குரு குரல்
குர் என்பது ஓர் ஒலிக்குறிப்புச் சொல்:
(குர்) > குரீஇ : குருவி
குர் > ( குரு. ) .: ஒலி.
குரு > குருவி ( குர் என்று ஒலியெழுப்பும் பறவை).
குரு > குரை ( ஒலி யெழுப்புதல் - நாய்).
குரு > குரம் (ஒலி)
குரு > குரல் ( தொண்டையிலிருந்து எழும் ஒலி)
குரு > குரவை ( ஒலி, ஒலி எழுப்பி மகளிர் விளையாடுதல் )
குரு > குருமி (ஒலி)
குரு > குருமித்தல் (ஒலித்தல்)
குரு > குரூஉ (குரு)
குரு > குரோதம் ( ஒலி எழுப்பிப் பகை காட்டுதல்)- குரோதித்தல்.
குரு > குரவன் ( ஆசிரியன் : ஒலி எழுப்பிக் கற்பிக்கிறவன்).
குரு : ஆசிரியன்: ஒலி எழுப்பிக் கற்பிக்கிறவன்.
குரைத்தல் > குலைத்தல். ( ர > ல போலி)
தொடக்கத்தில் குரு என்பதும் குரவன் என்பதும் ஆசிரியனைக் குறிக்கக் காரணம் அவன் பெரிதும் ஒலிசெய்து கற்பித்ததனாலேதான்.
வாத்தி என்ற சொல்லும் வாயொலியைக் குறித்து எழுந்தது: வாய்> வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.
உப+ அத்தியாயி என்பது உபாத்தியாயி.1 அது வேறு. வாத்தியையும் உபாத்தியாயியையும் குழப்பிவிட்டனர்.
ஓலைச்சுவடிகள் அதிகமில்லை. பகர்ப்பு ( காப்பி) செய்வதற்குச் செலவு (பண்டமாற்று ) ஆனதால் வாயினால் கத்தியே " படித்தனர்".
------------------------
1 உபாத்தியாய : முன் காலத்தில் வேதம் இலக்கணம் முதலியன சொல்லிக்கொடுத்தோர்.. உபாத்தியாயினி என்பது அவர் மனைவியையும் குறிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக