கல் சிதைவு என்றால் கல் உடைந்து சிறியதாகி அல்லது தேய்ந்து சிறியதாகி பிற கற்கருவிகளை உண்டாக்கிக்கொள்வது என்பதுதான். இது கற்காலத்திலிருந்த நம்மிடையே நடைபெற்று வருவதாக இருந்தாலும், எல்லாச் சொற்சிதைவுகளையும் ஒரே இடுகையில் கவனித்துவிட முடியாது. நேரம் என்பது தேவைப்படும்.
இத்தகைய சொற்களையெல்லாம் பொறுக்கிச் சேர்த்து ஒரு நூலாகவும் எழுதலாம். நீங்கள் எழுதி ஒரு சேவையைச் செய்யலாம்,
இந்தத் தஅலிப்பு எமக்கு பிடித்துப்போய்விட்ட படியால் இதை மாற்றாமல் வைத்துக்கொண்டு இங்கு சில் கூறுவேம்.
கல் உடைந்து சிறிதாகிவிட்டால், அதையும் சில கருவிகட்கோ பொருட்களுக்கோ பயன்படுத்த வைத்துக்கொள்ளலாம்.. கற்காலத்தில் இதைச் செய்து மகிழ்ந்திருப்பார்கள்.
இன்று கச்சிதம் என்ற சொல்லை மட்டும் கவனிப்போம்.
முதலில் சிதைவு என்ற சொல் கவனிப்போம். சில்> சிறு> சிறிது > சிது> சிதை> சிதைவு என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு திரிகையில், சில முழுச்சொற்கள் போல் தோன்றும். சிது என்பது சிறிது என்பது நடுகெட்டு அல்லது இடைமறைந்து, அவ்வாறு வந்தது. அதிலிருந்து இன்னொரு சொல் வந்ததைக் கண்டுகொள்வீர்.
கல் சிதை> கல் சிதம்> கச்சிதம். ஒரு கல் சிதைந்து நன்றாக அமைந்துவிட்டால் மனிதன் அதை எடுத்து, கொஞ்சம் சரிசெய்து கருவியாக்கிக் கொளல். மிக்கச் சரியாக அமைந்தது என்று பொருள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக