கூர்ம என்பது ஆமையைக் குறிக்கும் சொல். இறைவன் உலகையும் அதில் காணப்படும் எல்லாப் பொருட்களையும் உயிர்களையும் படைத்தவர். இறைவன் படைப்பை இயற்றியபின், சில உயிரினங்களாகவும் அவ்வப்போது தோன்றினார். நம் நூல்களில் சில உயிரினங்கள் கூறப்பட்டுள. அவர் தோற்றமெடுத்தவற்றுள் ஆமையும் ஒன்று.
அவம்+ தாரம் என்பது கூட்டுச்சொல். அவம் = அழிவு. தாரம் ( தரு+ அம்> ) தருதல், அதாவது மீண்டும் தோற்றம் தருதல். மீண்டும் என்பது வருவிக்கப்பட்டமையின், இது காரண இடுகுறிப் பெயர். அவிதல் : அழிதல். கெடுதல். அவி அம் - இதில் வி என்பதில் இகரம் குன்றியது. நாற்காலி என்பதில் இருக்கை என்பது வருவிக்கப்பட்டது போலுமே இது. "நான்கு காலதான இருக்கை".
இப்போது கூர்ம என்ற சொல்லைக் காண்போம். கூர் என்ற சொல்லும் குறு என்ற சொல்லும் தொடர்புடையவை. ஒன்று குறுகும் போது, அதன் தொடக்கம் விரிவாகவே இருக்கும். விரிவிடம் தொடங்கிக் குன்றுவதே கூர் என்பதாகும், வெவ்வேறு பொருட்களில் ஒன்று மற்றதை நோக்கக் குறுகி நிற்கும். ஆமை என்ற உயிரி, தன் உடலை ஒரு கூட்டுக்குள் குறுக்கிக் கொள்வது. அதனால் குறு+ மா ஆனது. மா என்றால் விலங்கு. குறுமா என்பதே கூர்மா என்று திரிக்கப்பட்டு, ஆமையைக் குறித்தது. கூர்ம என்ற சொல்லமைந்தபின், குறுமா என்ற தமிழ்மூலம் தேவையில்லையாயிற்று. கூர்ம என்ற சொல்லின் மூலம் மறைவாய் இருப்பது, கூர்மா என்பதை மக்கள் ஏற்க நின்ற தடையுணர்ச்சி ஒழியக் காரணமாயிற்று. கூர்மா எனற்பாலது பூசைமொழிக்கு இனிய சொல்லானது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக