திங்கள், 5 அக்டோபர், 2026

ரகரம் மறைந்த சொற்கள். எ-டு பிரிதல்>பிய்தல்

பிரி என்ற வினைப்பகுதி, பிய் என்றும் திரிபு கொள்ளும்.   மரி என்ற வினைப்பகுதி ,  மாய் என்று திரிந்துவிடும். பரிதல் என்பது அன்பொடு பேசுதல் என்பதே எனினும்,  பயில்(தல்), என்பதில் இப்பொருளைக் காட்டுவதுடன், பாசம் என்பதில் தொடர்பு காட்டுகிறது.  பயி(ல்), (பாயி) > ( பாயம்) >  பாசம் என்று தொடர்பு காணலாம்.

பரி(தல்) என்பது  அறுத்தல், அன்பு, அன்போடு. பேசல், இரங்கல், ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்துபேசு தல், வெட்டுதல் எனப் பல்பொருளது ஆகும்.

சில சொற்கள் திரிந்து உருமாறிவிட்டாலும் நம்மிடம் உள்ள அளவைகளால் நாம் அவற்றைக் கண்டுபிடித்துவிட முடிகிறது.

மரி -மய் -   மை > மையம்  (  சுடுகாடு)..   இப்போது மரி என்பது மய் என்று திரிந்தபின், மை> மையம் என்றாகி,  புதைக்கும் அல்லது எரியூட்டிடத்தைக் குறிக்க வழங்கியது.

 உரிதல் உய்த்தல் தொடர்பு முழுதும் இல்லாமலாகிவிட்டது என்று சொல்வதற்கில்லை. தோலுறிதலால் உய்வு பெறும் விலங்குகள் தாவரங்கள் உள. உரிமையே உய்வு தரும் என்பதனால் தொடர்பு காணப்பெறுகிறது.

You may also prefer:

 வாய் > வாய்த்தை> வார்த்தை. published on 9.5.2026

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



கருத்துகள் இல்லை: