போட்டோகாப்பி போட்டாகாப்பி
ஃபோட்டோகாப்பி.
போட்டோ என்பது ஆங்கில வழக்குச் சொல். இச்சொல் குறிக்கும் படத்துக்கு
ஆங்கிலத்தில் முன்
அமைந்த பெயர் “ஃபோட்டோகிராப்” என்பதுதான். இப்படத் தொழில்நுணுக்கம் இப்போது பழையதாகிவிட்டது.
போட்டாகிராப் என்பதன் பேச்சுவழக்குச் சுருக்கமே “ஃபோட்டோ” (போட்டா என்பதுமுண்டு). ஆகும்.
போட்டோ என்றால் ஒளி என்பதே
பொருள். போட்டோசிந்திசிஸ் என்ற சொல்லைக் காண்க.
ஒளியின் மூலம் எடுக்கப்படும் காப்பி அல்லது பகர்ப்பு ஒளிப்பகர்ப்பு ஆகிறது. இன்னொரு வகையில் இதைக் கூறுவதானால்
: படப்பகர்ப்பு என்று கூறவேண்டும்.
படி என்ற தமிழ்ச்சொல்லும் அதன் வட திரிபாகிய பிரதி என்பதும் ஒன்றன்படி
இன்னொன்று அமைந்திருத்தலைக் குறிக்கிறது. ஒன்றுபோலவே
இன்னொன்று படிந்துள்ளது.. படி என்ற சொல்லின்
அடிச்சொல் படு என்பது.
படு என்பதோ மிக்க அழகாக அமைந்த தமிழ்ச்சொல்..உன்மேல் என் கை படாமல்
நடிக்கவேண்டும் என்று நடிகை கூறும்போது படுதல் என்றால் என்ன என்று விளங்கும்., பாயில் படு என்னுங்கால் உன் முதுகு தலை கால்கள் எல்லாம் தரையில் விரித்திருக்கும்
பாயில் படும்படியாகக் கிட என்று பொருள். படுத்துவிட்டால் உடல் முழுமையாகப் பாயில்
படிந்து கிடக்கிறது.
படிதலாவது பொருளின் படத்தக்க எல்லாப் பகுதிகளும் படும்படியாக இருத்தலாகும். இப்படி ஒன்று இன்னொன்றில் படிந்து அதனால் உண்டாகும்
உருவமைப்பே படி என்று உணர்க. இனி வட அமைப்பு: ப = ப்ர.
டி = தி.
படு > படி,
படு+ அம் = படம்..
இனி போட்டோகாப்பி என்பதை படப்பகர்ப்பு அல்லது ஒளிப்பகர்ப்பு என்பதே
நன்றாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக