செவ்வாய், 23 மே, 2017

விஷேஷம் விசேஷம் -. மிகவும் "விசேஷமான" சொல்

விஷேஷம்  விசேஷம்  விசேடம்  விழேடம்

சிறப்பான என்ற கருத்தை வெளிப்படுத்த ஒரு சிறப்பான
சொல் வேண்டும். நாம் விழுமியதாக எடுத்துக்கொள்ளத்
தக்க ஒரு சொல் வேண்டும். அதை எப்படி அமைப்பது
என்று ஓர்ந்தனர் (யோசித்தார்கள்). ஓர்ந்து இங்ஙனம்
அமைத்தனர்.

விழுமிய = சிறப்பான.  இதிலிருந்து விழு என்கிற
அடிச்சொல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்து,
 அதை விஷு என்று மாற்ற வேண்டும்.

அடுத்து "எடுத்துக்கொள்ளுதல்".  எடு+ அம் = ஏடம்
என்று ஆகும். இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
முதலெழுத்து நீண்டு அமைகிறது.  சுடு+ அம் = சூடம்
என்பதுபோல. இன்னும் எடுத்துக்காட்டுகள் உள்ளன.
 அவை இருக்கட்டும்.  ஒரு பானை
சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்!

இனி, ஏடம் என்பதை ஏஷம் என்று மாற்றவேண்டும்.

விழு+ ஏஷம் = விஷேஷம்,  இப்படிச் சொல் அமைகிறது.

இதை முன்னரே விளக்கி எழுதியிருந்தேன்.  தானே
 உணர முடியாத‌ மடையன் பகர்ப்புச் செய்வதற்காகக் கள்ளமென்பொருள்மூலம் அதனை
அழித்துவிட்டான். அவன் தொலையட்டும்.

இப்போது ஓர் அழகான சொல் உங்களுக்குக் கிடைத்
துள்ளது. அதுதான் விஷேஷம் என்பது. மிகவும்
விஷேஷமான சொல்.  விழு+எடு+அம்=
விழேடமான சொல். இந்தச் சொல்லின் உள்ளீட்டு
அழகினைச் சுவைத்தபடியே நீங்கள் கொழுந்துநீர் ( டீ )
குடித்து மகிழ்வீராக.


Internet connections are not in good state.  Will edit later.

கருத்துகள் இல்லை: