சனி, 31 அக்டோபர், 2026

நிரூபித்தல்

 இச்சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.

யார் ஆய்வாளன் என்பது:

நாம் இங்கு மூலச்சொற்கள், அடிச்சொற்கள், இன்ன பிற சொற்களின் பகவுகளைக் கொண்டே ஆய்ந்து கூறுகிறோம். நாம் அடிச்சொற்களை ஆராயாமல் அல்லது ஆராய்ந்திருந்தால் அதை வெளியிடாமல் தம் பதவிகளை மட்டும் ஆதாரமாக வைத்து வெளிப்படுத்திய முடிவுகளை அடிப்படையாக வைத்து எதையும் கூறுவதில்லை. இன்னொருவன் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருப்பவன் எவ்வளவு உயரத்தில் இருப்பவனாயினும் அவன் ஆய்வாளன் அல்லன்.

சொல்லின் பகவுகள் அல்லது பகுதிச்சொற்கள்:

இச்சொல்லின் முதற் பகவு:  நிறு  என்பது.  இது நிறுவுதல் என்ற சொல்லின் அடிச்சொல் தான். நிறுவுதல் என்பதற்கும் நிரூபித்தல் என்பதற்கும் இடையில் பொருண்மையில் எந்த வேறுபாடும் இல்லை. நிறுவுதல் என்றால் ஒன்றை ஆய்வின் அல்லது விசாரணயின் மூலமக நிலைநிறுத்துதல்.  மெய்ப்பித்தல் எனினுமாம்.

இதனை  நிரூபித்தல் .  நிறு + உருவித்தல் என்று தமிழிற் பிரித்துப் பொருள் சொல்லவேண்டும்.  உருவித்தல் - ரூபித்தல் என்பவற்றில் பின்னது தலைகழன்ற ஒரு சொல்.  உருவித்தல் என்பதில் வரும் உகரம் வெட்டப்பட்டுச் சொல் அமைந்திருப்பதால்,  நாம் உருவித்தல் என்ற சொல்லையே  நிறுவு என்பதனுடன் இணைத்து இச்சொல்லை விளக்குகின்றோம்.

இதனுடன் பொருளொருமை உடைய பிற தனித்தமிழ்ச் சொற்கள்,  எண்பித்தல், மெய்ப்பித்தல் என்பனவாகும். இக்கருத்துக்களைப் பிற சொற்களால் விரித்தும்  எழுதலாம் என்று அறிக.

சால்வுறு,  நிறுவுதல்- -பண்ணுதல் முதலியவை.

சால்வுறுத்துதல் என்பதையும் ஏற்புழிப் பயன்படுத்தலாம். இச்சொல்லை கந்தபுராணத்தில் கண்டுபிடித்துள்ளனர். (அவைபுகு.34). ''முத்தின் சால்வுறு கண்டசரம்'' என்றுவரும். ''முத்தும் பதித்து  மெய்ப்பிக்கப்பட்ட கண்டமாலை '' எனக்கொள்க.  பொன்மாலை அன்றென்றால் முத்தை எப்படிப்பதிப்பார்கள்? என்று கேள்வி வருதலால, வேறு காரணம் வேண்டாமல் அது பொன்னாலான கண்டமாலை தான்.  நிரூபணம் (proof) எவ்வாறு அமைகிறது என்பது கண்டுகொள்க. இதை நிருபணம் என்றும் எழுதுவர். இச்சொல் நிறுவுதலைப் பண்ணுதல் என்ற வழக்கில் வந்தமைந்தது. இதில் வரும்  பணம் என்பது பண்ணுதல் அடியாக அமைந்த சொல்:  பண்ணு> பண் ( வினைச்சொல்) + அம் > பணம் என்று இறுதிப் பகுதி அமைகிறது.  பண்> பண்ணு;  பண்+ அம் என்று வரினும்  பணம் என்று வருதல், பண்ணுதல் என்ற வினையில் வருதலாம். நிரூபணம் என்பது இருவினைக் கூட்டு.

அறிக மகிழக.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை.



திருவியம் ( திரு+இயம்) என்ற சொல் தொலைந்ததோ?

 இவற்றையும் நீங்கள் படித்தறிந்து கொள்ளுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_29.html   திவ்வியம்.

https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_63.html  திவ்வியம்

https://sivamaalaa.blogspot.com/2025/11/blog-post_29.html.திவ்வியம்

இவ்  ஆய்வின் மூலம் திருவியம் என்ற சொல்,  திரு மற்றும் இயம் என்ற விகுதி என்று இரண்டையும் இணைத்தால் உண்டாகிறது.  இயம் விகுதி,  இ+ அம் என்ற இரண்டு விகுதிகளின் இணைப்பாம்.   இதன் பொருள் '' இதன் அமைப்பு''  என்பதுதான்.   அம் என்பது அமைப்பு என்பதன் அடிச்சொல். அமிழ் என்ற சொல்லில்  அம்+ இழ் என்ற இரண்டு உள்ளன.  கீழே இழுப்புறுவதற்கும் இழ் என்பது அடியாய் இருப்பதனால்,  அமிழ் என்பது அமைந்து இழுத்தல் என்று பொருள்படும். இயம் என்பது அருகில் அமைவது என்னும் பொருளது ஆகும்.  இ = அருகில். அம் - அமைவது.  விகுதிகளுக்கு நாம் பொருள் கணிக்கமலே எந்தச் சொல்லையும் அறிந்துகொள்ளுதல் கூடும்.

திருவியம் > திவ்வியம் என்பது ருகரம் மறைந்த இடைக்குறைச் சொல்.  திவ்வியம் என்று ஒரு வகர ஒற்றுத் தோன்றியது திரிபு ஆகும்.  மொழி மாற்றங்கள் உடையது ஆதலின், இலக்கணத்தில் இல்லாத திரிபுகளும் ஏற்படுதல் உண்டு.  நம் பேச்சுமொழியில் இல்லாத திரிபுகள் இல என்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

  பகிர்வுரிமை



வியாழன், 29 அக்டோபர், 2026

விஷயம்.

 விசு என்பது தமிழ் அடிச்சொல்.  இதிலிருந்து சில சொற்கள் உருவாகியுள்ளன. இதில் தலையாயது:  விசும்பு  என்ற காயப்பொருட் கிளவி ஆகும்.  இது விரிவு குறிக்கும் அடியினின்று தோன்றுவதாகும்.  காயம் என்ற பழைய சொல்,  பிற்காலத்து  ஆகாயம் ஆயிற்று. ஆகாயம் என்பதில் ஆ என்பது  ஆதல் குறிக்கும் ''வினை முன்னொட்டு''  ஆகும்.  பகலோன், பால்நிலவு ஆகியவை காயும் இடமே காயம் எனப்பட்டது.  ஆ என்று வாயொலிக்கையில் வாய் திறந்து சொல்வதனால், அதை விரிவு குறிக்கவும் எடுத்துக்கொள்ளுதல் கூடும்..

விசு என்பதனோடு தொடர்பு காணும் சொற்கள்:

விசு -  விசும்பு.   பு  விகுதி.

விசு -  விசை.  ( விசை என்னும் இயக்கக் குறிப்பு,  பொருளின் ஆட்டம் விரிவாதலையே குறிக்கிறது.)

விசனம் அல்லது விதனம் என்பதும் கவலை விரிவினையே குறிக்கிறது.  ச-த போலி.  தனி> சனி, என்பதில், தனித்தன்மை உள்ள ''கிரகம்'' சனி என்றானது.

விசு > விசாரி  ( விசு+ ஆர்+ இ )   . இங்கு ஆர்தல் என்பதும் விரிவு குறிக்கும்.  ஆர்தல் - நிறைதல்.

விசு- விசுக்கிடுதல்,  விசனம் படுதல்.  ( விரிவு). மனவுணர்வு விரிவு.

விசு> வீசு: இடைவிரிவில் பொருளை விரைந்து பயணிக்கச்செய்வது இது.  வீசியபின் பொருள் வீழ்தல் நடைபெறும்.

விடு -  இது பொருள் நீங்கிச் செல்லுமாறு அனுமதித்தல். விடு > விடை.

 அவிதல், அழுங்கல், இரிதல், இறுதல், உடைதல், ஒருங்கல், கந்தல், குறைதல், சிகல், சிதைத்தல், சிந்தல், தபுதல், தௌவல், நந்தல், படல், பொடிதல், மங்கல், மடிதல், முரிதல், ஞவட்கல், விளிதல், வீதல்  ஆகியவை தெரிந்துகொள்ளற்குரியவை.  இப்போது இதை விளக்கவில்லை.

விசு> விச> விசயம்,  

விடை > விடையம்> விடயம் என்பனவும் கொள்க.  இது விஷயம் என்று அயலில் வரும்.

விழயம் என்பாரும் உண்டு.  விழைந்த செய்தி.   விழை> விடை> (விழை அல்லது விடை) + அம் >  திரிபு:  விஷயம்.  இது ஓர் பல்பிறப்பி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 26 அக்டோபர், 2026

திரவியம்

 திரவியம் என்ற தமிழ்ச்சொல்லை இன்று சுருக்கமாக அறிந்துகொள்ளுவோம்.

இதனைத தமிழ் என்று மெய்ப்பித்தலும் வேண்டின்,  திரள் -  திரளுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து புறப்படுங்கள்.  தொடர்பும் உறவும் சொற்களுக்கிடையிலும் வெளிப்படும்படி அறிவித்தலே உண்மையான கற்றலாகும். 

திரளுதல்:

திரள் >  திரள் + வு >  திரள்வு.    (திரளுதல் ).

ஒரு -வு விகுதி சேர்க்க அகராதி ஒன்றும் தேவையில்லை.

இனி,   இ + அம் என்ற இருவிகுதிகளைச் சேர்க்கவேண்டும்.

திரள்+வு+  இ+ அம் >  திரள்வியம்.

இப்போது,  ள் என்பதைக் கெடுத்து ( எடுத்து)  விடுங்கள்.

திரவியம் ஆகிவிடும்.  இறுதி விகுதி தவிர இடைவந்த விகுதி போன்றவற்றை இடைநிலைகள் என்றலும் கூடும்.  இவை எல்லாம் பலவேறு வகைகளில் குறிக்கும் திறன்களே. பெயர்களே இல்லாவிட்டால்  அது இது என்றன்றோ குறிக்கவேண்டிவரும்.  அது இலக்கணத்தை இன்னும் கடினமாக்கி எது என்று கேட்கும் நிலையை உண்டாக்கிவிடும்.  அதனால்தான் பெயர்கள் கொடுக்கிறோம்.  வீதிகளுக்கெல்லாம் பெயரில்லை என்றால் போய்ச்சேர்வது கடினம்!!  இடைநிலைகள் என்பது சரி.  விகுதிகள் என்றாலும் மோசமில்லை.   

திரட்டப்படும் விலையுள்ளது  அல்லது மதிப்புமிக்கதுதான் திரவியம்.

சொல்லமைப்புப் பொருள் அவ்வளவே.  மழைக்காலத்தில் பஞ்சு நீரை உறிஞ்சிக் கொண்டமை போல,  வழக்கில் சொற்கள் பிற பல பொருட்பருமனை அடைந்து விளையாடல்களைச் செய்யும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர். 

சனி, 24 அக்டோபர், 2026

ஆயத்தம்

 இந்தச் சொல்லின் பகவுகளை அறிந்துகொள்ளுதல் எளிதுதான்.

ஆய + அற்றம் > ஆயற்றம்> ஆயத்தம்.

ஆசீர்  என்ற சொல், வினைத்தொகை.  ஆகும் சீர் என்ற பொருளில் வரும் இச்சொல், முக்காலமும் தழுவி நிற்பதாம்.  ஆசீர் என்பது பின்னர் குறுகி, அசீர் என்று வந்துவிட்டதால், இது தமிழா என்ற ஐயப்பாடு, பிற்காலத்தில் எழுந்தமை கண்டுகொள்ளலாம். இதன் பொருள் ஆயத்தம் என்பதுதான்.  ஆயத்தம் என்றால் ஒரு காரியத்தைத் தொடங்குவதற்குச் சீரான நிலைமை என்பதாகும்.

அற்றம் என்பது, அத்தம் ஆகும்.  சிற்றன்னை என்ற சொல், சித்தன்னை,  சிற்றப்பா என்பது சித்தப்பா என்று வழங்குதல்போன்ற பேச்சுத் திரிபுச் சொல் இதுவாம்,  நோய்வந்த பின்பு மருந்துண்பதால், நோய் அற்றுப் போகிறது:  இதை அத்தம் என்று சொல்லவே, அற்றம் > அத்தம் என்ற  பின்சொன்ன திரிபுக்கு மருந்து என்ற பொருளும் ஏற்பட்டது.

ஏதேனும் ஒரு காரியத்துக்கு ஆயத்தம் செய்யுங்கால்,  அந்த ஆயத்தத்துக்கு உள்ளுறைவாவன யாவை எனின்,  ஆவன செய்தலும்  பின்னர் ஆயத்த முன்னெடுப்புகளை முடித்துக்கொண்டு, எடுத்த காரியத்தைத் தொடங்குதல்  என்பதும்தாம். 

அற்றம் என்பது தக்க  தருணம்  என்றும் பொருள்தரும் சொல். தருணம் நோக்கி இருத்தலை, அற்றம் நோக்கி இருத்தல் என்று கூறலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வியாழன், 22 அக்டோபர், 2026

ஆஞ்ச நேயர் ( அனுமான் சாமி)

 அண்> அன்> அன்+ மன் > அனுமன் >  அனுமான்> அனுமார்>ஹனுமான்.

 இதற்கு யாம் கூறும் சொல்லமைப்புப் பொருளாவது,  மனிதனுக்கு மிக்க அணுக்கமான தெய்வம் என்பதாகும்.  எத்தகைய அணுக்கம் எனின்,  உருவத்தில் அணுக்கமாய் இருக்கலாம்,  ஒழுக்கத்தில்  அறவழிகளைக் கடைப்பிடிப்பதில் அணுக்கமாய் இருக்கலாம்,  இறைப்பற்றில் மிக்க அணுக்கமாய் இருக்கலாம், பெருந்திருவாகிய இராமருக்கு அணுக்கமானவராக இருக்கலாம். எவ்வாறு அணுக்கமானவர் என்பது  சொல்லமைப்பில் இல்லை ஆதலின், உரிய பொருளை அறிவுடன் மேற்கொள்வது கற்றோர்தம் கடனாகும்.  அணுக்கமெனின் நெருக்கம் ஆகும்.

அனுமன் என்பதில் மன் என்று வரும் அடிச்சொல்:  மன் -  மனிதன்  ( மன்+ இ+ து + அன் )  > மனிதன்;  மன்> மான்> மான்+து+ அன் >  மாந்தன்.

மன்னுதல் என்ற வினைக்குப் பொருள் விரிக்கலாம் எனினும் இதன் பொருள் நிலைபெறுதல், பொருந்துதல் என்று சுருக்கமாகச் சொல்லலாம். புவியில் நிலைபெற்ற அல்லது பொருந்திய நிலையில் வாழ்பவன் மனிதன்;  அல்லது மாந்தன் என்க. நன்கு பொருந்திய நிலையில் வாழ்பவன் மனிதனே.

ஆழ்ந்த நேயர் அல்லது ஆஞ்சநேயர் என்பது அனுமனுக்கு இராமகாதையில் பொருத்தமான பெயராகும். அன்னோன் இராமருடன் நெருங்கிய நேயமுடன் இலங்குகின்றான் என்று வால்மிகியின் மூலம் அறிக.

இவற்றையும் வாசித்தறிக:

https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_4.html  அனுமான்

https://sivamaalaa.blogspot.com/2026/02/blog-post_27.html  அனுமான், அனுமானம்.

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_5.html  மனிதனின் இடத்தில் இருப்போன்

அனுமான் என்பதே விரும்பிய வடிவம் எனின் மான் என்பது மாந்தன் என்ற சொல்லிலும் உள்ளதே , மிச்சம் இருப்பவை விகுதிகளே அல்லவோ?  அப்போது அனுமான் என்ற வடசொல்லும் ( என்று வைத்துக்கொள்க),  மாந்தன்  (என்ற தனித்தமிழ்ச்  சொல்லும் )  உறவுடையனவாய்த் தோன்றுவனவே?  என்செய்வோம் என்று தெரிவிக்க.  மனிதருக்கு இயல்வன  கொடையாக அரசினால் வழங்கப்பெறுவது ,  மான்+ இயம் எனப்பட்டது. மானியம் என்பது தமிழ்ச்சொல்லேயாகும்.  இதில் மான்+ இயம்  ( மனிதற்கு இயன்றவை) என்ற சொற்கள் கண்டுகொள்க.  அரபுச்சொல் வேறு உளது.  இதுவன்று.  அதாவது முழுத்தள்ளுபடி இல்லை.   பின்னர் நாளடைவில் பொருள் மாறும் அல்லது வேறு விளக்கம் பெறும். மான் என்ற சொல் இங்கும் வந்து உதவுகிறது. மான்யம் என்று சுருக்குறும். பின்னர் இது மன்னர்கள் தந்த நிலங்களையும் குறித்தது ஒப்புமையாக்கம்.  மன்னர்கள் இயல்வித்தவையும் இதில் அடங்கியது,  சரிதான்.  மன்னன் என்பதில் மன் என்ற அடிச்சொல் உள்ளது.  ஆகவே, சொற்களை அடிச்சொல் நோக்கிப் பின்பற்றிப் பயன்படுத்தினர் என்று சொல்லவேண்டும்.

அனுமான் சாமியின் அருள் எங்கும் நிலவி யாவருக்கும் நலமுண்டாகட்டும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


சனி, 17 அக்டோபர், 2026

ஞாபகம்

 ஞாபகம் என்ற சொல் எங்ஙனம் பிறந்தது என்பதை ஆய்வோம்.


தமிழில் ந என்பது ஞ என்று திரியும்.

எடுத்துக்காட்டு:

நயம் > ஞயம்.

"ஞயம்பட உரை" (ஒளவையார்).

மலையாள மொழியில் ந எழுத்து ஞ என்று திரியும்.

நான் (தமிழ்) - ஞான் (மலையாளம்)
நங்கள் (நம்+கள்) - ஞங்ஙள் (ம்)

நங்கள் என்ற வடிவம் தமிழில் வழக்கிறந்துவிட்டது.

இவ்விதிகளைப் பின்பற்றி :

ஞாபகம் முன் நாபகம் என்றிருந்திருக்க வேண்டுமென்பதை யறிந்துகொள்ளலாம்.

வகரம் பகரமாகத் திரியும்.

ஒழிவு - ஒழிபு.
வசந்தம் - பசந்த் (வட இந்திய மொழிகளில்)
கோவம் - கோபம்.
தாவம் - தாபம். (தவி+அம்= தாவம், வழக்கிறந்தது).
கோவிந்தன் - கோபிந்த் ( வ.இ. மொழிகளில்)

வ - ப திரிபு தமிழிலும் பிறமொழிகளிலும் பெரும்பான்மையானது. ( )

இவ்விதியைக்கொண்டு, நாபகம் என்பதன் முன்வடிவம் நாவகம் என்று தெரிந்துகொள்ளலாம்.

நாவு+அகம் = நாவகம்.

ஒருத்திக்கு ஒன்று ஞாபகம் இருந்தால், அது அவள் நாவகத்திருக்கும். அதாவது மனத்தில் இருப்பது நாவில் வரும். மனத்திலிருப்பதை நாவில் வரவழைத்து அளந்தறியலாம். (இக்காலத்தில் நாவிற்கு ஈடாக எழுதச்சொல்லி அறிந்துகொள்ளலாம். ஓலைச்சுவடிக் காலத்தில், அதற்கு முன்பு எவ்வாறு என்று சிந்திக்கவும். )

நாவகம் = நாவிலும் அகத்திலும் என்றும் பொருள்கொள்ளலாம். எல்லாவற்றையும் யாமே சொல்லவேண்டியதில்லை.

ஞாபகம் என்பது தமிழ்ச்சொல் என்பது இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும்.

தமிழனே, நாம் உரையாடியதையும் உரையாடாமல் விட்டதையும் சிந்தித்தறிவாயாக.

வியாழன், 15 அக்டோபர், 2026

சுடரிற் பிறந்த மணியன்

 சுப்பையன் என்ற சொல் அமைந்தது எப்படி என்பது கண்டோம்.

அறிவுச் சுடராய் இருப்பவர் சிவபெருமான்.  முழுமுதற் கடவுள்.  இந்த அறிவுச் சுடரிற் பிறந்த ஞானக் கொழுந்து முருகப்பெருமான். அவர் ஒரு அருள்திருவாகுவார்.

இவர் சுடரிற் பிறந்தவர் என்று பண்டைத் தமிழர் எண்ணி வணங்கியதாலே,  இவரைச் ''சுடர்ப் பிறமணியன்''  என்று பண்டைத் தமிழர் வணங்கினர். இந்தப் பெயரிற் நீட்டமிருந்ததை ,  சுப்பிரமணியன் என்று எளிதாக்கினர். இது எளிதாக்கமே யன்றி, இதில் ஏதும் சூழ்ச்சி இல்லை.  பிற மணியன் என்பது முக்காலமும் தழுவும், பிறந்த அல்லது தோன்றிய மண்ணியன் என்பதாகும்.

பிறந்த என்பது:  பிறத்தல் என்ற சொல்,  ஒன்றின் பிறவாகிய ஆற்றலமைப்பு என்பதாகும்.  பிறத்தல் என்ற சொல், இன்னொன்று  (பிற)  என்று பொருள்தாகும். இன்னொரு தெய்வமாகுவது.  

இதற்கு வேறு பொருண்மைகளும் கூறப்படுவதுண்டு.  இச்சொல் பல்பிறப்பி  ஆகும்.  பலவழிகளில் உரைபெறுவதாம்.

சுப்பையன் என்பதன் பொருளும் முன் எழுதப்பட்டுள்ளது.

https://www.blogger.com/blog/April 30, 2026

சு என்று மாற்றினும், பிற என்பதைப் ப்ர எனினும், மண்+ யன் எனினும், வேறுபடுவது ஒன்றுமில்லை. பொருண்மையும் தொடர்புள்ள முறையில் மாற்றிக்கொள்ளலாம். மொழிகட்குப் பெயர்களெல்லாம் மனிதன் வைத்தவை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை


செவ்வாய், 13 அக்டோபர், 2026

வயிற்றியம் - வைத்தியம்.

மருத்துவம் என்பது  மருந்து என்ற சொல்லின் அடிப்படையில் எழும் சொல்.  மருந்து என்பது  உண்ணும் உணவின் வேறுபட்டது ஆகும். மருந்து என்பதன் சொற்பொருள் யாதென்றால், எப்போதும் உண்ணும் உணவுக்குப் பக்கத்தில் வருவதாக அமைந்து உண்ணப்படுவது ஆகும்.  அதாவது, நல்ல தமிழில் சொல்ல வேண்டுமென்றால்,  மருங்கில் -  பக்கத்தில் வருவதாக, அமைந்தது.    மூன்று வேளையோ,  இரண்டு வேளையோ தினமும் உண்ணும் உணவாக வருவது அன்று என்று பொருள்.  ஆகவே, நோய்வாய்ப் பட்டவன், அதிலிருந்து விடுபடும் பொருட்டு உண்ணப்படுவது ஆகிறது. இங்கு நாம் மருத்துவம் என்ற சொல்லின் உட்பொருளைக் கண்டறிந்தோம்.

அறிஞர் க.ப. சந்தோஷம் என்னும் மகிழ்நன்  எழுதிய சொல்லாய்வுகளைத் தேடிக் கண்டு அறிந்துகொள்ளுங்கள். இவரும் சொல்லாய்வுகள் பல செய்துள்ளார்.

வைத்தியம் என்ற சொல்லை யாம் ஆய்ந்து  சொல்லியுள்ளோம்.  இது வயிற்று நோய்களைக் குறிக்கும் மருத்துவ முறையாக இருந்து, பொதுப்பொருளில் பின்னர் வழங்கி இருக்கலாம்.  பழங்காலத்தில் தேவரடியாள் என்று வழங்கிய சொல், பின்னாளில் தவறாக உணரப்பட்டதுபோல, சொற்களின் பொருள் இழிந்தும் நம்மை வந்து அடைந்திருக்கலாம்.  உயர்ந்தும் போயிருக்கலாம். ஆகவே,  இது வயிற்றியம் - வைத்தியம் என்று வந்திருக்கலாம்.  மனிதன் எதைத் தின்பது என்று அறியாமல் திண்டாடிய தொல்பழங்காலத்தில்,  வயிற்றையே முதன்மையாக ஒருகாலத்தில் கொண்டு நோய்களைத் தீர்த்திருக்கலாம். இன்றளவில் வயிற்றுக்கு மருந்து கொடுத்து,  பிறபல உடற்பகுதிகளில் நலனை விளைவிப்பனவாகவே மருத்துவமுறைகள் இருந்துவந்துள்ளன.  பிற சிகிச்சை முறைகள் பின்வந்தவைகளாகத் தெரிகின்றன.  ஆகவே வயிற்று மூலமாகவே இழந்த உடல்நலத்தை மனிதன் மீட்டுக்கொண்டான்.  வயிற்றுக்கு மருந்து கொடுத்துக் காத்தல் என்ற பொருளில் வைத்தியம் ( வயிற்றியம்) வந்துள்ளது தெளிவாகிறது.

நோய்தீர்த்தானை வைத்துப் பார்த்துக்கொள்ளுதல் என்னும் பொருளில் இச்சொல் வரத்தக்கது ஆகும்.

எப்படிப் பார்த்தாலும் இது தமிழ்ச்சொல்தான்.  சிவனை வைத்தியநாதன் என்று சொன்னதும் கடவுள் நோய்தீர்ப்பவர் என்ற பொருளில்தான்.

தமிழ்ச்சொற்கள் ஆழ்ந்த பொருள் உள்ளவை. ஒருவர் இருவர் சொன்னவற்றை மட்டும் வைத்து இதை மூடிவிட முடியாது.  நீண்ட ஆய்வினை  மேற்கொண்டு பிழைத்துணருங்கள்.....

வைத்தியம் என்பது பல்பிறப்பி.  வித்து> வைத்து என்றும் வரக்கூடும்!!  விது> விதை;  விது > வித்து;  ( விதையும் மண்ணுக்குள் வைத்து நடுவது அன்றோ?); வித்து> வைத்து.-  வைத்து-வைத்தியம்.

சமஸ்கிருதம் என்பது இயல்பான திரிபாக ''வைத்து'' என்பதைக் கொள்கிறது.  பாணினி நம் பாணன் அல்லனோ?  பாணன் > பாண்+இன்+ இ.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை















-----------------------------------------------------------------------------

https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_15.html  கைவைத்தியம்.

https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_14.html  வைத்தியம்,  மருத்துவம்.


ஞாயிறு, 11 அக்டோபர், 2026

கடாட்சம்

 கடைக்கண் பார்வையால் அருள்செய்யும் தெய்வ நோக்கினை,  '' கடாட்சம் '' என்று சொல்வோம்.

முன்னிருப்பது கடை என்ற சொல்.  இது கடைக்கண் அருட்பார்வையைக் குறிக்கிறது.

அளித்தல் என்பதன் பகுதி  அள் என்பதாகும்.  அள் -  அளி.   அள், இதன் முதல் நீண்டு ஆள் என்றுமாகும்.  ஆள் என்பது முதனிலை நீண்டு தொழிற்பெயராகி, அளித்தலையே குறிக்கும்.  அள் என்ற மூலத்திலே, அளித்தல் கருத்தும் கருணைக் கருத்தும் உள்ளன. சொல்லில் அது அளி என்று வரினும்  ஆள் என்று வரினும் இதனால் பொருள் கெடுவதில்லை.

கட+ ஆள் என்ற இரண்டன்பின்  சு, அம்  என்பன வந்து சம் என்றாகும். அம் விகுதி என்றும்,  சு என்பது இடைநிலை என்றும் கொள்ளினும் இழுக்காது.

எனவே, கடைக்கண்ணால் அருளுதல். அல்லது இறுதிக்கட்டத்தில் அருளுதல்.  கடைக்கண் என்பது இறுதிக்கட்டம் என்றும் பொருள்தரக்கூடியது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை.

வெள்ளி, 9 அக்டோபர், 2026

பீத்தல் சொல்தரவு.

 பீத்தலென்பது கிழிசல் என்ற பொருளது.  கிழிந்தது என்ற பொருள்மட்டுமின்றி, இது பிறனைச் சற்று இழிவாகக் கருதிப் பேசுகையிலும்  பயன்பாடு கொள்கிறது.

பீற்றுதல் என்ற வினைச்சொல்லும் உள்ளது.  இது வீண்பெருமைப் பேச்சினை நிகழ்த்துதல் என்று பொருள்படும். இச்சொல் திரிந்து பீத்துதல் என்று வந்தாலும், பீத்தல் என்று மேற்சொன்ன சொல்லின் இது வேறுபட்டதாகும்.

பிய் > பிய்தல் > பிய்த்தல் > பீத்தல்.  (தொழிற்பெயர்).

பீற்று > பீத்துதல் > பீத்தல்  (தொழிற்பெயர்.) வேறுசொல்.

பிய் >பீ(த்தல் என்பதிலே பிகரம் பீகாரம் ஆனது காண்க. குறிலும் மெய்யும் இணைந்தது பீகாரமென்னும் நெடிலானது காண்க. இலக்கணம் வேறு, சொல்லாய்வு வேறு. இலக்கணம் என்பது திருத்தமாக எழுதவும் பேசவும் கறிபிக்கும் நூல்.  சொன்னூல், மொழிநூல் என்பன எழுதவும் பேசவும் தேவை இல்லாதவை  அல்லது தேவை குறைந்தவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 5 அக்டோபர், 2026

ரகரம் மறைந்த சொற்கள். எ-டு பிரிதல்>பிய்தல்

பிரி என்ற வினைப்பகுதி, பிய் என்றும் திரிபு கொள்ளும்.   மரி என்ற வினைப்பகுதி ,  மாய் என்று திரிந்துவிடும். பரிதல் என்பது அன்பொடு பேசுதல் என்பதே எனினும்,  பயில்(தல்), என்பதில் இப்பொருளைக் காட்டுவதுடன், பாசம் என்பதில் தொடர்பு காட்டுகிறது.  பயி(ல்), (பாயி) > ( பாயம்) >  பாசம் என்று தொடர்பு காணலாம்.

பரி(தல்) என்பது  அறுத்தல், அன்பு, அன்போடு. பேசல், இரங்கல், ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்துபேசு தல், வெட்டுதல் எனப் பல்பொருளது ஆகும்.

சில சொற்கள் திரிந்து உருமாறிவிட்டாலும் நம்மிடம் உள்ள அளவைகளால் நாம் அவற்றைக் கண்டுபிடித்துவிட முடிகிறது.

மரி -மய் -   மை > மையம்  (  சுடுகாடு)..   இப்போது மரி என்பது மய் என்று திரிந்தபின், மை> மையம் என்றாகி,  புதைக்கும் அல்லது எரியூட்டிடத்தைக் குறிக்க வழங்கியது.

 உரிதல் உய்த்தல் தொடர்பு முழுதும் இல்லாமலாகிவிட்டது என்று சொல்வதற்கில்லை. தோலுறிதலால் உய்வு பெறும் விலங்குகள் தாவரங்கள் உள. உரிமையே உய்வு தரும் என்பதனால் தொடர்பு காணப்பெறுகிறது.

You may also prefer:

 வாய் > வாய்த்தை> வார்த்தை. published on 9.5.2026

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



சனி, 3 அக்டோபர், 2026

பாரதி என்ற பட்டப்பெயர். இன்னொரு விளக்கம்

 பாரதி என்பது பெண்களின் பெயராகவும் உள்ளது.  இதற்குக் காரணம் இது கலைமகளின்(சரஸ்வதியின்) பெயராகவும் இருப்பதே.  அன்றியும்,  புலவர் என்ற பொருளிலும் வழங்கிவருகிறது.

பாக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஓர் இரதம் போன்றவர் (கவிஞர்), ஆதலின் பா+ ரதம்+ இ >  பா+ ரத் + இ > பாரதி என்றும் கூறலாம். (  A vehicle for good poems ).

இனி இன்னொரு விளக்கம்:

அறைதல் என்ற சொல்,  எடுத்துச்சொல்லுதல் என்றும் பொருள்தரும். இப்பொருளில் இது  அரட்டுதல், அரற்றுதல்  என்ற சொற்களின் அர் என்ற மூலவடியின் தொடர்பு உள்ள சொல்லுமாகும்.  அர்ச்சனை என்ற சொல்லில் ஒலியைக் குறிக்கும் அர் என்ற அடிச்சொல் உள்ளது.

மேலும் சொல்லாக்கத்தின் போது,  றை என்பது ரை என்றோ வருக்கமாகவோ மாறிவிடும் என்பதை யாம் எடுத்துக் காட்டியுள்ளோம். ஒலிக்குறிப்பு பற்றி எழுந்த சொற்களின் ஆய்வுரைகளை இங்கு வாசிக்கவும். இது பல முறை வந்துள்ளது.  குறிப்பு எடுத்துக்கொள்ளவும்.

பா+ அறை + தி >  பா ரை தி >  பாரதி  என்பது தமிழ் மூலம், --- ஆயும்போதும் புலவனைக் குறிக்கவல்லது  ஆகும். தி என்ற பெண்பால் விகுதி இங்கு வருவதனால்  '' கலைமகட்கு''  உரியது என்பது மையக் கருத்து ஆகும். ஐகாரக் குறுக்கம் பாக்களில் வருவதுபோல சொல்லமைப்பிலும் வரும் என்பது இங்கு நன்கு காட்டப்ப்பெற்றுள்ளது. 

ஐகாரக் குறுக்கம் என்பது ஐகாரம் அகரம்போல் ஒலித்தல்.  இது  குறைந்தொலித்தல். இங்கு றை என்பது ரை ஆனது,  பின் ரகரம் ஆயிற்று. ஒன்றுக்கு மேற்பட்ட திரிபுகள் ஆகும்.

சமஸ்கிருதம் என்பது  ''ஒப்பொலி'' மொழி ஆகும்.  ஒப்பு -  சமம்.  ஒலி -  கதம். கதமே கிருதம்.  சமம் கதம் > சமஸ் கிருதம். ஏன் கால்டுவெல்,  சமஸ்கிருதத்தை தன் ஆய்வில் ஏனைத் ''திராவிட''  மொழிகளுடன் ஒப்பிட்டு ஆயவில்லை?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 1 அக்டோபர், 2026

பணத்தி என்ற பெண்பால் சொல்.

 இந்தச் சொல்லை அறிந்துகொள்வோம். 

பறைச்சி யாவது ஏதடா பணத்தி யாவது ஏதடா என்று சித்தர்பாட்டில் வருகிறது.  முன்வந்த சொல்லால் பின்வருவது  பார்ப்பனத்தி என்ற சொல் என்பது தெளிவாகிறது.  இது இலக்கணத்தில் முதற்குறைச் சொல் எனப்படும்.  இது தொகுத்தல் என்றும் குறிப்பதுண்டு.  பனத்தி என்பது விரிந்த வழக்குடைய சொல்லாக இருந்தால்,  முதற்குறை என்னலாம்.  செய்யுள் இயற்றியவரே முதற்பகுதியைத் தொகுத்து ''பனத்தி'' என்று கவிதையில் வழங்கி இருந்தால் இதைத் தொகை என்றே குறிப்பர்.

பணமுடையவன்  ''பணன்'' என்று குறிக்கப்படுவதில்லை.  பனவன் என்ற சொல் உள்ளது.  இது ''பார்ப்பனவன்'' என்ற இன்னொரு ஆண்பால் வடிவத்தின் பெண்பாலாக, பனத்தி என்று வரும்.

பணத்தி என்பதும் பனத்தி என்பதும் ஒருபொருட்சொற்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை