24 மார்ச், 2022

பெண்ணாசையில் மயங்கிய பேராசிரியன்

 

நேரிசை வெண்பா


ஆராய்ச்சிச் செம்மல் அருங்கலை ஆசிரியன்

நேராய்ப் புகழ்செறிந்த நிற்புணர்ந்த ---- கூரறிவோன்

ஆயினும் பாவாடை வாடைக் கறிவுகெடல்

மேய(து) உடுப்பலன்நோ வாம்.


ஆராய்ச்சிச் செம்மல் = ஆராய்ச்சித் தொழில்கொண்ட படிப்பாளி.

அருங்கலை ஆசிரியன் - கலைகளை மாணவர்க்குப் போதிப்போன்.

நேராய் - குற்றமற்ற முறையில்

புகழ் செறிந்த - புகழோங்கிய

நிற்பு - நிலை. ( நிற்புணர்ந்த - நிற்பு உணர்ந்த )

கூரறிவோன் --- கூர்மையான அறிவுடையோன்.

கெடல் - கெட்டுப் போதல்.

மேயது - உண்டானது.

உடுப்பலன் நோ - நட்சத்திர பலனால் வந்த துன்பம்.


இல்லை என்போர் பின்னூட்டம் இட்டு விவாதிக்கலாம். கருத்துரை இடுங்கள்.


இவ்வெண்பாவையும் அலகிடவும். செப்பலோசை பிழைத்தல்

தெரிவிக்கவும்.

இதற்குரிய செய்தியை இங்கு வாசித்தறியவும்

https://theindependent.sg/ex-ntu-researcher-took-upskirt-photos-of-400-women-over-2200-photos-found-from-2015-to-2021/


புதன், 23 மார்ச், 2022

விமான விபத்தில் இறந்தோர்க்கு இரங்கல்.


வெண்பா

நூற்றுமுப் பத்திருவர் நொய்விதாய்  மாய்ந்தனரே
காற்றில் பறந்தவா னூர்தி  கறங்கிவிழ, 
ஆற்றுமோ நெஞ்சம் அடுதுயர்காண் சீனாசெல்
கூற்றுவன் பேய்க்கூத்  தினை.

எங்கள் இரங்கல் மறைந்தோர் குடும்பத்தினர்க்கு.

நொய்விதாய் -  நொடியில்,  கறங்கி -  சுழன்று,   அடுதுயர் -  பெருந்துயர்.
கூற்றுவன் -  எமன். பேய்க்கூத்து - இரக்கமற்ற ஆட்டம்.
சீனாசெல் - சீனாவுக்குச் சென்ற.

செவ்வாய், 22 மார்ச், 2022

பரிதாபப் பன்றி.

வெண்பா 

வனவிலங்கு பன்றியெதிர்  வந்தபெண்மேல் மோதி

மனங்கலங்கக்  காயம்  உறவும்----- சினங்கொண்டார்

காக்கும் பணியினர் கண்டுபிடி கொல்லெனவும்

சேர்க்குமிடம் சேர்த்தார் அதை.

குறள்வெண்பா

யாவும் அறியா வனப்பன்றி   யாங்குசென்றாய்?

பாவமே எப்படியும் பார்


ரக்கம் எழுமே எனதுமனம் பன்றி

உறக்கமே கொள்வான மேல்.


முழுக்கதையை இங்கு சொடுக்கி வாசிக்கவும்.


Wild boar that knocked over woman at Yishun caught and put down

அழகும் அழகின்மையும்


 

அழகற்ற பொருள்மேலோர் ஒளிசென்றி ணைந்தால்

அதுதானும் அழகொன்று பெறலாகும் மிளிரும்;

அழகுள்ள பொருளென்னில் அழகோடும் அழகே,

அதுமகுடம் மேலொன்று மகுடம்தான் ஐயம்

இழையாது மயக்கற்ற தலைதன்னில் கண்டாய்.

இதுவழகே இதுவன்றே எனச்சொல்வ தெல்லாம்

பிழையென்று சொல்வார்தம் கருத்தன்றிக்  காணும்

பின்னொன்றே இல்லென்றே கொள்வாரே தம்பீ


இது எண்சீர் விருத்தம். பொருள் வருமாறு:

அழகற்ற பொருள்மேலோர்  ஒளிசென்றி ணைந்தால்  --   ஆழகில்லாத பொருள் ஒன்றின் மேல், ஒளிசென்று விழும்போது,

அதுதானும் அழகொன்று பெறலாகும்  -  அவ்வழகு குன்றிய பொருள் அழகைப் பெற்றுவிடுகிறது;  மிளிரும்; --- அதுவும் ஒளிவீசத் தொடங்கிவிடுகிறது.

அழகுள்ள பொருளென்னில்  - அழகான பொருள்மேல் ஒளி சென்று படியுங்கால், அழகோடும் அழகே,  --  அங்கு அழகோடு அழகு சேர்ந்து மிகுந்த அழகு உண்டாகிறது;

அதுமகுடம் மேலொன்று மகுடம்தான் ---  இவ்வாறு அழகுடன் அழகு இணைவது ஒரு மகுடத்தின்மேல் இன்னொரு மகுடம் வைத்தது போன்றது;  ( இரண்டடுக்கு மகுடம்.)

ஐயம் இழையாது =  சந்தேகம் ஏற்படா நிலையில்; 

மயக்கற்ற தலைதன்னில்---  தலை மயக்கம் இல்லாமல்  

கண்டாய். -இதைக் கண்டுகொள்வாய்; (ஐயமும் அஃது இன்மையும் தலைக்குள் உள்ள மூளையில் உண்டாவதால். "தலை தன்னில்" எனப்பட்டது.)

இதுவழகே இதுவன்றே எனச்சொல்வ தெல்லாம்--  இதுதான் அழகு,  இது அழகல்ல (அழகன்று)  என்று சொல்வதெல்லாம்; 

பிழையென்று சொல்வார்---  ஒருவிதப் பிழை என்று கூறுவாரும் உளர்; தம் கருத்தன்றிக்  காணும்

பின்னொன்றே இல்லென்றே கொள்வாரே --  ஒருவரின் அபிப்பிராயம் என்ற முடிபும் உள்ளது, 

தம்பீ  - விளி.

படத்தில் அழகற்ற பொருள்கள் என்று கருதப்படுபவை விளக்கொளியில் மின்னுகின்றன,

அறிக மகிழ்க.

மெய்ப்பில் பிழை காணப்படவில்லை.  எனினும்
மீள்பார்வை செய்யப்படும்.



திங்கள், 21 மார்ச், 2022

நல்லெண்ணம் போர்களைத் தவிர்க்கும்.

 பங்காளிச் சண்டைகள் நடக்கின்ற  போது

பக்கத்தில் உள்ளாரும்  படுகுத்தல் செய்வார்.

எங்கேனும் இப்புவியில் எதனாலோ ஓடும்

இதுபோலும் செய்கைகள் நமக்காகும் பாடம்!

மங்காத நல்லெண்ணம் மயக்கற்ற மூளை

மாநிலத்து நாடுகளில் நிலைகொள்ளும் நாளில்

தங்காது  பேரழிவு தடைகொள்ளும் தீமை

தாரணியும் ஓரணியில் சீர்பெறவே காண்பீர்.


பங்காளி - முன் ஒன்றாயிருந்து பிரிந்தோர்

படுகுத்தல் -  சண்டையைப் பெரிதாக்குதல்.

ஓடும் - நிகழும்

தாரணி - பூமி.

மயக்கற்ற - தெளிவான

ஞாயிறு, 20 மார்ச், 2022

"பத்திரமாகப் போ" என்றால் என்ன?

 பத்திரம் என்றாலே  "  இலை " என்றுதான் பொருள்.  இப்பொருளில் பழைய நூல்களில் இச்சொல் வந்துள்ளது.  ஆனால் வழக்காற்றில் (  பயன்பாட்டில் ) பத்திரமாக என்றால் கவனமாக என்று பொருள்கொள்ளல் சரி.  எழுதி வாங்கிய ஒரு பத்திரம் காணாமற் போவதென்பது தொல்லை பல விளைக்குமாதலால், கவனம் தேவை என்பது முன்னாளிலே உணரப்பட்ட ஒன்றாம்.  ஆகவே " பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்றால், ஒரு பத்திரத்தை எவ்வாறு கவனமுடன் கையாள்வாயோ அவ்வாறே கவனம் கொள் என்பது பொருளென்பது சொல்லிவிளக்க வேண்டாதது என்று கூறலாம்.

இலை என்ற பொருள் இச்சொல்லுக்கு எவ்வாறு ஏற்பட்டதென்பதை நாம் விளக்கியுள்ளோம்.

இவற்றை நீங்கள் வாசித்தறிதல்  பொருள்விளக்கம் தரும்:

பத்திரம் :   https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_56.html

பத்திரம் - ஓலை:   https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_21.html

பாதுகாப்பு என்ற பொருள் ( பல சொற்கள் )  https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_23.html

பட்டை  என்பது மரப்பட்டை. இதிலிருந்து நமக்குப் பட்டையம் என்ற சொல் கிடைக்கிறது.

ஓர் இலைக்கொத்து என்பதை இணுக்கு என்போம்.

பத்திரம் என்பது பற்றி இருத்தலினால் ஏற்பட்ட பெயரென்பது விளக்கப்பட்டது.

எனவே பத்திரமாக இரு என்றால் இருந்ததுபோலவே பற்றிக்கொண்டு இரு, பற்றுதலை விட்டுவிடாதே என்றும் விரித்துணரத்தக்க சொல் ஆகும்.

பல்திறம் என்ற சொல்லும் புணர்ச்சியில் பற்றிறம் என்று திரியும்.   "பற்றிறமாக" இரு எனின், பல திறங்களோடும் இரு என்று பொருள்படும்.  இப்பொருளிலும் இவ்வெழுத்துக்களோடும் இச்சொல்லை இன்னும் எதிர்கொள்ளவில்லை.  வந்துழிக் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.

இனிப்புநோய்க் காலில்புண் ஏற்படுதல்


 காலுக்கு வந்தரத்தம் மேலேறிச் சென்று

காயாமல் இருதயத்துள் புதிதாகி வந்து 

ஆளுக்கு வேண்டியதோர் அருநன்மை தந்தே

அன்றாடம் உடலுக்கு வலிமைதர வேண்டும்

தோலுக்குக் கீழிருந்து கருநிறமே காலில்

தோன்றுவதும் அரிப்பென்றால் துயர்தன்னை நீக்க

நாளுயர்ந்து  செல்லாமல் நன்மருந்து நாடி

நயமாக மருத்துவரை நண்ணுதலும் கொள்வீர்.


வந்த அரத்தம் >  வந்தரத்தம்.

அரத்தம் -  இரத்தம்

காயாமல்  - "வந்தரத்தம் காயாமல்" என்று இணைக்க.

அருநன்மை -  அரிய நன்மை

நாளுயர்ந்து -  காலம் கடந்து

நண்ணுதல் --  அணுகுதல்



இனிப்புநீர் என்னுமோர் இன்னல்நோய் வந்தால்

தனித்துன்பு பற்பல தம்பீ -----  இனித்தயக்கம்

இல்லாமல் போய்க்காண்க  இத்துன்பம் வந்தக்கால்

ஒல்லும்வாய் தேடேல்  நலம்.


துன்பு  -  துன்பம்.  தனித்துன்பம் - இணையில்லாத ஒரு துன்பம்.

வந்தக்கால் - வந்த காலத்தில்.

ஒல்லும்வாய் - இயன்றவழியில்

தேடேல்  - தேடுக


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


சனி, 19 மார்ச், 2022

கொடுமை, நேர்மை, அடிச்சொற்கள்.

 தமிழினால் விளக்கவியலாத மொழிகள் உலகில் சிலவே என்பது எம் கருத்து ஆகும். இதை வாதிட்டுக் கொண்டிருப்பதைவிட, உடனே ஒரு அயற்சொல்லைத் தமிழால் விளக்கிவிட்டு அப்பால் சென்றுவிடுதல் நன்மை பயக்கும்.

இதற்கு குறு என்ற அடிச்சொல்லை எடுத்துக்கொண்டால்,  மனம் குறுகிய தன்மை என்று கொண்டு,  அல் என்னும் தமிழ் விகுதியை இணைத்து,  "குறுவல்"  என்னும் சொல்லை உண்டாக்கிவிடலாம். கொடுமையாக நடந்துகொள்வோர் எவ்வாற்றானும் விரிந்த மனப்பான்மை உடையாரல்லர்.  ஆகையால்  குறுவல் என்று நாம் உண்டாக்கிய சொல்,  ஆங்கில மொழியில் உள்ள குருவலென்பதுடன் ஒத்திசைந்தே செல்வது காணலாம்.  டு என்னும் விகுதியைக் கொடுத்து,  "குறுடு" என்றாலும், பெரிதும் வேறுபடுதல் இல்லை. குறடு என்ற சொல்லும் தமிழில் உண்டு.

குருவல் என்ற ஆங்கிலச்சொல்,  crudelis  என்ற இலத்தீனிலிருந்து போந்ததாகவே மேலையரும் கொள்வதால்,  "குறுடு"  "குறடு" என்பவற்றினின்று ம் தொலைவில் இல்லை.

கொடிறு  -  கொறுடு என்பதில் எழுத்துமுறைமாற்று அமைப்பைக் காணலாம். வெளிநாட்டு மொழிகட்குத் தொடர்பொன்றும் இல்லாமலே இத்தகு  முறைமாற்றுச் சொல்லமைவு தமிழில் காணப்படுகிறது.

ஆங்கிலச் சொல்லமைவு, குருவல் என்பதில் கரடுமுரடான தன்மை என்ற கருத்தடிப்படையில் சொல் எழுந்ததாகச் சொல்வர்.

கொடுமை குறிக்கும் பொருண்மை,  வளைவு என்பதே.  தமிழர்  நேர்மை,  கொடுமை என்று எதிர்க்கருத்துக்களை உணர்ந்துகொண்டனர். கொடுங்கோல் என்பது கோல்வளைவு குறிக்கும். தமிழில் கோடு என்பதே வளைவு என்பதுதான். கொடைக்கானலில்  பொருட்கொடை குறிக்கும் தன்மை எதையும் கண்டுபிடிப்பதை விட,  கொடு -  வளைவு என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம்.  கொடு -  வளைவு, கொடு ஐ .  >  கொடை, வளைவு என்று அறிய, அங்கு சென்று பார்த்தாலும் வளைந்த மலைகள் இருத்தலைக் கண்டுகொள்ளலாம். நாம் வழங்கும் கொடை என்ற சொல்லுடன் ( நன் கொடை)   இது மாறுபடுவதாகும்.  நல்+கொடை > நன்கொடை.

நாட்டின் கொடியும் வளைந்து வளைந்து காற்றிலாடுவதுதான்.  கொடு > கொடி ஆகிறது. பண்டைத் தமிழர் ஒன்றை ஒருவற்குக் கொடுக்கும்போதும் வளைந்தே கொடுத்தனர்.  இவ்வாறு உண்டானதுதான் கொடுத்தல் என்னும் சொல்.

இவற்றைப் பின்னொருகால் தொடர்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சில திருத்தங்கள்: 20032022 1330


வெள்ளி, 18 மார்ச், 2022

உயிரைப் பணயம் வைத்து வேலைசெய்தல்.

 https://theindependent.sg/helper-without-safety-harness-seen-cleaning-exterior-of-window-of-high-rise-flat/

சில வேலையாட்கள் விபத்து நிகழ்ந்துவிடக் கூடிய நிலையில் தங்கள் கடமையை ஆற்றுகிறார்கள் என்பது இப்போது பரவுசெய்தி  (வைரல்)  ஆகிவருகின்றது.  மேலுள்ள தொடர்பினைச் சொடுக்கி இந்தச் செய்தியை வாசித்துக்கொள்ளுங்கள். உங்கள் உறவினர் யாரும் வெளிநாட்டில் வேலைசெய்துகொண்டிருந்தால் சொற்ப ஊதியத்திற்காக இத்தகைய வேலைகளைச் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்துவது நன்று.

சொந்தப் பாதுகாப்பு எப்போதும் முதன்மையாக இருக்கவேண்டும்.

இதில் வெளிவந்துள்ள படத்தில் இந்நிகழ்வு தெளிவாயிருக்கிறது.

வியாழன், 17 மார்ச், 2022

இறப்பும் ஏற்பட்ட வரப்பும்--- கடவுள்செயல்

 போனவர்கள் போய்விட்டார் என்று சொல்லி

இருப்பவர்கள் வருந்துகின்ற உலக விந்தை!

ஆனஒரு செயல்தன்னால் போன மாந்தன்

அவ்வாறே திரும்பிவர அறிந்தோ மில்லை.

தீனர்பெருஞ் செல்வரென வேறு  பாடு

தெரிந்திடவும்  இதிலேதும் முடிவ தில்லை;

காணுமொரு ஞாலத்தின் கதியைத் தானே

கடவுளியக் கம்மெனலும் காட்சி யன்றோ?


போனவர் - இறந்தவர்

இருப்பவர் - வாழ்கின்றவர்

தீனர் - ஏழைகள்

ஞாலம் - உலகம்

கதி - செல்வழி

காட்சி - கண்ட உண்மை 

வரப்பு  - எல்லை

இறப்பு - மரணம்


தீனர் என்ற சொல்:  https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_22.html

தின்பதற்குத் தேடுவதையே ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செலவிடுவானாகில் அவன் தீனனே.   அவன் வாழ்வில் உண்பதே முதலாகின்றது. மற்றும் தின்னுதல்  -  தீனி என்ற சொற்கள் விலங்குபோல உண்ணுதலைக் குறிக்கும்.  விலங்குணவு உண்ணும் மனிதனையும் குறிக்கும். ஏழ்மை என்பது அடிப்படைத் துன்பமாகும்.

திங்கள், 14 மார்ச், 2022

ஆதரவு தேடிய இலை தொலைந்தது

 [செடி, இலை, வேலி இவைகளும் ஆடும் இந்த புதுக்கவிதை நாடகத்தில்

நடிக்கின்றன.  இலை - உக்கிரேன்;  அது முளைத்த இடத்தைச் செடி என்றேன், 

ஆடு-   இரசியா?   இந்த வருணனை சரியா?  எனக்குத் தெரியவில்லை. வேலி - 

உலகின் பாதுகாப்புத் தரும் நாடுகள்.   புதுக்கவிதை ஆதலால்,  எதுகை 

மோனைகள் குறைந்தன.  நான் புதுக்கவிதை எழுதியது குறைவுதான்.  

நன்றாய்  இருந்தால்  நுகர்ந்து மகிழ்க. சரியில்லை என்றால் பின்னூட்டம் 

செய்க.  முளைத்த இடம் ருசியாவின் பக்கம்.   ஆதலால் ருசியாதான் செடி 

என்கிறீர்களா.  அப்படியானால்  ஆடு - நேட்டோ நாடுகளா?  எது சரி?]


மோனைகள் கொஞ்சமே.

அந்தச் செடியில் முளைத்துள்ளேன்,

அதிலுள்ள இலை நான்.

என்றன் இடம்நோக்கி வருகிறதே,

அறிந்தேன் அது ஓர் ஆடு.

என்னை மென்று விழுங்கிவிடும்,

பின்னே நான் இங்கில்லை.

தனியாய் இயங்கும் எனது சுதந்திரம்

பறிபோகுமே, பறிபோகுமே!


நடந்து போகையில் உங்கள் கண்முன்

கிடந்து ஆடும் இலைநான்

என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்! என்னை

நீங்கள் காப்பாற்றுங்கள்.

இன்னொரு பிற அணி வயிற்றினில் கரைந்து

காணாமல் போகும் நாள் வந்ததோ.

தனிமை வாழ்வு, இனிமை வாழ்வு,

எனதின்ப வாழ்வு நிலையாததோ?


தனியாக இலையாய் யார்க்கும் நிகராய்

மணிபோல் சொலிப்பது நானே

இனிமேலும் அதுவே வாழும் கனா

பாரதி பாடிய சுதந்திரக் கனா.


உக்கிரேன் என்ற நிலையும் கவிழ்ந்தது

இலைநான் என்ற வாழ்வும் கரைந்தது.


என் குற்றம்தான் என்ன?

ஒரு வேலியைத் தேடி விரைந்தது.

வில்மீன்கொடி எழுதிய : தமிழ்மன்னன் சாதி பற்றியது.


மீனா வம்சம் நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை. மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும். ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்

நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில்  வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர். மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது. மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர் சாந்தா மீனா பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள். கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர். சிந்து சமவெளி நாகரிகம் சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம். குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது. மகாபாரதம் மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்

பில்மீனாக்கள் மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர்  கோட்டையை கட்டினார்கள். வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர். ஆமர் மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன. ஜகா இனத்தவரின் பதிவுகள் சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது   ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம் மீன். 


அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம் மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது. மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர் சாந்தா மீனா பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள். கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர். சிந்து சமவெளி நாகரிகம் சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம். குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது. மகாபாரதம் மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம். பில்மீனாக்கள் மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள். வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர். ஆமர் மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன. ஜகா இனத்தவரின் பதிவுகள் சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறதுனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள்பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர்மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்ஆமர் மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தனஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டதுஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனாஅமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டதுகிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளனஜகா இனத்தவரின் பதிவுகள் சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படிசாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறதுஜகாஸின் சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் ஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது

எழுதியவர்: நேயர் வில்மீன்கொடி.