திங்கள், 16 நவம்பர், 2026

பஞ்சம் என்ற தரவு பிற சில

 பஞ்சம் என்பது எப்படி அமைந்தது?

பயிர்த்தொழிலில் ஈடுபட்டிருப்போர் அப்பயிர்களை விளைவித்து அதை உண்போருக்கு அளிக்கு முன்னரே, அதற்கு இடையூறான நிலைகள் நாட்டில் நிலவிடும் காரணத்தால் பஞ்சம் நாட்டில் ஏற்படுகிறது என்பதை பண்டை நாட்களில் உணர்ந்தனர். இதனால் பயில், மற்றும் பை என்ற அடிச்சொற்கள் திரிந்து பஞ்சம் என்ற சொல் வந்தது.  பயி(ல்), அல்லது (பை) என்பன இளநாட்களை,  அல்லது தொடக்க நாட்களைக் குறிக்கவல்லவை. இது மனித முயற்சியின் தொடக்கத்தையும் இயற்கையில் ஏற்படும் காலங்களின் தொடக்கத்தையும் ஒருங்கு குறிக்கும்.  ஒன்று அல்லது பிறிது என்று எதையும் உள்ளடக்கும்.  பையல் என்பது வயது முதிர்ச்சி அடையாதவனைக் குறிக்கும்.  

''பையலோ டிணங்கேல்'' (ஔவையார்) என்பது காண்க.  பயில்தலும் தொடக்க முயற்சி காரணமாக ஏற்பட்ட வழக்கு, எனினும் பயில்தல் எப்போதும் நடைபெறலாம்.  அதனால் சொல்லின் பொருள் (தொடக்க முயற்சி) பாதிக்கப்படுவதில்லை.

பயில் என்பது இறந்த காலத்தில் பயின்று,  பயின்ற என்று திரிகின்றது. இயல்தல் என்பதினின்று,  இயன்ற, இயன்று என்பவை வருவனவாகும். துயின்ற, துயின்று என்பவை துயில்தல் என்பவற்றினின்றாம்.

பயின்ற >பயின்> பன் > பன்ச >  பஞ்சம் என்று திரியும்.

பயின் > பயிஞ்சம் > பஞ்சம்  அல்லது பை>பைஞ்சம்> பஞ்சம்.

இதேபோல் அமைந்த இன்னொரு சொல், ஆனால் இருபிறப்பி.

வை> வயின்> வயிஞ்சம்> வஞ்சம். ( வைத்துத் தீர்த்துக்கொள்தல்).

வல்> வன் > வன்சம்> வஞ்சம் என்பதும் ஆகும்

புத்தியில் நிலைத்தன்மை வளராமை குறிக்கவும் பயி> பை என்பதும் பயன்படும் சொல்.

பை > பைத்து  > பைத்து+ இயம் > பைத்தியம்.  அறிவு அல்லது புத்தி வளராமையில் ஏற்படுவதால்  பைத்தியம் ஏற்படுவதாக நினைத்தனர்.  இளமை என்பதும் வளராமையும் ஒன்றாகக் கருதி அமைத்தனர்.

பை-  -   பைத்து :   பைம்மையை உடையது என்று பொருள்.  உடை> உடைத்து என்ற சொல் திருக்குறளில் வரும். கண்டுகொள்க.  அது போன்ற அமைப்பு இது.

பைத்து இயம் என்றால் பைம்மை உடையதன்மையினால் இயன்ற நிலை.  அதே சொற்களைக் கொண்டு வாக்கியத்தை அமைத்து உணர்க. இயன்ற என்றால் உண்டான.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை


கருத்துகள் இல்லை: