ஒன்றைக் கேட்டு அல்லது பார்த்த மாத்திரத்தில், " ஆ " என்று வியத்தல் இன்றும் உள்ளதே ஆகும். ஆ என்ற ஒலி, வியப்பில் மட்டுமின்றி, ஏனைத் தருணங்களிலும் எழக்கூடியது.
ஒரு கணவர் வேடமிட்டுக்கொண்டு மனைவியின்முன் வந்து நிற்கையில், அவளால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. அவர் தம் வேடத்தைக் கலைத்தபின் " ஆ! நீங்களா!" என்று வியக்குங்கால் வரும் ஒலிக்குறிப்பாகிய "ஆ!" என்பதைக் கவனிக்கவும்.
வியப்பில் ஆழ்ந்துவிட்ட மனிதன், ஓர் சரிவை அடைகின்றான். சரியம் என்ற சொல் இந்த நிலையைத் தெரிவிக்கிறது. இஃது ஓர் தளர்வு நிலை ஆகும்.
ஆ+ சரி + அம் = ஆச்சரியம் ஆகின்றது.
சரி என்பது ஒப்புக்கொள்வு குறிப்பதாகவும் ஆகிறது.
இன்னொரு வகையிலும் விளக்கலாம். பின்பு அளவளாவுவோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக