(அறுசீர் விருத்தம்)
காதுக்குள் அலைபோல் செய்தி
கருத்துகள் காட்டும் வந்தே
மோதிடும் நெஞ்சில் ஆங்கு
முழுத்தத் துவம்மு கிழ்க்கும்;
யாதொரு தயக்கம் இன்றி
யாத்துடன் பயனே காண்க;
மீதமாய் நிற்கும் வாழ்வில்
மேலடைந் திடுவீர் உண்மை!
இருளினில் ஒளிபோல் உண்மை
இருவிழிக் கின்பம் சேர்க்கும்,
பொருண்மையில் நாட்டம் கொள்வார்
புவியினில் யாங்கும் காண்பார்;
தெருள்பெறத் தேர்ந்து கொள்வோர்
தேடின யாண்டும் வான்கார்
குளிர்மழை போல்பெய் காலை
குதித்தெழு மகிழ்கொள் வாரே.
அன்றாடச் செய்திகளிலும் உண்மை கண்டு
அவற்றை வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சற்றே தேடிப்பார்த்தல் அவை கிட்டிவிடும்.
தெருள் = தெளிவு
வான் கார் - வானில் மேகம் கருத்து (மழை பொழிதலைக் குறிக்கும்.)
மகிழ் - மகிழ்ச்சி
முகிழ்க்கும் - ஊறி வெளிவரும்
யாப்பு:
ஒவ்வொரு வரியிலும் மூன்று சீர்களில்
நடுச்சீர் நிரையாகவும் நேராகவும் மாறிமாறி
வந்து ஒலிக்கிளர்ச்சி தரும்படி தொடுக்கப்பட்டது.
Less monotony.
தெருள் - குளிர். இங்கு ர - ள முறைமாற்று இனவெதுகை. வழக்கம்போல் வரும் எதுகைக்கு இது வேறுபட்டு இன்பமுறுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக