வியாழன், 22 அக்டோபர், 2026

ஆஞ்ச நேயர் ( அனுமான் சாமி)

 அண்> அன்> அன்+ மன் > அனுமன் >  அனுமான்> அனுமார்>ஹனுமான்.

 இதற்கு யாம் கூறும் சொல்லமைப்புப் பொருளாவது,  மனிதனுக்கு மிக்க அணுக்கமான தெய்வம் என்பதாகும்.  எத்தகைய அணுக்கம் எனின்,  உருவத்தில் அணுக்கமாய் இருக்கலாம்,  ஒழுக்கத்தில்  அறவழிகளைக் கடைப்பிடிப்பதில் அணுக்கமாய் இருக்கலாம்,  இறைப்பற்றில் மிக்க அணுக்கமாய் இருக்கலாம், பெருந்திருவாகிய இராமருக்கு அணுக்கமானவராக இருக்கலாம். எவ்வாறு அணுக்கமானவர் என்பது  சொல்லமைப்பில் இல்லை ஆதலின், உரிய பொருளை அறிவுடன் மேற்கொள்வது கற்றோர்தம் கடனாகும்.  அணுக்கமெனின் நெருக்கம் ஆகும்.

அனுமன் என்பதில் மன் என்று வரும் அடிச்சொல்:  மன் -  மனிதன்  ( மன்+ இ+ து + அன் )  > மனிதன்;  மன்> மான்> மான்+து+ அன் >  மாந்தன்.

மன்னுதல் என்ற வினைக்குப் பொருள் விரிக்கலாம் எனினும் இதன் பொருள் நிலைபெறுதல், பொருந்துதல் என்று சுருக்கமாகச் சொல்லலாம். புவியில் நிலைபெற்ற அல்லது பொருந்திய நிலையில் வாழ்பவன் மனிதன்;  அல்லது மாந்தன் என்க. நான்கு பொருந்திய நிலையில் வாழ்பவன் மனிதனே.

ஆழ்ந்த நேயர் அல்லது ஆஞ்சநேயர் என்பது அனுமனுக்கு இராமகாதையில் பொருத்தமான பெயராகும். அன்னோன் இராமருடன் நெருங்கிய நேயமுடன் இலங்குகின்றான் என்று வால்மிகியின் மூலம் அறிக.

இவற்றையும் வாசித்தறிக:

https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_4.html  அனுமான்

https://sivamaalaa.blogspot.com/2026/02/blog-post_27.html  அனுமான், அனுமானம்.

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_5.html  மனிதனின் இடத்தில் இருப்போன்

அனுமான் என்பதே விரும்பிய வடிவம் எனின் மான் என்பது மாந்தன் என்ற சொல்லிலும் உள்ளதே , மிச்சம் இருப்பவை விகுதிகளே அல்லவோ?  அப்போது அனுமான் என்ற வடசொல்லும் ( என்று வைத்துக்கொள்க),  மாந்தன்  (என்ற தனித்தமிழ்ச்  சொல்லும் )  உறவுடையனவாய்த் தோன்றுவனவே?  என்செய்வோம் என்று தெரிவிக்க.  மனிதருக்கு இயல்வன  கொடையாக அரசினால் வழங்கப்பெறுவது ,  மான்+ இயம் எனப்பட்டது. மானியம் என்பது தமிழ்ச்சொல்லேயாகும்.  இதில் மான்+ இயம்  ( மனிதற்கு இயன்றவை) என்ற சொற்கள் கண்டுகொள்க.  அரபுச்சொல் வேறு உளது.  இதுவன்று.  அதாவது முழுத்தள்ளுபடி இல்லை.   பின்னர் நாளடைவில் பொருள் மாறும் அல்லது வேறு விளக்கம் பெறும். மான் என்ற சொல் இங்கும் வந்து உதவுகிறது. மான்யம் என்று சுருக்குறும். பின்னர் இது மன்னர்கள் தந்த நிலங்களையும் குறித்தது ஒப்புமையாக்கம்.  மன்னர்கள் இயல்வித்தவையும் இதில் அடங்கியது,  சரிதான்.  மன்னன் என்பதில் மன் என்ற அடிச்சொல் உள்ளது.  ஆகவே, சொற்களை அடிச்சொல் நோக்கிப் பின்பற்றிப் பயன்படுத்தினர் என்று சொல்லவேண்டும்.

அனுமான் சாமியின் அருள் எங்கும் நிலவி யாவருக்கும் நலமுண்டாகட்டும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


கருத்துகள் இல்லை: