இன்று நாம் இரு சொற்களை அறிந்தின்புறுவோம்.
ஒன்று : தமையந்தி; மற்றொன்று "ஆதிமந்தி " என்பது.
நாம் இரண்டாவது சொல்லை எடுத்துக்கொள்வோம். இது சோழன் கரிகால் வளவனின் மகள் பெயர். சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெயராகும்.
இச்சொல்லின் இறுதியில் இருப்பது தி என்னும் பெண்பால் விகுதியாகும். இதைக் கண்டுபிடித்துவிட்டால் முன் நிற்பது ஆதிமன் என்ற சொல் என்பது எளிதில் புரிந்துவிடும்.
ஆதி: இது உங்களுக்குத் தெரிந்த சொல். ஆக்க காலம் என்று பொருள்தருவது. ஒன்று ஆக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட காலமே ஆதி ஆகும், இங்கு தி என்பது தொழிற்பெயர் விகுதி. ஆ என்பது ஆதல் ஆக்கம் என்பன குறிக்கும் சொல்.
அடுத்திருப்பது: மன். இது மன்னன் என்பதன் அடிச்சொல். மன் என்பது பால் அறியப்படாத சொல். அதற்கு " அரசு " என்று பொருள்கொள்க. அஃது அரசனையும் குறிக்கும்: " சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே" என்ற கையறு நிலைத்துறைப் பாடலை நினைவு கூர்ந்துகொள்க.
எனவே ஆதி மன் தி எனில் ஆதி அரசி என்று பொருள் பெறப்படுவது காண்க.
புணர்ச்சியில் ஆதிமந்தி ஆயிற்று.
இனித் தமையந்தி என்ற சொல். இதில் தி என்பது பெண்பால் விகுதியே. இதை அறிய, முன் நிற்பது தம் ஐயந்(தி) என்ற தொடராகும். தம் என்பது தன் என்பதன் பன்மை.
தம் = தமது;
ஐய = வியக்கத்தக்க;
அம் = அழகிய;
தி = பெண்ணாள்,
இதற்குத் தமிழ்மொழியின் வாயிலாகப் பொருளுரைக்க.
தமையன் என்ற சொல் தம் ஐயன் என்று தெரிய நிற்கும்.
என் ஐமுன் நில்லன்மிர் தெவ்விர் என்பது காண்க.
அறிந்து இன்புறுக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக