சில சொற்களை நாம் சில வடிவங்களில் எழுதலாமே. ஒரு சொல்லை ஒரே மாதிரியே எழுதுபவரா நீங்கள். அப்படிக் கட்டப்பட்டு எழுதாமல் இட்டப்படி எழுதப் பழகிக்கொள்வது நல்லது.
மனத்தை எ ங்கு எதிலே ஈடுபடுத்துகிறீர்களோ , எதில் உங்கள் மனம் ஈடுபடுகிறதோ அதுவே உங்கள் இட்டம்.
இந்தச் சொல் வடிவங்களைக் கவனிக்கவும்:
இடு > இடுதல் ( வினைச்சொல் - தொழிற்பெயர்).
இடு > ஈடு: இது முதனிலை ( எனில் முதலெழுத்து) நெடிலாகித் திரிந்த தொழிற்பெயர்.
ஈடுபடு > ஈடுபாடு.
இடு+அம் = இட்டம். ( இதில் டகரம் ஒற்று இரட்டித்தது).
மெருகூட்ட: இட்டம் > இஷ்டம்.
மற்ற பதங்கள் ஒப்பு நோக்க:
கடு > கட்டம் மற்றும் கட்டு> கட்டம்; ( மெருகு: கஷ்டம்)
குட்டை > குட்டம். அடிச்சொல் : குடு ( குட்). (குஷ்டம்).
இனிச் சில வடிவங்களை நாம் வழக்குக்குக் கொண்டுவரலாம்.
நல்லவர் என்ற சொல் இடைக்குறைத்து நலவர் என்றுமெழுதலாம். ஆனால் இத்தகைய வடிவங்கள் கவிதைக்குப் பொருத்தமாக இருக்கும்.
வல்லவர் > வலவர்
நல்லவர் > நலவர்.
சொல்லவர் > சொலவர்.
நல்லவன் > நல்லன் > நல்லான் எல்லாம் பயன்படுத்தலாம்.
தமிழில் பல வசதிகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக