செவ்வாய், 3 நவம்பர், 2026

அருச்சுனன்

 இன்று இயற்பெயராக வழங்கும் ''அருச்சுனன்''  என்ற சொல்லைக் கவனிப்போம்.

நல்ல பல செயல்களுக்கும் ஊற்றாக இருக்கும் ஒருவனைச் சுனையுடன் ஒப்பிடலாம்.  ஒரு சுனையினின்று நல்ல நீர் ஊறி வருவதைப்போலவே, சிறந்த மனிதன் ஒருவனிடமிருந்து நல்ல செயல்களும் எண்ணங்களும் ஊற்றுப்போல் ஊறி வெளிப்படும்.  தெளிவும் அழகும் போற்றும் இச் செயல்களும் எண்ணங்களும் வெளிப்படும்  மனிதனாக அருச்சுனன் மகாபாரதத்தில் கவர்கின்றான். இவன் பெயர் அருஞ்சுனை  என்ற தமிழ்ப்பெயரிலிருந்து, அருச்சுனன்> அருச்சுனா>  அர்ஜுனா என்று அறியப் பொருத்தமுடையதாகிறது.

மகாபாரதக் கதை,  வடநாட்டில் நடைபெற்றதாகக் கருதுவதற்குத் தொன்றுதொட்டு ஆசிரியர் சிலர் வழிசெய்திருந்த போதிலும்,  கண்ணனின் நீலநிறம்  அவன் தென்னாட்டுத் தெய்வமாக இருந்து வடக்கில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளான் என்றே அறியத் தோன்றுகின்றது.  இப்படி மதங்களும் அதன்கண் காணும் நிகழ்வுகளும் பயன்பாட்டின் காரணமாக, இடம் மாறிச் சமய வரலாறுகளில் தோற்றம் தருதல் கூடும்.  கிறிஸ்துவ மதத்தில் உரோமாபுரிக்கு ஓர் ஒளி கிடைத்திருந்தாலும்,  அது தோன்றியது இசுரேலில்தான். நிகழ்விடங்கள் எளிதில் இவ்வாறு மாறிக்கிட்டுதல் கூடும். இதனால் இழப்புகள் ஏதுமில்லை. இராமகாதை முக்கிய  நிகழ்விடம் வடக்காயினும், தென்னாட்டினை முற்றிலும் கழற்றிவிட முடியவில்லை.

மகாபாரதச் சொற்கள் பலவற்றைத் தமிழுடன் பொருத்திப் பார்த்துப் பொருள் கூறியுள்ளோம்.  ஓரிடத்தில் நடந்ததை மறைத்து வேறோர் இடத்தில் நடந்ததாகக் காட்டுவது கதைசொல்வோருக்குப் புதிது அன்று.  கதை தரும் படிப்பினை முதன்மையே அன்றி, இடம் அன்று.  இதிற் சூழச்சி ஏதும் இல்லை.

சிலம்பு அதிகாரம் சிலப்பதிகாரம் என்றாயது போலுமே அருஞ்சுனையன் என்பது அருச்சுனா என்று வலி மிக்கு வந்தது. வலி எனில் வல்லினம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை