செவ்வாய், 24 நவம்பர், 2026

அங்குலம் என்னும் சொல்தரவு

 இதனை விரித்தறிவோம்.

முன் எழுதிய விளக்கம் இங்கு உள்ளது: 

https://sivamaalaa.blogspot.com/2024/07/blog-post_620.html   ( அங்குலம் )

தமிழில் விரற்கடை என்றும் சொல்வர்..  விரலின் ஒரு கடையிலிருந்து அல்லது கடைசியிலிருந்து  இன்னொரு கடைசிவரை குறுக்களவாக உள்ள தூரத்தை,  ''விரற்கடை'' என்று தெளிந்துகொள்க. இந்தத் தொலைவு ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.  கைகளும் பெரிது சிறிதாக உள்ளன. நீட்டத்திலும் வேற்றுமை உள்ளது.  ஆகவே விரற்கடை  என்பதைக் காரண இடுகுறிப் பெயர் என்றுதான் கொள்ளமுடியும்.

அங்குலம் என்பது உண்மையில்  ஒன்றுக்கு ஒன்று அடுத்துள்ள உறுப்பு அளவு குறித்தாலும்,  விரல் பருமன் இடைத்தொலைவைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஒரு விரலின் பக்கக் கடைசியிலிருந்து அதே விரலின் அடுத்த பக்கக் கடைசிவரை உள்ள குறுக்குவாக்கில் தொலைவு என்னலாம்.

 அண்+கு+உல்+அம்   என்பனவே  தொலைவு அளவு..

அண்  -  அடுத்து.

கு   -   சேர்தல்.

உல்  - உலவும்  அல்லது  போகும்.

அம்  -  அமைப்பு.

ஆகவே அங்குலம் என்றால்,  கையில் :   அடுத்துச் சேர்ந்து  உலவும் அல்லது அசையும்  உறுப்பு.  ஆகவே இது விரல்.

என்பதனால்:   விரற்கடை என்பது சிறந்த அமைப்புச்சொல்லா அல்லது  அங்குலம் என்பது அத்தகைய சொல்லா என்பதை அடிச்சொற்களைக் கொண்டு முடிவு செய்துகொள்ளலாம். இரண்டும் காரண இடுகுறிகளே  ஆகும்.இரு சொற்களும் தமிழ் அடிகளையே பயன்படுத்தி அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை: