செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ஊழல் தலைதூக்கியது

 இந்தியாவின் ஒரு பெரும்பல்கலைக் கழகத்தில் சில
ஊழல்கள் தென்பட்டனவாம். அதுபற்றிய கவிதை இது.



பேராசி யருடன்நீ   இணைந்து நிற்பாய்
பெருமுனைவர்ப் படடம்பெறு  பிழைத்துக் கொள்வாய்

ஏறாத மலைகளிலே இறங்கி  ஏறி
என்னென்ன செய்திடினும் கிடைக்காக் குன்றம்;

வாராது வருமணியைப் புகழ்ந்து பாடி
வந்தடைந்த வரவினொடு உறவு கொள்வாய்!

நேராத தனைத்தினையும் நிகழச் செய்வாய்,
நீதானே உலகத்தில் நிமிர்ந்து நிற்பாய்!


ஊழலுக்கு மசியாத உயர்ந்தோன் உண்டோ?
உலகத்தில் எழுதுபவன் உரக்கச் சொல்வோன்,
,
வாழ்தற்குப் பணமென்றால் வசதி,  வாயை
வாவென்று பிளப்பதுவே வழக்கம் ஆகும்,

கூழெனினும் குடித்துவிட்டுக் குறுமை அற்ற
கோலமுறு பெருந்தூய்மை கதைகள் தம்மில்!

வீழ்தற்கும் எழுதற்கும் மனத்தில் அச்சம்
விளைத்துக்கொண் டிருப்போனோ வெருட்சி மன்னன்.



https://tamil.oneindia.com/videos/governor-banwarilal-purohit-seeks-statement-from-vice-chancelor-329740.html 

கருத்துகள் இல்லை: