கைகேயி பற்றி ஓர் இடுகையில் முன்னர் விளக்கியிருந்தோம். அது இப்போது இவ்வலைப்பூவில் கிட்டவில்லை. பழைய எம்கையெழுத்துப் படியிலும் நெளிபொதிவு வட்டுக்களிலும் உள்ளது. நன்`கு சிந்தித்து எழுதியது ஆதலின் அதனை மறுபார்வை செய்யாமலே மனத்தினின்று மீட்டு இங்கு எழுதுகின்றோம்.
கைகேயி என்பவள் இராமாயணத்தில் வரும் ஒரு கதைப்பாத்திரம். தசரதனின் மனைவி. பரதன் என்ற பாத்திரத்தின் தாய்.
கை என்பது தமிழ்ச்சொல். தோளிலிருந்து தொடரும் இரு உறுப்புகள். கரம் என்பது மற்றொரு சொல்.
கேசம் என்பது முடி. இங்கு தலைமுடி. கேசி முடியை உடையவள். இது கேயி என்றும் திரியும். சகர யகர ஒலிமாற்றம்.
கைவரை நீண்ட முடி உடையவள். முடியழகி.
கேகய நாடு என்று ஒரு நாடு சொல்லப்படுகிறது. கேகய நாட்டினள் "கைகேயி"
என்றும் சொல்லமைப்பைத் தருவர். கேகய நாடு என்பது கைவரை முடியுடைய பெண்ணின் பிறந்த ஊர் என்றும் விரிப்புறலாம். இராமாயணப் பெயர்களில் பல இயற்பெயர்கள் அல்ல. பத்து இரதங்களை உடையவன் தசரதன் என்பது ஓர் காரணப்பெயர்.
பேச்சில்:
1. நீட்டமுடிக் காரி: மறுபெயர்: கைகேயி.
2 நீட்டமுடிக்காரியின் ஊர்: மறுபெயர்: கேகய.
பிற சுவையான திரிபுகள்:
கேரளம் - கைராளி.
சீலம் - சைலம் > ஷைலஜா. ஒழுக்கத்தின் உறைவிடமான அம்மன். ஒழுக்கமான வாழ்வில் தோன்றியவள்.
தமிழில்:
தைவருதல் - தேய்த்தல். [ தேய் > தை.] இது ஏகாரம் ஐகாரமாய்த் திரிதல்.
இன்னும் பல திரிபுகள் உள்ளன; அத்துணை எளிதல்ல.
தை > தைத்தல்.
தைதல் என்ற தன்வினைச் சொல் இல்லை.( தைகிறான், தைகிறாள் இன்ன பிற ) வழக்கிழந்தது. இது நடந்தபின் அதைச் சரிசெய்ய தைவருதல் என்ற வினை தோன்றிற்று. இது சங்க இலக்கியங்களில் கிட்டும் சொல். தைலம் என்ற சொல்லும் மிக்கப் பழையதே. அது சங்க இலக்கியத்தில் இல்லாவிட்டாலும் பழையதுதான். யாரும் எழுதிவைக்காத சொல்லெல்லாம் புதியது என்பது மடமையாகும். வீட்டில் தேய்க்கும் மருந்து அல்லது எண்ணெய். வீட்டுப் பேச்சில் வாழ்ந்து நம்மிடம் வந்துள்ளது. தைலம் பற்றிய இடுகை காண்க.
வான்மீகி ஒரு சங்கப்புலவன் என்பது எம் முடிபு. பிறர் ஒப்புவதால் அல்லது ஒப்பவில்லை என்றால் ....................................................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக