வியாழன், 11 மே, 2017

பந்தம்

பந்தம் என்பது:


பல் என்ற சொல்லின் தொடக்க காலப் பொருள் பொருந்தியிருப்பது
என்பதே.  பல் எங்கிருந்து வந்தது என்பதை இங்கு நான் விளக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் விளக்கி எழுதினால்
இப்போது பகர்ப்புச் செய்பவர்களுக்கே  (காப்பி  அடித்தல்) அது
பயன்பட்டுவிடுகிறது. ஆகவே அது இருக்கட்டும்,

ஆதி மனிதன், வாயினால் பற்றிக்கொண்டான்; கைகளினாலும் பற்றிக்கொண்டான்.  அவன் கால்கள் பற்றுவதற்குப் பெரும்பாலும்
பயன்படுவதில்லை. போதுமான பயிற்சியுடன் கால்களையும் பற்றுவதற்குப் பயன்படுத்தலாம்.

பற்றுவதென்பது பொருந்துதல் பொருத்துதல் என்பனதவிர வேறில்லை.  இதில் ஒரு நுட்ப வேறுபாடு இருக்கலாம். பற்றுகிற‌
மனிதன் பற்றப்படு பொருளைச் சற்று வலிமை காட்டிப் பற்றுவான்.
பற்றப்படுபொருள், இன்னொரு மனிதனாய் இருப்பினும் பொருளாய்
இருப்பினும் விட்டுக்கொடுப்பதாக இருக்கும்.  ஆனால் பொருந்துதல்
என்பதில் இந்த வலிமை இல்லாதது போல் தோன்றுவது தெளிவு.

பற்று என்பது பல்+து என்பன இணைந்த சொல்.

பந்தம் என்பது எந்தப் பக்கம் வலிமையைக் காட்டுகிறதென்பதைக்
கருத்தில் கொள்ளாமல் ஒன்று மற்றொன்றைப் பற்றிக்கொள்வதை
உணர்த்துகிறது.   பல் என்பது பன் என்றும் திரியும். அன்றியும்
பல் + து என்பன, பற்று என்று வல்லோசை தழுவாமல்  மெலிவாகி
பந்து > பந்தம் என்றும் உருக்கொள்ளும்.


பற்று > பத்து > பந்து > பந்தம் எனினும் அஃதே ஆம். பலவழிகளில்
விளைவு அதுவே வருகின்றது.

இதை எடுத்தொலிப்ப்தனால் அது வேற்றுமொழி ஆகிவிடாது.
Say pantham, Not Bantam.

Just like kumpal being mispronounced as Gumbal.

கருத்துகள் இல்லை: