இந்த ஊரின் பெயர், இப்போது திருவஞ்சைக்களம் என்பதாகவும் இது கோரளத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. இங்கு முன்னிருந்தவர்கள், அரசரின் அஞ்சலியைக் கண்டு இன்புற்றனர் என்று தெரிகிறது.
இது திருச்சூர் மாவட்டத்திலுள்ள மகாதேவசாமி கோயிலாகும். இது அஞ்சைக்களம் என்றும் சொல்லப்படுகிறது. அஞ்சைக்களத்தப்பனே என்று தேவாரப்பாடலில் வருகிறது. தேவாரம் (913.1)
அஞ்சலி என்பது அகஞ்செலி என்பதன் திரிபு. அஞ்சை என்பது அகஞ்செய் என்பதன் திரிபே. அஞ்சைக்களம் என்பது அஞ்சைக்குளம் என்று திரிந்துவிட்டதென்று தெரிகிறது.
அரசர்கள் அரியன மேற்கொள்தற்கு இங்கு வந்து வணங்கிப் பின் செயல் கொண்டனர் என்று அறிக.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக