ஏறத்தாழ ஒருவார காலத்தில் அன்பர் ஒருவருக்கு யாம் அனுப்பிய தொலைபேசி வாழ்த்துக்களைத் தொகுத்துப் புனைந்த ஒரு "கவிதை".
நன்றாயிருக்கிறதா படித்துப் பாருங்கள்.
காலைவணக்கம் சொல்லும் தித்திக்கும் திங்கள்
காசினியில் உளவெல்லாம் முருகென்னும் அழகே
சீலமருள் குடும்பநலம் உலகமைதி பெருகி.
செந்தமிழால் அனைவருமே பணிவோம்நம் சிவனை!
மாலைமதி தோன்றுகின்ற வரையொளிரும் பகலோன்
மருவியநா ராயணனை மனம்நெகிழ்ந்து புகழ்வீர்
சோலையழ கதிலாழ்ந்து சூழுலவு தென்றல்
சொந்தம்நம தென்றினியே நன்றனைத்தும் கொள்வோம்.
இதைப் படிக்கையில் இது வாழ்த்துச் செய்தியைக் கவிதையாக்கியது என்று ஓரளவு புரிந்துகொள்ளமுடியும். சூர்யநாராயணனைப் பணிவோம் என்ற வாழ்த்தை "பகலோன் மருவிய நாராயணனைப் புகழ்வீர்" என்று விரித்ததிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.
முன்பு எழுதியவற்றை அழித்துவிட்டோம்.. ஏன் அழிக்கவேண்டும்? என்ற எண்ணம் தோன்றியது. நம் நேயர்களுக்கும் பகிர்ந்தளிப்போமே என்று எண்ணினோம். இங்குக் கவிதை பிறந்தது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக