சனி, 31 அக்டோபர், 2026

திருவியம் ( திரு+இயம்) என்ற சொல் தொலைந்ததோ?

 இவற்றையும் நீங்கள் படித்தறிந்து கொள்ளுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_29.html   திவ்வியம்.

https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_63.html  திவ்வியம்

https://sivamaalaa.blogspot.com/2025/11/blog-post_29.html.திவ்வியம்

இவ்  ஆய்வின் மூலம் திருவியம் என்ற சொல்,  திரு மற்றும் இயம் என்ற விகுதி என்று இரண்டையும் இணைத்தால் உண்டாகிறது.  இயம் விகுதி,  இ+ அம் என்ற இரண்டு விகுதிகளின் இணைப்பாம்.   இதன் பொருள் '' இதன் அமைப்பு''  என்பதுதான்.   அம் என்பது அமைப்பு என்பதன் அடிச்சொல். அமிழ் என்ற சொல்லில்  அம்+ இழ் என்ற இரண்டு உள்ளன.  கீழே இழுப்புறுவதற்கும் இழ் என்பது அடியாய் இருப்பதனால்,  அமிழ் என்பது அமைந்து இழுத்தல் என்று பொருள்படும். இயம் என்பது அருகில் அமைவது என்னும் பொருளது ஆகும்.  இ = அருகில். அம் - அமைவது.  விகுதிகளுக்கு நாம் பொருள் கணிக்கமலே எந்தச் சொல்லையும் அறிந்துகொள்ளுதல் கூடும்.

திருவியம் > திவ்வியம் என்பது ருகரம் மறைந்த இடைக்குறைச் சொல்.  திவ்வியம் என்று ஒரு வகர ஒற்றுத் தோன்றியது திரிபு ஆகும்.  மொழி மாற்றங்கள் உடையது ஆதலின், இலக்கணத்தில் இல்லாத திரிபுகளும் ஏற்படுதல் உண்டு.  நம் பேச்சுமொழியில் இல்லாத திரிபுகள் இல என்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

  பகிர்வுரிமை



கருத்துகள் இல்லை: