வியாழன், 29 அக்டோபர், 2026

விஷயம்.

 விசு என்பது தமிழ் அடிச்சொல்.  இதிலிருந்து சில சொற்கள் உருவாகியுள்ளன. இதில் தலையாயது:  விசும்பு  என்ற காயப்பொருட் கிளவி ஆகும்.  இது விரிவு குறிக்கும் அடியினின்று தோன்றுவதாகும்.  காயம் என்ற பழைய சொல்,  பிற்காலத்து  ஆகாயம் ஆயிற்று. ஆகாயம் என்பதில் ஆ என்பது  ஆதல் குறிக்கும் ''வினை முன்னொட்டு''  ஆகும்.  பகலோன், பால்நிலவு ஆகியவை காயும் இடமே காயம் எனப்பட்டது.  ஆ என்று வாயொலிக்கையில் வாய் திறந்து சொல்வதனால், அதை விரிவு குறிக்கவும் எடுத்துக்கொள்ளுதல் கூடும்..

விசு என்பதனோடு தொடர்பு காணும் சொற்கள்:

விசு -  விசும்பு.   பு  விகுதி.

விசு -  விசை.  ( விசை என்னும் இயக்கக் குறிப்பு,  பொருளின் ஆட்டம் விரிவாதலையே குறிக்கிறது.)

விசனம் அல்லது விதனம் என்பதும் கவலை விரிவினையே குறிக்கிறது.  ச-த போலி.  தனி> சனி, என்பதில், தனித்தன்மை உள்ள ''கிரகம்'' சனி என்றானது.

விசு > விசாரி  ( விசு+ ஆர்+ இ )   . இங்கு ஆர்தல் என்பதும் விரிவு குறிக்கும்.  ஆர்தல் - நிறைதல்.

விசு- விசுக்கிடுதல்,  விசனம் படுதல்.  ( விரிவு). மனவுணர்வு விரிவு.

விசு> வீசு: இடைவிரிவில் பொருளை விரைந்து பயணிக்கச்செய்வது இது.  வீசியபின் பொருள் வீழ்தல் நடைபெறும்.

விடு -  இது பொருள் நீங்கிச் செல்லுமாறு அனுமதித்தல். விடு > விடை.

 அவிதல், அழுங்கல், இரிதல், இறுதல், உடைதல், ஒருங்கல், கந்தல், குறைதல், சிகல், சிதைத்தல், சிந்தல், தபுதல், தௌவல், நந்தல், படல், பொடிதல், மங்கல், மடிதல், முரிதல், ஞவட்கல், விளிதல், வீதல்  ஆகியவை தெரிந்துகொள்ளற்குரியவை.  இப்போது இதை விளக்கவில்லை.

விசு> விச> விசயம்,  

விடை > விடையம்> விடயம் என்பனவும் கொள்க.  இது விஷயம் என்று அயலில் வரும்.

விழயம் என்பாரும் உண்டு.  விழைந்த செய்தி.   விழை> விடை> (விழை அல்லது விடை) + அம் >  திரிபு:  விஷயம்.  இது ஓர் பல்பிறப்பி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


கருத்துகள் இல்லை: