சனி, 31 அக்டோபர், 2026

நிரூபித்தல்

 இச்சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.

யார் ஆய்வாளன் என்பது:

நாம் இங்கு மூலச்சொற்கள், அடிச்சொற்கள், இன்ன பிற சொற்களின் பகவுகளைக் கொண்டே ஆய்ந்து கூறுகிறோம். நாம் அடிச்சொற்களை ஆராயாமல் அல்லது ஆராய்ந்திருந்தால் அதை வெளியிடாமல் தம் பதவிகளை மட்டும் ஆதாரமாக வைத்து வெளிப்படுத்திய முடிவுகளை அடிப்படையாக வைத்து எதையும் கூறுவதில்லை. இன்னொருவன் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருப்பவன் எவ்வளவு உயரத்தில் இருப்பவனாயினும் அவன் ஆய்வாளன் அல்லன்.

சொல்லின் பகவுகள் அல்லது பகுதிச்சொற்கள்:

இச்சொல்லின் முதற் பகவு:  நிறு  என்பது.  இது நிறுவுதல் என்ற சொல்லின் அடிச்சொல் தான். நிறுவுதல் என்பதற்கும் நிரூபித்தல் என்பதற்கும் இடையில் பொருண்மையில் எந்த வேறுபாடும் இல்லை. நிறுவுதல் என்றால் ஒன்றை ஆய்வின் அல்லது விசாரணயின் மூலமக நிலைநிறுத்துதல்.  மெய்ப்பித்தல் எனினுமாம்.

இதனை  நிரூபித்தல் .  நிறு + உருவித்தல் என்று தமிழிற் பிரித்துப் பொருள் சொல்லவேண்டும்.  உருவித்தல் - ரூபித்தல் என்பவற்றில் பின்னது தலைகழன்ற ஒரு சொல்.  உருவித்தல் என்பதில் வரும் உகரம் வெட்டப்பட்டுச் சொல் அமைந்திருப்பதால்,  நாம் உருவித்தல் என்ற சொல்லையே  நிறுவு என்பதனுடன் இனைத்து இச்சொல்லை விளக்குகின்றோம்.

இதனுடன் பொருளொருமை உடைய பிற தனித்தமிழ்ச் சொற்கள்,  எண்பித்தல், மெய்ப்பித்தல் என்பனவாகும். இக்கருத்துக்களைப் பிற சொற்களால் விரித்தும்  எழுதலாம் என்று அறிக.

சால்வுறுத்துதல் என்பதையும் ஏற்புழிப் பயன்படுத்தலாம்.

அறிக மகிழக.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை.



கருத்துகள் இல்லை: