இந்தச் சொல்லின் பகவுகளை அறிந்துகொள்ளுதல் எளிதுதான்.
ஆய + அற்றம் > ஆயற்றம்> ஆயத்தம்.
ஆசீர் என்ற சொல், வினைத்தொகை. ஆகும் சீர் என்ற பொருளில் வரும் இச்சொல், முக்காலமும் தழுவி நிற்பதாம். ஆசீர் என்பது பின்னர் குறுகி, அசீர் என்று வந்துவிட்டதால், இது தமிழா என்ற ஐயப்பாடு, பிற்காலத்தில் எழுந்தமை கண்டுகொள்ளலாம். இதன் பொருள் ஆயத்தம் என்பதுதான். ஆயத்தம் என்றால் ஒரு காரியத்தைத் தொடங்குவதற்குச் சீரான நிலைமை என்பதாகும்.
அற்றம் என்பது, அத்தம் ஆகும். சிற்றன்னை என்ற சொல், சித்தன்னை, சிற்றப்பா என்பது சித்தப்பா என்று வழங்குதல்போன்ற பேச்சுத் திரிபுச் சொல் இதுவாம், நோய்வந்த பின்பு மருந்துண்பதால், நோய் அற்றுப் போகிறது: இதை அத்தம் என்று சொல்லவே, அற்றம் > அத்தம் என்ற பின்சொன்ன திரிபுக்கு மருந்து என்ற பொருளும் ஏற்பட்டது.
ஏதேனும் ஒரு காரியத்துக்கு ஆயத்தம் செய்யுங்கால், அந்த ஆயத்தத்துக்கு உள்ளுறைவாவன யாவை எனின், ஆவன செய்தலும் பின்னர் ஆயத்த முன்னெடுப்புகளை முடித்துக்கொண்டு, எடுத்த காரியத்தைத் தொடங்குதல் என்பதும்தாம்.
அற்றம் என்பது தக்க தருணம் என்றும் பொருள்தரும் சொல். தருணம் நோக்கி இருத்தலை, அற்றம் நோக்கி இருத்தல் என்று கூறலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக