By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 14 நவம்பர், 2026
ரத்து என்னும் கிளவி
ரத்து : விவாகரத்து மணவிலக்கு
ரத்து என்ற சொல் எங்ஙனம் புனைவுண்டது என்பதை முன்னர் விளக்கியுள்ளேம். அந்த விளக்கக் குறிப்பினைத் தேடிக்கொண் டிருப்பதை விட, தலையிலிருந்து தரைப்பலகைக்கு floorboard நேரடியாகச் சிந்தனையை இறக்கிவிடலாம்.
இறுதல் = முடிதல். ( சொல் : இறுதி )
இறு + து(விகுதி) = இறு + அத்து (சாரியை) + து,
= இறு + அத்(து) + து = இறத்து. முடிவு என்று பொருள்.
இச்சொல் இறு என்பதில் தோன்றியது என்பதற்கு இது போதுமானது. இங்கு அத்து என்ற சாரியை வந்ததா அல்லது புணர்க்குங்கால் ஓர் அகரம் தோன்றிற்றா என்ற வழக்காடுதல் தேவையில்லை.
அஃது இலக்கணமே குறிக்கோளாய் நிற்பார் மேற்கொள்க.
இப்போது மனநிறைவின் பொருட்டு, இது போலும் து-விகுதி பெற்றமைந்த
வேறு சில சொற்களைக் காண்போம்.
வரு + து = வரத்து (போக்குவரத்து). இங்கு முதனிலை ஈற்றில் நின்ற உகர உயிர் அகரமாகி புணர்ச்சியில் ஒரு தகர ஒற்றுப் பெற்று ( ச் ) சொல் அமைந்தது.
விழு > விழுது: இங்கு விகுதி புணர, அப்புணர்ச்சியில் ஒற்றுக்கள் எவையும்
தோன்றிற்றில.
கை + து = கைது ( இங்கும் எழுத்தெதுவும் தோன்றவில்லை ). கைது என்றால் காவல்துறையார் கையகப் படுதல்.
குரு + து = குருத்து. ( த் தோன்றியது ).
இங்கு குரு என்பது பகுதி. இதனைக் குருகு, குருந்தம், குருப்பு, குரும்பை, குருளை, குருள்தல் முதலியவற்றால் அறியலாம். குரு என்பதை வினைை முற்று வடிவில் கண்டிலம். காணின் எழுதுக.
இதுகாறுங் கூறியவாற்றால், இறு > இறத்து போலும் வடிவங் கொள்ளும் சொற்கள் உள என்பது பெறப்படும்.
இறத்து என்பது பின் அடைந்த திரிபுகளாவன:
இறத்து > இரத்து > ரத்து.(headless)
இறுதல் என்பது முடிதல் என்று பொருள்படும் ஆதலின், ரத்து என்பதும்
அப்பொருளையே அடைந்தது.
இதிலிருந்து விவாகரத்து ( மணவிலக்கு ) முதலிய கூட்டுச் சொற்கள் தோன்றின.
பிற்குறிப்பு:
விவாகம் என்பது முன்னரே விளக்கப்பட்ட சொல்: அதைச் சுருக்கமாக இவண் குறிப்பிடுவோம். வி = விழுமிய; வா= வாழ்க்கைக்கு ; (ஆகும்) > ஆகம்: ஆகும் வழி. ஆகு+ அம் = ஆகம். விவாகமானது இல்லற வாழ்வில் ஆடவர் பெண்டிரை இருத்தி விழுமிய வாழ்வினை ஆக்கும் ஓர் முக்கிய நிகழ்ச்சி ஆகும்,
விவா என்ற இலத்தீனும் தமிழிலிருந்து பெறப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக