கடைக்கண் பார்வையால் அருள்செய்யும் தெய்வ நோக்கினை, '' கடாட்சம் '' என்று சொல்வோம்.
முன்னிருப்பது கடை என்ற சொல். இது கடைக்கண் அருட்பார்வையைக் குறிக்கிறது.
அளித்தல் என்பதன் பகுதி அள் என்பதாகும். அள் - அளி. அள், இதன் முதல் நீண்டு ஆள் என்றுமாகும். ஆள் என்பது முதனிலை நீண்டு தொழிற்பெயராகி, அளித்தலையே குறிக்கும். அள் என்ற மூலத்திலே, அளித்தல் கருத்தும் கருணைக் கருத்தும் உள்ளன. சொல்லில் அது அளி என்று வரினும் ஆள் என்று வரினும் இதனால் பொருள் கெடுவதில்லை.
கட+ ஆள் என்ற இரண்டன்பின் சு, அம் என்பன வந்து சம் என்றாகும். அம் விகுதி என்றும், சு என்பது இடைநிலை என்றும் கொள்ளினும் இழுக்காது.
எனவே, கடைக்கண்ணால் அருளுதல். அல்லது இறுதிக்கட்டத்தில் அருளுதல். கடைக்கண் என்பது இறுதிக்கட்டம் என்றும் பொருள்தரக்கூடியது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக