வெள்ளி, 9 அக்டோபர், 2026

பீத்தல் சொல்தரவு.

 பீத்தலென்பது கிழிசல் என்ற பொருளது.  கிழிந்தது என்ற பொருள்மட்டுமின்றி, இது பிறனைச் சற்று இழிவாகக் கருதிப் பேசுகையிலும்  பயன்பாடு கொள்கிறது.

பீற்றுதல் என்ற வினைச்சொல்லும் உள்ளது.  இது வீண்பெருமைப் பேச்சினை நிகழ்த்துதல் என்று பொருள்படும். இச்சொல் திரிந்து பீத்துதல் என்று வந்தாலும், பீத்தல் என்று மேற்சொன்ன சொல்லின் இது வேறுபட்டதாகும்.

பிய் > பிய்தல் > பிய்த்தல் > பீத்தல்.  (தொழிற்பெயர்).

பீற்று > பீத்துதல் > பீத்தல்  (தொழிற்பெயர்.) வேறுசொல்.

பிய் >பீ(த்தல் என்பதிலே பிகரம் பீகாரம் ஆனது காண்க. குறிலும் மெய்யும் இணைந்தது பீகாரமென்னும் நெடிலானது காண்க. இலக்கணம் வேறு, சொல்லாய்வு வேறு. இலக்கணம் என்பது திருத்தமாக எழுதவும் பேசவும் கறிபிக்கும் நூல்.  சொன்னூல், மொழிநூல் என்பன எழுதவும் பேசவும் தேவை இல்லாதவை  அல்லது தேவை குறைந்தவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

கருத்துகள் இல்லை: