செவ்வாய், 10 நவம்பர், 2026

பந்தல் என்பது (மீட்டுரு: பர> பரந்): இடையோடிகள்.

 பந்தல் என்ற சொல்லைப் பார்ப்போம், 

பந்தல் என்பது, விரித்து அல்லது பரந்து நிற்குமாறு செய்து வைக்கப்படும் ஒரு தற்காலிகக் கூரை போன்ற அமைப்பு  ஆகும். இது:

பரத்தல் வினைச்சொல்.

பரந்தல் >  பந்தல்  ( ரகரம் மறைந்துவிட்ட அல்லது விடுபட்ட) சொல்.  அதாவது ப(ர)ந்தல்.

இதை இடைக்குறைச் சொல் என்போம்.

பர> பரந்> பந் என்றும் விளக்கலாம்.  பர - அடிச்சொல்.  பரந் > பந் என்பன  இடையோடிகள்.

பர என்றாலே பொருள் உள்ளது.  ப என்று என்றால் அது பரவலைக் குறிப்பதாகத் தெரியவில்லை. பலகை என்ற சொல்லிலும் ''ப'' மட்டுமே உள்ளது. ரகரம் லகரமாகத் திரிதலால்,  பரகை > பலகை என்று காட்டுவது திரிபு விதிகட்கு உட்படுவதே  ஆகும்.  மூலச்சொல் பரந்தல் என்று கொள்ளுதல்,  வலிமை சேர்க்கும் சொல் தரவாக்கம் ஆகும்.

தமிழில் அழிந்தபோன சொற்கள் பலவாகும்.  பிறமொழிகட்கும் இதுவே உண்மையாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை




பந்தலை நீக்குவது ''தளையவிழ்தல்''   அல்லது தளையவித்தல் என்று சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை: