வெள்ளி, 5 மே, 2017

வாழ்க்கைத் துணை மனைவி

வாழ்க்கைத் துணை என்பது மனைவிக்கு மற்றொரு பெயர். மனைவியே பிள்ளைகளை ஈன்று தாயாகி உலகை நிலைபெறச் செய்கிறவள் என்பது யாவருமறிந்ததே. ஆதலின் அது விளக்கம் ஏதுமின்றியே யாருக்கும் புலப்படுவதாம்.

வீட்டினை ஆட்சி புரிகின்றவள் என்ற பொருளில் மனைவி என்ற சொல் புனையப்பட்டது. அந்த ஆட்சி வீட்டுக்கு வெளியில் இல்லை யென்று வழக்காடுபவர்களும் இருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியில் உள்ள நிகழ்வுகளுக்கு நிற்பவன் கணவன் என்பர் இவர்.

வீட்டில் தண்ணீர் இல்லையென்றால் அதை வெளியில் சென்று
வீட்டுக்குக் கொண்டு தருபவள் பெரும்பாலும் மனைவியே. உதவாமல் ஓடிவிடுகின்ற கணவரும் உண்டல்லவா?


(உளரல்லரோ என்று எழுதவேண்டும், இப்படி எழுதினால் பலர்
கடினமென்கிறார்கள் அது நிற்க )

வீட்டிற்குரியாள் மனைவி என்பதைக் கூறுவோர், "மனை" என்ற‌
வீடு குறிக்கும் சொல்லிலிருந்து மனைவி என்ற சொல் வந்தது என்று
முடிவுக்கு வருவதால், அவர்கள் வீடு ~ மனைவி என்ற வட்டத்தினுள் சிந்திக்கிறார்கள். அது சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை. அப்படிச் சிந்திக்கிறார்கள் என்கிறோம்.

இப்போது வேறோரு வகையில் சிந்திப்போம். மன் : மன்னுதல் எனின் நிலைபெறுதல் என்று பொருள். மன் = நிலைபெறல்; = தலைவி அல்லது தலைமைப் பண்பு என்று பொருள்கொண்டால் மனைவி
என்பதன் பொருள் தெளிவாகிவிடுகிறது. வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பவள் அல்லள் மனைவி; நிலைபெற்ற வாழ்வினை உடையவள் என்று பொருள் வருகிறது.


மன்+ ஐ என்பதனுடன் வி சேர்ந்துகொள்கிறது. வி என்பதோர்
விகுதி (மிகுதி> விகுதி). துணைவி என்பதில்போல் இங்கும்
இவ்விகுதி சேர்கிறது. அது பொருத்தமே ஆகும்.
மன்+அம் = மனம் என்பதில் 0னகரம் இரட்டிக்க வில்லை; அதுபோல் மனைவி என்பதிலும் இரட்டிக்கவில்லை என்று முடிக்கலாம்.

இனிப் பாரியை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்



கருத்துகள் இல்லை: