செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

பரிகாரத்துக்குத் தனித்தமிழ்

பரிகாரம் என்ற பதத்துக்கு நல்ல தனித்தமிழ்ச் சொல் ஓம்படை என்பதாகும்.

போக்கடி என்பதும் பயன்படும்:  இதற்கு ஒரு போக்கடி இல்லாமற் போய்விட்டது  என்பர்.

பிதிகாரம் என்று தேவாரத்தில் வரும் சொல்: பிரதிகாரம் என்பதன் திரிபு.  பிரதி> பிதி.  ரகரம் இடைக்குறை.

அரணம் எனலும் ஆகும்.   அரண்> அரணம்.

பரிதல் என்பது அறுத்தல் ஒடித்தல் வெட்டுதல் என இன்னும் பல பொருள் உள்ள சொல்.

பரி (வினைச்சொல்)+ கு (இடைநிலை ) + ஆர் + அம் (விகுதி).

ஆர்தல் என்பதும் பல்பொருள் ஒருசொல். நிறைதல் என்பதும் அவற்றுள் ஒன்று.

பரிகாரம் என்பது நிறைவாக வெட்டி நீக்குதல் என்று பொருள்தரும்.

அரித்தல் என்பது அரித்தெடுத்தல் என்று பொருள்தரும்.

பரி+கு+ அரித்தல் = பரிகரித்தல். நீங்குதற்குரியன நீக்குதல்.

பரி+காரம் என்று பிரித்துப் பொருள்சொல்வது பழைய வாத்தியார்களின் வழக்கம்.

பரிகாரத்தில் ஒருவகை:  மந்திரம் சொல்லி ஒன்றை எரித்துக்  கரியாக்கி எண்ணெய் விட்டுக் குழப்பிப் பொட்டாக வைத்துக்கொள்வர்.

இது பரி + கரித்தல்.  ( கரியாக்குதல்)

திருத்தம் பின்.


கருத்துகள் இல்லை: