சாவு என்ற வினை பெயராகும்போது, அம் விகுதி இணாந்து அது சவம்
என்றாகும் என்பதை, ஒன்றன்று ~~ சில இடுகைகளிலாவது தெரிவித்திருந்தேன். அதைப் படித்து மகிழ்வெய்தியிருக்கின்ற நேரத்தில், அவ்வப்போது வேறு சில உதாரணங்களையும் தந்திருந்தேன்.
இப்போது மற்றுமோர் எடுத்துக்காட்டினை வழங்கும் சித்தமுடையேன்.
அது வருமாறு.
கூம்புதல் என்பது வினைச்சொல். அது அம் விகுதி ஏற்குங்கால்,
கூ என்ற நெடிலானது குகரமாய்க் குறுகுதல் அறிந்துகொள்க. சாவு
என்பதன் நெடில் சகரமாய்க் குறுகுதல்போலவேயாம்.
கூம்பு > கூம்பு+அம் > கும்பம்.
படி + அம் = பாடம் என்பது இதற்கு மாறான எடுத்துக்காட்டு ஆகும்.
இங்கு முதனிலை நீண்டு, படி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு,
பாடமாயிற்று. ஒரு நூலைப் படிப்பது பாடம். இனி, இறந்த
உடலைப் "பாடம் பண்ணுவது" என்ற வழக்கும் உள்ளது. அது கெட்டுப் போய்விடாமல் இருக்க, அதன் . உள்ளும் புறமும் படியுமாறு
பூசப்படும். அம் மருந்தைப் பூசுதலைப் பாடம் பண்ணுதல் என்பர். பாடம் பண்ணுதல் என்பது பேச்சுவழக்கில் உள்ளதாகும். ஒன்றை நெட்டுருச் செய்தலை "மனப்பாடம் பண்ணுதல்" என்ற வழக்கும் உண்டு. மனத்திற் படியுமாறு செய்தலிதுவாகும்.
போயிலை பாடம் பண்ணுதல் என்பதும் வழக்காகும்.
கூ என்பது இவ்வாறு மட்டுமின்றி, கு என்று குறுகி, வி என்னும்
விகுதி பெற்று, குவி (குவிதல்) என்றுமாகும்.
கூ+பு = கூம்பு (கூம்புதல்).
கூ + வி = குவி > குவிதல்.
இனி மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக