ஞாயிறு, 14 மே, 2017

உகர அகாரத் தொடக்கச் சொற்கள்

உக ரத் தொடக்கமான சொற்கள் பெரும்பாலும் அகரத் தொடக்கச் சொற்களாக மாறிவிடுகின்றன என்பது முன் சில இடுகைகளால்
விளக்கப்பட்டது. ஆனால் ஒருசிலர் இதனை ஒப்புக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டனர்.  புதிது ஆவதை உடன் ஏற்றல் உலகிற் குறைவு
ஆகும்.

ஆங்கில மொழியில் யு என்று ஒலிக்கும் எழுத்து பல சொற்களில் அகரமாக ஒலிப்பதைக் காணலாம்.  பி‍ யு என் என்பது புன் என்னாமல்
பன் என்றே ஒலிபெறும். இங்ஙனம் உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலச்\சொற்கள் பலவற்றை முன்நிறுத்தி பிற மொழிகள்
இந் நெறிமுறையைத் தொட்டியல்வதை உணர்ந்தின்புறலாகும்.

முன்னுதல் (சிந்தித்தல் ) சொற்புனைவின்போது மன் என்று மாறிவிடுகிறது.  அதன்பின் திறம் என்பதினின்று அமைந்த‌
திரம் என்பதனோடு கூடி, மன்+திரம் என்று கூடி மந்திரம்
என்று வழங்குகிறது.

முன் என்பதன் பொருள் யாது  என்பதைத் தமிழ்றிந்தார் எளிதில்
காணலாம். எனவே  முன்னுதல் என்பது முன் கொணர்தல் என்பதே
அன்றி வேறில்லை.  அகர வரிஷைகள் பல் இப்போது வழக்கில் உள்ள சொற்களின் பொருளைத் தெரிவிப்பவை. இவை சொல்லின்
முற்பொருளை விளம்புவன அல்ல. அதை நாம் உன்னி உணர‌
வேண்டும்.

மறந்திருக்கும் ஒன்றை மீண்டும் நினைவுக்கு மூளையில் முன்
கொணர்தலே முன்னுதல் ஆகும். இப்படிக் கொண்டுவந்து அது
உச்சரிக்கப்படுகிறது. அதுவே மந்திரம். மந்திரங்கள் ஏற்கனவே
புனைவு பெற்றவை. இப்போது மீண்டும் முன்கொணர்ந்து ஒலிக்கப்
பெறுகின்றன.

சிந்தித்தல் என்பதும் சிந்துதல் அல்லது ஒன்றன்பின் ஒன்றாக‌
வெளிக்கொட்டுதல். சிந்து +இ  = சிந்தி என, வினையினின்றும்
இன்னொரு வினை தோன்றிற்று.  இது உண்மையில் கணித்தல்,
உதித்தல் என்பனபோலும் ஓர் அமைப்பே.  இதில் பெரிய‌
விடயம் ஏதும் இல்லை.

உகர  அகாரத்  தொடக்கச்  சொற்கள் 

கருத்துகள் இல்லை: